March 29, 2010

கதை சொல்லியின் கதை

எங்க குடும்பத்தில் எனக்குத்தெரிந்து எல்லாருமே நல்ல கதைசொல்லிகள். அது இட்டுக்கட்டிய கதையோ ,சொந்தக்கதையோ, யாருக்கோ நட்ந்த கதையோ ,புராணக்கதையோ எதுவாக இருந்தாலும் சுவாரசியமாகவே சொல்வார்கள். என் அப்பா “அண்டக்காக்கா கதை” என்று ஒன்று சொல்வார்கள். அதை கேட்க பட்டாளமே ஒன்றாக அவர்களைச் சுற்றி உட்கார்ந்திருப்போம்.

அந்த கதையை என்னவோ படக்கதையாக பார்த்தது போலவே இப்போதும் தோன்றுகிறது. அந்த கற்பனை கதையில் வருகிற அண்டக்காக்கையின் மரவீடும் அதில் இருந்த மினி ஃபர்னீச்சர்களும் உண்மையாகவே கண்ணுக்குள் வருகிறது. அதுபோன்ற கதையை நீங்களும் வேறு விதமாக கேட்டிருக்கலாம். அண்டக்காக்கைக்கு உதவி செய்ததால் கிடைக்கும் மந்திரத்தில் பாயாசம் வரவழைக்கும் பாத்திரம் போன்ற மந்திரப் பொருட்களை களவாடும் மன்னர். அவரையும் அவர் படையையும் உடைத்து புடைக்கும் அப்பொருட்கள் என நீளும் அந்தக்கதை. கதையை விட அது சொல்லப்பட்ட முறையே எங்களுக்கு உற்சாகம் தந்திருக்கவேண்டும்.

என் அம்மாவிடம் கதை கேட்க வேண்டுமென்றால் இன்றும் என் மகளுக்குக் கூட உற்சாகம் தான். புராணக்கதைகளை குழந்தைகளுக்கும் சுவாரசியமாகச் சொல்வார்கள். அம்மாவிடமிருந்து தான் பத்திரிக்கைகள் ,நாவல் போன்றவை வாசிக்கும் பழக்கம் வந்தது. எந்த பொருள்கேட்டாலும் ”பார்ப்போம்” என்று பதில் வரும் அப்பாவும் கூட பத்திரிக்கைகள், புத்தகங்கள் வாங்கித்தருவதில் தயங்கியதில்லை என்பதை நினைவு கூறுகிறேன். பூந்தளிர் , பைக்கோக்ளாஸிக் ( இதன் மூலம் தான் பல ஆங்கில நாவல்கள் எனக்கு தமிழாக்கத்தில் பழக்கமானது) ரஷ்யக்குழந்தைகள் புத்தகங்கள் என கதைகளை வாசிக்கவும் தொடங்கினோம்.

புத்தகம் வரும் நாளுக்கு கடையில் காத்திருந்து வாங்குவோம். தம்பி சிறியவனாக இருக்கும் போது அவனுக்கும் சேர்த்து அந்த புத்தகங்களை நான் சத்தமாக ஏற்ற இறக்கத்தோடு வாசிக்கவேண்டும்.



என் பெரியப்பா , சித்தப்பாக்களை உக்காரவைத்து கதை கேட்டாலும் நடந்தகதைகளை அற்புதமாக சொல்வார்கள். நிஜக்கதாபாத்திரங்களை பார்க்காமலே நம் மனதில் பதியவைக்ககூடியவர்கள். பெரியப்பாவின் நண்பர் ஒருவர் ,எந்த ஒரு செய்தியும் பேசிவிட்டு ”ம்,..அப்படின்னு” என்று முடிப்பாராம். இப்பொழுதும் நான் பெரியப்பாவிடம் பேசும்போது ’அப்பறம் பெரியப்பா .. அப்படின்னு!!! ’ என்று தான் முடிப்பேன்.

அப்பாவின் அத்தை தென்காசியில் இருந்த “ரயிலடிஆச்சி” யை நடந்த கதைகளை பேசவைத்து பதிவாக்கி வைத்திருந்தோம். சுவாரசியமான அந்த கதைகளின் நடுநடுவில் மற்றவர்களின் கேள்விகளும் சிரிப்பலைகளுமென பதிவாக்கப்பட்டிருந்தது.

நான் குட்டியா இருந்தப்ப என்ன செய்தேன்? என்று கேட்டு அறிந்து கொள்வதில் மகனுக்கும் மகளுக்கும் எப்போழுதுமே ஆசை தான். சிறிது நாட்களுக்கு முன்பு அவனுடைய பழைய வீடியோக்களை போட்டு ரசித்துக்கொண்டிருந்தான். அதனை நேர்முக வர்ணனை போல நான் குடுத்துக்கொண்டிருந்தேன். மிக ரசித்துப் பார்த்துக்க்கொண்டிருந்தான் மகன். இப்போ பாரு நீ கீழ விழுந்து அழுவே என்று சொன்னேன். அவன் அழுகையையே அவன் மிகப் பாவமாக பார்த்துக்கொண்டிருந்தான்.

கணவரைக் குழந்தைகள் கதை சொல்லச்சொன்னால் போச்சு!

தூத்துக்குடியில் ஒரு பெற்றோர் தவமிருந்து பெற்ற மூத்தபிள்ளையின் திருபுராணத்தைச் சொல்லத் தொடங்குவார்கள். ”நாங்க ஏற்கனவே பொண்ணு பார்த்தாச்சு நீ வந்து ஒப்புக்குப் பார்த்துவிட்டு ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும்” என்று மிரட்டி அழைத்துக் கொண்டுபோய்.. தவப்புதல்வனார்க்கு *(தூறல்நின்னுபோச்சு பாக்யராஜ் நிலைமையில்)..பெண்ணிடம் பேசவிடாமல்.. தாத்தா ,ஆச்சி ,தாத்தாவின் தம்பி, சின்ன ஆச்சி மற்றும் பெரியப்பா சித்தப்பாகள் என பஞ்ச பாண்டவர்கள் அவர்களின் மனைவி, மக்கள் எனப் பெரிய கும்பலே கேள்விகள் கேட்க நடந்த பெண் பார்க்கும் படலத்தையும் பற்றியும் உருக்கமாகச் சொல்வார்கள்.

தாத்தா அக்கறையாக கேட்ட கேள்வி:
எத்தனை மணிக்கு சாயங்காலம் மாப்பிள்ளை வீட்டுக்கு வருவார்? மதியம் சாப்பிட வருவாரா?
அவங்களுக்கு என்ன தெரியும் மாப்பிள்ளைக்கு சீக்கிரம் என்பதே அப்போது 11 மணி என்று. அதனால் தான் குட்டிப்பொண்ணு அப்பா வரும்வரை புத்தகம் வாசிப்பாள். இப்பொழுதோ சின்னப்பையனுக்கு அப்பா ஆறு மணிக்கு வந்த உடனே ஹாலில் கிரிக்கெட் விளையாட வரவேண்டும். ஸ்மைலி பால் பறந்து மின்விசிறி மேல் அடிக்கும்.

மாப்பிள்ளையில்லாமல் முதலில் பெண்பார்க்க வந்தபோது என் நாத்தனாரும் நானும் கெமிஸ்ட்ரி மேஜர் என்பதிலிருந்து கெமிஸ்ட்ரி ஒர்கவுட் ஆகியது. எங்கம்மாவின் கல்யாணபோட்டோக்களைப் பார்த்துவிட்டு ”:அய்யோநீங்க எவ்ளோ அழகு!” என்று எங்கம்மாவுக்கும் என் நாத்தனாருக்கும் கூட பொருந்திவிட்டது. எங்கண்ணா இந்திரன்! சந்திரன்! நல்லவன்!! வல்லவன்!! என்று என் நாத்தனார் அண்ணன் புகழ் பாடிக்கொண்டிருந்தாள். அதற்காக அவள் பலவருடம் மூளைச்சலவை செய்யப்பட்டிருந்தாள் என்பதை பிறகு தான் புரிந்துகொண்டேன்.

மகளிடம் ஒரு சின்ன லைப்ரரியே இருக்கிறது. அவள் சிறுவயதிலிருந்தே இரவு 11 மணி வரை கூட வாசிப்பாள். மகனுக்கு அத்தனை விருப்பம் இருப்பதில்லை. அவருக்கு ஸ்டிக்கர் புத்தகமாக இருக்கவேண்டும். அல்லது ஆக்டிவிட்டி புத்தகமாக இருக்கவேண்டும். கதை என்றால் அனுமன் கை ‘கதை’ போலத் தான் உச்சரிப்பான். அம்மா ஒரு ghadhai சொல்லு என்பான். நாம் சொல்லி முடித்ததும் அதே கதையிலிருந்த சிங்கம் அவன் கதையில் புலியாகி இருக்கும். உல்டா அடிப்பதில் மன்னன்.முன்பெல்லாம் மகளுக்கு சுப்பாண்டி கதைகளோ ,பஞ்சதந்திரக்கதைகளோ எதுவானாலும் கதை சொன்னால் தான் தூங்குவாள். இதற்காக பழைய கதைகளை மீண்டும் மீள்வாசிப்பு செய்து வைத்திருப்பேன் .

கதை சொல்லிகளின் வாரிசாக என் மகள் சில சிறுகதைகளை எழுதுவதுண்டு. அது மந்திர தக்காளி, மந்திரப்பூசணி இப்படியானவை. இப்பொழுது ஒரு நாவல் எழுதி வருகிறாள். அது மைக்ரோசாப்ட் வார்டில் தட்டப்பட்டு பிரிண்ட் எடுக்கப்பட்டு அவள் பள்ளி நண்பர்களுக்கு இடையில் சுற்றில் விடப்பட்டிருக்கிறது. சில பாகங்கள் முதலல் சுற்றில் விடப்பட்டபோதே அது எல்லாராலும் விரும்பப்பட்டதால் மெகா சீரியல் போல முடிக்கப்படக்கூடாது என்பதற்காகவே நீட்டிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அது எதோ நிஞ்சாக்கதைகளாம். கற்பனை தான் அதன் அடித்தளம். முடிந்த பிறகு அது அவளுடைய தளத்தில் திருத்தம் பார்க்கப்பட்டு வெளியிடப்படும். (ஆங்கிலப்புலமையுடைய ஃப்ரூப் ரீடர்கள் தேவை.)

கதை சொல்லிகள்’ பற்றி தீபாவும் ,’பொண்ணு பார்த்த கதையை’ அப்பாவி தங்கமணியும் எழுத அழைத்திருந்தார்கள். இருவருக்கும் நன்றி. உங்கள் அனுமதிகளை கேட்பதற்கு அவகாசம் இருக்கவில்லை என்பதால் தொடர விருப்பமானவர்கள் தொடருங்கள்.

35 comments:

ஆயில்யன் said...

//கதை என்றால் அனுமன் கை ‘கதை’ போலத் தான் உச்சரிப்பான். அம்மா ஒரு ghadhai சொல்லு என்பான்///

:))))))))))))))

சந்தனமுல்லை said...

/நாம் சொல்லி முடித்ததும் அதே கதையிலிருந்த சிங்கம் அவன் கதையில் புலியாகி இருக்கும்/

ஹஹ்ஹா...புலிக்கு பிறந்தது? :-))

அப்புறம், தமிழ்மணத்துக்கு 'அனுப்பி'ட்டேன்!

வெங்கட் நாகராஜ் said...

”கதை சொல்லியின் கதை” சொல்லிய விதம் அருமை. வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ்
புது தில்லி

கோபிநாத் said...

என்டா இது இம்புட்டு விஷயம் இருக்கேன்னு பார்த்தேன். தொடர் பதிவு அழைப்பா...!! ;))

நீங்களும் ஒரு கதை சொல்லின்னு இந்த பதிவில் நல்லவே தெரியுதுக்கா ;))

\\\நான் குட்டியா இருந்தப்ப என்ன செய்தேன்? என்று கேட்டு அறிந்து கொள்வதில் மகனுக்கும் மகளுக்கும் எப்போழுதுமே ஆசை தான்\\

ஆகா..எங்களை போல தானா..;))

சென்ஷி said...

//"கதை சொல்லியின் கதை"//

நல்ல தலைப்பு..

//முடிந்த பிறகு அது அவளுடைய தளத்தில் திருத்தம் பார்க்கப்பட்டு வெளியிடப்படும். //

பாராட்டுக்களும்.. வாழ்த்துக்களும்

☀நான் ஆதவன்☀ said...

குடும்பமே நல்ல கதை சொல்லியா இருப்பீங்க போலயே :)

அந்த நிஞ்சா கதைகளை சீக்கிரம் வெளியிட சொல்லுங்க. ஹாரிபாட்டர் ரேஞ்சுக்கு எல்லாம் பிரபலமாகும். அப்பப்ப தமிழ்லயும் எழுதச்சொல்லுங்க.

சார்’க்கு டேமேஜ் கம்மி தான்க்கா :)

KarthigaVasudevan said...

சூப்பரா எழுதி இருக்கீங்க முத்துலெட்சுமி.

//கதை// அனுமன் கதை உங்க பையன் அதை உச்சரிக்கற விதம் நினைச்சுப் பார்த்தா சிரிப்பு சிரிப்பா இருக்கு.

ஹுஸைனம்மா said...

டூ இன் ஒன்??!! சிறந்த “நேர மேலாண்மை” இருக்கு அக்கா உங்களுக்கு!! சுவாரஸ்யத்திற்கும் குறைவில்லை!!

settaikkaran said...

சுவாரசியமாகச் சொல்லியிருக்கீங்க! கதையை போரடிக்காமல் சொல்லுவதே ஒரு கலைதானே?

க.பாலாசி said...

நிறைய கதைகேட்ட அனுபவம் உங்களுகெல்லாம் வாய்த்திருக்கிறது. நான் பொறக்கும்போது எங்காத்தாவத்தவிர வேறயாருக்கும் கதையே தெரியலப்போல. எங்க பெரியம்மா மட்டும் அப்பப்ப குடும்பக்கதைய சொல்லுவாங்க...

//இப்பொழுது ஒரு நாவல் எழுதி வருகிறாள்.//

அவங்களுக்கும்...வாழ்த்துக்கள்...

அம்பிகா said...

நீங்களும் சிறந்த கதைசொல்லி என்று நிருபித்து விட்டீர்கள்.
உங்கள் மகள் கதை எழுதுகிறாள் என அறியும்போது சந்தோஷமாயிருக்கிறது. வாழ்த்துக்கள்.

அண்ணாமலையான் said...

அழகா அசத்திட்டீங்க....

Anonymous said...

பொண்ணும் எழுதறாளா. வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி said...

அழகா சொல்லிட்டீங்க கதையை:)!

Ahamed irshad said...

கதை அருமை. வாழ்த்துக்கள்.

சாந்தி மாரியப்பன் said...

//அவள் பலவருடம் மூளைச்சலவை செய்யப்பட்டிருந்தாள் என்பதை பிறகு தான் புரிந்துகொண்டேன்//

வீட்டுக்கு வீடு வாசப்படிதான் போலிருக்கு :-)))

Anonymous said...

//முடிந்த பிறகு அது அவளுடைய தளத்தில் திருத்தம் பார்க்கப்பட்டு வெளியிடப்படும். //

பாராட்டுக்களும்.. வாழ்த்துக்களும்

Radhakrishnan said...

வாழ்த்துகள்

Thamiz Priyan said...

நல்லா தான் கதை சொல்றீங்க... ரெண்டு பதிவை ஒண்ணாக்கிட்டீங்க.. ரசமும், சாம்பாரும் ஒரே சட்டியில்.. ;-))

சிநேகிதன் அக்பர் said...

அழகாக சொல்லியிருக்கீங்க.

முகுந்த்; Amma said...

கதைசொல்லிகள் கதையையும், பொண்ணு பார்த்த கதையையும் சூப்பர் ஆ join பண்ணி ஒரு வித்தியாசமான கதை சொல்லிடீங்க போங்க. மொத்ததில நல்லா இருந்ததுங்க உங்க கதை.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

அழகா எழுதி இருக்கீங்க..பலே ஆள் தன் நீங்க. 2 இன் 1 தொடர் பதிவா
நெறைய பழைய நினைவுகளை எழ செய்தது. எழுதியதற்கு ரெம்ப நன்றி

பாச மலர் / Paasa Malar said...

உங்கள் மகளுக்குச் சிறப்பு வாழ்த்துகள் முத்து..

நர்சிம் said...

சமீபத்திய இடுகைகளில் நல்ல இடுகை. மஞ்சள் பை இடுகை என்று நினைவு..அதைப் போலவே.

அமிர்தவர்ஷினி அம்மா said...

உங்கள் மகளின் கதைகளையும் விரைவில் படிக்க ஆவல்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நாம் சொல்லி முடித்ததும் அதே கதையிலிருந்த சிங்கம் அவன் கதையில் புலியாகி இருக்கும். உல்டா அடிப்பதில் மன்னன்.

ghadhai சொல்லியோட மொழியில் ஒரு கதை கேட்கனும் போல இருக்கே.
ஒரு கதையாச்சும் பதிவிடறீங்களா, ப்ளீஸ்.

எவனோ ஒருவன் said...

எங்களுக்கு ஒரு சின்ன கதை சொல்லியிருக்கலாம் நீங்க. நான் எதிர்பார்த்தேன்.
உங்கள் பகிர்வு நல்லா இருந்தது

மங்கை said...

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க... மாதினிக்கு வாழ்த்துக்கள்

விக்னேஷ்வரி said...

கதை என்றால் அனுமன் கை ‘கதை’ போலத் தான் உச்சரிப்பான். //

ஹிஹிஹி...

நல்லா சொல்லிருக்கீங்க கதை.

சாந்தி மாரியப்பன் said...

http://amaithicchaaral.blogspot.com/2010/04/blog-post_09.html

முத்துலெட்சுமி, உங்களை தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன். விருப்பமிருந்தால் தொடரலாம்.

'பரிவை' சே.குமார் said...

சொல்லிய விதம் அருமை. வாழ்த்துக்கள்

கோமதி அரசு said...

”கதை சொல்லியின் கதை”
அருமை.


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Anonymous said...

கதை சொல்லியின் கதை சொன்ன விதம் சுவாரஸ்யம்...லஷ்மி

துளசி கோபால் said...

அட! இப்போத்தான் பார்த்தேன்..

கதை சொல்லிகளுக்கு, ஒரு கதை சொல்லியின் நல்வாழ்த்து(க்)களைச் சொல்லிக்கறேன்!

geetha santhanam said...

நன்றாக இருந்தது. உங்கள் மகளின் கதைகளைப் படிக்க ஆவல்.--கீதா