June 17, 2013

பழைய பரமசிவம் - புதிய பரமசிவன் ( ரிஷிகேஷ் -1 )

ஹரித்வார் ரிஷிகேஷ் என்று போனமுறை தொடர்பதிவில் ஏனோ ( வழக்கமே அதானே ..என்ன ஏனோ) ரிஷிகேஷில் பாதியில் நிறுத்திவிட்டேன். ஆனால் அதற்கு காரணம் இருந்திருக்கிறது. மீண்டும் அதிக தூரம் காரில் பயணிக்க ஒரு ஊர் தேர்ந்தெடுக்கலாம் என்று யோசித்தப்போது ரிஷிகேஷ் போகலாம். போனமுறையே குளிரில் நடுங்கிக்கொண்டு கங்கையை தலையில் தெளித்துவிட்டு வந்தோமே..வெயில் நேரத்தில் முங்கி எழுந்துவிடவேண்டும் என்று திட்டம். குளிர் காலத்தில் கோவிலூர் மடம் அருகில் இருந்த கங்கைக்கரையில் சிறிது தூரம் ( அதாவது பாதி கங்கையை காங்கிரீட் பாதையில் கடந்து) நடந்தால் தான்  கொஞ்சம் கங்கை ஓடிக்கொண்டிருந்தது . 
வெயில் நேரத்தில் கங்கை இரண்டு கரையையும் தொட்டபடி ஓடிக்கொண்டிருந்தது.  காலையில் கிளம்பி தாபாக்களில் உணவு உண்டு ஹரித்வார் நெருங்க நெருங்க வாகனநெரிசலில் 3 மணிக்கு சென்று சேர்ந்தோம். மாலையில்  அடித்த வெயிலுக்கு தைரியமாக கங்கைக்குள் இறங்கினால் அது  பனிக்கட்டியாக குளிர்ந்திருந்தது. 
கால்களாவது சிறிது நேரத்தில் பழகிக்கொண்டது. கைகளில் தண்ணீரை அளைந்தால் வலி. ரத்தம் கட்டியது போன்ற தோற்றம்.  
அறைக்குத் திரும்பிய போது நல்ல மழை. கங்கை எங்களைக் குளிர்வித்திருக்க.. மழை ஊரைக் குளிர்வித்தது. அறை ஜன்னலில் மழைக்கு ஒதுங்கிய குரங்கார். 
(பழைய பரமசிவம்)

சிறுது நேரத்தில் ஷேர் ஆட்டோவில் ராம் ஜூலா போய் இறங்கி அங்கிருந்து  கங்கையைக் கடந்து பரமார்த் ஆசிரம கங்கை ஆரத்தி. முன்பு பார்த்த சிவனை  கங்கை அன்பு வெள்ளமாக வந்து அழைத்து சென்று விட்டாள்.
  
.


 புதிய பரமசிவன் 
போனமுறை மிகச்சிறியவன் மகன். இந்தமுறை கொஞ்சம் பெரியவன். அதனால் ராம்ஜூலாவில் கங்கையைக் கடந்தது அவனுக்கு பயமும் ஆச்சரியமும் கலந்த உணர்வாக இருந்தது. திரும்பும் வழியில் Rafting  செல்வது பற்றிய பேச்சு எழுந்தது. ஆமா என் தோழிகள் கூட ரிஷிகேஷுக்கு போறியா? ராஃப்டிங் செய்யவா?  என்று கேட்டதாகப் பேச்சோடு வந்தது. மறுநாள் எழுந்து விசாரிக்கலாம் என்று முடிவு எடுத்துக்கொண்டோம். 

முதலில் மகனுடைய வயது போதாதென்றால் அப்பாவும் மகளும் செல்லலாம் என்று பேசிக்கொண்டிருந்தபோது மகன் நானில்லாமல் யாருமே போகக்கூடாது என்றான். ஆனால் அடுத்தநாள் அவன் வயதுக்கும் வரலாம் என்றதும் நெஞ்சு தடதட அவருக்கு. பணம் கொடுக்கும் முன் நாங்கள் மதிய உணவுக்கு செல்லவேண்டி இருந்ததால். மனதைத் தயார்படுத்த நேரம் கொடுங்கள் என்று நெஞ்சைத்தடவிக்கொண்டிருந்தார். ( தொடரும்)

 


7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய பயணம்... படங்கள் அற்புதம்...

நன்றி...

வல்லிசிம்ஹன் said...

கங்கை பரம்சிவனையே அழைத்துக் கொண்டு போவிட்டாளா கயல்!! வெகு கம்பீரம். இப்போது தேவோன் கா தேவ் சீரியலில் வரும் மஹாதேவன் மாதிரியே இவர்!
படங்கள் அஏபுதம்.

ராமலக்ஷ்மி said...

இரு சிவன்களும் கம்பீரம். கங்கையின் பிரவாகத்துடன் பழைய பரமசிவம் கூடுதல் அழகு. பகிர்வு அருமை. தொடருங்கள்:)!

கோபிநாத் said...

இப்போது இருக்கும் சிவன் படத்தையும் பார்த்தேன்..யப்பா...!!!

Rafting வந்தாரா தலைவரு ;))

புதுகைத் தென்றல் said...

வாவ்... ரிஷிகேஷ் பயணக்கட்டுரையா

தொடர்கிறேன்

அமைதிச்சாரல் said...

புதிய சிவனையையும் கங்கை ஆரத்தழுவிக்கொண்டு இருக்கிறாளே.. செய்திகளில் பார்த்தீர்களா?

அப்றம் ராஃப்டிங் போனீங்களா இல்லையா :-))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி தனபாலன்.:)

நன்றி வல்லி .. கம்பீரம் அழகு .. :)

ராமலக்‌ஷ்மி நன்றி:)

கோபி ஆமா வந்தார் செம த்ரில்லிங்கான சவாரியில் முன் வரிசையில் தைரியமா அமர்ந்து கலக்கிட்டார் தலைவர்.:)

புதுகைத்தென்றல் நன்றிப்பா.. :)

சாரல் ஆமா ஆமா பார்த்தேன்.. பையனுக்கு ஒரே ஆச்சரியம் நாம் குளிச்ச இடமா இது.. நாம் சாமிகும்பிட்ட இடத்துல இவ்ளோ தண்ணீன்னு..இந்தமுறையும் கங்கையை தலையில் ஏறவிட்டார்ன்னா.. அடியே என்னஎங்க நீ கூட்டிப்போறே பாடலை டெடிக்கேட் செய்யலாம்ன்னு ப்ளஸ் ல எழுதினேன் படத்து லிங்க் வைத்து..:)