December 7, 2008

நீ வளர்ந்ததும் பெரிய மந்திரியா வரணும் !!

நமக்குத்தேவை நல்ல தலைவர்கள் என்று அவந்தி பதிவு போட்டிருக்கிறாள். ( தொடர்பதிவுக்கும் அழைத்திருக்கிறாள் ) உண்மை தான் ஆனால் எந்த வீட்டிலும் தலைவர்களை வளர்ப்பதில்லை. யாராவது என் குழந்தை அரசியலில் பெரிய மந்திரியா வரணும் என்று ஆசைப்படுகிறோமா என்ன? அரசியல் பாரம்பரியம் ஒரு ராஜ பாரம்பரியமாக குடும்பம் குடும்பமாக மட்டுமே வளர்கிறது. படிக்கின்ற வயசில் அரசியல் தேவையில்லை என்பதால் அரசியலா அதில் எல்லாம் ஒன்னும் கவனம் வைக்காதே என்று சொல்லி முடிப்பதற்குள் அவர்களுக்கு ஓட்டு போடும் வயசும் வந்துவிடுகிறது. நம்ம தமிழ்நாட்டிலிருந்து நடிகைகள் வருவதில்லை என்பது போல படித்தவர்கள் அரசியலுக்கு வருவது (அரசியல்குடும்பத்தினைத்தவிர) குறைவு.

மகளின் பள்ளியின் சேர்மென் (வய்து 87 ) இந்த காலத்தில் கல்வியும் அறிவும் மட்டும் முக்கியம்ன்னு நினைச்சு பெரியாளான பல அறிவாளிகளால் தான் பணவீக்கம் ,பொருளாதார பின்னடைவு எல்லாம் வருகின்றது. எதிலும் எதிக்ஸ் முக்கியமில்லை என்ற எண்ணம் . கல்வியோடு எதிக்ஸும் அவசியமென்று அவர்களை பழக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

நாம் ஒவ்வொருவரும் சுயநலமாக நம் வீடு , நம் படிப்பு நம் வாழ்க்கை என்று வாழும் வரை சுயநல வியாபாரிகள் தான் அரசியலுக்கு வருவார்கள். அவர்கள் தங்களுக்கு போக மீதியைத்தான் தருவார்கள்.. அந்தகாலத்துத் தலைவர்கள் கொள்கையில் வேறுபட்டாலும் அடுத்தவர்களை எதிரியாகக் கருதியதில்லை. இப்போது நிலைமையே வேறு.

குறுக்குவழியில் பெரியவர்களாக ஆகவேண்டும் என்று கற்றுக்கொடுக்கும் நிலையில் , அடுத்த தலைமுறை நல்லமுறையில் வர வாய்ப்பே இல்லை. தன்னலமில்லா தலைவர்கள் வந்தாலும் கீழே இருப்பவர்கள் வரை நல்ல செயல்களை கொண்டு சேர்க்க தடையாக இருப்பது மக்கள் தானே..

எனக்குத் தோன்றுவதெல்லாம் .. உலகத்தில் நீ கொண்டுவர வைக்கவேண்டிய மாற்றத்தின் முதல் படியாக நீயே இரு என்ற காந்தியின் வார்த்தைகள் தான்.

---------------
தீவிரவாதத்துக்கு எதிராக என்னத்த சொல்வது வறுமை குறைந்தால் அதுவும் குறையும். காசு தான் கடவுள். காசு இல்லையா குடுப்பவன் கடவுள். இறப்பை வேறு எவரும் துச்சமாக மதிப்பதில்லை. காசில்லாதவன் தான் வாழ்ந்து என்னத்தைக்கண்டோம் என்று முதலில் நுழைகிறான்.

மதம் காரணம் என்கிறீர்களா? சகிப்புத்தன்மை இல்லாத, அன்பு இல்லாத எந்த மதமும் பின்பற்றி முக்திக்கு உதவபோவதில்லை.

சிலர் தாங்கள் போகும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக சோதனைகளில் சரியாக ஒத்துழைப்பு கொடுக்கிறார்களா? அதற்கு சலிப்பும் கோபமும்.. எத்தனை பேர் குறுக்குவழிகள் ஓடுகிறார்கள். என்றாவது எதாவது தவறாக நடந்தால் சோதனை சரி இல்லைங்க என்று குறை சொல்வார்கள்.

வரிசையில் நிற்க சங்கடம் , சோதனைக்கு ஒத்துழைக்க சங்கடம், தவறைக்கண்டால் தகவல் அளிக்க சங்கடம்.. நேர்மையாக இருக்க சங்கடம்.. மொத்தத்தில் வரும் சங்கடங்கள் எல்லாவற்றிற்கும் நாமே காரணம்.

இன்னும் புலம்புவதற்கு ,
நான் அழைக்கவிரும்புவது
ஆயில்யன்
தமிழ்பிரியன்
சென்ஷி
புதுகைத்தென்றல்
சந்தனமுல்லை
ராப்
விருப்பமானவங்க எழுதுங்க.. முடியாதவங்க சாய்ஸில் விட்டிருங்க...

29 comments:

rapp said...

me the first?

rapp said...

super :):):) the chairman is 100% correct

rapp said...

//குறுக்குவழியில் பெரியவர்களாக கற்றுக்கொடுக்கும் வரை அடுத்த தலைமுறை நல்லமுறையில் வர வாய்ப்பே இல்லை. தன்னலமில்லா தலைவர்கள் வந்தாலும் கீழே இருப்பவர்கள் வரை நல்ல செயல்களை கொண்டு சேர்க்க தடையாக இருப்பது மக்கள் தானே..//


super:):):)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

ராப் நீ சூப்பர் வுமன்.. எங்க இருந்த.. டபால்ன்னு பாய்ஞ்சு வந்துட்ட... :)

ஆயில்யன் said...

//வரிசையில் நிற்க சங்கடம் , சோதனைக்கு ஒத்துழைக்க சங்கடம், தவறைக்கண்டால் தகவல் அளிக்க சங்கடம்.. நேர்மையாக இருக்க சங்கடம்.. மொத்தத்தில் வரும் சங்கடங்கள் எல்லாவற்றிற்கும் நாமே காரணம்///

உண்மை !

கோபிநாத் said...

\\மொத்தத்தில் வரும் சங்கடங்கள் எல்லாவற்றிற்கும் நாமே காரணம்.
\\

இதுக்கு மிக பெரிய ரீப்பிட்டு.....

Thekkikattan|தெகா said...

அதுக்குள்ளும் யோசித்து உங்க பதிவையும் கொடுத்திட்டீங்களே... :-)

பொது இடங்களில் பாதுகாப்பின்மைக்கு மக்களும் ஒரு வகையில் பொறுப்பேற்க வேண்டுமென்பது மிக்கச் சரியே.

ராமலக்ஷ்மி said...

மிக மிக நல்ல பதிவு முத்துலெட்சுமி.
ஒவ்வொரு வரிகளும் ஒவ்வொருவரும் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டியவை. நம் நாட்டின் இன்றைய வருந்தத்தகு நிலைமைக்கான காரணங்களை மிகத் தெளிவாக அலசியதோடு நில்லாது மாற்றம் வர நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் அதே தெளிவுடன் கூறியிருப்பது அருமை.

//எனக்குத் தோன்றுவதெல்லாம் .. உலகத்தில் நீ கொண்டுவர வைக்கவேண்டிய மாற்றத்தின் முதல் படியாக நீயே இரு என்ற காந்தியின் வார்த்தைகள் தான்.//

எல்லோருக்கு அதைத் தோன்ற வைக்கக் கூடிய பதிவு. வாழ்த்துக்கள் முத்துலெட்சுமி.

அதிரை ஜமால் said...

\\எனக்குத் தோன்றுவதெல்லாம் .. உலகத்தில் நீ கொண்டுவர வைக்கவேண்டிய மாற்றத்தின் முதல் படியாக நீயே இரு என்ற காந்தியின் வார்த்தைகள் தான்.\\

உண்மை தாங்கிய வரிகள்

முத்துலெட்சுமி-கயல்விழி said...

ஆயில்யன் , கோபிநாத் நன்றி..
-------------------

நன்றி தெகா.. நாம பார்க்கிறோம்ல ஒழுங்கா அவங்க வேலையை செய்யறதைக்கூட திட்டிக்கிட்டு அவசரப்பட்டுக்கிட்டு போறவங்களை..
மெட்டல் டிடெக்டர் ஒர்க் செய்யுதோ இல்லையோ அதுவழியா போகாம குறுக்கால போறதுன்னு ஹ்ம்..முக்கால்வாசி படிச்சவங்க தான் அதை செய்யறது... முன்னாடி எல்லாம் மச்சம் வைச்ச வெட்டுப்பட்ட முகத்துக்காரங்க குற்றவாளிகள் இப்ப அப்படி இல்லங்க.. படிச்ச டிப்டாப் ஆசாமிங்கதானே..

முத்துலெட்சுமி-கயல்விழி said...

ராமலக்ஷ்மி , அதிரை ஜமால் நன்றி..

நாம புதுசா என்னங்க சொல்லப்போறோம் அதான் எல்லா பெரியவங்களும் சொல்லிட்டு போயிருக்காங்களே..அதை மனசுக்குள் திரும்பி கொண்டுவரத்தான் நினைவுபடுத்த வேண்டி இருக்கு..

மங்கை said...

ஆஹா...என்னா ஒரு இஸ்பீடு :-)

நல்லா வந்திருக்கு...

இந்த சம்பவத்திற்கு அப்பூறம் நிறைய இளைஞர்கள் முன் வந்திருகாங்க...

நல்லது நடக்கட்டும்

சென்ஷி said...

:))

அருமையான பதிவுக்கா..

மங்களூர் சிவா said...

/
வரும் சங்கடங்கள் எல்லாவற்றிற்கும் நாமே காரணம்.
/

அதே அதே

அருமையான பதிவு.

SurveySan said...

//எனக்குத் தோன்றுவதெல்லாம் .. உலகத்தில் நீ கொண்டுவர வைக்கவேண்டிய மாற்றத்தின் முதல் படியாக நீயே இரு என்ற காந்தியின் வார்த்தைகள் தான்.
///

மிகச் சரி!

முத்துலெட்சுமி-கயல்விழி said...

மங்கை இளைஞர்கள் படிச்சவர்களா மட்டுமில்லாம குறுக்குவழிப்பிரியர்களா இல்லாம இருக்கனும்.. பார்லிமெண்டை ஒரு த்டவை போய் பார்த்துட்டுவாங்களேன்.. கொடுமை நடக்கும் .. சிலர் தூங்கிகிட்டு சிலர் பேசிக்கிட்டு ஜாலியான்னு.. ஒரு சின்னப்பிள்ளைங்க வகுப்பு மாதிரி.. ஹ்ம்..
---------------------

சென்ஷி , மங்களூர்சிவா, சர்வேசன் மறுமொழிக்கு நன்றி..

தமிழ் பிரியன் said...

அக்கா, நிறைய மெசேஜ் வச்சு இருக்கீங்க... நம்மை சுற்றி இருப்பவற்றை நாம் சரியாக வைத்துக் கொண்டாலே போதுமானது. நானும் கண்டினியூ பண்றேன்.

தமிழன்-கறுப்பி... said...

நல்ல பதிவு...

தமிழன்-கறுப்பி... said...

பல இடங்களுக்கு ரிப்பீட்டு போடலாம்கிறதால பதிவுக்கே ரிப்பீட்டு...:)

வண்ணத்துபூச்சியார் said...

இத்தருணத்தில் தேவையான பதிவு..

PoornimaSaran said...

//சிலர் தாங்கள் போகும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக சோதனைகளில் சரியாக ஒத்துழைப்பு கொடுக்கிறார்களா? அதற்கு சலிப்பும் கோபமும்.. எத்தனை பேர் குறுக்குவழிகள் ஓடுகிறார்கள். என்றாவது எதாவது தவறாக நடந்தால் சோதனை சரி இல்லைங்க என்று குறை சொல்வார்கள்.
//

அதுதாங்க நம்ம மக்கள்..

சந்தனமுல்லை said...

அழைததற்கு நன்றி முத்துலெட்சுமி! நல்ல கருத்துக்களுடனான தேவையான பதிவு! பதிவிடுகிறேன் நானும்!

நசரேயன் said...

/*
மொத்தத்தில் வரும் சங்கடங்கள் எல்லாவற்றிற்கும் நாமே காரணம்
*/
தீதும் நன்றும் பிறர் தர வாரா

கபீஷ் said...

உங்க பொண்ணு பள்ளிக்கூட சேர்மன் சொன்னது ரொம்ப சரி. தனிமனித ஒழுக்கம் குறைஞ்சதும் ஒரு காரணம்னு நினைக்கறேன்.

அமுதா said...

அருமையான பதிவு.

ஜீவன் said...

///வரிசையில் நிற்க சங்கடம் , சோதனைக்கு ஒத்துழைக்க சங்கடம், தவறைக்கண்டால் தகவல் அளிக்க சங்கடம்.. நேர்மையாக இருக்க சங்கடம்.. மொத்தத்தில் வரும் சங்கடங்கள் எல்லாவற்றிற்கும் நாமே காரணம்///


நல்ல நிர்வாகம் இருந்தால் அல்லது கட்டுப்பாடான
அடக்குமுறை இருந்தால் நம் மக்கள் ஒத்துழைப்பு
கொடுப்பார்கள்!

நிர்வாகத்தின் மேல் உள்ள அவநம்பிக்கையே
தவிர வேறு ஒன்றும் இல்லை.

கபீரன்பன் said...

//கல்வியோடு எதிக்ஸும் அவசியமென்று அவர்களை பழக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார் //

ஒழுக்கமற்றவர்க்கு கிடைக்கும் கல்வி குரங்கு கையில் கிடைத்த தீவட்டி.

சமுதாயப் பிரக்ஞை யற்ற தனிமனிதன் சுயநல நோக்கமுடையவனாய் தன் வரைக்கும் சிந்திப்பவனாய் இருக்கிறான். அதனால்தான் நீங்கள் குறிப்பிட்டபடி

//வரிசையில் நிற்க சங்கடம் , சோதனைக்கு ஒத்துழைக்க சங்கடம், தவறைக்கண்டால் தகவல் அளிக்க சங்கடம்.. நேர்மையாக இருக்க சங்கடம்.. மொத்தத்தில் வரும் சங்கடங்கள் எல்லாவற்றிற்கும் நாமே காரணம் //

Jeeves said...

well said!!

முத்துலெட்சுமி-கயல்விழி said...

தமிழ்பிரியன் , தமிழன் கறுப்பி, வண்ணத்துப்பூச்சியார், பூர்ணிமா..நன்றி..
-----------------------------
சந்தனமுல்லை, நசரேயன்,கபீஷ், அமுதா , ஜீவ்ஸ் நன்றி..
------------------
ஜீவன் நீங்க சொல்வது சரிதான்.. ஆனா நிர்வாகம் என்பதே மக்கள் தானே என்பது தான் என் வருத்தம்..
-------------------------
கபீரன்பன் சரியாச் சொன்னீங்க.. நானுண்டு என் வேலையுண்டு ன்னு இருக்கறதும் ஒருவகை சுயநலம் தானே ..