February 27, 2010

வானவில் இற்றைகள் -3

ஹோலி ஹை .. வானவில் வண்ணங்களின் தினம்.



அக்கா பத்தியும் கொஞ்சம் பதிவோம்..

தேர்வுகள் முடிந்து விடுமுறையின் தொடக்க நாளில் என்னவெல்லாம் செய்யவேண்டும் என்று பெரிய திட்டத்தோடு களத்தில் இறங்கி இருக்கிறாள்..

முதல் நாள் தையலில் ஓட்டுத்தையல் போட்டு ஒரு கோடு முடித்திருக்கிறாள்.

தமிழில் படிக்க இன்னும் கொஞ்சம் பயிற்சி எடுக்க எண்ணி மீண்டும் உயிரெழுத்து மெய்யெழுத்து உயிர்மெய்யெழுத்து என்று தொடங்கி ,போன முறை வாங்கிவந்த 5 ம் வகுப்பு (ஆங்கிலமீடியம் குழந்தைகளின் ஏடு)அறிவியல் தமிழ் புத்தகத்திலிருந்து பாடங்களை வாசிக்கத்தொடங்கி இருக்கிறாள். அறிவியலும் தமிழும் ஒரே நேரத்தில் அவள் அறிந்து கொள்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. வானவில் தோன்றுவது எப்படி? கூட அதில் வருகிறது :)

வீட்டில் நடக்கும் கட்டிட வேலைகளை கூர்ந்து கவனித்து, லெண்டர் போடுவது எப்படி ? நிறங்களை கலக்குவது எப்படி ? சுவற்றில் வண்ணமாக்குவது எப்படி? என்று அறிந்துகொண்டுவருகிறாள்.

இதில் ஒரு அறைக்கு மட்டும் எதிர் எதிர் பக்கத்துக்கு அடர்த்தியான வண்ணம் அடிக்க வேண்டும் என்கிற அவள் கோரிக்கையால் நல்ல சிகப்பு நிறத்தைத் தேர்ந்தெடுத்தோம் . அடித்து முடித்தவுடன் அதன் நிறம் முகத்தில் அடிப்பது போலவும் அதன் மணம் ஆளைத்துரத்துவது போலவும் இருப்பதால் .. தனக்கு கிடைக்கப்போகும் புது அறையில் அடர்த்தி குறைவான நான் முதலில் தேர்ந்தெடுத்த வண்ணத்தை அடித்துக்கொள்ள எண்ணி இருக்கிறாள்.

என்னம்மா ஒரு பக்கம் அடித்ததுமே பயம்மா இருக்கே- நான்
அதனால் என்னம்மா- மகள்
இல்ல இன்னோரு பக்கம் வேற அடிக்கனுமே
அடிச்சுக்கோ அதனால் என்ன நல்லாத்தானே இருக்கு
( அடிச்சிக்கோ என்றால் இது என் அறை இல்லையே என்கிற மாதிரி இல்லை சவுண்ட் ஆகிறது.. அவ்வ்)

இன்னும் திரைப்படப் பாடல்கள் சிலவற்றை பாடிப்பயிற்சி எடுப்பது , இசைவகுப்பு பாடல்களை தினமும் பாடிப் பயிற்சி செய்வது, மாலையிலிருந்து இரவு வரை பூங்காவில் ஆட்டம் மற்றும் கொஞ்சம் கான்ட்ம்பரரி நடன வகுப்பு செய்ய வேண்டியவைகளின் பட்டியல் நீளுகிறது.



தம்பியைப் பார்ப்போம்.
சின்னப்பையன் பதிவு படித்தீர்களா? இந்த நிறத்தினால் ஆன பாகுபாட்டை நாம் தவிர்த்தாலும் வெளியில் உள்ளவர்கள் எப்படியேனும் புகுத்திவிடுகிறார்கள். பெரியமானப்பிரச்சனையாகிவிடுகிறது.
தன் நெருங்கியதோழன் பரிசளித்தது என்பதால் அன்போடு பயன்படுத்தத்தொடங்கிய பிங்க் நிற தண்ணீர் பாட்டிலை இனி கொண்டுபோகமாட்டேன் பழய ஆரஞ்சு பாட்டிலை ஜெயந்தி ஆண்ட்டி வரும் போது கழுவி வாங்கிவை என்று சொல்லிக்கொண்டிருந்தான். மறந்து போனேன் வழக்கம்போல.. தானே ஒரு நாள் ஆண்ட்டியிடம் கொடுத்து கழுவி வாங்கிக்கொண்டான்.
என்ன விசயம் என்று கேட்டால்..
’அது எனக்கு வேணாம் அது கேர்ள்ஸ் பாட்டில்
யாருடா அப்படி சொன்னா
என் ப்ரண்ட் சொன்னான்..’

நீதி உணர்ந்து ,
ஒருகுளியலறைக்கு நீலமும் மற்றொன்றுக்கு பிங்கும் அடித்துவிட்டோம்.
---------------------
அம்மா நீ என்னைத்திட்டறே..இது பேட் மேனர்ஸ்..
நீ தானேடா திட்டவைக்கறே..

ஹய்யா அம்மாவை பேட் மேனர்ஸாக்கிட்டேன்..


------------------
அப்பா : இன்னிக்கு மாதிரியே நாளைக்கும் நல்ல பையனா இருக்கனும்
பையன் : நான் எப்ப நல்லா இருந்தேன் இன்னிக்கு?
(நம்ம சொன்னா கூட அவன் ஒத்துக்கமாட்டான் போலிருக்கே)
-----------------------------

ஆச்சி தாத்தா தொலைபேசும் போது எப்படி இருக்கே என்று கேட்டா நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்கன்னு கேக்கனும் என்று சொல்லிக்கொடுத்திருப்பதால், அவங்க நல்லா இருக்கியா என்று கேட்கும் முன்பே..
நான் நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க..?

--------------------------
தமிழை ஒழுங்கா பேசுடா என்றால் நாக்கு தமிழ் வராதுன்னு சொல்ரான்..
என்னோடதுக்கு 'நாவோடது' என்றும் சொல்வதுண்டு .
எதிர்வீட்டில் விளையாடிவிட்டு ஹிந்தமிழ் சில நேரம் இப்படி தெலுங்குத்தமிழாகிறது.
------------------
three letter வார்த்தைகளைப் படிக்க முயற்சி செய்கிறான். தன் பெயரை ஆங்கிலத்தில் எழுதுகிறான். லெட்டர்களின் உருவங்களை வைத்துக்கொண்டு நாங்கள் வார்த்தை உருவாக்கும் விளையாட்டு விளையாடுவது உண்டு.
-----------------------------------
before , after எண்களுக்கான ரயில் விளையாட்டை விளையாடி வருகிறோம்.
அவனுடைய எண் 54 என்று சொன்னால் முன்போ பின்போ எந்த எண் வேண்டும் என்று கேட்டுவிட்டு நான் எஞ்சினாகவோ அவன் எஞ்சினாகவோ ஆகி அந்த ரயில் ஸ்டேசனை விட்டு செல்லும். தவறாக சொன்னால் ரயில் கிளம்பாது.

23 comments:

Thamiz Priyan said...

\\\இன்னும் திரைப்படப் பாடல்கள் சிலவற்றை பாடிப்பயிற்சி எடுப்பது , இசைவகுப்பு பாடல்களை தினமும் பாடிப் பயிற்சி செய்வது\\
அப்படியே தமிழ்த்தாய் வாழ்த்தும்... :-)

Anonymous said...

//அப்பா : இன்னிக்கு மாதிரியே நாளைக்கும் நல்ல பையனா இருக்கனும்
பையன் : நான் எப்ப நல்லா இருந்தேன் இன்னிக்கு?
(நம்ம சொன்னா கூட அவன் ஒத்துக்கமாட்டான் போலிருக்கே)//

நீங்கெல்லாம் பல்ப் வாங்கறதுனால எங்களுக்கு பொழுது போகுது :)

Thamiz Priyan said...

கலர் துப்பாக்கியுடன் இருப்பது தானே தம்பி?.. :-)
இது மாதிரி அடிக்கடி அப்டேட் பண்ணிக்கங்க..

☀நான் ஆதவன்☀ said...

தம்பிய போலீஸ் ஆக்கிடுங்கக்கா. துப்பாக்கிய வச்சுட்டு சூப்பரா போஸ் கொடுக்குறான் :)

☀நான் ஆதவன்☀ said...

:))))

//அடிச்சுக்கோ அதனால் என்ன நல்லாத்தானே இருக்கு //

அவ்வ்வ் குடும்பமே கவிதையா பேசுதே... நாம தான் அர்த்தத்தை புரிஞ்சுக்கனும் போல :)

☀நான் ஆதவன்☀ said...

//நீதி உணர்ந்து ,
ஒருகுளியலறைக்கு நீலமும் மற்றொன்றுக்கு பிங்கும் அடித்துவிட்டோம்.//

ஒய்க்கா ஒய்? விட்டா சாப்பாடுல கூட கலர் சேர்த்திருவீங்க போல :)

//ஹய்யா அம்மாவை பேட் மேனர்ஸாக்கிட்டேன்..//

வெரிகுட்றா செல்லம் :)

//நாக்கு தமிழ் வராதுன்னு சொல்ரான்.//

சென்ஷி ப்ளாக்கெல்லாம் படிக்க விடாதீங்கக்கா

//தவறாக சொன்னால் ரயில் கிளம்பாது.//

கண்ணு கலங்குதுக்கா. கடமை தவறாத நம்ம சபரிய நினைச்சாக்க :) க்யூட்ட்

சென்ஷி said...

:)

நல்லாயிருக்குதுக்கா...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சின்னம்மிணி இப்படி வேறயா.. :)

----------------------------
தமிழ்பிரியன் எழுதும்போதே நினைச்சேன் , தமிழ்ப்ரியன் சொன்னது போல தமிழ்த்தாய் வாழ்த்தும்ன்னு சேக்கனும்ன்னு ..மறந்துட்டேன் ..கரெக்ட்டா மாட்டிக்கிட்டேன்.. :) கண்டிப்பா அதை பாடி வலைஏத்திடுவோம்..:)
-----------------------------
ஓகே ஆதவன் ஐபிஎஸ் ஆக்கிடுவோம்
:)

கோமதி அரசு said...

அக்காவின் பொழுதுகள் நல்ல பொழுதாய் கழிவது அறிந்து மகிழ்ச்சி.

தமிழும்,அறிவியலும் கற்று சிறப்படைய வாழ்த்துக்கள்.

தம்பி தங்க கம்பி.

தம்பியின் ரயிலில் இந்த ஆச்சிக்கும் இடம் வேண்டும்.

சாந்தி மாரியப்பன் said...

ஹோலி ஹை!! முத்துலெட்சுமி,

// அடிச்சிக்கோ என்றால் இது என் அறை இல்லையே என்கிற மாதிரி இல்லை சவுண்ட் ஆகிறது//

அக்கா தெளிவாத்தான் இருக்காங்க ;-))

KarthigaVasudevan said...

குழந்தைகளுடனான அனுபவங்கள் நல்லா இருக்குங்க.அக்காவும் தம்பியுமா அம்மா அப்பாவுக்கு நிறைய பல்புகள் தராங்க போல இருக்கு! :)))

க.பாலாசி said...

//அடிச்சுக்கோ அதனால் என்ன நல்லாத்தானே இருக்கு //

அதானே.... எவ்ளோ...சூப்பரா இருக்கு.... (அவ்வ்வ்வ்வ்..........)


//அப்பா : இன்னிக்கு மாதிரியே நாளைக்கும் நல்ல பையனா இருக்கனும்
பையன் : நான் எப்ப நல்லா இருந்தேன் இன்னிக்கு?//

அடப்பாவி...ஒத்துக்கமாட்டங்கறாங்களே....

வெங்கட் நாகராஜ் said...

வீட்டுக்குள்ளேயும் ஹோலி? ஒவ்வொரு அறைக்கும் ஒரு கலரா?

ஹோலி வாழ்த்துக்கள்

வெங்கட் நாகராஜ்
புது தில்லி

சந்தனமுல்லை said...

படங்கள் அழகு...பேசாம வானவில் கற்றைகள்னு வைக்கலாம் போல!

அக்கா தசாவதாரமா!!

பல்பு பிரகாசிக்கட்டும்! :-)

ஹுஸைனம்மா said...

//நீதி உணர்ந்து ,
ஒருகுளியலறைக்கு நீலமும் மற்றொன்றுக்கு பிங்கும் அடித்துவிட்டோம்.//

இந்த அளவுக்கான்னு கேக்கத் தோணலை, பிகாஸ் ஸேம் பிளட்!! பூப்போட்ட சட்டைகள் மகன்களுக்குப் போட்டுப்பாக்க ஆசை, கேர்ள்ஸ் டிரஸ் என்று மறுத்துவிடுறாங்க ரெண்டுபேருமே!!

ராமலக்ஷ்மி said...

படத்தில் சபரியின் ஸ்டைல் ரொம்பப் பிடித்திருக்கு:)!

அக்கா தம்பி இருவருக்கும் பல்பு தருவதில் ஒருவரை ஒருவர் மிஞ்சுகிறார்கள். அம்மிணி சொன்னதேதான்:))!

குழந்தைகளுக்கு என் வாழ்த்துக்கள்!

அம்பிகா said...

//அடிச்சுக்கோ அதனால் என்ன நல்லாத்தானே இருக்கு //

//அப்பா : இன்னிக்கு மாதிரியே நாளைக்கும் நல்ல பையனா இருக்கனும்
பையன் : நான் எப்ப நல்லா இருந்தேன் இன்னிக்கு?
(நம்ம சொன்னா கூட அவன் ஒத்துக்கமாட்டான் போலிருக்கே)//

//ஹய்யா அம்மாவை பேட் மேனர்ஸாக்கிட்டேன்..//
ஆஹா!!!

மங்கை said...

தில்லியில என் முதல் ஹோலி அனுபவம் மறக்க முடியாது...

தெரியாம வெளியே போயிட்டேன். அட்டா மார்க்கெட் ல வச்சு பக்கெட் பக்கெட்டா அபிஷேகம் பண்ணாங்க

ஆயில்யன் said...

//தேர்வுகள் முடிந்து விடுமுறையின் தொடக்க நாளில் என்னவெல்லாம் செய்யவேண்டும் என்று பெரிய திட்டத்தோடு களத்தில் இறங்கி இருக்கிறாள்.//

குட் !

சிறப்பாக இருக்கட்டும் விடுமுறை :)

சபரி - குட் பாய் :)

//அம்மா நீ என்னைத்திட்டறே..இது பேட் மேனர்ஸ்..//

ம்ம் எல்லாரும் வீட்ல டெரராத்தான் இருக்காங்க போல ! :)))

கோபிநாத் said...

;)) ரசித்தேன்..

Chitra said...

தமிழை ஒழுங்கா பேசுடா என்றால் நாக்கு தமிழ் வராதுன்னு சொல்ரான்..
என்னோடதுக்கு 'நாவோடது' என்றும் சொல்வதுண்டு .
எதிர்வீட்டில் விளையாடிவிட்டு ஹிந்தமிழ் சில நேரம் இப்படி தெலுங்குத்தமிழாகிறது.


.......... :-) அருமையான பகிர்வு.

நசரேயன் said...

//Blogger சந்தனமுல்லை said...

படங்கள் அழகு...பேசாம வானவில் கற்றைகள்னு வைக்கலாம் போல!

அக்கா தசாவதாரமா!!

பல்பு பிரகாசிக்கட்டும்! :-)//

மறுபடி சொல்லிக்கிறேன்

Deepa said...

//அப்பா : இன்னிக்கு மாதிரியே நாளைக்கும் நல்ல பையனா இருக்கனும்
பையன் : நான் எப்ப நல்லா இருந்தேன் இன்னிக்கு?
//

:-)))))))