December 2, 2008

தொடர்பவர்கள் எல்லாம் தொடர்பவர்கள் இல்லை தொடராதவர்கள் எல்லாம் தொடராதவர்கள் இல்லை

கொஞ்சம் போரடிக்குதேன்னு ப்ளாக்கர் டேஷ்போர்டை கவனிச்சிட்டிருந்தேன்.. ப்ளாக் ஆஃப் நோட்ல புகுந்து புறப்பட்டுட்டு இருந்தபோது ஒருத்தருக்கு 1330 க்கும் மேல ஃபாலோவர்ஸ் இருக்காங்களாம்.. வியூ ஆல் போட்டாலும் கூட ஒரு பக்கத்துக்கு பத்து என்று தான் ப்ளாக்கர் காட்டும் அவரே கூட எப்படி பார்ப்பார் எல்லாரையும் கஷ்டம் தான்.. :(

ஒரு நாள் பின் தொடருபவர்கள் கணக்கு ஒன்று குறைந்து பின்னர் மூன்று கூடியது. குறைந்த அந்த ஒருவர் யாரென்று சரியாகத்தெரியவில்லை.. தப்பித்தவர் யாரோ? ஆனால் பின் தொடர்பவதாக ஃபாலோவரில் போட்டிருக்கும் எல்லாருமே பின் தொடர்வதும் இல்லையென்று நேற்று புரிந்து கொண்டேன். புதியதாக யாரோ இணைய அரட்டையில் இணைந்திருந்தார்கள். யாரென்று கேட்டு அறிந்து அவர்களின் பதிவு இணைப்பைக்கேட்டேன்.அவர்களும் என்னிடம் என் பதிவு இணைப்பைக்கேட்டார்கள். அய்யகோ கடைசியில் அவர்கள் என்னை ஏற்கனவே தொடர்பவர்கள் தான். இதிலிருந்து என்ன தெரிகிறது. தொடர்பவர்கள் எல்லாம் தொடர்பவர்கள் இல்லை.. தொடராதவர்கள் எல்லாம் தொடராதவர்கள் இல்லை.

இது ஏறக்குறைய முன்பே எல்லாரும் பின்னூட்டுபவர்கள் படிப்பவர்கள் கணக்கீடுக்கு சொன்னது போலவே தான்.
-----------------------------
ப்ளாக்கர் buzzல் பார்த்தபோது போஸ்ட் கமெண்ட் அதே பதிவின் கீழ் எம்பெட் செய்யும் வசதி பற்றி அறிந்தேன். ஆனால் அது அதிகம் வேலை செய்யப்படாத டெம்ளேட்டில் வேலை செய்கிறது ஏற்கனவே உள்ள பதிவில் வேலை செய்வதில்லை. அதற்கு ஏதும் வழி இருக்கிறதா? இதற்காக இன்னொரு பக்கத்தை திறக்கவேண்டாம் என்பதும் நன்றாகவே இருக்கிறது.. ரியக்ஷ்னும் அது போலவே தான்.. தெரிந்தவர்கள் பதிவிடுங்கள்.
--------------------------
பலநாட்களாக ப்ளாக்கர் என் சிறுமுயற்சி பதிவிற்கு வரும் பின்னூட்டங்களை மட்டும் டேஷ்போர்டில் எண்ணிக்கையாக காட்ட மறுக்கிறது. மாடரேட் கமெண்ட்ஸ் போய் தான் பார்க்கவேண்டி இருக்கிறது. :( எத்தனை எத்தனை சோதனைகள்.

42 comments:

rapp said...

me the first:):):)

rapp said...

இந்த காரணத்தால்தான், நான் யாரையுமே தொடர்றது இல்ல:):):) நாங்கெல்லாம் செல்போன் வந்தாலும் மூளைய மெமரியா வெச்சிருக்கவுங்க:):):) (எல்லாரும் கலாசுங்க எசமான், கலாசுங்க:):):))

rapp said...

இப்போ நான் ஓடிப்போய் பார்த்தா என் வலைப்பூவை பதிமூணு பேரு தொடருறாங்க:):):) ஆனா சந்தோஷம் முழுசாவும் நீடிக்க முடியல இங்க நீங்க சொன்னத வெச்சு பாக்கும்போது:):):)

rapp said...

இதே மாதிரி தான் என்னோட லைப்ரரி(புத்தகப் பதிவுக்கு) ஆச்சு. நானும் சரிதான், தமிழ்மண நிர்வாகிகள் யாரோ வேலைவெட்டி இல்லாம இதத் தொறந்து பாத்து பகீராகி மக்களின் நலனுக்காக இப்டி செஞ்சுட்டாங்கன்னு நெனச்சுட்டேன்:):):)

நாகை சிவா said...

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி...

சோதனை தான் ப்ளாக்கர் என்றால் தாங்காது ப்ளாக் உலகம்

நாகை சிவா said...

நான் யாரையும் தொடர்பவன் இல்லை. என்னையும் அவ்வளவாக யாரும் தொடர்பவர்கள் இல்லை. :)))

ராமலக்ஷ்மி said...

//:( எத்தனை எத்தனை சோதனைகள்.//

ஆமாம். பலரின் ப்ளாக்கில் ’அட இது நல்லாருக்கே’ என நினைக்கும் சிலதை நாமும் செய்யப் போனால் ‘இது என்னடா சோதனை வந்தது பார் வேதனை’ என ‘உள்ளதும் போச்சு’ கதையாகி விடுகிறது :(!

முத்துலெட்சுமி-கயல்விழி said...

ராப் இதுல இப்படிஎல்லாம் சந்தேகப்படலாமா.. நம் பதிவை படிச்சு வேற தடை செய்வாங்களா? :)))

முத்துலெட்சுமி-கயல்விழி said...

புலியைப்போட்டு பயமுறுத்தியதால் தொடராம இல்லை..ரொம்ப நாளா எழுதலையே அதனால் தான்.. தொடர்ந்து நாலு படத்துக்கு விமர்சனம் எழுதுங்க சிவா.. ஃபாலோவர் ஃபுல்லாக வாய்ப்பு இருக்கு.. :)

நிஜமா நல்லவன் said...

ப்ளாக் பற்றி எனக்கு எதுவுமே புரியலை கயலக்கா....இதுல நீங்க வேற ஏகத்துக்கும் குழப்பி பதிவு போடுறீங்க...:(

சென்ஷி said...

மீ த 10த் :)

சென்ஷி said...

அப்ப காலையில்லேந்து ப்ளாக்கர், ஜி.சாட்ல உக்கார்ந்திருந்தா அடுத்த பதிவுக்கு ஐடியா கிடைச்சுடுங்கறீங்க. கரெக்ட் தானே அக்கா :)

சென்ஷி said...

//வியூ ஆல் போட்டாலும் கூட ஒரு பக்கத்துக்கு பத்து என்று தான் ப்ளாக்கர் காட்டும் அவரே கூட எப்படி பார்ப்பார் எல்லாரையும் கஷ்டம் தான்.. :(//

என்னோட பதிவுக்கு புதுசா யாரும் ஜாயின் செஞ்சா உடனே அவங்களுக்கு கமெண்டு போட்டுட்டு வந்துடுவேன். அங்க போய் ஜாயினும் ஆகிக்கறது இப்ப பழகிப்போச்சு :)

சென்ஷி said...

//பலநாட்களாக ப்ளாக்கர் என் சிறுமுயற்சி பதிவிற்கு வரும் பின்னூட்டங்களை மட்டும் டேஷ்போர்டில் எண்ணிக்கையாக காட்ட மறுக்கிறது. மாடரேட் கமெண்ட்ஸ் போய் தான் பார்க்கவேண்டி இருக்கிறது. :( எத்தனை எத்தனை சோதனைகள்.//

:((

சோதனை தீரவில்லை..
சொல்லி அழ யாருமில்ல
முன்ன பின்ன அழுததில்ல..
சொல்லித்தர ஆளுமில்ல..

சென்ஷி said...

//நாங்கெல்லாம் செல்போன் வந்தாலும் மூளைய மெமரியா வெச்சிருக்கவுங்க:):):) (எல்லாரும் கலாசுங்க எசமான், கலாசுங்க:):):))//

அப்ப செல்போன் போடற மெமரி கார்டு அளவுலதான் உங்க மூளை இருக்குதா தங்கச்சிக்கா :))

சென்ஷி said...

//நாகை சிவா said...
நான் யாரையும் தொடர்பவன் இல்லை. என்னையும் அவ்வளவாக யாரும் தொடர்பவர்கள் இல்லை. :)))
//


ஏம்யா சூடான் புலி, புதுசா தெரியாதவுக பதிவுக்குத்தாம்லே லிங்கு.. உன்னையப் பத்தி நல்லாத்தெரிஞ்சவங்க பதிவுக்கு டைரக்டு சங்குதான் :))

சென்ஷி said...

//"தொடர்பவர்கள் எல்லாம் தொடர்பவர்கள் இல்லை தொடராதவர்கள் எல்லாம் தொடராதவர்கள் இல்லை"//

பதிவோட நீதிய தலைப்புலயே வச்சிருக்கீங்களா அக்கா :)

ஆயில்யன் said...

//தொடர்பவர்கள் எல்லாம் தொடர்பவர்கள் இல்லை.. தொடராதவர்கள் எல்லாம் தொடராதவர்கள் இல்லை//

பாஸ் இந்த தத்துவ வரிகளை நான் பிறகு வேறொரு சமயத்தில் பயன்படுத்திக்க அனுமதி வேணும் பாஸ்!

பரிசல்காரன் said...

மீ த டென்த்!!!

பரிசல்காரன் said...

தலைப்பு சூப்பரோ சூப்பர்!!!!!

ஜீவன் said...

//தொடர்பவர்கள் எல்லாம் தொடர்பவர்கள் இல்லை தொடராதவர்கள் எல்லாம் தொடராதவர்கள் இல்லை//

........................

சந்தனமுல்லை said...

ஹஹ்ஹா..புரியுது உங்க ஆதங்கம்..இன்னுமா சரியாகலை டேஷ்போர்டு மேட்டர்?

ராப் ..

//நாங்கெல்லாம் செல்போன் வந்தாலும் மூளைய மெமரியா வெச்சிருக்கவுங்க:):):) //

ஆகா!! என்ன மெமரிங்க அது?? எவ்ளோ ஜிபி?

முத்துலெட்சுமி-கயல்விழி said...

ராமலக்ஷ்மி எதச் சொன்னாலும் எதுக மோனயா அழகா சொல்றீங்க.. :)

--------------------
நிஜம்மா நல்லவன்.. நீங்க எந்த காலத்துலயோ பதிவெழுதிட்டிருந்தீங்கன்னு நினைச்சுக்கிட்டு இப்ப பார்த்தா ப்ளாக்கரில் என்னன்னமோ வந்திருக்கு குழம்பித்தான் போவீங்க ..தொடர்ந்து இருக்கற நாங்களே செய்து பாத்து குழம்பிட்டிருக்கோம்.. :))

முத்துலெட்சுமி-கயல்விழி said...

\\அப்ப காலையில்லேந்து ப்ளாக்கர், ஜி.சாட்ல உக்கார்ந்திருந்தா அடுத்த பதிவுக்கு ஐடியா கிடைச்சுடுங்கறீங்க. கரெக்ட் தானே அக்கா :)//

அட எனக்கு ஐடியாக்கெல்லாம் பஞ்சமே இல்லை.. எழுதனும்ன்னு தோணனும் அவ்வளவு தான்.. இந்த தலைப்பு தோணின அடுத்த நிமிசம் பதிவு போட்டுட்டேன்ல..

முத்துலெட்சுமி-கயல்விழி said...

ஆயில்யன் வச்சிக்குங்க அனுமதி..உங்க ஸ்டேட்டஸை நான் இரவல் வாங்கிக்கலயா அது போலத்தானே..
------------------------
பரிசல் இந்த தலைப்புத்தானே பதிவைப்போடவச்சது, தலைப்புக்காகத்தான் பதிவே... நன்றி..:)

தமிழ் பிரியன் said...

அய்ய பாவம்! அக்காவுக்கு தான் எத்தனை சோதனைகள்..... :)))
தமிழ் மணம் கூட சொதப்புது எப்ப பார்த்தாலும்.
போஸ்டிலேயே எம்பெட் செய்த லோடாக ரொம்ப லேட்டாகுது..:(

முத்துலெட்சுமி-கயல்விழி said...

ஜீவன் .. என்னங்க தலைப்பை படிசச்தும் கிர்ர்ன்னு வந்துருச்சா என்ன எதுவுமே சொல்லமுடியலையா..?
--------------
என் ஆதங்கம் புரிஞ்சு என்ன செய்ய முல்லை..வழியச்சொல்லுங்கப்பா.எப்பவா
வது பதிவு போட்டா இப்படியானா என்ன நியாயம்..

பிரேம்குமார் said...

//ஆனால் அது அதிகம் வேலை செய்யப்படாத டெம்ளேட்டில் வேலை செய்கிறது ஏற்கனவே உள்ள பதிவில் வேலை செய்வதில்லை//

இதத்தான் நான் போன வாரம் சோதனை செஞ்சு வர இரண்டு பின்னூட்டம் கூட வராம போயிடுச்சு ;)

பிரேம்குமார் said...

//தொடர்பவர்கள் எல்லாம் தொடர்பவர்கள் இல்லை தொடராதவர்கள் எல்லாம் தொடராதவர்கள் இல்லை"//

தலைப்ப உக்காந்து யோசிச்சீங்களோ?

புதுகைத் தென்றல் said...

நிறைய நேரம் கிடைச்சிருக்கு போலிருக்கு.

gils said...

jeyakaanthan rangeku title vachitu ipdi oru mokkaiaya!!! :) first time here..micha postlam padichituvaren

கானா பிரபா said...

ஆஹா போஸ்ட் தலைப்பே ஒரு பதிவு ஆயிடுச்சே ;)

கோபிநாத் said...

\\ஒருத்தருக்கு 1330 க்கும் மேல ஃபாலோவர்ஸ் இருக்காங்களாம்.. \\\

சற்றுமுன் நிலவரபடி 1412 ;))

SK said...

விசு படம் எதாவது பாதீங்கள சமீபத்துலே :-)

ப்லாகறு, ட்விட்டர், சாட், ஜி-டாக் .. எம்புட்டு

Anonymous said...

நீங்களாச்சும் பரவாயில்லை. நான் மகளிர் சக்தில என்னோடத இணைக்க முடியாம இருக்கேன். எப்படி எணைக்கறதுன்னு தெரியலை.

முத்துலெட்சுமி-கயல்விழி said...

ஓ ஓ சின்ன அம்மிணி, மகளிர் சக்தியில் உங்களோடத பொன்ஸ் கிட்ட சொல்லி சேக்க சொல்றேன்ப்பா ...கவனிக்கலை நான்..:(
-------------------------
@ ப்ரேம்குமார் அதை சரிகட்டத்தான் நான் போனவாரம் ரெண்டு கமெண்ட் போட்டேனே.. :)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

புதுகைத்தென்றல் ஆமாங்க ...சும்மா ஒக்காந்துட்டு பதிவும் எழுதத்தோணாம ப்ளாக்கரை குடைஞ்சுட்டு இருந்தேன்.. :)
------------------------
கில்ஸ் .. என்னங்க நீங்க தலைப்புக்கு இத்தனை பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்க .. சரி மத்தபதிவெல்லாம் படிச்சீங்களா அப்பறம் சத்தமே இல்லையே.. மத்ததெல்லாம் இதை விட மொக்கயா.. :)))

முத்துலெட்சுமி-கயல்விழி said...

கானாப்ப்ரபா.. நன்றி.. தலைப்பே நீளமா இருந்த்தால பதிவு..
---------------------
ஆமா கோபி நிலவரம் ஜெட்வேகத்துல எகிறுது.. ப்ளாக் ஆப் நோட்ல இருந்து நூல் பிடிச்சிப்போறவங்க வேற அதிகமாவாங்கள்ள..
-----------------
எஸ்.கே.. நாங்களாம் எவ்வளவு நாளா படம் பாக்கறோம்.. பாதிப்பு இல்லாம இருக்குமா.. அப்பறம் இன்னும் எத்தனையோ இருக்கில்லீங்க நெட்ல ..நமக்கு நேரம்தான் பத்தலை..:))

அமிர்தவர்ஷினி அம்மா said...

:))))))0

மங்களூர் சிவா said...

தலைப்பு சூப்பர். உண்மை.

Karthik said...

தலைப்பை ரஜினிகாந்த் சொன்னாரா??
:)

நீங்க சொல்ற விஷயம் உண்மைதான். என்னோட ப்ளாக்லயும் இதுதான் நடக்குது.

முத்துலெட்சுமி-கயல்விழி said...

மங்களூர் சிவா, அமிர்தவர்ஷிணி அம்மா, கார்த்திக் நன்றிங்க... :)