January 17, 2007

சுனாமி சிடி

இந்த கடலா எண்ணற்ற உயிர்களை கேட்டது என்று ஆச்சரியம் படும் வகையில் இருந்தது. குளத்தில் காற்றால் ஏற்படும் சிற்றலைபோல கால்களை நனைத்து சென்றன கடல் அலைகள் . வேளாங்கன்னி செல்லும் எண்ணம் வந்தபோதே சுனாமி தான் கண் முன் வந்து நின்றது. அந்த மணலை மிதிக்கும் போது மனம் பதைப்பாய் தான் இருந்தது.




இன்னமும் கட்டி முடியாத மாற்றுகுடியிருப்புகள்.
இந்த கடைகள் எல்லாம் தானே தண்ணீரில் மிதந்தது , பார்க்கும் கடைத்தெருவும் அதையே நினைவு படுத்தியது. நான்கைந்து கடைகளுக்கு ஒன்றாக வருகிற மாதா பாடல்கள் விற்கின்ற கடைகளில் எல்லாம் சுனாமிலைவ் சிடி விற்பனை க்கு என்னும் விளம்பரம். எது அவர்களுக்கு துன்பம் தந்ததோ அதையே சாதகமாக்கி வியாபாரம் செய்கிறார்கள்.

வீழ்ந்தால் எழும் சக்தியும் ,

வீழ்ச்சியை வெற்றியாக்கும் திடமும் ,

சுற்றிப் பார்த்து திரும்பும் போது எனக்குள்ளும் சிறிது .

சுனாமியால் இறந்தோருக்கான நினைவுத்தூண்.



2 comments:

Anonymous said...

engirunthu photos edukkireeregal subjectkku poruthama irrukku.....
miga nalla sinthanai.... urukkamaana ninaivalaigal.....
sirantha enna ottangal......

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி.அனானிமஸா வந்தாகூட
உங்கள் பெயரை கையெழுத்து போல
இட்டுசெல்லலாம்.
படங்கள் நானே எடுத்தவையே
DVD 703Ehandycam