February 15, 2010

A page from my teenage diary

பகிரப்படாத டைரிப்பக்கங்களைப் பகிர சந்தனமுல்லை அழைத்திருக்கிறார்கள். அவர்களின் டைரிக்குறிப்புக்களில் நுழைந்தபோதும் சரி , அமிர்தவர்ஷினி அம்மாவின் படித்தபோதும் சரி அந்த பதின்மங்களின் காலச்சுழலுக்குள் கொஞ்சநேரம் சிக்கிக்கொண்டேன். சிறுவயதில் டைரி எழுதும் பழக்கம் இருந்ததில்லை. ஆனால் எழுதத்தொடங்கிய காலத்தில் ”not allowed to watch" என்ற வாசகத்துடனே தான் என்னுடைய டைரியும் தொடங்கியது. எதோ கொஞ்சம் கிறுக்கி இருக்கிறேன்..


நடிகை ராதா என்றால் அத்தனை ப்ரியமாக கட்டிங் சேகரித்துக்கொண்டிருந்தேன்.. எங்கள் வீட்டில் சர்க்குலேசன் புக் தான் . இதற்காகவே தோழிகள் வீட்டுக்குப் போய் புத்தகங்களிலிருந்து கட்டிங்க் கொண்டுவருவேன். பொங்கல் வாழ்த்து அட்டையென்றாலும் ராதாதான் வாங்குவேன். இல்லாவிட்டால் நதியா. உடைகளுக்கெல்லாம் நதியாவைப்போலவே அனைத்தும் மேட்சிங்காக தேடி வாங்குவேன். தோடுக்கு மேட்சிங் பார்ப்பதில் மேட்சிங் ப்ளவுஸ் கூட எந்தப் பெண்ணும் என்னை விட சீக்கிரம் வாங்கிவிடுவாள். நன்றாக நினைவிருக்கிறது, ஒரு மெருன் கலர் மிடி இருந்தது என்னிடம் அதற்கு மேட்சாக நான் வாங்கிய தோடைப் பார்த்துவிட்டு என் கணக்கு டீச்சர் எப்படித்தான் இவ தோடுவாங்குவாளோ என்று சொல்லி மத்த டீச்சரிடம் எல்லாம் என்னை அழைத்துக் காமித்துக்கொண்டிருந்தார்கள்.

என்ன அலங்காரம் செய்தாலும் சோடாபுட்டி ( எனக்கு பதின்மத்தில் கிடைத்த பட்டப்பெயர்) ஒன்று குறுக்கே தடை செய்துகொண்டிருந்தது. அடிக்கடி ஞாபக மறதியாக எங்காவது வைத்து அந்த கறுப்பு ப்ரேம் உடைந்து கொண்டே இருக்கும் . அதும் கண்ணாடியின் காது தான் அடிக்கடி உடையும். பள்ளிக்கு சீக்கிரம் கிளம்பி கடை திறந்ததும் ஒட்டிக்கொண்டோ அல்லது வேறு காது போட்டோ கண்ணாடியை சரி செய்து போட்டுச்செல்வேன்..

என் வீட்டுக்கருகில் என் பள்ளித்தோழிகள் எப்போதுமே இருந்ததில்லை. அதிலும் நெருங்கியத்தோழிகள் வீடுகள் எல்லாம் ஊரின் மற்ற கோடியிலேயே இருந்தது. ஒன்பதாவது படிக்கும் போது ஒரு நாள் அம்மாவிடம் சொல்லிவிட்டு தோழி மணிமேகலையின் வீட்டுக்கு செல்வதாக கிளம்பிவிட்டேன். எனக்கு சைக்கிள் கிடையாது அப்போது. மதிய வெயிலில் நடந்தேன் நடந்தேன் நடந்துகிட்டே இருந்தேன். எப்படியோ அவள் வீடு சேருகிற வரை திக் திக் தான். முதன் முறையாக தோழி வீட்டுக்கு சென்ற நினைவை என்னால் மறக்கவே முடியாது. பள்ளியோடே தன் படிப்பை நிறுத்திவிட்ட முஸ்லீம் தோழியின் கல்யாணத்திற்காக முதன் முதலாக நானும் என் தோழி பாலாவும் பஸ்ஸில் அம்பகரத்தூர் வரை பயணப்பட்டதும் வித்தியாசமான அனுபவம்.

கவலையின்றி திரிந்த காலம் அந்த 17 வரை தான்.. பள்ளியில் நாங்கள் மூவர் கூட்டணியாக இருந்தோம். விளையாட்டு திடலின் இந்த ஓரத்திலிருந்து அந்த ஓரம் வரை தோள் மேல் கையாக வலம் வருவோம்.
-------------------------
அம்பிகா சொன்னது போல உண்மைகளைப் பகிரமுடியாததால் டைரியை டைரியாக பயன்படுத்தாத மேதை நான்..
அவைகள் எல்லாம் எம்.எஸ் உதயமூர்த்தியின் வரிகளும் , சில சிறுகதைகளின் அடிக்கோடிடக்கூடிய பகுதிகளும், என்னைப் பாதித்த கவிதைகளும் என நிரம்பிய பக்கங்கள். அவற்றின் வரிசையை இப்போது வாசிக்கும் போது வருடங்களின் போக்கில் நிகழ்ந்த விசயங்களுக்கும் அந்த பிடித்தமான பகிர்வுகளாகப் பகிரப்பட்டவைக்கும் ஒரு தொடர்பு தெரிகிறது.

’முகம்’ - ம.ப.சித்ரா
இந்த கதை என்னை மிக பாதிச்சிருந்திருக்கும் போல.. பெண்ணிய வாத பிரதிவாதங்கள் செய்யத்தொடங்கியகாலமாக இருந்திருக்கவேண்டும்.. அக்கதையிலிருந்து சில வரிகள்..

\\உடல் முழுக்க மின்சாரம் பரவ .. என்ன இது ? எங்கே என் முகம்? அதற்குபதில் அவன் முகம் ..உற்றுப்பார்க்க அப்பாவின் முகம்.. இத்தனை நாளாய் பாத்து ரசித்த முகம் என்னுடையதில்லையா..? அம்மாவிடம் ஓடி அம்மா என் முகம் எங்கே ? அம்மா ’போடி பைத்தியம்’ என சிரித்தபடி கடந்தாள்.

அவனுக்குத் தெரிந்திருக்குமோ? அவன் என்முகம் பார்த்துத்தானே விரும்பி இருப்பான் .
என் முகத்தை காணவில்லை உங்களுக்கு தெரிகிறதா?
உனக்கென்று முகமா? ஏது அப்படி ஒன்று ?
அப்படி என்றால் நீங்கள் முதலில் பார்த்தது..
என் முகத்தைத்தான் பார்த்தேன். அது அழகாக ப்ரதிபலிப்பதே, என் தேடல்.

நீங்கள் என் முகத்தை ப்ரதிபலிக்கவில்லையே?
எப்படி ப்ரதிபலிக்கமுடியும் உனக்கென்று முகமே இல்லாதபோது? “நான் இல்லாத உன்னை எப்படி விரும்ப இயலும்?

என் முகம் வேண்டும் உடைந்த முகமூடி துண்டுகளில் எத்தனையோ தலைமுறை முகங்கள். இத்தனை காலமாக மூகமூடியின் அழுத்தத்தில் இருந்த முகம் நசுங்கி பொலிவின்றி , எப்படியும் இது என் முகம் பூச்சுக்கள் இல்லாத சொந்தமுகம். இனி அழகுபடுத்துவேன். //
---------------------------------
ஒருகவிதை
---------
தனித்தனியே

ஒரு பறவையின் சிறகுகள்
பறவையின்றிப் பறப்பதைக் கண்டேன்
சிறகுகளின்றிப் பின் வந்த பறவை
ஒரு இசையின் குழைவில்
லாவகமாய் தன் சிறகுகளை
தன்னோடு இணைத்துக் கொண்டது
பறந்து பறந்து
பறவையின்றிப் பறக்கச் சிறகுகளுக்கும்
சிறகுகளின்றிப் பறக்கப் பறவைக்கும்
கூட் வந்த சூட்சுமம்
என் மனதில் விரிந்தபோது
துவண்டு கிடந்த என் மனதில்
ஒரு பூ மலர்ந்தது. - - பசவய்யா
-----------------------------------------
’மென்மை’ என்கிற மேலாண்மை பொன்னுசாமியின் கதையில் ஒரு பிரிகேடியர் எப்படி ஸ்டேப்பிளர் பின்னை மடக்கி காகிதத்தில் மடித்து குப்பையில் போடுகிறார் என்பதை வைத்தே கதை . அதை டைரியில் எழுதி வைத்திருக்கிறேன். எழுதிப்படித்தால் மனதில் பதியும் என்பது போல இன்றுவரை நான் நான் மிககவனமாக பின்களை மடக்கி அது யாரையும் காயப்படுத்தாத வண்ணமே போடுகிறேன்.

தொடருக்கு இவர்களை அழைக்கிறேன்.
யாழினித் தோட்டம் யாழினி
தெக்கிக்காட்டான்

மலைநாடன்







.

44 comments:

Thamiz Priyan said...

மீ த முதல் வாசகர்.. :-)

ஆயில்யன் said...

ஆஹா நான் கூட டைரியை டைரியா எழுதாம பொன்மொழிகள் புக்கால்ல மாத்திவைச்சிருந்தேன் :)


ஹம்ம்ம் ஊரை பத்தி சொல்லுவீங்கன்னு கொஞ்சம் எதிர்பார்த்திருந்தேன் !

☀நான் ஆதவன்☀ said...

//தோடுக்கு மேட்சிங் பார்ப்பதில் மேட்சிங் ப்ளவுஸ் கூட எந்தப் பெண்ணும் என்னை விட சீக்கிரம் வாங்கிவிடுவாள்//

அக்கா வீட்ல அவர் பாவம் :)) பொங்கலுக்கு,தீபாவளிக்கு துணி எடுக்குறதை நினைச்சுப் பார்த்தா :))

☀நான் ஆதவன்☀ said...

முகம் - அருமை :) எங்கேனும் இந்த கதை கிடைக்குமா?

☀நான் ஆதவன்☀ said...

ராதா போட்டோவிலும், உங்க போட்டோவிலும் கம்மல் ஒரே மாதிரி இருக்கே? இப்ப கூட கூகுள்ல படம் மேட்ச்சா தேடுன மாதிரி இருக்கேக்கா? :))

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

நல்ல பகிர்வு.இயல்பான நடை

ஹுஸைனம்மா said...

//என் வீட்டுக்கருகில் என் பள்ளித்தோழிகள் எப்போதுமே இருந்ததில்லை//

ஆமாக்கா, ரொம்ப ஆசையா இருக்கும். ஆனா எனக்கும் வாய்க்கலை.

அழகான பாந்தமான முகம் உங்களுக்கு!!

Thekkikattan|தெகா said...

இன்னும் கொஞ்சம் சேர்த்திருக்கலாமோ!இன்னும் ஒரு முறை படிக்கிறேன் உங்கடதை. என்னயும் கோதாவில இறக்கி விட்டதற்கு நன்றி :-).

நாடோடி said...

மலரும் நினைவுகள் நல்லா இருக்கு...

முத்துகுமரன் said...

சராசரியான நமக்கு ரெம்ப படிக்கும் ஆட்கள் என்று சின்ன வயதில் சோடாபுட்டிகள் மீது ஒரு இனம்புரியாத கோவம் இருக்கும் :-)

இதுவரை டைரி எழுதிப் பழக்கம் இல்லை. இப்படி ஏகப்பட்ட இல்லை களுடனே வாழ்க்கை நகருகிறது. உங்களுக்குள் ஒளிந்திருக்குக்க்கும் இலக்கியவாதியை மட்டும் டைரிக்குறிப்புகளில் இருந்து அடையாளம் காண முடிகிறது

சாந்தி மாரியப்பன் said...

//என் முகம் வேண்டும் உடைந்த முகமூடி துண்டுகளில் எத்தனையோ தலைமுறை முகங்கள். இத்தனை காலமாக மூகமூடியின் அழுத்தத்தில் இருந்த முகம் நசுங்கி பொலிவின்றி , எப்படியும் இது என் முகம் பூச்சுக்கள் இல்லாத சொந்தமுகம். இனி அழகுபடுத்துவேன். ////

விரும்பிப்படித்த கதைகளில் ஒன்று. வரிகளைப்படித்ததும் ஞாபகம் வந்துவிட்டது. முழுக்கதையையும் எங்காவது படிக்கக்கிடைக்கிறதா பார்க்கலாம்....

டைரி அழகு.சரளமான நடை. அந்தக்கால நினைவுகள் அற்புதம்.

ராமலக்ஷ்மி said...

அழகாய் பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள் நினைவுகளை. சின்ன வயதுபடமும் அழகு. ஆதவன் சொன்ன மாதிரி மேட்சிங்கா தேடுனீங்களா ராதா படத்தை:)?

JAR Fernando said...

ML

சொன்னதைவிட சொல்லாதது அதிகம்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி தமிழ்பிரியன்..
:)
---------------------
ஆயில்யன் இப்பவும் உங்க ப்ளாக் என்கிற ஓப்பன் டைரிய அப்படித்தான் வச்சிருக்கீங்க.. ;)
ஊரைப்பத்தி எனக்கு ரொம்பத் தெரியாது ஆயில்யன்.. உங்கள் எல்லார் அளவுக்கும்,...
----------------
ஆதவன் ட்ரஸ் செலக்‌ஷன் எல்லாம் சீக்கிரம் ஆகிடும்.. தோடு கடையைப் பாத்தா எங்க நடைஅபடியே ஓரம்கட்டிடும்.. முன்னாடியே எல்லா விதமான தோடும் வாங்கிவச்சிடரதால .. அதுக்கேத்த ட்ரஸ் மட்டும் வாங்கித்தந்தா போதும்.. :)
------------------------
முகம் கதையே அத்தூண்டு தான்னு நினைக்கிறேன்.. என்கிட்டயே இருக்கு அப்பறம் முழுசா எழுதலாம்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி சாந்தி .. :)
---------------------------
நன்றி ஹுசைனம்மா..

தனியாவே நடந்து போறது ரொம்ப சோகம் தெரியுமா.. அதும் சில நாள் யூனிபார்ம் எங்கயாச்சும் தட்டுபடுதான்னு பாத்துட்டே போவேன்.. பள்ளிக்கூடம் இல்லாத நாள் பள்ளிக்கூடம் போறமாதிரியே பீலிங்கா இருக்கும்.. ;))
----------------------------
தெகா, எல்லாத்தையும் டைரியிலேயே எழுதலை அப்ப்பறம் இங்க மட்டும் எழுதிடுவமா என்ன ? :)
-----------------------------
நன்றி நாடோடி .. :)

settaikkaran said...

சுவாரசியமான டைரிக்குறிப்பு. இதை குறிப்பு என்று சொல்ல முடியாது. ஒரு விதத்தில் இது நம் முகத்தைக் காட்டாத புகைப்படம் தான். சில நேரங்களில் பழைய டைரியைப் புரட்டும்போது, சில வார்த்தைகளுக்காக யோசித்து நின்ற மவுன இடைவேளைகளும், இரண்டு பத்திகளுக்கு இடையிலே பல பெருமூச்சுக்களுக்காகவும், சில கண்ணீர்த்துளிகளுக்காகவும் விரல்களைக் காக்க வைத்த கணங்களும் நினைவுக்கு வரும்; வர வேண்டும். எதுவும் எழுதத்தோன்றாமல், எம்.எஸ்.உதயமூர்த்தியையோ, மேலாண்மை பொன்னுசாமியையோ பக்கங்களில் பதித்தாலும் கூட, ஒரு விதத்தில் அன்றைய தினத்தின் நமது மனவோட்டத்தில் அவர்களது சிந்தனை நம்மை உராய்ந்திருக்கிறது என்பது தானே பொருள்? சுவாரசியம்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

முத்துக்குமரன், அதுசரிங்க சராசரியான என்னைப்போய் ஏன் அவங்க படிக்கிறப் பொண்ணுன்னு நினைச்சிகனும்.. :), ரிப்போர்ட் கார்ட் காமிச்சிருந்தா மாறி இருப்பாங்களோ..

இலக்கியத்தை ரசிக்கிற வாதின்னு சொல்லுங்கோ சரியா இருக்கும்..
------------------------------
அமைத்திச்சாரல் உங்களை எல்லாம் பாத்தா எனக்கு பொறாமையா இருக்கு.. எப்படி படிச்சதெல்லாம் ஞாபகம் வச்சிக்கிறீங்க.. நான் எழுதி வைக்காத எதையும் ஞாபகம் வச்சிக்கிறதில்லை.. முடியறதில்லை..:(
-----------------------
ராமலக்‌ஷ்மி .. படத்தை தேட பலரும் உதவினாங்கப்பா.. ஆனா நான் நினைச்ச பொங்கல்வாழ்த்து அட்ட்டை ராதாவை எங்கயும் காணோம்.. நான் அப்லோட் செய்தா தான் உண்டு போல .;)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஜார் , ரொம்ப வித்தியாசமான பேரு..

சின்னதுல படிச்ச ரஷ்யக்கதைகள் வாளையின் சட்டம், பறக்கும் குதிரை மாதிரி கதைகளில் ஜார் மன்னன் வருவார்..

ப்ளாக் இன்னும் பல வருசம் எழுதுவோமில்லயா .. எப்பவாச்சும் சொல்லிடுவோம் மீதிக்கதைகளையும்.. துளசி சொல்றமாதிரி ‘ அப்புறம் கதைகள்’ லிஸ்ட் ..

புலவன் புலிகேசி said...

எனக்கு இதுவரை டைரிக்குறிப்பு எழுதும் பழக்கமில்லை. ஓரிரு முறைத் தொடங்கி ஓரிரு வாரங்களிலேயே நிறுத்தியிருக்கிறேன்...ஆனா உன்க அனுபவம் சூப்பர்..

Paleo God said...

நல்லா இருக்குங்க ..:))

சந்தனமுல்லை said...

ரொம்ப சுவாரசியம் முத்து! தொடர்ந்தமைக்கு நன்றி!
அப்போவே இலக்கியவாதியாவில்லே திரிஞ்சிருக்கீங்க...டைரி பகிர்வுகள் அருமை! அப்புறம் கம்மல் - கலக்கறீங்க போங்க...நானும் ஒரு காலத்துலே மேட்சிங் மேட்சிங் தான்! :-)))

SurveySan said...

//மதிய வெயிலில் நடந்தேன் நடந்தேன் நடந்துகிட்டே இருந்தேன். எப்படியோ அவள் வீடு சேருகிற வரை திக் திக் தான். //

இத படிக்கும்போதே திக் திக்கா இருக்கே.

யாரைப் பார்த்து பயம்? அதுவும் மதிய வேளையில்? அம்புட்டு களவாணிப் பசங்களா ஊர்ல?

Thamiz Priyan said...

சின்ன தகவல்களை ம்ட்டும் தான் தந்து இருக்கீங்க.... டைரிக் குறிப்புகள் இன்னும் வரும்ன்னு நினைக்கேன்...

மென்மை எங்கோ படித்த நினைவு இருக்கு.

இந்த கமெண்ட் பதிவைப் படிச்சிட்டு... :-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\ஒரு விதத்தில் அன்றைய தினத்தின் நமது மனவோட்டத்தில் அவர்களது சிந்தனை நம்மை உராய்ந்திருக்கிறது என்பது தானே பொருள்? //

ரொம்ப அழகா சொல்லிட்டீங்க சேட்டை.. நன்றி..
-----------------------------
புலவன் புலிகேசி வாங்க..
நிஜம் தான் தொடர்ந்து எழுதுவது என்பது பெரிய விசயம் தான். எங்கப்பா எழுதிய டைரியெலாம் படிச்சிட்டு இது மாத்ரீ முடியாதுன்னு கூட நான் விட்டிருக்கலாம்.. எங்க தாத்தா(101)வோட டைரிய படிச்சேன் போன தடவை ஊரூக்கு போனப்பா.. நேற்றிலிருந்து பஸ் டிக்கெட் 10 பைசா கூடியது.. இன்று மழையால் கோவிலுக்கு செல்ல முடியவில்லை என்றெல்லாம் அவங்க பழய ஒரு வரி டைரி கூட சுவாரசியமாவே இருந்துச்சு..
-------------------------
நன்றி ஷங்கர் :)
------------------------
நன்றி முல்லை.. உங்களால் கொஞ்சம் பழைய காலத்துக்கும் போயிட்டு வந்தேன்..
-------------------------
சர்வேசன் , :)

முதல் முதலா பெரிசா பந்தாவா எனக்குத்தெரியும் கண்டுபிடிச்சு போவேன்னு சொல்லிட்டு நானே ரொம்ப தூரம் தனியா வீடு தேடிபோறேனா வீடு சரியா கண்டுபிடிக்கனுமேன்னு ஒரு திகில் தான்..

சென்ஷி said...

//பெண்ணிய வாத பிரதிவாதங்கள் செய்யத்தொடங்கியகாலமாக இருந்திருக்கவேண்டும்.. //

//பதின்மங்களின் காலச்சுழலுக்குள் கொஞ்சநேரம் சிக்கிக்கொண்டேன்.//

//உண்மைகளைப் பகிரமுடியாததால் டைரியை டைரியாக பயன்படுத்தாத//

//வருடங்களின் போக்கில் நிகழ்ந்த விசயங்களுக்கும் அந்த பிடித்தமான பகிர்வுகளாகப் பகிரப்பட்டவைக்கும் ஒரு தொடர்பு //

வார்த்தைகளை அழகாத் தூவி எழுதியிருக்கீங்கக்கா.. நல்லா வந்திருக்குது. முகம் கதையை மறுபடி பதிவுல எழுதிப் போடலாமே. மற்றவங்களும் வாசிக்க உதவும்.

பசுவய்யாவின் கவிதை மிகப்பிடித்தமானவற்றில் மற்றொன்று...

Chitra said...

உங்கள் டயரி குறிப்பை படிக்கும் போது, நீங்கள் பிற்காலத்தில் வலைச்சரம், வலை பதிவில் பெரும் பங்கு வகிப்பீர்கள் என்ற ஆருடம் தெளிவாய் உள்ளது. கவிதை, கதை, ரசனை என்று எல்லா அம்சங்களையும், அப்பொழுதே ஈடுபாட்டுடன் தேர்ந்து எடுக்க ஆரம்பித்து விட்டீர்கள். அருமை.

கோபிநாத் said...

:)) நல்லாயிருக்கு.!

அமிர்தவர்ஷினி அம்மா said...

மேட்சிங்க் விஷயத்துல இப்ப எப்படி இருக்கீங்க :))))))))))

அட, நானும் உங்கள மாதிரி தான் இந்த கட்டிங்க் சேக்கறது, பிடிச்சத எழுதிவைக்கறதுன்னு டைரி செய்துக்கிட்டு இருந்தேன்.

ஷார்ட்ஹாண்ட் கத்துக்கிட்டதுக்கப்புறம் நான் சீக்ரெட்டுன்னு நெனப்பதையெல்லாம் ஸ்ட்ரோக்கா எழுதிவெச்சேன். இப்ப பார்த்தா ஒன்னும் விளங்கல ;)))))

முகம் பத்தி நீங்க குறிச்சு வெச்சது ரொம்ப அருமையா இருந்தது. லயிச்சு படிச்சேன்.

Anonymous said...

நானும் ஒரு சோடா புட்டி தான். வேலைக்கு போனப்பறம் காண்டாக்ட் லென்ஸுக்கு மாறிட்டேன். பதினைஞ்சு வருஷமா காண்டாக்ட் லென்ஸ் தான்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தமிழ்பிரியன் மென்மை கதை பத்தி முன்னாடி எப்பவாச்சும் நானும் வேற போஸ்டில் சொல்லியிருப்பேன்னு நினைக்கிறேன்..
-------------------------

நன்றி சென்ஷி , அந்த கதையை எழுதிபோடறேன்.. அதிகம் வரிகளைக்குடுத்துட்டேன்..மீதி வரிகள் கொஞ்சோண்டு தான்..
-----------------------
சித்ரா எப்படிங்க இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க.. :)

-----------------------------
நன்றி கோபி ;)
-----------------------------
நன்றி அமிர்தவர்ஷினி அம்மா. கலரிங் மேட்ச் அதிகம்பார்க்கறதில்லயே தவிர.இப்பவும் தோடு வாங்கறதில குறையில்ல.. :)
-------------------------------
சின்ன அம்மிணி ..அபடியா..ஆனா எனக்கு லென்ஸ் ஒத்து வரலை ..:(

கண்ணாடிய கவசகுண்டலம் ரேஞ்சுக்கு பயன்படுத்தறேன்.. :)

சென்ஷி said...

//. அதிகம் வரிகளைக்குடுத்துட்டேன்..மீதி வரிகள் கொஞ்சோண்டு தான்..//

கதையே கொஞ்சூண்டுதானா.. அது என்ன கதையா இல்ல துணுக்கா.

Iyappan Krishnan said...

நல்லாருக்கு. அந்த சின்ன வயசு போட்டோ கூட

க.பாலாசி said...

//இல்லாவிட்டால் நதியா//

நான் ஸ்கூலுக்குப் போகும்போதே நதியா ரொம்ப பேமஸ். பொட்டு, வளையல், தோடுன்னு இந்த பொண்ணுங்க அடிக்கிற அப்பப்பா.....

நல்லாருக்குங்க்கா... உங்கள் டைரிக்குறிப்பும்....

Sanjai Gandhi said...

நீங்களும் ராதா , நதியா ஃபேனா? எனக்கெல்லாம் வாழ்த்து அட்டைக்கு எப்போவும் தலைவர் கமல் தான்..

Unknown said...

அருமை. என்னைப் போலவே படித்து இலயித்த கதை கவிதை துணுக்குகளின் தொகுப்புதான் டைரியோ. ஒரு வேளை பலரும் இப்படித்தானோ! :)

வல்லிசிம்ஹன் said...

வெகு அருமையான வாசகங்களைக் கொண்ட டைரியைப் படிச்ச சந்தோஷம் கயல்.
முகமில்லாமல் எத்தனை பெண்கள் இருக்கிறார்களோ இன்னும்.! உங்கள் முகம் அப்படியே உங்களைப் பிரதிபலிக்கிறது.
நல்ல வேளை பள்ளி நாட்களில் கண்ணாடியிலிருந்து தப்பித்தேன்.
இல்லாவிட்டால் அப்பவே நிழல் நிஜமாகிறது சுமித்ரா ஆகியிருப்பேன்:)

சோடாபுட்டி காம்ப்ளெக்ஸ் ரொம்ப நாட்கள் என்னோடவே இருந்தது.!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஒருபக்க கதையா இருக்கலாம் சென்ஷி :)
-----------------------
நன்றி ஜீவ்ஸ்
---------------
ஆமா பாலாஜி.. இதுல வேற இது நதியா வளையலான்னு கேட்டுட்டு ஆமான்னு சொன்ன அப்ப உன் வளையல் இல்லையான்னு கிண்டல் செய்வாங்க :)
-----------------------------
சஞ்சய், எங்க தலைவர் ரஜினி :)
-------------------------
சுல்தான் , பொதுவாக எல்லாரும் அப்படித்தான்.. ;) அது தான் வசதி நல்லது..
--------------------------
நன்றி வல்லி முடிந்தவரை ப்ரதிபலிக்கவே முயற்சிக்கிறேன்.. ;)

மங்கை said...

ithu varaikkum vandha thodar pathivugalilea ithaan enakku mana niraivaaa irukku..

neenga sonna maathiri kavalai nna ennannu theriyaama thirindha kaalam...portkaalam...ethanai kodi kuduthaalum kidaikkaathu.. hmmm

சாமக்கோடங்கி said...

ஆகா.. எல்லாரோட கொசு வர்த்தியிலையும் நல்ல புகை வருது..

உங்களுதும் தான்..

என்னோட சுருள இன்னும் கையில எடுக்கல...

நன்றி..

அம்பிகா said...

பகிர்வு அருமையா இருக்கு.
அந்த வயசிலேயே நல்ல இலக்கிய ரசனை உங்களுக்கு இருந்திருக்கிறது.
நல்ல சரளமான நடை.

நசரேயன் said...

//என்ன அலங்காரம் செய்தாலும் சோடாபுட்டி ( எனக்கு பதின்மத்தில் கிடைத்த பட்டப்பெயர்) ஒன்று குறுக்கே தடை செய்துகொண்டிருந்தது//

லென்சு வையுங்க பேரை மாத்தலாம்

முகுந்த்; Amma said...

மேட்சிங் கம்மல், செயின், நோட்டு புத்தக collection என்று நானும் நிறைய செஞ்சிருக்கேன்.பதிவு நன்றாக இருந்தது.

நிகழ்காலத்தில்... said...

\\தப்புக்கணக்கிட்டுத் தானொன் றெதிர்பார்த்தால் ஒப்புமோ இயற்கைவிதி? ஒழுங்கமைப்புக் கேற்றபடி அப்போதைக் கப்போதே அளிக்கும் சரிவிளைவு. எப்போதும் கவலையுற்று இடர்ப்படுவார் இதைஉணரார்.-மாக்கோலம்\\

மாக்கோலமாய் விரிந்த மதிவிருந்தை பார்த்தவுடன் மகிழ்வடைந்தேன் சகோ.

வாழ்த்துகள்...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி மங்கை.. அது ஒரு பொற்காலம் தான்:)
----------------
ப்ரகாஷ் கொசுவத்திக்கென்ன சுத்திவிடுங்க நீங்களும் ;)
-----------------------
நன்றி அம்பிகா
------------------------
நசரேயன் லென்செல்லாம் வச்சுப்பாத்தேன்.. சோம்பேறிக்கு லென்செல்லாம் கஷ்டம்.. ;)
-------------------------
நன்றி முகுந்தம்மா
:)
---------------
நன்றி நிகழ்காலத்தில், அவ்வரிகளை ரசித்ததற்கு.. :)