பாதிவழியில் திரும்புவதே
வழக்கமாகி விடுகிறது
ஒவ்வொரு முறையும்
பிழைகள் எதிர்கொண்டு
பின்னங்களில் வெற்றியாய்
திருப்பி அனுப்பும்
முடிவில்லா
வாழ்க்கைக்கணக்குகள்
சென்று மீண்ட வழிகளின்
பள்ளங்கள் மேடுகள்
பழகியென்ன?
தடைகளாய் முளைக்கிறது
உதவிக்காய் கொணர்ந்தவைகள்
கண்ணாடிச் சுவர் மீது
சப்தமெழுப்பும் வழி தேடல்
முடிச்சவிழ்க்க அவிழ்க்க
வளரும் ரகசியங்கள்
மாதங்களை வருடங்களை
இரக்கமில்லாமல்
உறிஞ்சியபடி
நாட்களில் புயற்கண் அமைதி
*சிதல் - கரையான்
நன்றி :ஈழநேசன்
வழக்கமாகி விடுகிறது
ஒவ்வொரு முறையும்
பிழைகள் எதிர்கொண்டு
பின்னங்களில் வெற்றியாய்
திருப்பி அனுப்பும்
முடிவில்லா
வாழ்க்கைக்கணக்குகள்
சென்று மீண்ட வழிகளின்
பள்ளங்கள் மேடுகள்
பழகியென்ன?
தடைகளாய் முளைக்கிறது
உதவிக்காய் கொணர்ந்தவைகள்
கண்ணாடிச் சுவர் மீது
சப்தமெழுப்பும் வழி தேடல்
முடிச்சவிழ்க்க அவிழ்க்க
வளரும் ரகசியங்கள்
மாதங்களை வருடங்களை
இரக்கமில்லாமல்
உறிஞ்சியபடி
நாட்களில் புயற்கண் அமைதி
*சிதல் - கரையான்
நன்றி :ஈழநேசன்
24 comments:
அருமை ;)
இன்னும் படிச்சிகிட்டு இருக்கேன், ஆனா புரியவே இல்லை !!
நல்லா இருக்குங்க ., ஆனா புரியல ,
இது படிக்கப் படிக்க புது பொருள் தருகிற மாதிரி இருக்கு, நான் கேட்டே தெரிஞ்சிக்கிறேன் :)
Thekkikattan|தெகா said...
//இது படிக்கப் படிக்க புது பொருள் தருகிற மாதிரி இருக்கு//
உண்மை.
கவிதை மிக அருமை முத்துலெட்சுமி.
ரொம்ப நல்லாருக்குங்க.
தி பெஸ்ட் டைட்டில்.
Thekkikattan|தெகா said...
இது படிக்கப் படிக்க புது பொருள் தருகிற மாதிரி இருக்கு, நான் கேட்டே தெரிஞ்சிக்கிறேன் :)
.........நானும் கேட்டே தெரிஞ்சிக்கிறேன் :)
//சென்று மீண்ட வழிகளின்
பள்ளங்கள் மேடுகள்
பழகியென்ன?
தடைகளாய் முளைக்கிறது
உதவிக்காய் கொணர்ந்தவைகள்//
அருமை . வாழ்த்துக்கள்
//நாட்களில் புயற்கண் அமைதி//
அருமையான சொல்லாடல்.. அருமையான கவிதை முத்துலெட்சுமி.
நன்றாக இருக்கிறது முத்துலட்சுமி..
manathaiyum ariththadhu kavithai varigal.....
நன்றி கோபி,
நசரேயன் , ரோகிணி , தெகா, சித்ரா.. இதெல்லாம் ஓவர்ப்பா.. :))
நன்றி ராமலக்ஷ்மி
நன்றி பா.ரா
நன்றி மதுரை சரவணன்
சித்ரா இன்னும் நீங்க கேக்கவே இல்லையே :P
சாரல் எனக்கும் அந்த இடம் தான் ரொம்ப பிடிச்சிருக்கு :)
நன்றி பாசமலர்
நன்றி தமிழரசி ..
நல்லா இருக்குது.
கவிதை நல்லா இருக்கு முத்துலெட்சுமி.
கவிதை நல்லாயிருக்கு முத்துலெட்சுமி
//இது படிக்கப் படிக்க புது பொருள் தருகிற மாதிரி இருக்கு//
உண்மை.
அருமை.
கவிதை நல்லாயிருக்கு முத்துலெட்சுமி!
"மாதங்களை வருடங்களை
இரக்கமில்லாமல்
உறிஞ்சியபடி
நாட்களில் புயற்கண் அமைதி..."
ஆழமான வரிகள். உங்களை மட்டுமல்ல என்னையும் கூட இவ்வாறுதான் உறிஞ்சுகிறது. மாற்றுவழி என்ன?
அற்புதமான வரிகள். இன்னும் நிறைய கவிதைகள் எழுதுங்கள். படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
ரோகிணிசிவா said...
நல்லா இருக்குங்க ., ஆனா புரியல ,//
இதே நேர்மைத்தான் எனக்கும்.
கரையான் என்னும் உருவகம் முழுக் கவிதையையும் மனச்சுவற்றில் ஏற்றி வைத்து விட்டது...
கண்ணுக்கு புலப்படாத ஈரப்பதம் வரிகளுக்குள் வேரோடிப் போயிருப்பதால் இது நிகழ்ந்திருக்கக்கூடும்..
வாழ்த்துக்கள்..!
//தடைகளாய் முளைக்கிறது
உதவிக்காய் கொணர்ந்தவைகள்//
கஷ்டம் தான் இந்த நிலை... நல்லா இருக்குங்க ...
//இது படிக்கப் படிக்க புது பொருள் தருகிற மாதிரி இருக்கு//
அதுதானே கவிதையோட ஸ்பெஷாலிட்டி?! :)
//பா.ராஜாராம் said...
ரொம்ப நல்லாருக்குங்க.
தி பெஸ்ட் டைட்டில்.
//
என்னோடதும் ஸேம் கருத்து ! :)
Post a Comment