May 14, 2009

என் வீட்டுத் தோட்டத்தில் ....

என் வீட்டுத்தோட்டத்தில் இருக்கும் நண்பர்களை உங்களுக்கும் அறிமுகப்படுத்துக்கிறேன்.


ப்ரோமிலைட்ஸ் (Bromeliads)
யுபோர்பியா மிலி (Euphorbia milii )

இவங்க பதிவர் வின்சென்ட் பரிசாகத் தரும்போது ரொம்ப சின்னவங்களா இருந்தாங்க ... அதற்கப்பறம் அந்த குழந்தைகள் எப்படி இருக்காங்கன்னு வின்சென்ட் விசாரித்தபோது வளர்ந்துகிட்டே இருங்காங்க பத்திரமா இருக்காங்கன்னு சமாதானம் சொன்னேன்.. இப்பத்தான் அவருக்கும் இந்த குழந்தைகளின் வளர்ச்சியைக் காட்டறேன்.. வரும்போது மூன்று நான்கு இலைகளுடன் இருந்த இவங்க இப்ப நல்லா வளர்ந்திருக்காங்க.. பூ முழு சிவப்பாக இல்லாம மஞ்சள் பச்சை கலந்து இருக்கிறது.

அவ்வப்போது மாலி (தோட்டக்காரர்) வருவார் . உரங்கள் போட்டு கொஞ்சம் கவனிச்சிட்டு ப் போவார். என்னதான் நாம கவனிச்சாலும் இவங்களுக்கெல்லாம் ஒரு நல்ல டாக்டர் மாலி தான்.. அவருக்கு இந்த புது செடிகள் ஆச்சரியமாக இருந்தது. நல்ல உயர்ந்த வகை செடிகள் கவனம் என்று சொல்லிவிட்டுப் போனார். கொஞ்சமாக தண்ணீர் விட்டு அதிக வெயில் படாமல் வைங்க என்று சொல்லிச்சென்றார்.



கறிவேப்பிலை முதலில் சவலைப்பிள்ளையாக இருந்து இப்போது தான் நல்ல நிலைக்கு வந்திருக்காங்க.. பாக்க என்ன அழகு!!
மணிப்பிளாண்ட் அப்பப்ப டிரிம் செய்து பண்ணிரண்டு வருசமாக இளமையாவே இருக்கறவங்க இவங்க..
மணத்தக்காளி.. இவங்க ஒருத்தவங்களா வந்து பெரிய குடும்பமாகிட்டவங்க .. ஒரு செடியில் பழம் ஆரஞ்சாவும் ஒரு செடியில் கருப்பாவும் இருக்கும்.. திடீர்ன்னு பூச்சி வந்து இலைகள் சுருங்கிபோவாங்க.. திடீர்ன்னு நல்லா வளமாவும் இருப்பாங்க..


நந்தியாவட்டை ... இவங்க ஒல்லிப்பிச்சான் . தொட்டியில் வேர் போக இடமில்லாம இலை சிறுத்து இருக்காங்க. இந்த காலநிலையில் நல்லா பூகொடுக்கிறாங்க..

இது தவிரவும் துளசி இருக்காங்க , பன்னீர் ரோஸ் இருக்காங்க..செம்பருத்தி இருக்காங்க
கற்றாழை இருக்காங்க அவங்களை இன்னொரு நாளில் அறிமுகப்படுத்துகிறேன்.

ஒரு நாள் உங்கள் வீட்டுத்தோட்டத்தையும் சுத்திக்காட்டுங்களேன் எங்களுக்கு? :-)

50 comments:

Vidhya Chandrasekaran said...

அழகான தோட்டம். நான் இருக்கிற வீட்டுல செம்பருத்தி மட்டும் தான் நல்லா இருக்கு. துளசி, கற்பூரவல்லி, பட்டன் ரோஸ் எல்லாம் புட்டுகிச்சு:(

ஆயில்யன் said...

அழகா இருக்கு தோட்டம் !


செம்பருத்தியை கொஞ்சம் போட்டோ புச்சு போடுங்க அக்கா!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி வித்யா.. நானும் பட்டன் ரோஸ் இப்பத்தான் ஒருத்தங்க வீட்டிலிருந்து வாங்கி வந்து வச்சிருக்கேன்.. பொதுவா விடுமுறையில் போய்விடுவதால் தண்ணீர் விடும் ப்ரச்சனையில் செடிகள் செத்துபோய்விடும். போனமுறை வேலைக்காரங்க ஒழுங்கா தண்ணிவிட்டு காப்பாத்திட்டாங்க.. இந்தமுறை (ரங்க)மணிக்கு நோ லீவ் ... ஸோ நோ ஒர்ரி.. :)

Sanjai Gandhi said...

ரொம்ப நல்லா இருக்குக்கா.. :)
எங்க தோட்டத்துல இப்படி வருஷக் கணக்கா ஒரே குடும்பம் எல்லாம் இருக்காது.. அப்பப்போ ஆள் மாறிட்டே இருப்பாங்க.. :)

ஆதித்தன் said...

நன்றாக இருக்கிறது
தோட்டமும்,
பதிவும்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆயில்யன் ,செம்பருத்தியும் பத்துவருடங்களுக்கு மேலாக இருப்பது தான்..இப்போது பெரிய கிச்சன் சிங்க் ல இருப்பதால் மரமாட்டம் வளர்ந்திருக்கு .. போட்டோ பிடிக்கிற அன்னைக்கு பூவே இல்லை அதான் அப்பறம்ன்னு தள்ளிவைச்சிட்டேன் அதை.. :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஏன் சஞ்சய் செடிக்கு தண்ணீ ஊத்தாம விடறதாலயா..? இல்லன்னா ஆபிஸ் பள்ளிக்கூடத்துல வாடகைக்கு செடிவாங்கிவைப்பது மாதிரியா?? :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி ஆதித்தன்.. :)

கோபிநாத் said...

அழகான தோட்டம்...நல்ல அறிமுகம் ;))

அவுங்களை எல்லாம் நானும் விசாரிச்சேன்னு சொல்லுங்க ;)

துளசி கோபால் said...

ஜூப்பர்!!!!!!!

மணி ப்ளாண்ட்ன்னு நாம் சொல்றோமே அதுக்கு இங்கே பெயர் வேற!!!!

டெவில்ஸ் ஐவி.

பணம் ஒரு பிசாசுன்னு சொல்றாங்க போல:-))))

அதே போல மணித்தக்காளிச் செடியை விஷச்செடின்னு சொல்றாங்க.

எதுக்கோ தெரியுமா இதோட அருமைன்னு இருக்கவேண்டியதுதான்!

Thamiz Priyan said...

ஆகா..கச்சிதமா அழகா இருக்கே! வீட்ல இம்புட்டு இடம் இருக்கா? பின்னாடி ஒரு பெரிய காலி இடமே இருக்கே..டெல்லியில் காலி இடமா?.. ;-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கண்டிப்பா விசாரிச்சதா சொல்லிடறேன் கோபி :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

துளசி சரியாச் சொன்னீங்க.. மணத்தக்காளி மருத்துவ குணம் அதை யே விசம்ன்னா என்னா செய்யரது அவங்களை.. :)

பணம் பிசாசு தான் எக்கச்சக்கமா பயமுறுத்துதே..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தமிழ்ப்ரியன் நியூடெல்லியில் எல்லாமே க்ரீன் டெல்லியாக்கற வேலைகள் தான் இப்போல்லாம்.. அரசாங்கம் திட்டமிட்டு கட்டிய குடியிறுப்புகளில் பார்க் என்று ஒரு அங்கம் கண்டிப்பாக இருக்கவேண்டும்.. ஒருபக்கம் ரோடுபாலம்ன்னு ஊரில் மரம் வெட்டினாலும் ஒரு பக்கம் பார்க் மரம் நடுதல் என்று பசுமைக்கும் கவனம் வைக்கிறாங்க..

சென்ஷி said...

அல்ரெடி நீங்க எங்க வீட்டு தோட்டத்தை நீங்க பார்த்துருக்கீங்க. ஆனா போட்டோ எல்லாம் இல்லை :(

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சென்ஷி உங்க வீட்டுத்தோட்டம் நல்லா இருந்தது.. அது நிலத்தில் வளருவதால் சூப்பரா இருந்தது.. உங்க வீட்டு தோட்டம் போட்டோ என்கிட்ட இருக்கு.. ;))

ராமலக்ஷ்மி said...

அழகாய் இருக்குதுங்க தோட்டம். ஸோ இங்கதான் குருவிகளுக்கும் விருந்து நடக்கும் இல்லையா?

என் வீட்டில் 3 பாலகனிகளும் மேற்கு நோக்கியவை. முதல் ஒரு வருடம் விதவிதமாய் செடிகள் வாங்கி சோலையாய் வைத்திருந்தேன். அதிக வெயில் தாங்காமல் எல்லாம் வித்யா சொல்லியிருப்பது போல புட்டுக்கிச்சு. ஆகையால் இப்போ தோட்டம் சின்னதாகி வீட்டு எண்ட்ரன்ஸ் லாபிக்குப் போய்விட்டது:)!

ராமலக்ஷ்மி said...

"என் வீட்டுத் தோட்டத்தில்... செடியெல்லாம் கேட்டுப் பார்..." என பதிவிட்டுட்டு எல்லோருக்கும் கேட்க முடியாத படி தமிழ்மணத்திலே இணைக்காத இருக்குறீங்களே:)?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆமா ராமலக்‌ஷ்மி இதான் குருவிங்க வந்து விருந்து சாப்பிடற இடம்..என்னங்க பெங்களூருல தில்லி விட வெயிலா இப்படி சொல்றீங்க.. ஆனா இங்க அதை விட குளிர்காலத்துலயும் செடிகளுக்கு கஷ்டம் தான்..

ஊருக்குபோற அவசரத்தில் பேக்கிங்க்கு நடுவில் ..அதனால் தமிழ்மணத்தில் சேர்க்க மறந்திருப்பேன்ப்பா ...:) நன்றி நினைவுபடுத்தியதுக்கு..

அமுதா said...

அழகான தோட்டம்

அமுதா said...

வெயிலுக்கு இதமா குளிர்ச்சியா இருக்கு

தீப்பெட்டி said...

உங்க குடும்பம் ரொம்ப பெருசுன்னு சொல்லுங்க..

ரொம்ப பாசக்கார ஆளுங்களா இருக்கீங்க..

வின்சென்ட். said...

மிக நேர்த்தியாகவும்,ஆரோக்கியமாகவும், எல்லா செடிகளையும் வளர்த்தியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள். வித்தியாசமாக பதிவர்களிடம் மாடி தோட்டம் பற்றிய இரசனையை ஏற்படுத்தியுள்ளீர்கள் என்பதே உண்மை. யுபோர்பியா பூக்க ஆரம்பித்துள்ளது மகிழ்ச்சி தருகிறது. அதிக வெயிலையும் தாங்கி வருடம் முழுவதும் பூக்கும்.பனிகாலத்தில் குறைவாக பூக்கும். மொத்தத்தில் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

சின்னப் பையன் said...

அழகா இருக்கு தோட்டம் !

இயற்கை நேசி|Oruni said...

இவ்வளவு தாவர வகைகளை வைச்சு பார்த்துக்கிறீங்களா? ஓ! அதான் மாலிண்ணாச்சி இருக்காரோ :))...

சரி சவலைப் பிள்ளையில (அதான் கருவேப்பிலைல) இருந்து ரெண்டு இனுக்கு உருவியிருக்கிற மாதிரி இருக்கு, அப்படியா :)... பச்சை பசேல்னு இருக்கு .

"நந்தியாவட்டை" ம்ம் அசத்தல் தோட்டங்க. எஞ்சாய்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அமுதா நன்றிப்பா.. அதும் ரெண்டு நாள் முன்ன ஒரு சின்ன மழை வந்ததா செடியெல்லாம் நாம் எத்தனை தண்ணீ ஊத்தினாலும் மலருவதை விட ஒரு சின்ன மழைக்கு மலர்ந்துடுது.. :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆமா தீப்பெட்டி எங்க வீட்டுல பிரண்டை , ஓமவல்லி எல்லாம் இருந்தது .. அவங்களை எல்லாம் திரும்ப அழைச்சிட்டு வரனும்..ஊருலேர்ந்து .. :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி வின்சென்ட் ,பூக்கள் பார்க்க அழகாக இருக்கிறது.. இலைகளும் ஓவியத்தில் வரையும் இலைபோல அழகே..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி ச்சின்னப்பையன்.. உங்க வீட்டுல தோட்டம் இருக்கா அதை சொல்லுங்க.. :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இயற்கை நேசி, ஆமா பின்ன கருவேப்பிலை வைப்பதே இணுக்கு உருவத்தானே.. மாலி அண்ணாச்சி 3 மாசத்துக்கு ஒருமுறை வருவார்.. வீட்டய்யா தண்ணி ஊத்துவாங்க ... நான் செடிக்கு களை எடுப்பது எதை எங்கே வைப்பது .. இப்படி முக்கிய முடிவு எடுப்பேன்.. :))

Gowripriya said...

எல்லாரையும் கேட்டதா சொல்லுங்க :))
அழகா, கண்ணுக்குக் குளுமையா இருக்காங்க... esp அந்த என்றும் இளமை money plant

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி கௌரி... அடிக்கடி மணிப்ப்ளாண்ட்டை ஆசையா பாட்டில்ல உள்ள கொஞ்சம் கொண்டுவந்து வைப்பேன் .. ஆனா எங்க ஊரில டெங்கு கொசுக்கு செக்கிங்க் வந்தா கூலர் அண்ட் மணிப்ளாண்ட் கண்டபடி வளர்ந்திருந்தா வார்ன் செய்வாங்க.. ட்ரிம் செய்திட்டே இருக்கனும்.. :)

Vetirmagal said...

அழகான படங்கள்.

எங்கள் தோட்டத்தில் எல்லாம் பச்சை நிறம் தான். மோஸ்தர் இலைகள். வருவாரெல்லாம் அழகு என்கிறார்கள். மாடியில் காய் தோட்டம் போட ஆசை. ஆனால் யாரை கேட்பது என்று தேடிக் கொண்டிருக்கிறேன் ;-)

விக்னேஷ்வரி said...

அக்கா சீக்கிரம் டெல்லிக்கு ரிட்டர்ன் வாங்க. இவங்களையெல்லாம் உங்க வீட்டுலேயே வந்து பாக்குறேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வெற்றிமகள் அப்பப்ப நானும் பச்சைமிளகாய் தக்காளி போடுவது தான்.. ஒன்று காய்த்தாலும் அது பேரானந்தம்.. :))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கண்டிப்பா விக்கி.. ஜூலையில் பார்க்கலாம்..:)

மங்கை said...

இதுல கரிவேப்பிலை தான் முக்கியம் இந்த ஊர்ல.. அதைப்பார்தாலே சந்தோஷமா இருக்கு....

Poornima Saravana kumar said...

ஆஹா தோட்டம் பார்க்கவே பச்சை பச்சையா கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு:)

Menaga Sathia said...

உங்க வீட்டுத் தோட்டம் ரொம்ப அழகா இருக்கு.எனக்கும் செடி வளர்ப்பதில் விருப்பம் ஆனால் வளர்க்க முடியல.

Dhiyana said...

நாங்க இப்பத்தான் தோட்டம் போட்டிருக்கோம். வளர்ச்சியைத் தெரிவிக்கிறோம்.

♫சோம்பேறி♫ said...

ஹைய்யோ.. ஜூப்பரா இருக்கு..

நாகு (Nagu) said...

வின்டெக்ஸ் பக்கம் போவாதீங்க... :-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி பூர்ணிமா..
நன்றி மேனகா சத்யா... முயற்சி செய்யுங்க.. வீட்டுக்குள்ள கூட வளர்க்க முடியுது சின்ன சன்னலில் வைக்கக்கூடிய வகையும் உண்டே.. நிச்சயம் இது ஒரு ரிலாக்சேசன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கண்டிப்பா தீஷு .. பகிர்ந்துக்கங்க எங்களோட.. அதை அதைத்தான் எதிர்பார்க்கிறேன்..
:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சோம்பேறி .. நீங்க பாத்து தான் சொல்வீங்களா வளர்க்கமாட்டீங்களா..? :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நாகு வாங்க.. என்ன சொல்லவரீங்கன்னு எனக்கு புரியலயே.. :(

sankarkumar said...

அழகான தோட்டம்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி சங்கர்..

pudugaithendral said...

நானும் வர்றேன். பதிவோடு

pudugaithendral said...

ஹை மீ த 50