January 30, 2007

அம்மாவோட கவலை

அம்மா நீ போயேன், முன்னால . நான் கொஞ்சம் பேசிக்கிட்டே வரேனே.

எதுக்குடி அப்படி என்ன ரகசியம்? நான் தெரிந்து கொள்ளக்கூடாதா?

இல்ல ஆண்ட்டி, எங்க ஸ்கூல் ப்ரெண்ட்ஸ்க்குள்ள ஒரு சண்டை .இது எங்க பெர்சனல் நீங்கள் போங்களேன்.

இல்லைம்மா, அப்படி சொல்லக்கூடாது. அம்மாவுக்கு தெரியாம என்ன பெர்சனல் அதுவும் ஏழெட்டு வயசில .

பாரு நான் என்ன உன்கிட்ட அம்மா மாதிரியா இருக்கேன் ?ஒரு ப்ரெண்ட் போலத்தானே .சொல்லு என்ன விஷயம்.

இல்ல ஆண்ட்டி, எத்தனை விஷயம் நீங்க சின்னவங்க, இது உங்க விஷயம் இல்லை, இது உங்களுக்கு புரியாதுன்னு சொல்லறீங்க. அப்படி இது எங்க விஷயம்.

ஆமா அனுக்ஷா நீங்க எந்த விஷயத்தை எந்த வயசில தெரிஞ்சுக்கணுமோ அப்ப சொல்றோம்னு சொல்லி இருப்பாங்க உங்க வீட்டு பெரியவங்க.

ஆனா நாங்க உங்க வயச தாண்டி தானே வந்தோம் அதனால
இப்போ உங்களுக்குள்ள விஷயத்த நாங்க தெரிஞ்சுக்கறது ஒன்னும் தப்பில்லையே.

மேலும் நாங்க அந்த பிரச்சனைக்கு என்ன வழிய நீங்க
தேர்ந்தெடுக்கறீங்க, அது தப்பா, சரியான்னு சொல்லுவோம்ல. அதுக்குதான்.

பொண்ணுக்கிட்ட பேசி சமாளிச்சு நட்பா இருந்தா மட்டும் போதாதுன்னு அவளோட தோழிங்க கிட்ட எல்லாம் கூட கொஞ்சம் கவனமா பேசி வச்சுக்கணும் போலருக்கே.

இப்போதான் புரியுது .

"நேத்து வந்தாளே உன் கூட படிக்கறவ, அது என்ன நான் நிக்கும் போது புசுபுசு ன்னு உன்கிட்ட பேசறா ..காபி கலக்கப் போனா சகஜமா இருக்கா"
"என்கிட்ட முகம் குடுத்து நல்லா பேசமாட்டேங்கறா"
"அவ எப்படி? இதப்பாரு நல்லபிள்ளைங்க சகவாசம் தான்
நல்லது சொல்லிட்டேன். "

இப்படி போட்டு குடையற என் அம்மாவோட கவலை.

6 comments:

மங்கை said...

//இல்ல ஆண்ட்டி, எத்தனை விஷயம் நீங்க சின்னவங்க, இது உங்க விஷயம் இல்லை, இது உங்களுக்கு புரியாதுன்னு சொல்லறீங்க. அப்படி இது எங்க விஷயம்.//

இது உண்மை லட்சுமி...

நாமலே சில சமயம் முன்னுக்கு பின் முரணா பேசுவோம்.. (அல்லது நம்ம பெற்றோர்கள்)ஒரு சமயம் இவ்ளோ வளர்ந்துட்டே இது கூட செய்யத் தெரியாதான்னு கேப்போம் .. சில சமயத்தில நீ சின்னப் பெண் உணக்கு தெரியாதுன்னு சொல்லுவோம்..

அதுக என்ன பண்ணும் பாவம்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\நாமலே சில சமயம் முன்னுக்கு பின் முரணா பேசுவோம்.. (அல்லது நம்ம பெற்றோர்கள்)ஒரு சமயம் இவ்ளோ வளர்ந்துட்டே இது கூட செய்யத் தெரியாதான்னு கேப்போம் .. சில சமயத்தில நீ சின்னப் பெண் உணக்கு தெரியாதுன்னு சொல்லுவோம்..//

ஆமாங்க மங்கை. அதக்கூட சாதகமாக்கிடுறாங்கப்பா குழந்தைங்க.
நீதான சொன்ன நான் சின்னப்பொண்ணு இதெல்லாம் என்னால செய்ய முடியாதுன்னும்..
அதான் சொல்லிட்டயே நான் பெரிய பொண்ணாக்கும் எனக்கு இன்னிக்கு இந்த உடையுடுத்திக்கணுன்னும்.:))
சாமர்த்தியமா பேசும் போது கோபத்துக்கு பதில் பெருமையா தான் இருக்கு.

வெற்றி said...

லட்சுமி,
நல்ல பதிவு.

துளசி கோபால் said...

அஞ்சு வயசு: அம்மா... அந்த பொம்மையை எடுத்துக்குடும்மா.... இன்னிக்கு என்ன ட்ரெஸ்ம்மா
போட்டுக்கணும். எடுத்துக்குடும்மா...........

பொண்ணுக்குப் பத்துவயசு ஆனபிறகு,
அம்மா: என்னடா முந்தியெல்லாம் பொம்மை எடுத்துத்தான்னு கேப்பே.
இப்பெல்லாம்...........

பத்துவயசு: அதான் எனக்கு எல்லாம் எட்டுதே.

அம்மா: என்னமா இத்துனூண்டா இருக்கு, இதையா போட்டுக்கப்போறே?
அது வேணாம். நல்லாவே இல்லை.

பத்துவயசு: போம்மா..உனக்குத் தெரியாது . இதுதான் இப்ப பேஷன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\வெற்றி said...
லட்சுமி,
நல்ல பதிவு.//

தொடர்ந்த வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி வெற்றி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆமா துளசி .உனக்கு ஒண்ணும் தெரியாதுன்னு சொல்லத்தான் போறா.
மனசளவில் தயார் ஆகிக்கறேன்.