February 2, 2010

தில்லியில் பதிவர் சந்திப்பு

தி்ல்லியில் இதற்கு முன்பு தேசிய சந்திப்பு என்று மூன்று பேர் கொண்ட மாநாடு நடத்தி இருக்கிறோம். சந்தித்த மற்ற இருவரும் (மங்கை மற்றும் சென்ஷி) தில்லியை விட்டு சென்றுவிட்டார்கள்(நான் காரணமில்லப்பா). அயன் கார்த்தி மீண்டும் வருவதாக தைரியமாக சொல்லி இருக்கிறார். பிப்ரவரிக்கு மேல் மீண்டும் தில்லி பதிவராவார் என்று நினைக்கிறேன் . புதிதாக சிலர் எழுதுகிறார்கள். விக்னேஷ்வரி, லாவண்யா போன்றவர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்திருந்தாலும் மற்றவர்களையும் இணைத்து ஒரு சந்திப்பு நடத்த எல்லாருக்குமே ஆசை என்று தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்.

எங்கே சந்திப்பது என்று யோசித்துக்கொண்டிருந்த போது பதிவரும் வடக்குவாசல் பத்திரிக்கையாசிரியருமான திரு. பென்னேஸ்வரன் தன்னுடைய அலுவலகத்திலேயே நடத்தலாமே என்று கூறினார். குளிர் வாட்டிக்கொண்டிருந்தபடியால் ஒரு பாதுகாப்பான இடம் என்று உடனேயே ஒத்துக்கொண்டோம். அனைவருமே ஆர்வமாக கலந்து கொண்ட ஒரு அறிமுகக்கூட்டம் இது.

சரியான நேரத்திற்கு முன்பே வந்து விட்டார் வெங்கட் நாகராஜ் . நான் எப்போதோ கூகிள் செய்து எதையோ தேடியபோது இவருடைய பதிவு கிடைத்தது. தமிழீஸ்ல் மட்டுமே இணைந்திருக்கிறார் என்பதால் தவற விட்டிருக்கிறேன். எளிமையான அவர் வலைப்பூ தொடர்ந்து படிக்கத்தூண்டியது.

எம். ஏ.சுசீலா அவர்கள் பழக எளிமையானவர்கள் கூட இளமையானவருமாக இருக்கிறார். ஓய்வு பெற்ற விரிவுரையாளர் மற்றும் எழுத்தாளர். தொலைவிலிருந்து கூட்டத்திற்காக வந்து கலந்துகொண்டு இனிமையாக எங்களுடன் கலந்து பேசினார்.

உயிரோடை லாவண்யா தன்னைப்பற்றிய அறிமுகத்தை அழகாக முன்வைத்தார். கூடவே அகநாழிகை மற்றும் அவருடைய கவிதை புத்தகத்தின் கடையும் வைத்தார். நல்லவேளையாக புத்தகக்கண்காட்சி போலவே தள்ளுபடியும் வழங்கினார்.

விக்னேஷ்வரியின் கணவர் யோகி மொழி புரியாவிட்டாலும் ஒரு யோகியைப்போல அந்நேரம் அமைதியாக அமர்ந்து ரசித்தார். விக்னேஷ்வரி புதியதாக ஆரம்பித்திருக்கும் துறை சார்ந்த தொடரில் மேலும் பல விசயங்களைப் பகிர்வார் என்று நினைக்கிறேன்.

மோகன்குமார் போட்டோகிராபி இன் தமிழ் பதிவு நடத்தும் போட்டியின் மூலம் தெரியவந்தார். அவர் மனைவி விஜயலக்‌ஷ்மியும் கலந்து கொண்டார்கள்.

மற்றும் ச.வீரமணி என்னும் பதிவரையும் தொடர்பு கொண்டிருந்தோம். அவர் தாம் தமிழ்நாட்டிற்கு சென்று இருப்பதால் வர இயலாதென்று தெரிவித்திருந்தார்.

வடக்குவாசல் பென்னேஸ்வரன் அவர்களின் விருந்தோம்பல் சொல்லி முடியாது. இருக்க இடமும் தந்து செவிக்குணவு நேரத்தில் வயிற்றுக்கு தேநீரும் மற்றும் பலவகையான பிஸ்கட்டுகளும் தரும்படி தம் அலுவலகத்து பணியாளர்களிடம் பணித்திருந்தார்.

தன் அனுபவங்களையும் அவர் எங்களோடு பகிர்ந்து கொண்டார். எழுத்துலகும் இன்றைய இலக்கியமும் கொண்டிருக்கும் அபாயங்களைப் பற்றி உரையாடினார்.

ப்ளாக் எழுதுவதும் பின்னூட்டம் பெறுவதிலும் உள்ள நன்மை தீமைகளைப் பற்றிய ஒருவருக்கொருவருடய கருத்துக்களைப் பரிமாறி ஐயம் தீர்த்துக்கொண்டோம் என்று நினைக்கிறேன்.

இன்னும் சில பதிவர்கள் எங்களுக்கு தெரியாமல் இருக்கிறார்கள். அவர்களையும் அடுத்த முறை ஒன்றிணைக்க உதவுவதாக பென்னேஸ்வரன் கூறினார். எல்லாருக்கும் ஜுகல்பந்தி என்கிற இசையை அடிப்படையாகக் கொண்ட சிறந்த சிறுகதைகளின் தொகுப்பு மற்றும் வடக்குவாசலின் இலக்கியமலரைப் பரிசளித்திருந்தார்.அவருக்கு நன்றி.

59 comments:

☼ வெயிலான் said...

ஜீப்ல ஏறியாச்சா?

இனி நீங்களும் ரவுடி தான்! :)

வி. நா. வெங்கடராமன். said...

நல்ல ஒரு பதிவு. சந்திப்பு ஏற்பாடு செய்த உங்களது நல்ல உள்ளத்துக்கு வணக்கங்கள் பல.

வெங்கட் நாகராஜ்
புது தில்லி

ராமலக்ஷ்மி said...

நல்ல பகிர்வு முத்துலெட்சுமி.

துளசி கோபால் said...

ரெண்டே பேரை விரட்டுனதுலே இவ்வளோ கூட்டம் சேர்ந்துருச்சா!!!!

ச்சும்மா....:-)

அனைவருக்கும் எங்கள் அன்பும் வாழ்த்து(க்)களும்.

Anonymous said...

//ரெண்டே பேரை விரட்டுனதுலே இவ்வளோ கூட்டம் சேர்ந்துருச்சா!!!!//

மூணு பேர் சந்திச்சப்போ நிறைய பேசியிருக்கீங்க. ஆனா இப்ப .........
ஒருவேளை சென்ஷி நிறையப்பேசுவாரோ :)

ஆ.ஞானசேகரன் said...

நல்ல சந்திப்பை ப்கிர்ந்தமைக்கு நன்றியும் வாழ்த்துகளும்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாங்க வெயிலான் பாஸ் .. நீங்க சொன்னா சரிதான் பாஸ்.. :)

--------------------------
வெங்கட் உங்களுக்கும் நன்றி ...

------------------------------
நன்றி ராமலக்‌ஷ்மி
---------------------------
அதான் துளசி இவங்கள்ளாம் சத்தமில்லாம எழுதிட்டிருந்திருக்காங்க :)
------------------------
சின்னம்மிணி உங்க வில்லித்தனம் கூடிக்கிட்டே போகுது.. உஷ்! அன்றோ இன்றோ யாரு அதிகம் பேசினா என்பது போன்ற கேள்விகள் இங்கு கேக்கப்படாது.. :P

☀நான் ஆதவன்☀ said...

நல்ல பகிர்வு.

டெல்லி பதிவர் சங்கத்தின் தலைவர் தேர்தல் எப்போ? இல்ல போட்டியின்று தேர்வா?

சந்தனமுல்லை said...

தலைநகரில் பதிவர் சங்கமா! :-)
நல்லா நடந்திருக்கும் போல இருக்கே! கோமதி அம்மா இருந்தபோது ஏன் சந்திப்பு நடக்காத நுண்ணரசியலை...கண்டிக்கிறோம்...ஆயில்ஸ் & ஆதவன் நோட் பண்ணுங்கப்பா! ;-)

க.பாலாசி said...

//ப்ளாக் எழுதுவதும் பின்னூட்டம் பெறுவதிலும் உள்ள நன்மை தீமைகளைப் பற்றிய ஒருவருக்கொருவருடய கருத்துக்களைப் பரிமாறி ஐயம் தீர்த்துக்கொண்டோம் என்று நினைக்கிறேன்.//

ஐயம்????

இனிமையான பகிர்வு...

எம்.எம்.அப்துல்லா said...

யக்கா, டெல்லிக்கு இதுவே மாபெரும் மாநாடுதான் :)

வடக்குவாசல் பத்திரிக்கையில் அவுட்லைன் வரையும் சந்துரு(சந்திரமோகன்)கூட ஒரு பதிவர்தானே!! அவர் வரலையா??

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஞானசேகரன் நன்றிங்க
--------------------
மெம்பர்கள் கூடட்டும் ஆதவன் அப்பறம் தானே சங்கமெல்லாம்..:)
------------------------
முல்லை சங்கம் அமைந்தபின் சிறப்பு அழைப்பாளர்களாக கூப்பிட்டுருவோம்.. பாருங்க அதுக்குள்ளயே அரசியல்ங்கறிங்க.. ;))
----------------
ஐயம்ன்னா பாலாசி சில டவுட்கள் சிலருக்கு இருந்தது. பின்னூட்டம் அதிகம் வருவது ந்ல்லதா டெம்ப்ளேட் பின்னூட்டங்கள் வ்ராம இருக்கறது நல்லதா.. போன்று :))
--------------------
அப்துல்லா எனக்கு சந்த்ரமோகன் பதிவெழுதுவது முதலில் தெரியாது . நான் அழைத்திருப்பேன் என்று ஆசிரியரும் நினைத்திருக்கிறார். விடுபட்டவர்கள் இருந்தால் மற்றவர்களும் தெரிவியுங்கள் உதவியாக இருக்கும். நன்றி.

Sangkavi said...

டில்லியில் ஒரு ஊர் கூடிட்டிங்க....

வெள்ளிநிலா said...

நம்ம ப்ளாக்க படிசீங்களா - உடன்பாடு இருக்கலாம் என்று நம்புகிறேன்

எம்.ஏ.சுசீலா said...

அன்பின் முத்துலட்சுமி,
நீங்கள் முதற்கல் எடுத்து வைக்கவில்லையென்றால் இந்த நன் முயற்சி,செயல்வடிவம் பெற்றிருக்காது.அதற்காக உங்களுக்குத் தனியான வாழ்த்தும் பாராட்டும்.தில்லி எனக்கு இன்னும் கூடப் புதியதுதான்.இத்தனை பதிவர்கள் இருக்கிறார்கள் என எனக்கு இனக்காட்டி அறிமுகம் செய்து வைத்த உங்கள் அன்புக்கு மீண்டும் நன்றி.

துளசி கோபால் said...

என்னங்க சுசீலா,

//நீங்கள் முதற்கல் எடுத்து வைக்கவில்லையென்றால்...//

அச்சச்சோ...... கல் எறியவா முத்துலெட்சுமி கூப்புட்டாங்க!!! நல்லவேளை நான் தப்பிச்சேன்!

ச்சும்மா ச்சுமா.....:-))))

காலை உடைச்சுட்டீங்க போல !

செந்தழல் ரவி said...

மங்கை அக்கா வரலையா ?

துளசி கோபால் said...

போன பின்னூத்தைல் சொல்ல விட்டுப்போனது..

கட்டடம் முடிஞ்சவுடன் சொல்லி அனுப்புங்க. வருவேன்:-)

KarthigaVasudevan said...

ஒரே சந்திப்பும் சிந்திப்புமா போயிட்டு இருக்கீங்க,தித்திப்பா இருக்கட்டும் நாட்கள் .
:)))

விக்னேஷ்வரி said...

நல்ல தொகுப்பு.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாங்க சங்கவி.. ஆமா ஊரு கூடிட்டோம் :))
---------------
வெள்ளிநிலா உங்கள் முயற்சி பற்றி கேள்விப்பட்டு வருகிறேன். வாழ்த்துக்கள்.
--------------------------
சுசீலா அம்மா வாங்க.., நன்றி . உங்களோடெல்லாம் கலந்து பழகுவதற்கு வாய்ப்பாக மகிழ்கிறேன்.
---------------------
சிறப்புஅழைப்பாளர்களில் உங்க பெயரும் இருக்கு துளசி.. முன்பே உங்களை அழைக்கவும் செய்தேன்..நீங்க தான் பிசியா இருக்கீங்க இப்பல்லாம்..:)
-------------------
வாங்க செந்தழல்.. அக்கா மங்கை தானைத்தலைவி இங்க இல்லையே இப்ப.. இருந்தா அவங்க இல்லாம கூட்டமா..:)

உயிரோடை said...

எதை தொட‌க்க‌மும் சிறுமுய‌ற்சியாலே தானே. அதே போல் இந்த‌ தொட‌க்க‌மும்...

அனைவ‌ரையும் ச‌ந்தித்த‌தில் ம‌கிழ்ச்சி

அண்ணாமலையான் said...

வாழ்த்துக்கள்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கார்த்திகா வாசுதேவன் நன்றிப்பா..:)

----
விக்னேஷ்வரி, உயிரோடை லாவண்யா நன்றி
----------------------
அண்ணாமலையான் நன்றி..
-------------------------

நண்பரே..உங்கள் அறிவுரைக்கு நன்றி.. எல்லாரும் வந்து போக வசதியான இடம் தான் தமிழ்சங்கம். அங்கே இந்தவாரம் மிககூட்டமாக இருந்தது அடுத்த முறை எளிதில் அனைவரும் வந்து போகக்கூடிய இடத்தில் செய்வோம்.

அயன் உலகம் said...

சந்திப்பு நடத்த போறீங்கன்னு தான் சொன்னீங்க.. இப்போ நடந்து முடிஞ்சு பதிவே போட்டாச்சா.. குட்.. நாம டெல்லில இருக்கும்போது பார்க்கலாம்னா கொஞ்சம் பேர்தான் எழுதுனீங்க.. இப்போ கூட்டம் சேந்துடுச்சு போல இருக்கு... அப்போ நான் இனி டெல்லி வந்த பிறகு நிறைய பதிவர் பழகக் கிடைப்பாங்கன்னு சொல்லுங்க.. வாழ்த்துகள்.. நானும் அடுத்த வாரத்துல இருந்து டெல்லி பதிவர் தான்..(பதிவு தான் போட நேரம் கிடைப்பதில்லை.. அவ்வ்வ்..:( )

அம்பிகா said...

நல்ல பகிர்வு முத்துலெட்சுமி.

பா.ராஜாராம் said...

தள்ளுபடி..

யோகி..

:-)))

பழமைபேசி said...

பகிர்வுக்கு நன்றிங்க!

V.Radhakrishnan said...

ஆங்காங்கே இருக்கும் பதிவர்களின் சந்திப்பு பெருமகிழ்ச்சி தருகிறது.

கண்மணி said...

ம்ம் நடத்துங்க நடத்துங்க...[வயித்தெரிச்சல் தான்]

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆஹா, வாழ்த்துக்கள். ஆமா போட்டோலாம் எங்கே?

நசரேயன் said...

டெல்லி பதிவர் சங்கத்திலே வட்டியில்லா கடன் கொடுப்பீங்களா ?

நாடோடி said...

வாழ்த்துக்கள்.....

Anonymous said...

You have disallowed my opinion regarding venue of the meeting.

So, I repost it after amending.

The venue of such a meeting may not be in a residence of a blogger however hospitable he may be. Please remember it is not necessary for bloggers to accept each other's views expressed in their blogs.

Fix it in a public place like a park or a hotel. A park like Lodhi Gardens or Nehru Park is an ideal place to spend time, meeting friends and families.

You can also get a venue like Delhi Tamil Sangam as some of the bloggers are members of DTS who can help. You need a small place to hang about, dont you? Bharati arangam in DTS will meet your needs. They dont charge for such meet.

Good luck!

ஷங்கர்.. said...

வடக்கும் வாழ்கிறது..:))

மகிழ்ச்சி :)

Thekkikattan|தெகா said...

அடுத்த முறை இன்னும் கூட்டம் பெருகி அலசி, ஆராய்ந்து இன்னும் சிறப்பான எழுத்துக்கள் எல்லாம் பெருகட்டும், வாழ்த்துக்கள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அனானி நண்பரே உங்களுக்குத்தான் முதலிலேயே நான் பதிலெழுதி இருக்கேனே உங்களுடைய பதிலை பப்ளிஷ் செய்யவில்லையே தவிர உங்கள் கருத்துக்கு மதிப்பளித்து பதில் அளித்திருக்கிறேன்..

மேலும் முதலில் தமிழ்சஙக்த்தில் தான் முயற்சி செய்ய எண்ணினோம். அந்த வாரம் எஸ்.வி சேகரின் நிகழ்ச்சி சங்க இடங்கள் நாடக சாமான்கள் மற்றும் ஆட்களால் நிறைந்திருக்கும் என்பதால் தான் வேறு இடம் தேர்ந்தெடுத்தோம்..

மேலும் சந்திப்பில் சந்திக்கின்ற நண்பர்கள் ஒத்த கருத்து கொண்டிருக்க அவசியம் இல்லை என்பதிலோ அவற்றை பொதுவில் தெரிவிக்க எந்த விதமான மனத்தடையோ இருக்கவேண்டியதில்லை என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. நன்றி.

புலவன் புலிகேசி said...

2 பேர விரட்டினதுக்கு உங்கள அடிக்க இத்தனை பேர் கூடிருப்பாங்களோ?? சந்திப்பு அனுபவம் நன்று.

கோபிநாத் said...

உங்கள் பணி மேலும் மேலும் சிறப்பாக எனது வாழ்த்துக்கள் ;)))

Mrs.Menagasathia said...

வாழ்த்துக்கள்..

கோமதி அரசு said...

நல்ல பகிர்வு முத்துலெட்சுமி.

வாழ்த்துக்கள்!
வாழ்க வளமுடன்.

தமிழ் பிரியன் said...

தலைப்பே தப்பா இருக்கு... போண்டா என்ற வார்த்தை பதிவிலேயே இல்லை.. புகைப்படம் இல்லை. பின்நவினத்துவத்தைப் பற்றி விவாதிக்கவில்லை.. எனவே இதை பதிவர் சந்திப்பாக ஒத்துக்க முடியாது.. ;-)))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆமா அயன் இங்க யாரும் பின்நவீனத்துவம் பேசறமாத்ரீ தெரியல.அதான் நீங்க வரமுன்னமே ஒரு மீட் போட்டுட்டம்.. ;))
--------------------------
அம்பிகா,பாரா ,பழமைபேசி,ராதாகிருஷ்ணன், நாடோடி
நன்றி நன்றி.

--------------------
கண்மணி ஏன் நீங்க மதுரை சந்திப்புக்கு போகலையா. சும்மா கிளம்பி வாங்க தில்லிக்கு நடத்திடுவோம்..:)
---------------------
அமிர்தவர்ஷினி அம்மா உங்களுகு வேணா தனியா அனுப்பறேன். ல்0
---------------
நசரேயன் நீங்க எதும் டொனேசன் சங்கத்துக்கு தரீங்கன்னா சொல்லுங்க சங்கம் ஆரம்பிசிடுவோம்..;)
-------------------------
ஷங்கர், தெகா நன்றி

முத்துலெட்சுமி/muthuletchumi said...

புலிகேசி நல்லவேளை அன்னைக்கே இதை அவங்ககிட்ட எல்லாம் சொல்லல.. ;)
-----------------------
நன்றி கோபிநாத்,கோமதி அரசு , மேனகா சத்யா..:)
-----------------------
தமிழ்பிரியன்.. பின் நவீனத்துவம் என்ற வார்த்தை ஒரே ஒரு முறை ப்ரயோகிக்கப்பட்டது.. அதனால் ப்ளீஸ் ஒத்துக்கோங்க.. :0

SanjaiGandhi™ said...

டில்லி வலைப்பதிவர்கள் சங்கமா? :)
நடத்துங்க நடத்துங்க. :)

World of Photography said...

நல்ல பகிர்வு !!! மற்ற வலை பதிவர்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.

இந்த சந்திப்பில் எது நடந்ததோ இல்லையோ என் வலைபதிவிற்கு நல்ல விளம்பரம் கிடைத்தது...:)

கீதா சாம்பசிவம் said...

நல்லதொரு சந்திப்பு. அதுவும் வடக்கு வாசலில் நடந்தது என்பதும் மகிழ்வைத் தருகிறது. வாழ்த்துகள். இத்தனை பதிவர்களா தில்லியில் இருக்கின்றனர்?? அனைவருக்கும் மீண்டும் வாழ்த்துகள். அடுத்த சந்திப்பு ஆக்கபூர்வமான செயல்பாடுகளோடு விளங்கவும் வாழ்த்துகள்.

மங்கை said...

ஆஹா...

வெற்றிகரமா நடத்திடீங்களா... உங்க நெடுநாளைய ஆசை நடந்தேறியதில் மகிழ்ச்சி...வாழ்த்துக்கள்.. மிஸ்ட் இட்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சஞ்சய் ஏன்ப்பா நான் பதிவர் சந்திப்புன்னு தானே எழுதி இருக்கேன் அது எப்ப்டி எல்லாருக்கும் சங்கம்ன்னே கண்ணுக்குத் தெரியுது ;)
---------------------
மோகன் எப்படியோ நல்லது நடந்தா சரி ;)
------------------
வாழ்த்துக்கு நன்றி கீதாம்மா..:)
-----------------------
மங்கை ஆமா நானும் உங்களை மிஸ் செய்கிறேன்.

இசக்கிமுத்து said...

இது ஒரு நல்ல முயற்சி! தொடரட்டும்!!

Cinema Virumbi said...

நல்ல துவக்கம் ! தொடர வாழ்த்துக்கள்!

சினிமா விரும்பி

SanjaiGandhi™ said...

அய்ய.. என்னக்கா நீங்க விவரம புரியாம இருக்கிங்க.. ஒரு ஊர்ல 2 பதிவர்க்கு மேல சந்திச்சிக்கிட்டா அங்க சங்கம் ஃபார்ம் ஆய்டிச்சினு அர்த்தம். :)

மின்னல் said...

வாழ்த்துகள்.பதிவர் சந்திப்பை போட்டோவுடன்
பகிர்ந்து இருக்கலாம்

ஸ்வர்ணரேக்கா said...

இது சிறு முயற்சியல்ல... பெரு முயற்சியே..

'ஒருவனின்' அடிமை said...

இனிமையான பகிர்வு...

சிங்கக்குட்டி said...

நல்ல முயற்சி மற்றும் பகிர்வு முத்துலெட்சுமி.

pillaival said...

mam ,i am first time visit ur blog. innum yedhuvum patikala.inimeythan patikanum.enakum mayavaramthan mam. vazhuvoor thriuma???

YUVARAJ S said...

hi maam...interesting description.

Find my scribbling at:

http://encounter-ekambaram-ips.blogspot.com/

keep blogging

சென்ஷி said...

/துளசி கோபால் said...

ரெண்டே பேரை விரட்டுனதுலே இவ்வளோ கூட்டம் சேர்ந்துருச்சா!!!!//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :-))))))))))