January 22, 2013

நூற்றி நாற்பதாவது வழி

நூற்றி நாற்பதாவது வழி

சொல்லப்பட சொல்லப்பட
வலுவிழந்து கொண்டிருக்கும்
வார்த்தைகள்
எதிர்தரப்பில் 
புரியக்கூடிய மொழியாகிலும்
வாசித்தறியப்படாமல்
நிரம்பிக்கொண்டிருக்குமானால் 
பக்கங்களை கிழித்து
கத்திக்கப்பல் செய்

-------------------------------------------




வழியெங்கும்
அழகான 
நான் வேண்டாத பொருட்களின் 
கடைகள்
முன் தள்ளிக்கொண்டிருக்கும்
கூட்டம்
எதிர்படும் முகங்களில்
ஒன்றும் 
அறிந்ததில்லை
தொலைந்து கொண்டிருப்பதாகவோ
இலக்கென்று ஒன்று 
இல்லையெனவோச் சொல்ல
திரும்பும் வழி ஒன்றும் 
மறக்கவில்லை

12 comments:

கோமதி அரசு said...

இரண்டு கவிதைகளும் நன்றாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்.

semmalai akash said...

நல்லாருக்கே! அருமையான சிந்தனைகள். தொடர்ந்து எழுதுங்க பின் தொடர்ந்து வருகிறேன்.

கோபிநாத் said...

நல்லாயிருக்கு ;)

ADHI VENKAT said...

இரண்டுமே அருமையா இருந்ததுங்க... பாராட்டுகள்.

சமீரா said...

இரண்டுமே நடைமுறைக்கு மிக்க பொருத்தம்!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கோமதிம்மா , செம்மலை , கோபி.., ஆதி, சமீரா எல்லாருக்கும் நன்றி..:)

வல்லிசிம்ஹன் said...

எனக்கும் காகிதக் கப்பல் செய்யும் காலங்கள் நிறைய வந்திருக்கின்றன. இரு கவிதைகளும் எங்கும் நடந்துகொண்டிருக்கும் காட்சிகளைப் பிரதிபலிக்கின்றன. வாழ்த்துகள் கயல்.

நிலாமகள் said...

பக்கங்களை கிழித்து
கத்திக்கப்பல் செய்//

ஆதங்கத்தின் தீவிரம்!

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கவிதைகள்....

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வல்லி , நிலாமகள், வெங்கட்..நன்றி :)

Unknown said...

இரண்டு கவிதைகளுமே நல்லா இருந்ததுங்க. அதுவும் முதல் கவிதை ரீடரில் படிச்சுப் பாராட்டணும்னு இங்கே வந்தேன். வாழ்த்துகள்.

புதியவன் பக்கம் said...

நன்று.