July 22, 2011

அமெரிக்கா-2- அட்லாண்டிக் சிட்டி

மாலையில் தயாராகி பெட்டிகளை அடுக்கிவிட்டுப் பார்த்தால் எண்ணிக்கை நம்பமுடியாததாக இருந்தது. பெட்டிகளைத் தவிர நமக்கான உணவு இந்த நாட்டில் கிடைப்பது அரிது என்பதால் உணவுப்பொருட்களும் கணக்கில் சேர்ந்திருந்தது. ஒரு பெரிய ட்ரம் சைஸ் கூலர் அதனுள் பரோட்டா மாவு சப்பாத்தியாக இட்டது, ரெடிமேட் சப்பாத்திகள், அதற்கான சப்ஜி வகையறாக்கள், பழரசங்கள் , தயிர், பால் , ப்ளேவர்ட் மில்க் ,புளிக்காச்சல் அனைத்தும் இருந்தது. அடுத்து வரும் நாட்களில் சமைக்க அரிசி , அதற்கான மின் குக்கர் , தட்டுகளும் ஸ்பூன்களும் என ஏறக்குறைய வீட்டைக் காலி செய்துவிட்டோம். இன்னும் நின்று யோசிக்க யோசிக்க பொருட்கள் சேரும் என்பதால் கிளம்பிவிடுவதே நல்லது என்று கிளம்பினோம். இதில் சின்னப்பசங்களுக்கு கார் இருக்கையின் மேல் உயரமாக்கிக்கொடுக்கும் இருக்கைகள் வேறு.

காருக்குள் பொருட்களுக்கு மத்தியில் நாங்கள் ஏழு பேரும் இருந்தோம். ஒரு உருளை நாப்கினும் உண்டு. நீங்கள் எது கேட்டாலும் இல்லையென்று சொல்லமுடியாதபடிக்கு அத்தனையும் இருந்தது. முதல் திட்டம் சூதாட்டவிடுதிக்கு செல்வது.

அட்லாண்டிக் சிட்டி சென்று சேரும்போது இரவு . மின்விளக்குகள் ஒளிர கடைத்தெருக்கள் அழகாக இருந்தது. கசினோ வழியாகத்தான் விடுதியின் மேலுள்ள அறைகளுக்குச் செல்லவேண்டும் என்பதால் குழந்தைகள் அந்த இடத்தைப் பார்க்க முடிந்தது. மற்றபடி குழந்தைகளுக்கு அனுமதியில்லை. புகைப்படமெடுக்க அனுமதி இல்லை.
அறையில் சென்று பொருட்களை வைத்துவிட்டு , போர்ட்வாக்கிங் சென்றோம்.


 பகலில் போர்ட் வாக்கிங்க் தோற்றம் (இந்தப்படம் :google)


இரவில் போர்ட்வாக்கிங்க் ..

தரையில் மரப்பலகையால் பாதை அமைத்திருக்கிறார்கள். ஷாப்பிங்கும் கசினோக்களும் ஒருபக்கம் மற்றொரு பக்கம் கடல். நம்ம ஊரில் வந்ததும் ரிக்‌ஷாவா? மனுசனை மனுசன் இழுப்பதா? என்று கூப்பாடு போடறாங்க. மேலே படத்தில் ரிக்‌ஷாக்களைப் பாருங்க.. நம் ஊரிலாவது மனுசன் சைக்கிளைப்போல ஓட்டி இழுக்கிறார்கள். இங்கே நடந்தபடி தள்ளிக்கொண்டு வருகிறார்கள்.

இரவு வெளிச்சத்தில் சூதாட்டவிடுதிகள் பளிச் பளிச் விளக்கு காட்டி எல்லாரையும் அழைக்கிறது.


சீசர்ஸ் சூதாட்டவிடுதி .


  கூரைப்பகுதியில் வானத்தையே கொண்டு வந்து வரைந்து  வைத்திருக்கிறார்கள். இந்த இணைப்பில் நீங்கள் அவ்விடத்தைச் சுற்றிப்பார்க்கலாம். (virtual tour) ரோமாபுரியில் இருப்பது போன்ற உணர்வு.



இரவில் குழந்தைகளை உறங்கவைத்துவிட்டு தங்கி இருந்த ட்ரம்ப் ப்ளாசாவில் சூதாட்டம் பார்க்கச்சென்றோம். தம்பி முதலில் கொஞ்சம் ஜெயித்து விட்டு பின் தோற்றான். நாங்கள் வேடிக்கைத்தான் பார்த்தோம். டாலர்களை கூப்பன்களாக மாற்றிவிட்டு அந்த மிசின்களுக்குள் செலுத்தி விளையாடவேண்டும். ஒரு முறை டேபிள் கேம் பக்கம் சென்றோம். அம்மேஜையில் விளையாட்டை நடத்துபவர் ஒரு பாட்டி. அவர் கொடுக்கும் சீட்டுக்களின் கூட்டுத்தொகையை வைத்து விளையாட்டு. ஒவ்வொரு நொடியிலும் ஒரு பத்து டாலரை விழுங்கிவிட்டாங்க பாட்டி அம்மா.. சரி போதும் தோற்றதென்று நடையைக் கட்டிவிட்டோம்.


(படம் :google)

பெரும்பாலும் வயதானவர்களே விளையாடிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் காலத்துக்கு உழைத்து முடித்துவிட்டு இப்போது இப்படி செலவு செய்து கொண்டு இருக்கிறார்கள் போல.. ஆனால் முகத்திலும் மகிழ்ச்சியைப் பார்க்கவில்லை. ஒரு பாட்டி மட்டும் தன் தோழிகளிடம் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டிருந்தார்கள். அவர்கள் எவ்வளவோ ஜெயித்திருந்தார்கள் போலும். ’நான் தான் சொன்னேன் ல’ என்று ஒரு பாட்டி அவருக்கு பெருமையைத் தேடிக்கொண்டிருந்தார். எனக்கென்னவோ ஜெயித்து அந்தப்பணத்தை அடுத்த விளையாட்டில் தோற்றிருப்பார்கள் என்று தோன்றுகிறது. ஜெயிக்கின்ற யாருக்கும் வெளியேற மனசு வராது இன்னும் இன்னும் என்று தான் இருக்கும்.

பக்கத்தில் இன்னொரு சூதாட்டவிடுதியில் இப்படி அந்தக்கால வீடுகளும் வீதியும்  செட்டப்பில் அமைத்திருந்தார்கள்.

நகரும்படிகள் மட்டும் கொஞ்சம் இடத்திற்கு பொருத்தமற்றிருக்கும். :) யாருமில்லை என்பதால் படம் எடுத்தோம். சரி நாளைக்கு காலையில் டெனிஸ்ல (denny's)  ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டுட்டு கேப் மே கிளம்பலாம்................................................
அமெரிக்கப்பயணம் -1

16 comments:

சாந்தி மாரியப்பன் said...

//ஏறக்குறைய வீட்டைக் காலி செய்துவிட்டோம். இன்னும் நின்று யோசிக்க யோசிக்க பொருட்கள் சேரும் என்பதால் கிளம்பிவிடுவதே நல்லது என்று கிளம்பினோம்//

என்னதான்.. குறைஞ்ச லக்கேஜ், நிறைவான பயணம்ன்னு புறப்பட்டாலும் கிளம்பறப்பதான் ஐயோ அத எடுத்துக்கலாமா, இத எடுத்துக்கலாமான்னு தோணும்.. கஷ்டம்தான் :-)))

ரிக்ஷாக்காரங்க வீட்டுக்கு போயிட்டாங்க போலிருக்கு. படங்கள்ல ஒருத்தரையும் காணலை :-)(எனக்குத்தான் தெரிய மாட்டேங்குதோ என்னவோ!!)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ரிக்‌ஷான்னா அந்த ஐஸ்க்ரீம் வண்டி மாதிரி இருக்கு பாருங்க அதான்.. பின்னாடி ஒரு கம்பி நீளமா இருக்கா அதை பிடிச்சு தள்ளிக்கிட்டே வருவார் ஓட்டறவர். நீலக்கூரையுடன் இருக்கு பாருங்க, படத்தைக்ளிக் செய்து பெரிசாக்கிப் பாருங்க.. ரோலிங்க் சேர் ந்னு சொல்வாங்களாம்.

சாந்தி மாரியப்பன் said...

கண்டுபிடிச்சிட்டேன்.. அசப்புல எங்கூரு குல்பிஐஸ் வண்டி மாதிரியே இருக்குதா.. அதான் இதுன்னு நெனைச்சிட்டேன் :-)))))

ராமலக்ஷ்மி said...

வானமே கூரையாக அழகு. மற்ற படங்களும் நன்றாக வந்துள்ளன.

சூதாட்ட அரங்கும் பாட்டிகள் பற்றிய பகிர்வும் நன்று.

வருண் said...

***ஷாப்பிங்கும் கசினோக்களும் ஒருபக்கம் மற்றொரு பக்கம் கடல். நம்ம ஊரில் வந்ததும் ரிக்‌ஷாவா? மனுசனை மனுசன் இழுப்பதா? என்று கூப்பாடு போடறாங்க. மேலே படத்தில் ரிக்‌ஷாக்களைப் பாருங்க.. ***

ஒரு விசய்ம மாட்டிருச்சா!!!

சரி, நம்ம ஊரில் ரிக்ஷாக்காரன் மாதம் எவ்வளவு சம்பாரிக்கிறான், இந்த ரிக்ஷாக்காரன் எவ்வளவு சம்பாரிக்கிறான்னு கேளுங்க! I am sure the will charge you quite a bit! :)

Anyway, this is the first time I hear about Ricksha in US! Thanks for educating me! :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி ராமலக்‌ஷ்மி :)

-----------
வருண் :) ஆமாங்க அமெரிக்கால பிச்சைக்காரன் கூட டாலர் ல பிச்சை வாங்கறாங்கங்கறமாதிரி இருக்கு..:)
பணத்தைப்பற்றியே நான் பேசவில்லை. மனிதனை மனிதன் இழுப்பது என்ற விசயத்தை மட்டுமே குறிப்பிட்டேன்.

Thekkikattan|தெகா said...

கசினோஸ்ல போயி விளையாண்டு பணமும் திண்ணக் கொடுத்து பார்த்தீங்களா... its very addictive :)

புகைப்படங்கள் நன்றாக இருக்கிறது.

ரிக்‌ஷா விசயம்- இப்போ ஏர்போர்ட்ல வயசானவுங்கள சக்கர நாற்காலியில உட்கார வைச்சு தள்ளி உதவி பண்ணி கொண்டு வந்து விடுறாங்க இல்லையா... அது போலவே கசினோகுள்ளரத்தானே தள்ளிட்டு திரியறாங்க, ஏர்போர்ட்ல அது ஒரு சிறப்பு சர்வீசா செய்றாய்ங்க employees are exclusively hired for it, இங்கே அதே தள்ளல் சர்வீஸ் ஆனா அதுக்கு சம்பளம் கொடுக்குறோம்.

என்ன இருந்தாலும், இதில இடுப்பு ஒடிய ஒடிய மிதிக்கிற மாதிரி இருக்காதே :)!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இதுவும் உண்மையில் வயதானவர்களுக்காகவும், நடக்க முடியாதவர்களுக்காகவும் தான் ஆரம்பிக்கப்பட்டதாம்.. இப்ப காதலர்களும் குடும்பமாகவும் கூட நீங்கள் செல்லலாம்... 3 பேர் வரை அமரலாம், தள்ளுபவர் நடந்து தள்ளுவார் என்றால்... அது இடுப்பொடிய ரிக்‌ஷா மிதிப்பதற்கு சமமான துயரம் என்றே நினைக்கிறேன்...

வெங்கட் நாகராஜ் said...

அடடா... அடுத்தது சூதாட்டக் கூடத்துக்கு அழைச்சிட்டுப் போயிட்டீங்களா....

உங்களோடவே எனக்கும் 10 டாலர் லாஸ்.... யார் தருவா இப்ப எனக்கு!

புகைப்படங்கள் அருமை.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வெங்கட்.. விளையண்டு தொலைச்சதெல்லாம் பற்றி கவலைப்படக்கூடாது. அனுபவம் தானே.. :)

---------------------
டாக்டர் ரொம்ப நன்றி.. :)

உணவு உலகம் said...

உங்கள் சிறு முயற்சி பெருகட்டும். வாழ்த்துக்கள்.

pudugaithendral said...

அமெரிக்கபயணம் பதிவு எழுத ஆரம்பிச்சாச்சா. வெரிகுட். முதல் பாகத்தையும் படிக்கறேன்

'பரிவை' சே.குமார் said...

Payanak katturai padangaludan azhagu and arumai...

அமர பாரதி said...

அட்லான்ட்டிக் சிட்டியை நன்றாக விளக்கியிருக்கிறீர்கள். ட்ரம்ப் தாஜ் மஹால் செல்லவில்லையா? வயதானவர்களுக்கு நியூயார்க்கிலிருந்து காசினோ செல்வதற்கு இலவச பஸ் உண்டு. அவர்கள் பென்சன் பணத்தை இப்படித்தான் தொலைக்கிறார்கள்.

வருன்,

நியூ யார்க்கில் சைக்கிள் ரிக்க்ஷா இருக்கிறது கோடை காலத்தில் நிறைய பார்க்கலாம்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றிங்க சங்கரலிங்கம்..:)
----------------------------
ஆமா புதுகைத்தென்றல் இனியும் தள்ளிப்போட்டால் நானே மறந்துடுவேன்.:)
--------------------------
நன்றி குமார் :)
--------------------
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அமரபாரதி..
இல்லை , அன்று போர்ட் வாக்கிங்க் போது நல்ல குளிர்காற்று குழந்தைகளை அழைத்துக்கொண்டு முடிந்தவரை பார்த்தோம்.

கோமதி அரசு said...

நீங்கள் எது கேட்டாலும் இல்லையென்று சொல்லமுடியாதபடிக்கு அத்தனையும் இருந்தது.//

சரியான திட்டமிடல் என்றால் இது தான்.