August 15, 2013

உயரத்தின் ஈர்ப்பு

நீண்ட
மிக நீண்ட
படிவரிசைகளை
ஒன்று ஒன்றாகக்
கடந்து கொண்டிருக்க
விசையோடு ஈர்க்கிறது
முதல்படி
முற்றிலும் விளங்காதது
உயரத்தின் ஈர்ப்பு
-----------------------------------------------------------------------------------------------


இடையறாது 
நகர்கின்ற உலகத்தின்
அசைவற்ற புள்ளியிலும்
அமைதியின்  ஆழத்தில்
நின்றுவிட்ட‌ உலகின்
துவக்க விசையிலும்
ஒரே நேரத்தில்
தன்னைப்
பிணைத்துக்கொண்டிருக்கிறது
ஒவ்வொரு நொடியும்

9 comments:

கோமதி அரசு said...

ஒவ்வொரு நொடியும் முன்னேற துடிக்கும் உயிர் துடிப்பாய் உள்ளது.
கவிதை அருமை.
எல்லோரையும் ஒரு ஈர்ப்பு தானே வாழ வைக்கிறது.
முன்னேறுங்கள் தொடர்ந்து.
வாழ்த்துக்கள்.
சுதந்திரதின வாழத்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

அருமை கயல். அந்த முதல் படி ஏறிவிட்டால் மற்றபடிகள் சுலபம்.

வல்லிசிம்ஹன் said...

நகர்கிறோம் நிற்கிறோம். சேர்கிறோம் பிரிகிறோம்.ஒவ்வொரு புள்ளியும் முக்கியம். ஏதாவது நிகழ்கிறது அந்தப் புள்ளியில். அருமை கயல். வாழ்த்துகள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி.. உங்களுக்கும் வாழ்த்துகள் கோமதிம்மா..:)

வல்லி நன்றி. ஆமாம் அனைத்துப்புள்ளிகளும் அதனதன் முக்கியத்துவத்தோடு இருக்கிறது.:)

வெங்கட் நாகராஜ் said...

இரண்டுமே நன்று....

குழந்தை முன்னேற்றப் பாதையில்.... படம் நன்று.

சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

யாழினி said...

தொடரும் முயற்சிகளின் அடுக்குகள் படிகட்டுகளாகுகிறது... தாழவும் உயரவும் அதுவே சிறகுகளாகிறது....


கவிதை நல்லா இருக்குக்கா..

'பரிவை' சே.குமார் said...

அருமை...

சுதந்திரதின வாழ்த்துக்கள் அக்கா.

Unknown said...

அழகிய கவிதை பொருத்தமான படம். அருமை

ராமலக்ஷ்மி said...

/முற்றிலும் விளங்காதது
உயரத்தின் ஈர்ப்பு/

ஈர்த்தது கவிதையும்.

இரண்டுமே அருமை.