April 23, 2009

டெம்ப்ளேட் டிசைன்களும் நான் படும் பாடும்...

எனக்கு பொழுது போக்கே பதிவுகளைப் படித்து பின்னூட்டமிடுவது தான். பதிவிடுவது என்பது தினப்படி வேலையில்லை. என் பொழுதுபோக்குக்கு இப்பொழுது மிகப்பெரிய சோதனை. பல பதிவர்கள் சாதாரண டெம்ளேட்டில் போரடித்துப்போய் தாங்கள் தனித்துவமானவர்கள் என்று காட்டுவதற்காக மிக அழகாக வடிவமைத்த டெம்ப்ளேட் டிசைன்களை புகுத்தி வைத்திருக்கிறார்கள்..

ப்ளாக்கரில் நான் சிறிதே கலர் மாற்றங்களை செய்த போதே பாலபாரதி சொன்னது நினைவுக்கு வருகிறது. எளிமையான பக்கமாக கண்களுக்கு பாதிப்பில்லாத பின்புலம் இருந்தால் மட்டுமே படிக்கவருபவர்களுக்கு பதிவைப் படிக்க வசதியாக இருக்கும் . சிலர் கருப்பு பின்புலம் வைத்திருக்கிறார்கள் (உதாரணம்: சசி... ப்ளீஸ் மாத்துங்களேன் கண் வலிக்குது) அப்படிப்பட்ட பதிவுகளை வேகமாக போஸ்ட் கமெண்ட் தேடி ஓடி க்ளிக் செய்து ஷோ போஸ்ட் என்பதை க்ளிக் செய்து படித்து முடிப்பதுவழக்கம்.

உதாரணமாக புதுகைத் தென்றல் , ஸ்ரீமதி போன்றவர்களின் டெம்ளேட் அவர்களின் அழகுணர்ச்சியையும் தனித்தன்மையினையும் காட்டுகிறது மகிழ்ச்சி. ஆனால் என்னால் அவர்கள் பதிவை படிக்கவே முடிவதில்லை. சரி என்ன ஆனாலும் பரவாயில்லை என்று பதிவுக்கு சென்றேனோ தொலைந்தேன். குறைஞ்சபட்சம் 5 நிமிடத்திலிருந்து 10 ..15 நிமிடத்திற்கு என் கணினி அப்படியே நின்றுவிடும். வேறு எந்த வேலையும் கூட செய்ய இயலாது. .. சில நேரம் ஃபயர்பாக்ஸ் க்ராஷ் ஆகி காணமலே போய்விடும்.

ஆனால் எனக்கு ஆச்சரியம் அங்கே கும்மியிலிருந்து பெரிய விவாதங்கள் வரை நடைபெறுகிறது. வருபவர்களுக்கு என்னைப்போல ப்ரச்சனைகளே வருவதில்லையா..? முன்பு எண்ணுவான் ( கவுண்ட்டர்) இதுபோன்ற ப்ரச்சனைகளை பலருக்கும் செய்து கொண்டிருந்தது. இப்போதும் இந்த டெம்ளேட்களா அல்லது பக்கங்களில் அவர்கள் இணைத்திருக்கும் வேறு எதும் அதிகப்படியான கேட்ஜெட்களா? என்று தெரியவில்லை மொத்தத்தில் என்னால் சரியாக பலரது பதிவைப் படிக்க முடிவதில்லை.

43 comments:

SK said...

me the first pottukaren :)

Anonymous said...

:-))

pudugaithendral said...

உதாரணமாக புதுகைத் தென்றல் , ஸ்ரீமதி போன்றவர்களின் டெம்ளேட் அவர்களின் அழகுணர்ச்சியையும் தனித்தன்மையினையும் காட்டுகிறது மகிழ்ச்சி.//

dhanks
ஆனால் என்னால் அவர்கள் பதிவை படிக்கவே முடிவதில்லை. சரி என்ன ஆனாலும் பரவாயில்லை என்று பதிவுக்கு சென்றேனோ தொலைந்தேன்.//

:))))

SK said...

எல்லாம் கலந்த கலவைன்னு சொல்லுவேன். :)

1. உங்கள் கணினியின் வேகம்.

2. Template

3. சிலர் அவர்கள் பக்கங்களில் பல கட்ஜெட் போட்டு வைத்து இருப்பார்கள் அதுவும் ஒரு காரணம் :)

pudugaithendral said...

ஆனால் எனக்கு ஆச்சரியம் அங்கே கும்மியிலிருந்து பெரிய விவாதங்கள் வரை நடைபெறுகிறது. வருபவர்களுக்கு என்னைப்போல ப்ரச்சனைகளே வருவதில்லையா..?//

உங்க கேள்வியிலேயே பதில் இருக்காப்ல இருக்கு ஃப்ரெண்ட்.

சிலர் மட்டும் கண் கூசுதுன்னு சொல்லியிருக்காங்க. பலரும் பாராட்டினதால (அதிக எண்ணிக்கையில் வாக்கு கிடைச்சதால)அப்படியே வெச்சிருக்கேன்.

சென்ஷி said...

:-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எஸ் கே.. நீங்க தான் பர்ஸ்ட்..

--------------------
புனிதா உன்னோட ரெட் கலர் பேக்ரவுண்ட் வச்ச டெம்ளேட் நினைவு இருக்கா .. உன் பேரையும் சேத்திருந்தேன்.. ஆனா இப்பத்தைக்கு உன்னோட பதிவு 2 நிமிசத்தில் லோட் ஆகிடுது சரின்னு விட்டுட்டேன்..டெம்ளேட் மாற்றரது எல்லாம் தனித்துவம் தான் காரணமுன்னு நீதானே சொன்ன.. :P

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எஸ்கே நீங்க சொல்றது ரொம்ப சரி .. என் கணினியின் வேகம் கூட ஒரு காரணி தான்.. அப்ப வேகம் குறைந்த கணினிக்குன்னு இன்னோரு லிங்க் கிடைக்குமா :P
-----------------------------
தென்றல் உங்க பதிவின் கலர் எனக்கு ப்ரச்சனையாக இல்லை பதிவு லோட் ஆகவில்லை.. க்ளாக்லின்க் என்ற எதோ ரொம்ப நேரமாக நிக்கவைக்கறதா நினைக்கிறேன்.
------------------------
சென்ஷி நன்றி :)

SUREஷ்(பழனியிலிருந்து) said...

எனக்கும்>பளிச்சென்று வித்தியாப் படுத்திக்காட்ட டெம்ப்ளேட் டிசைன்கள்தானே உதவுகின்றன தல.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சுரேஷ் பதிவு டெம்ப்ளேட் சீக்கிரம் லோட் ஆகிடுச்சு.. கலர் தான் பளிச்சுன்னு ( அடிக்கிறாப்ல :) ) இருக்கு.. மேல படம் அழகு..

ராமலக்ஷ்மி said...

நரி பதறி ஓடும் அளவுக்கு எனக்கு ஆனதில்லை என்றாலும் குறிப்பிட்ட சிலரது வலைப்பூக்கள் எப்போதும் திறப்பதற்கு நேரம் எடுப்பதுண்டு. என்னுடையது மற்றவருக்கு எப்படி எனத் தெரியவில்லை:)!

டெம்ப்ளேட்டில் கை வைக்கப் போனாலே பெரும் பிரச்சனைகளைப் பலமுறை சந்தித்ததால் ஆரம்பத்தில் இருந்ததை அப்படியே வைத்துக் கொண்டு விட்டேன்:)! மற்ற சிலருக்கும் அப்படி ஏதேனும் பிரச்சனை இருக்கலாம் என்றும் நினைத்துக் கொள்வேன்:)!

ராஜ நடராஜன் said...

//எனக்கு பொழுது போக்கே பதிவுகளைப் படித்து பின்னூட்டமிடுவது தான். பதிவிடுவது என்பது தினப்படி வேலையில்லை//

கட்சிக்கு ஒரு ஆள் சேர்ந்தாச்சு:)

ராஜ நடராஜன் said...

தல ஷ்யூர்S (Sureஷ்) பதிவுக்கு ஜேம்ஸ்பாண்டுகள் வந்ததுனால பதிவர்கள் தப்பிச்சாங்க.முன்பு ஒரே சிவப்புல ஒரு தளம் அமைச்சிருந்தாரே பார்க்கணும்:)

MyFriend said...

பதிவை படிக்காம இருக்க இது ஒரு சாக்கு. :-))))

MyFriend said...

ஆனா, நீங்க சொல்றது ஒரு பக்கம் நியாய்ம்தான்.. ;-)

MyFriend said...

டெம்ப்ளேட் டிசைக்ன் ஓக்கேதான்.. ஆனா, அது ஹெவி ஆகாம பார்த்துக்கிட்டா பிரச்சனை இல்ல. :-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மை ப்ரண்ட் போட்டுக்குடுக்கிறயா.. ரீடரிலும் படிப்பெனே.. :))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ராமலக்ஷ்மி உண்மைதான் ... சில மாற்றம் செய்தபோதெல்லாம் ப்ரச்சனை எதாவது ஆகறது தான்.. ஆனா பாருங்க இவங்கள்ளாம் சும்மா டிசைன்ல பூந்து விளையாடறாங்க.. :)
-------------------------------
ராஜ நடராஜன்.. கட்சிக்கு கொள்கை எல்லாம் இல்லாம பாத்துக்கனும் அது தான் நம்ம கொள்கை..:)

ஆயில்யன் said...

சிம்பிள் பிளாக்கர் லே-அவுட் தான் இன்னிக்கும் என்னிக்கும் பெஸ்ட்!

எந்தவிதமான ஏட்டிக்கு போட்டி வேலையும் செய்யாது அதுவுமில்ல்லாம டெரரா பண்ணாம கிளிக்கின வேகத்துக்கு ஜக்குன்னு வந்து குந்திக்கும் பேஜ் !

Sasirekha Ramachandran said...

வாங்க...இப்ப வந்து பாருங்க....உங்களுக்காகவே கலர் மாத்திருக்கேன்!!!

கவிதா | Kavitha said...

என்னுடையது பிரச்சனை வருதா முத்து.. .சிம்பிளா தான் போட்டு இருக்கிறதா நானே நினைச்சிக்குறேன்.. :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆயில் நீங்க நம்ம கட்சி.. :)
------------------
சசி சூப்பரு... எந்த கலர்ன்னாலும் வெளிர் நிறத்தில் வச்சிக்குங்க.. கருப்பு மட்டும் வேண்டாம்.. நன்றி நன்றி..
--------------------------
கவிதா உங்க பதிவு சட்டுன்னு திறக்குது ..:)

நிஜமா நல்லவன் said...

/மொத்தத்தில் என்னால் சரியாக பலரது பதிவைப் படிக்க முடிவதில்லை./


ஆஹா...டெம்ப்ளேட் மேல பழி போட்டுட்டு தப்பிக்க வழி சொல்லி கொடுத்திருக்கீங்க...:))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லவரே.. அது உங்க சாமர்த்தியம் பொறுத்து.. சேட்ல அவங்க கிட்ட ரீடர்ல படிச்சேன்னு சொல்லி கமெண்ட்டை சேட்லயே அனுப்பிடுவோம்ல..:)

sury siva said...

// எனக்கு பொழுது போக்கே பதிவுகளைப் படித்து பின்னூட்டமிடுவது தான். பதிவிடுவது என்பது தினப்படி வேலையில்லை.//


சரிதான்.
நானும் உங்க கட்சிதான். ஏன் ! வலைப்பதிவுக்கு வரும் நபர்களில் நூற்றுக்கு 70 விழுக்க்காடுக்கு மேல்
இது போல் தான். நம்ம எழுதியதை படிக்க வ்ற்புறுத்துவதற்கு சொந்த வலைப்பதிவை விட
பின்னூட்டம் தான் கம்ப்ல்ஸிவ் அன்ட் ஐடியல்.

அது இருக்கட்டும். நாம எல்லாரும் ஒரு லெட்டர் பேடு கட்சி ஆரம்பித்து ஏதேனும் ஒரு கூட்டணியில்
இடம் பிடித்தால் எப்படி !

சுப்பு தாத்தா.

டைப் அடிக்கும்போது, அருகில் முணுமுணுத்த குரலில் கேட்டது:

" கிழவனுக்கு விபரீத ஆசையெல்லாம் வந்துடுத்தே ! ஊருக்கு போய் நல்ல டாக்டரிடம் காண்பிக்கணும்"

குரல் சொந்தக்காரர் : மீனாட்சி பாட்டி.

ஆதவா said...

டெம்ப்ளேட்டுகளை தேடியெடுக்கும் பொழுது ரொம்பவும் அலசி எடுத்து நம் விட்ஜெட்டுகளுக்குச் சரியானதா என்று யோசித்து எடுக்கவேண்டும்.. பல தளங்களில் ஐநூறுக்கும் மேற்பட்ட டெம்ப்ளேட்டுகள் இருக்கின்றன.

உங்கள் தளம் வெண்மையாக இருக்கிறது. அது எளிமையின் சின்னம்.. பொதுவாக டெம்ப்ளேட்டுகளைக் காட்டிலும் அதில் எழுதப்படும் பதிவுகள்தான் முக்கியம் என்றாலும், வீட்டில் உள்ளவர் சுத்தமாக இருப்பதற்கு முன்னர் வீடு சுத்தமாக இருக்கவேண்டும் என்பதைப் போல டெம்ப்ளேட்டுகள் அழகாக இருப்பதும் நல்லது..

என் தளத்தைப் பற்றிய உங்கள் கருத்தைத் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்!!

http://aadav.blogspot.com

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\ நம்ம எழுதியதை படிக்க வ்ற்புறுத்துவதற்கு சொந்த வலைப்பதிவை விட
பின்னூட்டம் தான் கம்ப்ல்ஸிவ் அன்ட் ஐடியல்./
அடிச்சீங்க பாருங்க.. :)
சூரிசார் ... கட்சியில் கொ.ப.செவா பாட்டிய வச்சிட்டா அவங்க ஏன் புலம்பப் போறாங்க..
------------------------
ஆதவா உங்க பதிவு பாஸ் செய்துடுச்சு.. :)

Boston Bala said...

---என்னால் சரியாக பலரது பதிவைப் படிக்க முடிவதில்லை.---என்னுடைய அலுவல் கணியில் இந்தப் பிரச்சினை இருக்கிறது. ஃபயர்பாக்சுக்கு பதில் இன்டெர்னெட் எக்ஸ்ப்ளோரர் பயன்படுத்தினால் மட்டுமே பலரது பதிவு சரியாக வருகிறது!

Unknown said...

அக்கா என் டெம்ப்ளேட்ல இப்படி ஒரு பிரச்சனை இருக்கறதா எனக்கு தோணலை அக்கா.. ஏன்னா எவ்ளோ ஸ்லொவ் ஆனா கனெக்ஷன்லயும் நான் ஓபன் பண்ணிருக்கேன் என் ப்ளாக... இருந்தாலும் பார்க்கிறேன்.. நன்றி அக்கா :)))

Unknown said...

//எனக்கு பொழுது போக்கே பதிவுகளைப் படித்து பின்னூட்டமிடுவது தான்.//

உங்களுக்குப் பிடிச்ச மாயஜாலக் கதை
3 பாகம்/கவிதைகள் எல்லாம போட்டாச்சு. பின்னூட்டம் காணலியே?

ஹிஹிஹிஹிஹிஹிஹி

Subankan said...

//சில நேரம் ஃபயர்பாக்ஸ் க்ராஷ் ஆகி காணமலே போய்விடும்.//

Google chrome பயன்படுத்திப் பாருங்கள். ஃபயர்பாக்ஸ் சில java scriptகளுக்கு க்ராஷ் ஆகிவிடும். இன்டெர்னெட் எக்ஸ்ப்ளோரர் இன்னும் மோசம்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பாபா.. நான் ஃபயர் பாக்ஸ் வந்தப்புறம் இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் ஆன் செய்வதே இல்லை.. ஆபிஸ் கணினியில் பாக்க முடியலன்னா ரொம்ப கஷ்டமாச்சே.. அங்க தானே கொஞ்சம் ப்ரீயா வலை பாக்கலாம். :)
------------------------
ஸ்ரீமதி ..கண்டிப்பா பாரும்மா.. ஒரு முறை இல்ல பலமுறை இப்படி ஆனதால் தான் உதாரணத்துல போட கரெக்ட்டா உன் பேர் ஞாபகம் வந்தது.. :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ரவிஷங்கர்.. நடுவில் இப்படி க்ராஷ் ஆகி நின்று போயிட்ச்சுன்னு வைங்க..பின்ன அதிகம் பதிவுகளைப் படிக்க நேரம் இருக்காது.. அப்பறம் கொஞ்சம் டல்லாகி வேற வேல பாக்கப்போயிடறேன்.. அதனால் உங்களுதுக்கு பின்னூட்டம் போடலயா இருக்கும்.. ( யப்பா எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு இதுக்கு பேசாம வீட்டு வேலையே ஒழுங்கா செய்திருக்கலாம் :) )
-----------------------------
சுபாங்கன் நன்றிங்க.. அதையும் பாத்துடரேன்.. ஆனா இதுவரை என்கிட்ட நண்பகள்யாரும் க்ரோம் பயன்படுத்துங்க சூப்பர்னு சொல்லவே இல்லையா அதான் அதை பயன்படுத்திப் பார்க்கல..

Thamiz Priyan said...

எங்க அக்காவுக்கு மட்டும் ஏனிப்படி நடக்குது? அக்கா உங்க கணிணி இருக்கும் இடம் வாஸ்துபடி சரியில்லைன்னு நினைக்கிறேன். இனி உங்க அடுப்புக்கு பக்கத்துல கணிணியை இடம் மாத்துங்களேன்.. ;-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பட்டாம்பூச்சி நன்றிங்க..:)
-----------------------------
தமிழ்பிரியன் .. அப்படியும் இருக்குமோ .. ஆனா அதுக்குன்னு கிச்சன்லயா.. :(

Thamiz Priyan said...

///முத்துலெட்சுமி-கயல்விழி said...
தமிழ்பிரியன் .. அப்படியும் இருக்குமோ .. ஆனா அதுக்குன்னு கிச்சன்லயா.. :(////

கிச்சன் என்று நான் சொல்லவில்லையே? வாஸ்து படி கிச்சனில் இருக்கும் அடுப்பை பெட்ரூமிலும், ஹாலில் இருக்கும் கணிணியை பெட்ரூமில் இருக்கும் அடுப்புக்கு அருகிலும் வைக்க வேண்டும்... முயற்சி செய்து முடிவைச் சொல்லுங்க.. ;-))

sury siva said...

// வாஸ்து படி கிச்சனில் இருக்கும் அடுப்பை பெட்ரூமிலும், ஹாலில் இருக்கும் கணிணியை பெட்ரூமில் இருக்கும் அடுப்புக்கு அருகிலும் வைக்க வேண்டும்//

சரியாகத்தான் இருக்கிறது. ஆனால் ஒன்று மட்டும் தமிழ்ப்பிரியன் சொல்ல மறந்து விட்டார் என நினைக்கிறேன்.
அடுப்புக்கு அருகில் வைத்துவிட்டு, மெள்ஸை அடுப்புக்குமேல் காஸ் ஸ்டவ் பற்ற வைக்கும்போது
வைக்கவேண்டும். அப்போதுதான் வாஸ்து ரீக்கொயர்மென்ட் கம்ப்ளீட்.

சுப்பு ரத்தினம்.

"உழவன்" "Uzhavan" said...

நீங்கள் சொல்வது போல், ட்யூப்ல பஞ்சர் போட்ட மாதிரி, எங்க பார்த்தாலும் எதையாவது ஒட்டி வச்சிருந்தால் ஒப்பன் ஆகுறதுக்கே கொஞ்சம் நேரம் எடுக்கும். சில பதிவுகளில் நிறைய படங்கள் இருந்தாலும் இதே கதிதான்.
நம்ம பதிவுல எதாவது இப்படி பிராபளம் இருக்கானு நான் யாருட்டயும் கேக்கமுடியாது. ஏன்னா நீங்க யாருமே பெரும்பாலும் நம்ம ஏரியாவுக்கு வந்திருக்க மாட்டீங்க. ஒருவேளை வந்திருந்தா ஒரு கடிதாசி போடுங்க; நானும் மாத்திகிறேன் :-)

Anonymous said...

அட, எல்லாரும், அவங்கவங்க பக்கங்கள் ஒழுங்கா ஓப்பன் ஆகுதானு செக் பண்ண, அக்கா வழி செஞ்சு கொடுத்திட்டாங்க. அப்படியே என்னோடதையும் கொஞ்சம் பார்த்து சொல்லுங்களேன்.

-சுமஜ்லா

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தமிழ்பிரியன் ... சூரி சார். ரெண்டுபேரும்
ஒரு முடிவோட இருக்கீங்க.. என் கணினிய உடைக்கனும்ன்னு .. :)
---------------
சுமஜ்லா..நேத்தோட அந்த டெஸ்டர் வேலைய ராஜினாமா செய்துட்டேன்.. ஆனா நேத்திக்கு உங்ககொடைக்கானல் டூர் பதிவு படிச்சப்ப கவனிச்சது என்னன்னா.. ரொம்ப மோசமில்ல.. ஆனா கொஞ்சூண்டு லேட் ஆச்சு.. அவ்வளவு தான்.. இன்னும் நிறைய சேக்காதீங்க பக்கத்துல..

SUBBU said...

:))))))))))

அமிர்தவர்ஷினி அம்மா said...

உதாரணமாக புதுகைத் தென்றல் , ஸ்ரீமதி //

என்னால புதுகைத்தென்றல், அபு அப்ஸர் இவங்க ப்லாக் போறதுக்கே முடியாது, ஓடும் ஒடும் அது பாட்டுக்கும் ஓடும், ஆனா ப்லாக் ஓப்பன் ஆன பாடா இருக்காது. சரி 10 20 நிமிஷம் கழிச்சு ப்லாக் ஓப்பன் ஆனா கமெண்ட் பேஜ் ஓப்பன் ஆக இன்னும் 10 நிமிஷம்.

அதனால கொஞ்சம் டெம்ப்ளேட் கவனிங்க மக்களே.

நன்றி இப்படி ஒரு பதிவிட்டதுக்கு

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சுப்பு நன்றிங்க.. :)
--------------
அமித்து அம்மா பாத்தீங்களா பாதிக்கப்பட்டவங்க நிறைய பேரு இருக்கோம்.. பாத்து செய்வாங்கன்னு நம்புவோம்..