உருத்ராட்ச மரம் கேட்டிருந்தீர்கள் இல்லையா? இதுதான் ஹரிஹர் (பார்தேஷ்மந்திர்) ஆசிரமத்திலிருந்த ருத்ராட்ச மரம்.
(படத்தைப் பெரிது செய்தும் பார்க்கலாம்)
ஜகத்குரு ஆசிரமம், பவன் ஆசிரமம் (முழுக்க கண்ணாடி அலங்காரம் செய்த ஓவியங்கள்) பூமா நிக்கேதன் (அசையும் பொம்மைகள் கடவுள் உருவங்கள் நிறைந்திருந்தது). சித்திரக்கூட் ஆசிரமம் உள்ளே போன வேகத்திற்கு வெளியே வந்துவிட்டோம். அங்கேயும் கண்ணாடி ஓவியம் தான் கொஞ்சம் தான் அதுவும்...தங்குவதற்கும் ப்ரசங்கம் மற்றும் உபதேசம் போன்றவற்றுக்கு தான் இவை சரின்னு நினைக்கிறேன். இங்கெல்லாம் சும்மா சுற்றுலா பயணியாகப் போவது மிகப்போர். மேல் விவரங்கள் எல்லாம் மறந்துவிட்டேன்.
பாரத் மாதா மந்திர் என்பது அடுக்கடுக்கான மாடங்களில் ஒவ்வொரு மாடத்திற்கும் பாரத திருநாட்டில் இருந்த ஆன்மீக மற்றும் அரசியல் முன்னோடிகளை கடவுள்களைப் பற்றிய குறிப்புக்களும் சிலைகளும் என அலங்கரிக்கப்பட்டிருந்தது. லிப்ட் கொள்ளாமல் எல்லாரும் போய் வந்துகொண்டிருந்ததால் படி ஏறி 3 அல்லது 4 மாடங்கள் பார்த்தோம். பிறகு வந்துவிட்டோம்.
தக்ஷ்மகாதேவ் கோயில். தக்ஷன் கதை தான் எல்லாருக்கும் தெரியுமே.
கோயிலின் ஒருபக்கம் கங்கை ஓடிக்கொண்டிருக்கிறது. அவ்வளவு குளிரிலும் காலுறையை நீக்கிவிட்டு கால்நனைத்து உட்காருவேன் என ஒரே பிடிவாதம் இந்த குட்டிப்பையனுக்கு..
கோயிலின் மற்றொரு வாயிலில் இருந்து வெளியே வந்தால் எதிரில் மாஅனந்தமயி ஆசிரமம்.இவர் அவரில்லை..இவர் கல்கத்தாவைச் சேர்ந்தவர்..
ஆசிரமம் அவருடைய சமாதியை நடுவில் கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த அறையில் அமைதியாக அமர்ந்து மெடிடேட் செய்துகொண்டிருந்தார்கள் சிலர்.
எனக்கு அம்மாவின் ஆசிரமம் மிகப்பிடித்திருந்தது. உள்ளொளியை உணர்ந்தவர்கள் என்று சொல்லப்பட்டவர்கள் மேல் ஒரு ஈர்ப்பு , அவர்கள் உணர்ந்தது எப்படி இருக்கும் அது உண்மையா இல்லை மயக்கமா எதுவாகிலும் அதன் மேலான ஆச்சரியம் என குழப்பமான நிலை ஒன்று ஓடும் மனதிற்குள்..
அடியாருக்கு அடியாரை வணங்குவதும் பெரும் சக்தியாக இதுவரை நினைத்த அனைத்தும் ஒருங்கே அந்த குருவுக்குள்ளேயே அடக்கம் என வணங்கி வழிபடுவதும் காலம் காலமாக வருகிறது. அம்மா அப்பா விலிருந்து காளியும் கிருஷ்ணனுமாக 'மா' வின் காட்சியைப்பற்றி ஒரு பாடல். (இங்கே பாடலைக் கேட்கலாம் )
MATA TUMI, PITA TUMI
Mata tumi, pita tumi, bandhu tumi he,
O You are mother, father and friend
Kali tumi, Shiva tumi, Krishna tumi he.
O You are Kali, Shiva and Krishna
Mahamaya, Durga tumi, tumi Tara he,
O You are Mahamaya,Durga, You are Tara
Mahashakti, Mahadevi, Saraswati he.
O Maha Shakti, Mahadevi, Sarasvati
புத்தகநிலையத்தில் அம்மாவைப் பற்றிய ஒரு புத்தகம் வாங்கினேன்.
அங்கும் உருத்ராட்ச மரங்கள் நிறைய இருந்தது.
-தொடரும்..
24 comments:
ம்.
மரம் படத்துக்கு நன்றி. ஃபிஜியிலும் ஒரு சின்னத்தீவில் இந்த மரங்கள் நிறைய இருக்கு. எனக்குத்தான் அப்போ பார்க்க ச்சான்ஸ் கிடைக்கலை.
படங்கள் நல்லா இருக்கு.
நல்ல பகிர்வு.
நான் ஒரு நான்கு முறைக்கு மேல் சென்று இருக்கிறேன், ஒரு முறை கூட நேரம் கிடைக்கவில்லை
ருத்திராட்ச மரம் நல்லா இருக்கு.
//குருவுக்குள்ளேயே அடக்கம்//
நம்ம ஏரியா பக்கம் எட்டிப் பார்க்கறீங்க போல :)
மறுபடியும் நான் இந்த ப்ளாக் படிக்கலை :((
கருத்துக்கு நன்றி சென்ஷி:)
------------------
நன்றி துளசி.. :)
----------------
சிங்கக்குட்டி இங்க 12 வருசமா வீட்டுக்கு வர விருந்தாளிங்க எல்லாம் போய்ட்டு ப்போய்ட்டு வராங்க நாம எப்பன்னு இப்பத்தான் கிளம்பினோம் :)
-------------------
நன்றி சின்னம்மணி :)
------------------------
டூபாக்கூரய்யா க்ரேட் வு(மென்) திங்க் அலைக் ன்னு தெரியாதா..
மத்தபடி அப்பப்ப எட்டிப்பார்க்கிறன் தான் உங்க பதிவை. இந்த க்ருத்தை எந்த பதிவில் எழுதினீங்களோ தெரியலயே..
பதிவ படிக்கலன்னாலும் சுற்றுலான்னா மட்டும் வர்ரீங்க
கருத்த பதிஞ்சுடறீங்க அந்தளவுக்கு நன்றி.. :))
//அங்கும் உருத்ராட்ச மரங்கள் நிறைய இருந்தது.
-தொடரும்..
///
கட்டுரை நன்றாக இருக்கிறது ..! தொடருங்கள் ..!!
துளசி டீச்சர் மாதிரி பக்கம் பக்கமா நோட்ஸ் கொடுப்பீங்கன்னு பார்த்தா டக் டக்குன்னு முடிக்கிறீங்க? :) எனிவே சீக்கிரம் தொடருங்க. அடுத்த டூர் ட்ரிப்பே வேற வந்திடும் போல :)
நல்ல பகிர்வு.
ருத்திராட்ச மரம் - முதல் முறை பார்க்கீறேன். எப்படி செய்வாங்கன்னும் சொல்லிருக்கலாம்...
பாட்டு வங்காள மொழியோ.. நல்லா இருக்கு!
பதிவிற்கு நன்றி. ருத்ராட்ச மரம் காண்பித்ததற்கு நன்றி. சபரி அழகாக இருக்கான்.
நல்ல பகிர்வு. உருத்ராட்ச மரம் இப்போதுதான் பார்க்கிறேன். மற்ற படங்களும் அருமை.
ஒ ;)
இந்த பாட்டு என்ன மொழி..
வித்தியாசமான பகிர்வு.
பகிர்வுக்கு நன்றி.
ஹரித்வாருக்கு இலவசமாக் கூட்டிக்கிட்டுப் போனதுக்கு நன்றி! ருத்ராட்சம் மரத்துலே காய்க்கிறதுன்னு கூட எனக்கு இப்போ தான் தெரியும். :-)
ருத்ராட்ச மரம் பார்த்ததில்லை. நல்ல ஆன்மீக பகிர்வு.
குட்டிப்பையன் படம் அழகு.
ருத்ராட்ச மரம் நம்ம ஊரு மழைக்காடுகளிலேயே இருக்குங்க. நான் பார்த்திருகேன்பா. முதல் முறை பார்க்கும் பொழுது அட இது தானா இம்பூட்டு அதிர்வுகளைக் கொண்டதாக பேசிக்கொள்ளப்படும் ருத்ராட்சக் கொட்டை என்று தோன்றியது. ஆனா, மரத்தைச் சுற்றி அவ்ளோ காய்ந்து போனது உதிர்ந்து கிடந்தது, அண்ணார்ந்து பார்த்தா கொத்து கொத்தா பச்சைக் காய்கள்.
எனக்கு எல்லாம் அந்தப் ஹரித்துவார், ரிஷிகேஸ் பக்கம் ஆந்தாங்கரை ஓரத்தில் இருக்கிற ஆத்தெண்டிக் வட இந்திய கையேந்தி பவன்ல சாப்பிட்டுக்கிட்டே மாலை வேளைகளை களிப்பது ரொம்ப பிடிக்கும். அதுனாலே கிடைக்கிற சந்தர்ப்பத்தில எல்லாம் போயிடுறது. உங்களுக்கு ரொம்ப பக்திங்க! :)
Photos are very good.
ருத்ராட்ச மரத்தை கொடைக்கானல்ல பார்த்திருக்கேன். சபரி வழக்கம்போல் செண்டர் ஆஃப் அட்ராக்ஷன் :-))))
ருத்திராட்ச மரத்தை இதுவரை நான் பார்த்ததில்லை. அண்மையில்தான், எனக்காக, ஒரு பெரியவர் நேபாலிருந்து
ஒரு 108 ருத்திராட்சங்கள் கொண்டு வந்து தந்தார். என்ன ஒரு சிமெட்ரி இந்தக் காய்களில் !!
ஆண்டவனது அற்புதங்கள் என்னே !!
ருத்திரனின் கண்கள் எனச்சொல்லப்படுவதால், இது
மரம் இல்லை. அமரம்.
சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com
Beautiful narration about Haridwar and Akshar dam. Are you staying in NOIDA?
நானும் நேரடியாகவே ருத்ராட்ச மரத்தை ஹரித்வாரில் பார்த்திருக்கிறேன். பச்சையாக உள்ள ருத்திராட்ச காயையும் புகைப்படம் எடுத்து வைத்து இருந்தேன். தேட வேண்டும்.... நல்ல பகிர்வுக்கு நன்றி. ஹரித்வார் மீண்டும் செல்ல ஆவலை தூண்டுகிறது.
வெங்கட்.
Post a Comment