January 10, 2007

கடவுள் நேராக வருவாரா?

மருந்துக்கடையில் சீட்டை தந்துவிட்டு காத்திருக்கும் நேரத்தில் அவர்கள் பக்கத்துக்கடையில் ஏதோ வாங்க வந்தார்கள். கல்லூரி செல்லும் வயதுடைய பெண் கூட நடுவயது பெண்மணி . எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு , ஆனா பேர் வரமாட்டேங்குது . போய் கேட்க யோசிக்கும்போது அவங்களும்
உத்துப் பார்க்கிறதால் நம்மள அவங்க அடையாளம் கண்டுபிடிச்சிட்டாங்க, மேற்கொண்டு பேசினால் தெரிந்துவிடும் என்ற தைரியம் வந்துவிட்டது.
எப்படி இருக்கப்பா நல்லா இருக்கியா? இது யாரு வீட்டுக்காரரா என்னா மூணு பிள்ளைங்களா? இல்ல இல்ல அது யாரோ வாங்க வந்தவங்க பிள்ளை போல இது பொண்ணு அவங்க கையில் தூங்கறது பையன்.அப்படியா தம்பி எங்க இப்போ ? அவனா கல்யாணமாகி சென்னையில் தான். நல்லது ஜெமிலா வீட்டுக்கு போறதுண்டா ? ஆங் இப்போ தான் பேர் நியாபகம் வருது இவங்க விமலாவோட சித்தி. இது அவங்க பொண்ணு ரீனா.
இல்லைங்க விமலா இல்லாத வீட்டுக்கு போக எனக்கு மனசே வரமாட்டங்குது. அவங்க அம்மா அப்பாவ பார்த்தா சண்டைபோடனும் போல இருக்கு ஆனா முடியல.நம்ம போகம இருக்கிறது கூட ஒரு வகையில் விமலா இன்னும்
உயிருடன் இருப்பதாக நினைக்க உதவுமே .
நீங்கள்ளாம் ஒரு குடும்பம் மாதிரி இருந்தீங்க காலனியில். இப்போ எங்களுக்கு கூட அதிகம் ஒட்டு இல்லப்பா.என்ன பண்ண கடவுள் பக்தி இப்படி கண்ணை மறச்சிருச்சே.
ஆமா அந்த குட்டி எப்படி இருக்கா விமலா தங்கச்சி ..
என்ன குட்டி யா நல்லா சொன்னே அது அவங்க அம்மா ஜெமிலா மாதிரி இருக்கு இப்போ. ஆனா காதுல கையில எதுவும் போடாம இருக்கு. சங்கடமா இருக்கு.
ஆமாங்க . எங்க வீடு தான் எப்போதும் ரெண்டு பேருக்கும். கடவுள் என்ன நேரிலா வருவார் இந்த காலத்தில். டாக்டர் மூலமா தான் சரி செய்வார்.
பாருங்க உங்க மதமாகட்டும் எங்கமதமாகட்டும் எல்லாம் அப்படி தானே சொல்லுது. சரிங்க நேரமாகிடுச்சு அப்புறம் பாப்போம்.
ஆட்டோவில் வரும் போது விமலா தான் மனசெல்லாம்.உன்னை ஒருத்தங்க அடையாளாம்
கண்டு பேசிட்டாங்களே உன் ஊரில, கிண்டலாக ஆரம்பித்த கணவர்கிட்ட இவங்க விமலா வோட சித்தி .விமலா பக்கத்துவீட்டுல இருந்த பொண்ணுங்க. அவளுக்கு ருமாட்டிக் ஜுரம் வந்துச்சு. இங்க காட்டி இதுதான்னு தெரிஞ்சதும் சென்னை கூட்டி போக சொன்னாங்க..அவங்க மதத்துலயே தீவிரமான ஒரு மார்க்கத்துக்கு மாறி இருந்த நேரம். கடவுள் நோய் தருவது அவர்களை தன் கிட்ட சீக்கிரமே அழைக்கிறதுக்கு தான் அதனால் அதை தடுக்கும் மருந்து டாக்டர் இவங்க பக்கம் திரும்பி பாக்க மாட்டோம்ன்னு பிடிவாதம் பிடிச்சாங்க அவங்க அம்மா அப்பா.
எலும்பும் தோலும் மட்டும் இருக்க தலையணை முட்டு கொடுத்து உட்காரும் நிலையில் இருந்த அவளை பாக்க போனப்ப கூட அம்மா இங்க பாரு அங்க போய் டாக்டர் கிட்ட போறது பத்தி மட்டும் பேசாதே பிரசங்கமே செய்வாங்கன்னு சொல்லி தான் கூட்டிபோனாங்க.அப்புறம் அவ இறந்த செய்தி தான் கேட்டேன்.
கடவுள் டாக்டருடைய முகவரியை தான் தருவார். அவருக்கு செய்யும் திறமையை தருவார். ஆனால் எந்த கடவுளும் போதும் வாழ்ந்தது வா என்று அழைப்பாரா தெரியவில்லை.
இன்னும் இருக்கிறாள் கண்ணுக்குள். அலங்காரம் செய்து
ஒரு புது பூவைப் போல வருவாள். 6வது தான் படித்துக் கொண்டிருந்தாள். எத்தனை கனவு கொண்டிருந்தாயோ விமலா?//

13 comments:

பொன்ஸ் said...

:(((((

விமலாவின் தங்கையைப் போய்ப் பார்த்தீர்களா?

லட்சுமி said...

இல்லை .பொன்ஸ். தைரியம் இல்லை.அவளுக்கு ஏதும் நோயை தராமல் நீண்ட ஆயுளாக இருக்க எல்லா மதக் கடவுளை யும்
வேண்டிக்கொண்ருக்கிறேன்.

ஜீவா (Jeeva Venkataraman) said...

கடவுள் வேறெங்கும் இல்லை. உதவி செய்யும் நல்லவர்களிடம் இங்கேதான் இருக்கிறார். அதனால், அவர்களிடமே பிரிந்தவகள் மிக அருகில் இருக்கிறார்கள்.

லட்சுமி said...

//ஜீவா (Jeeva Venkataraman) said...
கடவுள் வேறெங்கும் இல்லை. உதவி செய்யும் நல்லவர்களிடம் இங்கேதான் இருக்கிறார்.//

உண்மை தான்.

//அதனால், அவர்களிடமே பிரிந்தவகள் மிக அருகில் இருக்கிறார்கள்//

ஜீவா இது புரியவில்லையே.என்ன சொல்ல வந்தீர்கள்/?

சண் ஷிவா said...

கடவுள் நேரில் வர சாத்தியமில்லை சகோதரி!ஏனெனில் அவர் மனிதன் என்ற ஒருவனைப் படைத்தாரம் அவனைக் காணவில்லையாம்,அவனைத் தேடிப்பிடிக்கும் வரை கடவுள் பிஸிதான்..........

திரு said...

கடவுளை தேடி அலைவதில் நம்மை தொலைத்துவிடுகிறோமோ?

மனதை தொட்ட பதிவு லட்சுமி!

லட்சுமி said...

உண்மைதான் திரு ஜி.
கடவுளை சகமனிதனிடம் காண
தவறியதால் இந்நிலை.

திரு said...

//திரு ஜி//

:)))

லட்சுமி said...

//
திரு said...
//திரு ஜி//

:)))
//

திரு. திரு ன்னால் கிண்டலா இருக்குமே அதான் திரு ஜி.

திரு said...

திரு சொன்னாலே போதும். எதுக்கு இன்னொரு திரு? நான் ஒரே திரு தானே! :)

சென்ஷி said...

//திரு said...
திரு சொன்னாலே போதும். எதுக்கு இன்னொரு திரு? நான் ஒரே திரு தானே! :)//

பதிவுல திரு..திரு..ன்னு திருவியிருக்கீங்க :))

முத்துலெட்சுமி said...

சென்ஷி இதெல்லாம் அநியாயம்..சொல்லிட்டேன்..பொழுது போகலன்னா அதுக்காக இப்படியா?
பதிவப்பத்தி பேசறது இல்லன்னு கங்கணம் கட்டி வேல செய்யறீங்களா?

சென்ஷி said...

//முத்துலெட்சுமி said...
சென்ஷி இதெல்லாம் அநியாயம்..சொல்லிட்டேன்..பொழுது போகலன்னா அதுக்காக இப்படியா?
பதிவப்பத்தி பேசறது இல்லன்னு கங்கணம் கட்டி வேல செய்யறீங்களா?//

சாரிக்கா. நான் பின்னூட்டத்துல திருவியிருக்கறதை பத்தி எழுதணும்னு நினைச்சேன் அது பதிவாயிடுச்சு :))


இது ஒரு நல்ல பதிவு.. :))

சென்ஷி