----------------------------------------
சில விளம்பரங்களில் புதிர் போடுவாங்க... அப்படி புதிய தலைமுறை இதழுக்கு விளம்பரம் வந்துகொண்டிருந்தது. முதல் முறை வந்த போதே ஐந்து ரூபாய் மற்றும் இளைஞர்கள் என்கிற குறிப்பைக் கொண்டு அது புதியதலைமுறைக்கானது என்று கண்டுபிடிக்கமுடிந்தது. முதன் முறையாக புதிர் விளம்பரம் ஒன்றை நானே கண்டுபிடித்திருக்கிறேன் மகிழ்ச்சி தானே..
--------------------------------------------
எங்க வீட்டு கொலுவின் படங்கள்.



தாமரைக்குளம்.
ஓங்கியுயர்ந்த ஆலமரம் அங்கே அழகான இரண்டு கிளிகள்... நாங்கள் அமைத்து வைத்த பஞ்சாயத்து மேடை . (விழுதுகள் மகளே சொன்ன யோசனை) விளக்குத் திரிகளைக் கொண்டு செய்த விழுதுகள். கோயில் இல்லாத ஊர் உண்டா..? பிள்ளையாரப்பா!..என் கனவான திண்ணை வைத்த வீடுகள். கீரை பதியனிட்ட தோட்டம்.



எப்பப்பாருங்க நம்ம மக்கள் ஒரு கவர் குடுங்க என்றபடி ப்ரசாதங்களை போட்டு எடுத்துச் செல்ல கவர் கேப்பாங்க. நிஜமாகவே எங்கள் வீட்டில் பாலிதின்கள் கிடையாது. இதுபோன்று எப்படியாச்சும் பேக்கிங்க் கவர்கள் கட்டியே வந்தால் ஒழிய.. நான் தவிர்த்துவிடுவேன். அதனால் இம்முறை எல்லோரிடமும் நான் கவரில்லை கவர் இல்லை என்று சொன்னதால் ஏன் என்று கேட்பவர்களிடம் சின்னப்ரசங்கமே செய்துவிட்டேன். வீட்டில் முன்பு வேலை பார்த்தவங்களில் ஆரம்பித்து கீழ் வீட்டு டீச்சர் வரை எல்லோருக்கும் செய்தியை இம்முறை அழுத்தமாக சொல்லி இருக்கிறேன். ஒருநாள், ஒரு வேளை,கவர் வேண்டாம் என்று என்னால் அவர்கள் பொருட்களை கையில் எடுத்துச்சென்றது ஒரு விதமகிழ்ச்சி தான்.


வருபவர்களுக்கு கொடுப்பதற்கான நீலமும் சிவப்புமான கிண்ணங்கள்.

நான் செல்லும்போதே துணி பை கொண்டு சென்றேன் . மற்றொரு வீட்டில் அப்படி கவர் கேட்கக்கூடாது என்று, நான் சொன்ன பேச்சை கேட்டுக்கொண்டு ( பயந்துகொண்டு) என் தோழி தன் சேலை தலைப்பிலேயே தேங்காய் வெத்தலை பாக்கை வீட்டிற்கு எடுத்துச் சென்றார்கள்.. வேறென்ன வேண்டும் ?
----------------------------------------
அப்பறம் இத்தனை மகிழ்வான விசயம் தந்திருக்கிறேன் . இனி விசயம் ஒன்று. ஒரு மாதம் எனக்கு விடுமுறை வேண்டும். தோள்பட்டையிலிருந்து எல்போ வரையிலான பகுதியில் விட்டு விட்டு வலி இருக்கிறது. பதிவர் நண்பர்களுக்கு பின்னூட்டமிட முடியாமைக்கு வருந்துகிறேன்.
34 comments:
// நவராத்திரி பஜனைக்கு எங்க பாட்டு டீச்சர் வீட்டுக்கு போயிருந்தேன். வாழ்க்கையில் முதல் முறையாக நிஜக்கும்மி அடிச்சேன் //
டீச்சர் வீட்டுக்கு ஒன்னும் சேதம் இல்லிங்களா? நல்ல சானி தட்டுவிங்களா?
// நாங்கள் அமைத்து வைத்த பஞ்சாயத்து மேடை //
எங்கிங்க சொம்பும், துண்டும் காணம், இது நம்ம ஊரு பஞ்சாயத்துதான அம்மினி?
// நான் செல்லும்போதே துணி பை கொண்டு சென்றேன் //
நல்ல உஷாரா இருக்கீங்க? எப்பிடி நவராத்திரி கலக்சன்ஸ். ஆமா என்ன சுண்டல், என்ன கிஃப்ட் சொல்லவே இல்லை.
பதிவுகளும் பொம்மைகளும் அருமை. நன்றாக உள்ளது.
ஹை, திண்ணை வைத்த வீடு என நான் கூவும் முன் நீங்களே கூறி விட்டுள்ளீர்கள்ள்:)! நெல்லுக் குத்தும் அம்மிணி, இறக்கி வைத்த மாட்டு வண்டி, கன்னத்தில் போட்டுக் கொள்ளச் சொல்லும் பிள்ளையார் கோவில், அப்புறம் அந்த ஓ...ங்கி வளர்ந்த ஆலமரமும் அழகான் இரண்டு கிளிகளும், திரிதிரியாய் மகளின் ஐடியாவில் தொங்கும் விழுதுகளும்... எல்லாமே அட்டகாசம்!
தசரா சமயத்தில் நல்ல பிரசங்கம். நன்மை நடக்கட்டும்.
நாங்கள் நிஜக்கும்மி பள்ளிகாலத்தில் அடித்திருக்கிறோம். ஒழுங்காய் குனிந்து செய்யாவிட்டால் முதுகில் கும்மி விடுவார்கள்:)!
தமிழ் மணத்தில் பதிவினை சேர்த்து விட்டேன்:)!
நல்லா ஓய்வெடுங்க. உடம்பைக் கவனியுங்க. மெதுவாய் வலைப்பக்கம் வாங்க.
நல்ல படியா ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க. கொலு பிரமாதமா இருக்கு.
//ரு மாதம் எனக்கு விடுமுறை வேண்டும். தோள்பட்டையிலிருந்து எல்போ வரையிலான பகுதியில் விட்டு விட்டு வலி இருக்கிறது//
அக்கா! நல்லா ஓய்வெடுங்க! வைத்தியமும் செஞ்சிக்குங்க!
//திரிதிரியாய் மகளின் ஐடியாவில் தொங்கும் விழுதுகளும்...அட்டகாசம்!//
அதே! அதே!
அழகாய் இருக்கிறது
கொலு மிக அருமை ரொம்ப நேரம் பார்த்துகிட்டே இருந்தேன்
உடம்பை பார்த்துக்குங்க .மெதுவா பதிவுலகம் பக்கம் வரலாம்
நல்லா ஓய்வு எடுத்து விட்டு நிதானமா வாங்க, நான் கடையை பத்திரமா பாத்துகிறேன்
ஆச்சரியமாக இருக்கிறது இத்தனை வலிகளை வைத்துக் கொண்டு அசத்துவது .
தங்கள் உபாதை நீங்க இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்.
:-)
நல்ல கொலு புகைப்புடங்கள்.. லீவ் கிராண்டட்ன்னுதான் எல்லோரும் சொல்லுவாங்கன்னு நினைக்குறேன்!
பித்தனின் வாக்கு ..கிராமம் பாத்தது இல்ல இல்ல ந்னு சொல்லிட்டு பஞ்சாயத்து மேடை எல்லாம் ஐடியா சொன்னது என் பொண்ணு தான்.. :) துண்டு செம்பு பத்தி அவளுக்கு தெரியலன்னு நினைக்கிறேன்.. கிப்ட் அந்த கிண்ணம் தான்.. சுண்டலை போட்டொ எடுக்கவிட்டுப்போச்சு.. பூஜை முடிஞ்சகையோட தினம் விநியோகம் சூடு பறந்தது..
----------------
எங்களுக்கும் திட்டு விழுந்தது ராமலக்ஷ்மி. சின்னப்பிள்ளைங்க நாலு டிசைனா மாத்தி மாத்தி ஸ்டெப் போடவேண்டாமானு :)
----------------
நன்றி சிந்து
-------------------------------
சிபி உங்களூக்கு கோஸ்ட் ரைட்டர் கேட்டீங்க.. அந்த நேரம் பாத்து இப்படி யாகிடுச்சே.. :))
----------------------
நன்றி ஆயில்யன்
------------------------------
நன்றி நேசமித்ரன்
-----------------------
நன்றி நசரேயன்..
நன்றி கோமா
நன்றி சென்ஷி .. அப்ப கடைசியா வர மகிழ்ச்சி வாசகர்களுக்கோ.. :)
என்னோட பங்கை எடுத்து வைச்சிரணும். கிராமத்து 'தீம்'ல எனக்குப் பிடிச்சது அந்த பசு மாடும் அருகே இருக்கும் கிணறும் :-) ...
டைப் அடிச்சு அடிச்சு மூட்டு வலியே வந்துருச்சா, அது சரி....
கொலு தீம் நல்லாருக்கு...உங்க இகோ ப்ரெண்ட்லி ஐடியாக்கு ஒரு ஓ!!
அப்புறம், பத்திரமா பாத்துக்குங்க...உங்க உடல்நலனை!! :-)
எப்பவும் போல படங்கள் நல்லா இருக்கு.. கொலு வைக்கறதே ஒரு அழகான உணர்வு தான்... இப்ப நினச்சாலும் அந்த உணர்வு பசுமையா இருக்கு..ம்ம்ம்ம்
அந்த கிண்ணங்கள் ரொம்ப படிச்சிருக்கு எனக்கு ;)
கொலு தீம் ரொம்ப அழகாயிருக்கு.எனக்கும் கொலுவைக்க ஆசையிருக்கு.அது எப்பநிறைவேறும்னு தெரியல.
எனக்கு ஒருசில சந்தேகங்கள் இருக்கு.கொலு எப்படி வைக்கனும்.படிகள் எப்படி செட் பண்ணனும்?ஒவ்வொறு படியிலும் எப்படி,எந்த பொம்மைகள் வைக்கனும்னு விளக்கமா சொன்னிங்கன்னா என்னைப்போல் மற்றவர்களுக்கு உபயோகப்படும்.
உங்கள் உடல்நலனை கவனித்துக் கொள்ளுங்கள்.நல்லா ஒய்வெடுத்து வலைப்பக்கம் வாங்க அக்கா.
அழகான கொலு. வாழ்த்துக்கள். உடல்நலனைக் கவனித்துக்கொள்ளவும்
சொம்பு இல்லாத பஞ்சாயத்தையும், ஆலமரத்தையும் எங்களால ஒத்துக்க முடியாதுக்கா :)
//அப்பறம் இத்தனை மகிழ்வான விசயம் தந்திருக்கிறேன் . இனி விசயம் ஒன்று. ஒரு மாதம் எனக்கு விடுமுறை வேண்டும். தோள்பட்டையிலிருந்து எல்போ வரையிலான பகுதியில் விட்டு விட்டு வலி இருக்கிறது. பதிவர் நண்பர்களுக்கு பின்னூட்டமிட முடியாமைக்கு வருந்துகிறேன்.//
:( டேக் கேர் க்கா!
கிணறு சூப்பரா இருக்கு :) பிளாஸ்டிக்கிற்கு எதிரான உங்க போராட்டத்துக்கு உங்களுக்கு “அண்ணா விருதும்” சபரிக்கு “கலைஞர் விருதும்” தருவதற்கு பரிந்துரை செய்கிறேன்.
// தோள்பட்டையிலிருந்து எல்போ வரையிலான பகுதியில் விட்டு விட்டு வலி இருக்கிறது //
சகோதரி இதை சாதரனமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். நன்றாக ஒருமுறை ஸகேன் செய்து பாருங்கள். எதற்கும் முறை டெஸ்ட் பண்ணுவது நல்லதுதான. விரைவில் வலி நீங்கி பதிவிட வாழ்த்துக்கள். குறைந்த பட்சம் பதிவுகளை படித்து பின்னூட்டம் இடுங்கள். டச் விட்டுப்போகமல் இருக்கும்.
அந்த கிண்ணம் நன்றாக உள்ளது. இதுபோல கிப்ட் வாங்க எங்க மண்ணி எங்களை அலைய விடுவாங்க பாருங்க, வாழ்க்கை வெறுத்துவிடும். நன்றாக இருக்கனும், அட்றாட்டிவ்வா இருக்குனும், மற்ற யாரும் கொடுக்காத, வித்தியாசமா இருக்குனும் ஒரு ஆயிரம் நிபந்தனைகள் வேறு. நவராத்திரி முடியவதற்குள் நமக்கு டப்பா டான்ஸ் ஆடிரும். ஆனாலும் பத்து நாளும் விதவிதமா சுண்டல் பண்ணி ஆசையா எடுத்து வைத்து தருவார்கள். அந்த தாய்மை அன்பிற்கு எங்க எவ்வளவு வேனா சுத்தலாம்.
//நவராத்திரி பஜனைக்கு எங்க பாட்டு டீச்சர் வீட்டுக்கு போயிருந்தேன். வாழ்க்கையில் முதல் முறையாக நிஜக்கும்மி அடிச்சேன். //
ஒரு வழியாக நிஜ கும்மி அடித்ததற்கு வாழ்த்துக்கள்...
//முதன் முறையாக புதிர் விளம்பரம் ஒன்றை நானே கண்டுபிடித்திருக்கிறேன் மகிழ்ச்சி தானே.//
பின்ன... இல்லையா... வாழ்த்துக்கள்...
//இம்முறை எல்லோரிடமும் நான் கவரில்லை கவர் இல்லை என்று சொன்னதால் ஏன் என்று கேட்பவர்களிடம் சின்னப்ரசங்கமே செய்துவிட்டேன்.//
பேப்பர் கவர் முயற்சி செய்து இருக்கலாமே மேடம்...
//ஒருநாள், ஒரு வேளை,கவர் வேண்டாம் என்று என்னால் அவர்கள் பொருட்களை கையில் எடுத்துச்சென்றது ஒரு விதமகிழ்ச்சி தான்.//
கவரை விடுங்கள்... எடுத்து போவதற்கு பொருட்கள் கொடுத்தீர்களே, அதுவே பெரிய விஷயம்...//நான் செல்லும்போதே துணி பை கொண்டு சென்றேன் . மற்றொரு வீட்டில் அப்படி கவர் கேட்கக்கூடாது என்று, நான் சொன்ன பேச்சை கேட்டுக்கொண்டு ( பயந்துகொண்டு) //
அதான... உங்களுக்கு ஐடியா யாராவது சொல்லி தரணுமா என்ன?
//என் தோழி தன் சேலை தலைப்பிலேயே தேங்காய் வெத்தலை பாக்கை வீட்டிற்கு எடுத்துச் சென்றார்கள்.. //
அட... நல்லா இருக்கே...
//ஒரு மாதம் எனக்கு விடுமுறை வேண்டும். தோள்பட்டையிலிருந்து எல்போ வரையிலான பகுதியில் விட்டு விட்டு வலி இருக்கிறது. பதிவர் நண்பர்களுக்கு பின்னூட்டமிட முடியாமைக்கு வருந்துகிறேன்.//
ஓ..ஹோ... பரவாயில்லை... உடல் நலத்தை பார்த்து கொள்ளுங்கள்... நண்பர்கள் இங்கே தான் இருக்கிறார்கள்... எப்போது வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம்..
ஆனாலும், சாதித்த திருப்தி இந்த புகைப்படங்களிலும், உங்கள் எழுத்திலும் தெரிகிறது...
வாழ்த்துக்கள்... கொலு ரொம்ப அற்புதமாக இருக்கிறது...முத்துலெட்சுமி மேடம்...
//கவர் வேண்டாம் //
எல்லாரையும் கவர் வாங்காம இருக்கும்படி செய்ததுக்கு ஓ போட்டுக்கறேன்.
கிராமம் சூப்பர்,,
விரைவில் தோள்படை வலியிலிருந்து குணமடைய ப்ரார்த்திக்கிறேன்.
அருமையான கொலு.கற்பனை வளம் தாராளம். திண்ணைவீடு,கிணற்றடியில் தாம்புக்கயிற்றோடு குடம், பஞ்சாயத்து மேடை..ஆஹா! அற்புதம்.
எல்லாத்தையும் நல்லாக் 'கவர்' செஞ்சுட்டீங்க:-)
வலி?
உடனே கவனிக்கவும்.
முத்துலெட்சுமி ,
முதலில் உடல் நலம்
அவசியம்.சுவர் இருந்தால் தானே சித்திரம் எழுதமுடியும்.
உடற்பயிற்சியில் கைப் பயிற்சி செய்யுங்கள். கைவலி குணமாகி மேலும்,மேலும் நல்ல பதிவுகளை
தர வாழ்த்துகிறேன்.
வாழ்க வளமுடன்.
கொலு நன்றாக இருக்கிறது.
குழந்தைகள் செய்த கிராமம் அருமை.
ஆலமரமும்,கிணறும், வண்டியும்,
திண்ணை வீடும் பிராமாதம்.
குழந்தைகளுக்கு அன்பு ஆசிகள்.
விரைவில் நலம் பெற்று திரும்புங்கள்.
தொழில் நுட்பம் பாருங்க. நீங்க அழைக்காமலேயே உங்க வீடு கொலுவுக்கு நான் வந்துட்டேன். சுண்டல் போட்டோ போட்ட்ருகலாம்ல. நல்லா இருந்துச்சு கொலு. கூல்.
அஷ்வின் ஜி
www.vedantavaibhavam.blogspot.com
(கொஞ்சம் நம்ப வலைப்பக்கம் வாங்க...)
very creative indeed.
To be creative is God's Gift.
You are Blessed.
subbu rathinam.
http://vazhvuneri.blogspot.com
kollu padangkal ellam arumai... :)
epdiyo... unga lecture veen pogala... :))
apram seekram valiyil irundhu vidu pera vaazthukkal :))
கொலு படங்கள் அருமை குறிப்பாக கிணறு மிக அருமை. வாழ்த்துக்கள்.
பாலித்தீன் பையை தவிர்ப்பதற்கு பாராட்டு..
ஆனால்..அந்த பிளாஸ்ட்டிக் கிண்ணம் ??
பின்னோக்கி .. உண்மை தான் அது தவறு தான். அடுத்தமுறை புது முறை கண்டுபிடிக்கிறேன். நன்றீ.
அழகான கொலுப் படங்கள். உடம்பைப் பார்த்துக்கோங்க அக்கா. சீக்கிரமே குணமடைய வாழ்த்துக்கள்.
Post a Comment