June 22, 2013

ரிஷிகேஷ் ராஃப்டிங்

River Water Grade
Grade 1: Easy, small waves. No obstacles, 
Grade 2: Moderate difficulty with clear passages, 
Grade 3: Difficult, high irregular waves, narrow passages- require precise maneuvering, 
Grade 4: Difficult, powerful waves. Very precise maneuvering required, 
Grade 5: Extremely difficult, violent, highly congested. 

Water Grade 2/3 in BrahmpuriShivpuri Water Grade 2/3 Plus, Marine Drive 3/4 Plus and Kaudiyala 4 Plus.

நாங்கள் சென்ற ப்ரம்மபுரியிலிருந்து வரும் பகுதியில் 2மற்றும் 3 க்ரேட் களில் அலை இருக்கும் .அந்தப் பகுதி மட்டும் தான் நாங்கள் சென்றபோது ராஃப்டிங் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும். மற்ற பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் சொல்லியிருந்தார்கள்.
View My Saved Places in a larger map

கைஸ் முன்னேறுங்கள் என்றதும் எல்லாரும் ஒரே நேரத்தில் துடுப்பிடுகிறோமா என்று பார்த்து தாமதித்து செய்பவர்கள்,  ஒப்புக்குச் செய்கிறவர்களுக்கு பின்னாலிருந்து சளேர் சளேர் என்று தண்ணீரை அடித்து கமாண்டரின் மிரட்டல் வரும். வளைவுகளில் எங்கெங்கே தண்ணீர் வேகம் எந்த பக்கம் நோக்கி இருக்கிறதோ அதற்கேற்ப முன்னேறுகள் என்றோ பின்னோக்கி என்றோ அவர் சொல்ல , நாங்கள் துடுப்பிட,கங்கையின் வேகத்தோடு செல்கின்ற படகுக்கு சரியான பாதையில் செல்ல சிறு உதவியைத்தான் நாங்கள் செய்துகொண்டிருந்தோம். 


இருந்தாலும் நாம் துடுப்பிடுவதாலா இந்த படகு செல்கிறது என்பதில் ஒரு சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது. எங்களிடமிருந்து மொபைல் , கேமிரா மற்று பர்ஸ் போன்ற பொருட்களை ட்ரை பேக் என்ற ஒன்றில் பத்திரப்படுத்தி இருந்ததால் நாங்கள் நிறைய படமெடுக்க இயலவில்லை.

சரி இப்போ ரேப்பிட் இல்ல நீங்கள் யாரல்லாம் தண்ணியில் குதிக்க விரும்புறீங்களோ குதித்துவிட்டு இந்த கயிற்றை பிடித்துக்கொள்ளுங்கள் என்று படகின் முனையில் இருந்த ப்ளூ ரோப்பை குறிப்பிட்டார். முதலில் குதித்த பையன் கயிற்றை பிடிக்கற தூரத்தில் இல்லாமல் குதித்ததும் நீரோடு செல்ல ஆரம்பித்தான். கல்யாண்சிங்கை நாங்களெல்லாம் பதட்டத்தோடு பார்த்தோம். அந்தப்பையன் முன்பே சொன்னது போல பயமாக இருந்தால் செய்யவேண்டிய சைகைகளை செய்யவில்லை மற்றும் எப்படியும் காப்பாத்திடுவார் என்கிற தைரியத்தோடு நீரோடு படகையே பார்த்தபடி சென்று கொண்டு இருந்தான். கவசத்தின் துணையால் அவன் மிதந்து கொண்டிருந்தான். கல்யாண் சிங் எங்களுக்கு படகு அவனுக்கருகில் செல்ல வேண்டிய அளவுக்கான துடுப்பு போடும் கட்டளைகளைக் கொடுத்துக்கொண்டே நீரில் குதித்து கயிறை அவன் கையில் கொடுத்துப் பிடித்துக்கொள்ளச் சொன்னார்.

பின் மற்றவர்களும் ஒருவர் பின் ஒருவராக நீரில் குதித்து பக்கவாட்டில் இருந்த கயிற்றை பிடித்தபடி படகோடு பயணித்தனர். படகு கங்கையின் ஓட்டத்தில் தன்னைப்போல சென்று கொண்டிருந்தது. நான் மட்டும் படகில் இருந்தபடி படமெடுத்துக்கொண்டிருந்தேன். ரேப்பிட் வரப்போகிறது உடனே அனைவரும் படகில் ஏறுங்கள்   படகில் ஏறுங்கள் என்றபடி ஒவ்வொருவரையாக உள்ளே இழுத்துப்போட்டு விட்டு மீண்டும் கட்டளைகள். பாறைகளுக்கு நடுவில் வளைந்து செல்லும்போது மகனுக்கு டைட்டானிக் நினைவுக்கு வந்துவிட்டது. நீரின் போக்கிற்காக சிறிது தூரம் பாறையை நோக்கி சென்று பின் தான் திசை திருப்ப வேண்டி இருக்கிறது. நீங்கள் அப்பாறையில் மோதப்போகிறீர்களா என்று அவன் பின்னால் திரும்பி சிரித்தான்.

அவன் படகின் முனையில் கயிற்றைப்பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தான். நீங்கள் எல்லாம் என் அடிமைகள் . எனக்காக படகு செலுத்துப்பவர்கள் என்று என்னிடம் அவன்  ரகசியமாகச் சொன்னதை நான் கல்யாண்சிங்கிடம் சொல்லிவிட்டேன். அடேய் அப்படியா சொன்னே என்று அவன் மேல் தண்ணீரைத்தெளித்ததும் அவன் நான் சொல்லவே இல்லை என்று பல்டி அடித்துவிட்டான். பயத்தில் தான்..:)

வண்டி  பத்து நிமிசம் நிற்கும் . எதாவது வாங்கிக்குடிக்கறவங்க குடிங்க.. நூடுல்ஸ் செய்து தருவாங்க  சாப்பிடுங்க. என்றபடி ட்ரைவரும் கண்டக்டரும் இறங்கிப்போனாங்க.. பஸ் ஸா படகா..? தொடர்ந்து துடுப்பு போட்டதில் எல்லாரும் சோர்வடைந்ததுதான் ஆனால் சாப்பிடவும்  பயம். சரி ஒரு லெமன் ஜூஸ் குடிக்கலாம் என்று கேட்டால் 12 ரூ பாட்டில் 40 ரூ . சரி வாங்கறோம் என்றதும் நீருக்குள் இருந்து ஒரு கயிற்றைப் பிடித்து இழுத்து அதன் முனையில் இருந்த மூட்டையிலிருந்து பாட்டில்களை எடுக்கிறார்கள். இயற்கையான குளிர்ப்பெட்டி. அதான் கங்கை ஐஸ்கட்டியாக குளிர்கிறதே.

என்ன மேடம் நீங்கள் மட்டும் குதிக்கலையே என்று கல்யாண் கேட்டதும் நான் படமெடுத்துவிட்டு குதிக்கலாம் என்று நினைத்தேன் என்றேன். சரி கேமிரா உமன் என்று எல்லாரும் கேலிசெய்தார்கள். அடுத்த இடத்தில் நீங்கள் தான் முதலில் ..என்றார்.  முதலில் எங்கள் கேமிராவில் எங்கள் குடும்பத்தை எடுத்தேன் மாணவர்களுக்காக அவர்கள் கேமிராவில் அவர்களையும் படமெடுத்துக்கொடுத்துவிட்டுப் பார்க்கும்போது ரேப்பிட் வந்துவிட்டது என்று எல்லாரையும் திரும்ப ஏற்றிக்கொண்டிருந்தார்கள். அதற்கு உதவச்சென்று விட்டேன்.

அடுத்த அமைதியான இடம் வந்ததும் நானும் நீரில் குதித்து பக்கக்கயிற்றை பிடித்தபடி பயணித்தேன்.  8 பயணிகளும் ஒரே சமயத்தில் நீரில் இருந்தோம். பிறகு மீண்டும் ராஃப்டிங் பயணம் . இந்தமுறை அதிக அலைகள் நிறைந்த இடம் வந்த போது (குறைந்த பட்சம் கோணம் 50 - 60 இருக்கலாம் என்று நினைக்கிறேன்) படகை அலைகள் உயரத்தூக்கித் தூக்கிப்போட்டது. நாங்கள் தொடர்ந்து கல்யாண்சிங்கின் கட்டளைகளுக்கு ஏற்ப துடுப்பை செலுத்திக்கொண்டிருந்தோம்.

என் கவனம் கட்டளைகளுக்கு மத்தியில்  நீரின் வேகத்தையும் படகின் ஆட்டத்தையும் கவனித்துக்கொண்டே  முன் வரிசையி கயிற்றைப்பிடித்திருக்கிறக் குட்டிப்பையன்  இதை எப்படி அனுபவிக்கிறான் என்று பார்க்கமுடியவில்லையே என்ற வருத்தத்தில் இருந்தது. கார்டூன் மற்றும் சினிமா பார்க்கும் போது அவற்றைவிட குழந்தைகளின் முகபாவங்களைக் கவனிப்பது எனக்கு மிகவும் பிடித்த விசயம். மகளின் முகம் தெரிகின்ற தூரத்தில் இருந்ததால் அவள் ரசித்துப் பயணிப்பதை நான் அறிந்துகொண்டேன்.

ராம்ஜூலாவைத்தாண்டி ரிஷிகேஷ் டேக்ஸி ஸ்டாண்ட் அருகில் இருந்த படிக்கட்டுகளிடம் எங்கள் பயணம் நிறைவுற்றது.  கல்யாண்சிங் எல்லாரும் மீண்டும் ஒருமுறை கண்டிப்பாக வருவீர்கள் எனக்குத்தெரியும். நம்பர் எழுதிக்கொள்ளுங்கள் என்று தன் எண்ணை எல்லாருக்கும் கொடுத்தார். எதிர்பாராமல் அமைந்த திரில்லிங் பயணம்.

இப்போது பதிவு எழுத ராஃப்டிங் க்ரேட் காப்பி பேஸ்ட் செய்வதற்காக கூகிள் செய்தபோது. அடுத்த இரண்டு நாட்களில் இதே போல பயணித்த ஒரு படகு கவிழ்ந்து விட்ட செய்தி. குர்க்காவுனைச் சேர்ந்த 30 வயது பெண்மணி இறந்துபோய்விட்டாராம். அடுத்தபடகின் கைடும் வந்து ஒவ்வொருவராய் காப்பாற்றியும் இந்தப்பெண்மணி அதிக நீரைக்குடித்திருக்கிறார்.

இன்று செய்திகளில் காணும் , தான்  பயணித்த அதே கங்கையின் சீற்றத்தைக் கண்டு குட்டிப்பையனுக்கு  தூங்கச்செல்லும் முன் கலக்கம் என்றாலும் அன்று அவன் காட்டிய தைரியம் எனக்கு என்றும் மறக்காது.  நீச்சல்  கற்றுக்கொள்ள பயந்த அவனை மிகவும் கட்டாயப்படுத்தி சேர்த்திருந்தேன். இன்று எங்களனைவரையும் விட அதிகமாக கற்றுக்கொண்டவனும் அவனே. நீச்சல் தெரிந்ததால் இது போன்ற நீர் விளையாட்டுகளில் பயமின்றி இருப்பார்கள் என்பது உண்மையாகிவிட்டது.

முந்தையபதிவு - 







12 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

Ctrl அழுத்திக் கொண்டு + key-யை மூன்று முறை சொடுக்கிப் படித்தேன்... (ZOOM 150%) தளம் ஆடுகிறது...! எழுத்தின் அளவை மட்டும் கூட்டினால் சந்தோசம்...

http://swamysmusings.blogspot.com/2013/01/blog-post_3.html - இந்த பகிர்வை பாருங்கள்... நன்றி...

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லது.... நன்றி...

http://dindiguldhanabalan.blogspot.com/2013/06/Speak-Clearly-and-Understand.html

வாசிக்க ரேரம் கிடைத்தால் நன்றி...

திண்டுக்கல் தனபாலன் said...

http://dindiguldhanabalan.blogspot.com/2013/06/Speak-Clearly-and-Understand.html

வாசிக்க நேரம் கிடைத்தால் நன்றி...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

thanks .. edited.. :)

ஹுஸைனம்மா said...

குடும்பத்தோட போனீங்களா? அம்புட்டு தகிரியமா? நானெல்லாம் இப்படித்தான் ஒரு சாதாரண போட்டிங்காக படகில் ஏறி, அஞ்சடி போனதும் வண்டியத் திருப்பச்சொல்லி (அழுது), சின்னவனை இழுத்துகிட்டு நான் இறங்கிட்டேன்! (லைஃப் ஜாக்கெட்டும் கிடையாது, நீச்சலும் தெரியாது) அவ்வ்வ்வ்....

வீர நாச்சியா பட்டம் கொடுக்கலாம் உங்களுக்கு! :-)

வடுவூர் குமார் said...

நல்ல அனுபவம்...

கோமதி அரசு said...

முத்துலெட்சுமி, ஹுஸைனம்மா வீரநாச்சியா பட்டம் கொடுத்துவிட்டார்கள். நானும் வீரத்தாய் பட்டம் கொடுக்கிறேன்.
சபரியின் அனுபவங்களை அவனிடம் கேட்க வேண்டும். மாதினி ரசித்தாள் என்று படிக்கும் போது மகிழ்ச்சி ஏற்படுகிறது.

ராமலக்ஷ்மி said...

த்ரில்லிங்கான அனுபவமே.

/நீங்கள் எல்லாம் என் அடிமைகள் . எனக்காக படகு செலுத்துப்பவர்கள் /

:))!

கோபிநாத் said...

:))

வல்லிசிம்ஹன் said...

அடே அப்ப. கயல்னு பேருவச்சுக்கிட்டு
சும்மா நீரில் விளையாடிட்டீங்க கயல்.
சபரி முகத்தில் தான் என்ன மகிழ்ச்சி. நீச்சல் எல்லாக் குழந்தைகளுக்கும் தெரிந்திருக்க வேண்டும்.அமைதியான நதி ஓட்டமே நமக்குப் பிடித்தது:)

இராஜராஜேஸ்வரி said...

கார்டூன் மற்றும் சினிமா பார்க்கும் போது அவற்றைவிட குழந்தைகளின் முகபாவங்களைக் கவனிப்பது எனக்கும் மிகவும் பிடித்த விசயம்..

அருமையான திரில்லிங்
பயணத்திற்குப்
பாராட்டுக்கள்..!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி ஹுசைனம்மா.. :))

நன்றி வடுவூர் குமார் :)

நன்றி கோமதிம்மா.. :)

பட்டமா வந்து குவியுதே..:)

ராமலக்‌ஷ்மி கோபி நன்றி நன்றி :)

வல்லி நன்றி.. அவனை நான் கத்துக்க வச்சேன்னா ..நான் நீச்சல் கத்துக்கிட்டதுக்கு சபரிதான் காரணம். உனக்குத் தெரியாததை உன்னால் முடியாததை எனக்கு ஏன் கம்பெல் செய்யறே எவ்ளோ கஷ்டமா இருக்கு .. எவ்ளோ ஜில்லுன்னு இருக்கு நீ இறங்கிக்காண்பி ந்னு அடம். :)


இராஜராஜேஸ்வரி நன்றி..:)