June 27, 2007

சென்னை சந்திப்பு

மொக்கை போட வாங்க என்று சொல்லிவிட்டு பதிவர் பட்டறை பற்றிய விவாத நேரமாக மாற்றிவிட்டார்கள். ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள பயமாகிவிட்டது .தமிழ்நதி, சோமி, பாலபாரதி இப்படி கொஞ்சம் பேர் மெதுவா ஆரம்பிச்சோம் பொன்ஸ் உஸ் உஸ் என்று வேறு சத்தம்போட்டா பயப்படாம என்ன செய்யறது? அப்புறம் கொடுக்கப்பட்ட நேரம் தவிர பேசாம நல்ல பிள்ளைகளா விவாதம் முடிந்ததும் கொஞ்சம் பேசிக்கிட்டோம். இருந்தும் சரியாக பேசமுடியாத வருத்தம் இருக்கு.
-----
போன முறை சந்திக்க விட்டுப்போன தமிழ்நதியை சந்தித்தாலும் அதிகம் பேசமுடியவில்லை. இருந்தும் பார்த்ததே மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. எனக்கு தனியாக அடுத்த முறை ஒரு நாள் ஒதுக்கும் படி கேட்டுக்கொண்டு அவர்களிடம் பேச ஆசை.
------
என்னுடைய முதல் பதிவில் முதல் பின்னூட்டமிட்ட சிவஞானம்ஜியிடம் நன்றி சொன்னேன். வெட்டிபயல் பாலாஜியிடம் உங்க பதிவு தாங்க எனக்கு பதிவெழுதக் காரணம் என்றதும் பக்கத்திலிருந்த கப்பிபயல் போச்சுடா இதே மாதிரி எல்லாரும் சொல்லறாங்க என்று கொஞ்சம் பொறாமையா??(சும்மா) சொன்னார். இந்த நாய் வளர்க்கறது பத்தி எழுதணுது நீங்க தானேன்னு கப்பி கிட்ட கேட்டேன் நல்லாருந்ததுன்னா நான் தான்னு
வச்சுக்கோங்கங்கறார் அவர் பதிவு நிறைய படிச்சிருந்தும் சட்டுன்னு ஒன்னு நியாபகம் வரலை. பேசாம அருட்பெருங்கோகிட்ட நீங்க எழுத ற எல்லாக்கவிதையும் நல்லாருக்குன்னு சொன்னமாதிரி சொல்லி இருக்கலாம்.
விக்கி கிட்ட ஒலிப்பதிவு ஒன்னு போட்டிங்களே நல்லாருந்ததுன்னு சொன்னேன். (அதான் மூச்சு விடாம பேசிக்கிட்டே இருந்தாரே..).
-------
விக்கி , கப்பிப்பயல், அருட்பெருங்கோ ,பாலராஜன் கீதா இவர்களிடம் சில நிமிடங்கள் பேசினேன்.
மா.சிவக்குமாரிடம் பேசியது மகிழ்ச்சி . பதிவர் பட்டறைக்கு யோசனை சொல்ல எனக்கு எனக்கு கொடுக்கப்பட்ட நேரத்தில் நான் பேசிய விஷயத்தைப் பற்றி என்னவோ சொல்ல வந்தார் வழக்கம் போல நான் குறிக்கிட்டுபேசிவிட்டேன் என நினைக்கிறேன் . அவரின் மலைநாடன் உடனான ஒலிப்பதிவு பற்றி பாராட்டினேன். என் மகன் மாமா என்றழைத்து விளையாண்டு கொண்டிருந்தான் அவரிடம்.
-----
அருள்குமார் ஒரேகல்லூரி என்பதால் கல்லூரியைப்பற்றி
பேசிவிட்டு அதிகம் எழுதாமல் இருப்பதற்கு காரணம் கேட்டுக்கொண்டேன். மாசிவக்குமார் அருள்குமாரைப் பாராட்டினார் நல்ல திறமையானவர் என்று.
பிரியன் எங்கே அன்புடனின் பரிசுக்கு எந்த புத்தகம் வேண்டும் என்று கடிதம் எழுதவில்லையே என்றார் ...நான் நீங்க அன்புடன் ஆளா என்று ஒரு கேள்வியைக் கேட்டு அவரை நோகடித்தேன்...அட நான் தாங்க அதிகம் அன்புடனில் இருந்து உங்களைத் தொடர்பு கொண்டது என்றார்.
---
ஐகராஸ் பிரகாஷிடம் பேச நினைத்தேன் மிஸ் பண்ணிவிட்டேன். அபிஅப்பாவும் சென்ஷியும் தொலைபேசியில் அழைத்து மற்றவர்களிடம் பேசிவிட்டு என்னிடம் கொஞ்சம் வாங்கி கட்டிக் கொண்டார்கள். வராமால் ஏமாற்றி விட்டார்கள். என்ன தான் இருந்தாலும் நம்ம மாயவர மீட்டிங் போல வராது என்று அப்புறம் எஸ்டிடீ போட்டு தனியா சமாதானப்படுத்திட்டேன்.
அதைப்பற்றி நிதானமா எழுதறேன்.
--
சோமியை நீங்கள் சொதி சோமி தானே என்று கேட்டு நிச்சயித்துக் கொண்டேன். உங்க பதிவு படிக்கிறேன் பின்னூட்டமிட நேரமில்லை என்று கொஞ்சம் பந்தா விட்டார்...என்ன என்றதும் பிபிசி க்கு என்னென்னவோ வேலை செய்கிறேன் என்று அடுக்கினார். என்ன செய்து என்ன... சொதி எழுதியது போல வருமா என்றேன் பாவம்.!!
அகிலன் அறிமுகப்படுத்திக்கொண்டார்.போட்டோவும் வீடியோவும் எடுத்துக்கொண்டிருக்கும்போது பாலபாரதி அக்கா இதையெல்லாம் பதிவுல போடமாட்டிங்களேன்னார் . அதெல்லாம் சந்திப்புக்கு வராத மங்கைக்காக நான் எடுத்துட்டு வந்தேனாக்கும்.
---
எல்லாவற்றுக்கும் நடுவில் என் மகன் பிரியனிடம் அவருடைய கேமாராவை வாங்கிக்கொண்டு நன்றாக விளையாண்டு கொண்டிருந்தான்.
டீ வருவதற்கு முன் யானைப்பசியில் பொன்ஸ் பேனாவை கடித்துக்கொண்டிருக்க நான் என்ன பசியா என்றதும் நகம் கடிக்க ஆரம்பித்தார். என் பையனுக்கு கொடுத்த பிஸ்கட்டில் ஒன்று எப்படி அவர்கைக்குப் போனது என்று தெரியும் முன் வயிற்றுக்குள்ளும் அனுப்பிவிட்டார். மொத்தத்தில் நிறைய பேரை நேரில் காணமுடிந்தது சந்திப்பின் சிறப்பு.

47 comments:

சென்ஷி said...

:))

மாயுரம் சந்திப்ப விட்டுட்டு மொக்க சந்திப்புக்கு இவ்ளோ பில்டப்பா? (சும்மா)...

ஆனாலும் உங்களை பேச விடாம விட்டவங்களுக்கு என் வாழ்த்துக்கள்

(சேம் ப்ளட்) :))

சென்ஷி

சென்ஷி said...

//அபிஅப்பாவும் சென்ஷியும் தொலைபேசியில் அழைத்து மற்றவர்களிடம் பேசிவிட்டு என்னிடம் கொஞ்சம் வாங்கி கட்டிக் கொண்டார்கள். வராமால் ஏமாற்றி விட்டார்கள். என்ன தான் இருந்தாலும் நம்ம மாயவர மீட்டிங் போல வராது என்று அப்புறம் எஸ்டிடீ போட்டு தனியா சமாதானப்படுத்திட்டேன்.//

என்ன கொடும சார் இது?

சென்ஷி

சென்ஷி said...

//டீ வருவதற்கு முன் யானைப்பசியில் பொன்ஸ் பேனாவை கடித்துக்கொண்டிருக்க நான் என்ன பசியா என்றதும் நகம் கடிக்க ஆரம்பித்தார். என் பையனுக்கு கொடுத்த பிஸ்கட்டில் ஒன்று எப்படி அவர்கைக்குப் போனது என்று தெரியும் முன் வயிற்றுக்குள்ளும் அனுப்பிவிட்டார்//

ஹி..ஹி..

உங்கள் அதிக நேரம் பேச விடலைன்னு இப்படில்லாமா கலாய்க்கறது :)

எங்கள் தானை தலைவியை பகிரங்கமாக கலாய்த்த அக்காவை எதிர்த்து இன்று விடியும் வரை டீ குடிக்கும் போராட்டம் நடைபெறும் என்பதை பாகச டெல்லி கிளை செயலாளர் அறிவிக்கிறார். டீ செலவு டெல்லி சகோதரிகளுடையது. :))

சென்ஷி

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சென்ஷீ வாப்பா வா...
நம்ம சந்திப்பு எழுதணுன்னா கொஞ்சம் நிதானமா எழுதணும் அதான் .என்ன ஒரு அழகான சந்திப்பு அது...இல்லையா?

Ayyanar Viswanath said...

வேகேசன் லாம் போதுமா? :)
வெல்கம் பேக் ..மாயவர சந்திப்பின் ஸ்டார் நீங்கதான்னு கேள்விப்பட்டோம்
எழுதுங்க அந்த சந்திப்பையும்..

- யெஸ்.பாலபாரதி said...

//பொன்ஸ் உஸ் உஸ் என்று வேறு சத்தம்போட்டா பயப்படாம என்ன செய்யறது? அப்புறம் கொடுக்கப்பட்ட நேரம் தவிர பேசாம நல்ல பிள்ளைகளா விவாதம் முடிந்ததும் கொஞ்சம் பேசிக்கிட்டோம். இருந்தும் சரியாக பேசமுடியாத வருத்தம் இருக்கு.//

எனக்கும் தான். இப்படியாகும்ன்னு நான் கனவுலையும் நெனைக்கலை. அஜண்டா ஏதும் கிடையாதுன்னு சொல்லி கவுத்துட்டாங்க! :((((

//நம்ம சந்திப்பு எழுதணுன்னா கொஞ்சம் நிதானமா எழுதணும் அதான் .என்ன ஒரு அழகான சந்திப்பு அது...இல்லையா//

உள்குத்து மாதிரி தெரியுதேக்கா..!

Unknown said...

சந்திப்பை, உங்கள் பார்வையில் விவரித்திருக்கிறீர்கள். நன்றாக இருந்தது.

/ இந்த நாய் வளர்க்கறது பத்தி எழுதணுது நீங்க தானேன்னு கப்பி கிட்ட கேட்டேன் நல்லாருந்ததுன்னா நான் தான்னு வச்சுக்கோங்கங்கறார் அவர் பதிவு நிறைய படிச்சிருந்தும் சட்டுன்னு ஒன்னு நியாபகம் வரலை. பேசாம அருட்பெருங்கோகிட்ட நீங்க எழுத ற எல்லாக்கவிதையும் நல்லாருக்குன்னு சொன்னமாதிரி சொல்லி இருக்கலாம்./

ஓ அதெல்லாம் ஒரு குத்துமதிப்பா சொன்னதுதானா? :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அய்யனார் விடுமுறை முடிந்தது ..போதும் போதும் என்கிற அளவு சுத்தியாச்சு...

மாயவர சந்திப்புல நான் ஸ்டாரா..சே சே...அது பல நட்சத்திரங்களின் மாநாடு..சீக்கிரமே எழுதறேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...
எனக்கும் தான். இப்படியாகும்ன்னு நான் கனவுலையும் நெனைக்கலை. அஜண்டா ஏதும் கிடையாதுன்னு சொல்லி கவுத்துட்டாங்க! :((((//


ஹ்ம்...மொதல்லயே நான் வரேன்னதும் மொக்கை சந்திப்புன்னு போட்டாங்க இருந்தும் அத பெரிசு படுத்தல நான்..எல்லாருடனும் பேச முடிந்தா சரின்னு இருந்துட்டேன்.


//நம்ம சந்திப்பு எழுதணுன்னா கொஞ்சம் நிதானமா எழுதணும் அதான் .என்ன ஒரு அழகான சந்திப்பு அது...இல்லையா//

உள்குத்து மாதிரி தெரியுதேக்கா..! //

இல்லவே இல்லை .

நான் ஒரு அப்பாவி வெளிப்படையாக மட்டுமே பேசும் ஒரு அப்பாவி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அருட்பெருங்கோ அப்படி எல்லாம் நினைக்காதீங்க..கப்பி பயலுக்கு (சே கொஞ்சமும் மரியாதை இல்லாம எழுதறது மனசுக்கு கஷ்டமா இருக்கு)
பின்னூட்டம் போட்டிருக்கேனா என்ன தெரியலை உங்களுக்கு கவிதையைப்
பாராட்டி தினமலரில் வந்ததுக்கு பாராட்டி பின்னூட்டமிட்டிருக்கிறேன்..
நிஜமா உங்க கவிதைகள் அருமையானவை..

அதுமட்டுமில்லை காதலைப்பற்றி யார் என்ன எழுதினாலும் அது அருமையானது தானே.

லக்ஷ்மி said...

என்ன இருந்தாலும்

//பொன்ஸ் உஸ் உஸ் என்று வேறு சத்தம்போட்டா பயப்படாம என்ன செய்யறது?//

இதுக்காக போயி

//என் பையனுக்கு கொடுத்த பிஸ்கட்டில் ஒன்று எப்படி அவர்கைக்குப் போனது என்று தெரியும் முன் வயிற்றுக்குள்ளும் அனுப்பிவிட்டார். //

இப்படி கேவலப்படுத்தியிருக்க வேண்டாம் நீங்க.

பொன்ஸ்~~Poorna said...

//என் பையனுக்கு கொடுத்த பிஸ்கட்டில் ஒன்று //
நீங்க பார்க்குறதுக்கு முன்னாடி இன்னும் ஒண்ணு சாப்பிடலாம்னு பார்த்தேன்.. சே.. ஜஸ்ட் மிஸ்ஸூ!

//சொதி எழுதியது போல வருமா என்றேன் //
யக்கோவ், சொதி 'எழுதியது' போலவா? நிசமாவே சொதி 'கேட்டீங்களா'? இல்லை, சும்மா அளக்குறீங்களா..? - சோமீஸ் ரசிகர் மன்றம் சார்பாக...

siva gnanamji(#18100882083107547329) said...

ஆமாங்க! பதிவர் பட்டறை ரொம்ப நேரம் எடுத்திடுச்சில்லெ? போகட்டும், நல்ல காரியம்தானெ!
நான்கூட 'வெட்டி'பாலாஜியுடன் பேச்னும்னு இருந்தேன்....மிஸ் பண்ணிட்டேன்....

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இல்ல லக்ஷ்மி நாங்க நல்ல பிள்ளைங்க இல்லையா உஸ் ன்னு சொன்னாலே அடங்கிடுவோம்..
அது மட்டுமில்ல நல்ல விஷயம்ங்கறதால் கேக்கனுங்கற ஆர்வமும் இருந்தது...ஆனா பார்த்தவுடனே பேசனும்ங்கற ஆசையையும் கொஞ்சம் அதான் அப்படி..

ஆனா என்ன நீங்க கேவலம் அது இதுன்னு சொல்லிட்டு பொன்ஸ் அப்படி எல்லாம் நினைக்க மாட்டாங்க..போன பதிவர் சந்திப்பு சென்னையில் நடந்ததே அதுல கொண்டு போன ஸ்வீட் பாக்கெட் முழுதும் எடுத்துட்டு போனது அவங்கதான்.இப்படியே போனா அவங்க யானையை மிஞ்சிடுவாங்க அதுக்கு தான் சொன்னேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ப்ளாக் எழுதி அப்படின்னு சொல்லியே பழகிட்டேனே ...அதான்...தொழிட்நுட்ப வல்லுனர் நீங்க..அதான் விழிப்போட இருக்கீங்க...ஆடியோ ப்ளாக் வந்துருக்கற காலத்துல இனி அப்படி எழுதின்னு சொல்லக்கூடாது..

ஆமாம் சொதி ஒலிப்பதிவு போட்ட மாதிரி வருமான்னு சொல்லனு ம் என்ன?

ரசிகர் மன்றத்துல எனக்கொரு சீட் போடுங்க..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாங்க சிவஞானம் ஜி...

கடையில் சும்மா துணி வாங்காம பாத்துக்கிட்டே இருந்தா கடையில் கொஞ்சம் கொஞ்சமா வெளிய அனுப்பற மாதிரி ஏசி ஆப் பண்ணி லைட் ஒன்னு ஒன்னா அனைச்சப்புறம்..கடைசியில் வெளிய நின்னு தானே பேசனும்..(சும்மா துரத்தினாங்கன்னு சொல்ல வரலை) :))

சோமி said...

முதுலட்ச்சுமியக்கா.....நான் பந்தாவெல்லாம் பண்ணல்லங்கோ.அடெஅ என்ன வேலை பண்ணுறன் எண்டு சொல்லி முடிகிறதுக்குள்ள உங்களுக்கு மொக்கைபோட முடியாதபடிக்கு நீங்கள் சரி, சோமி புத்தங்கள் பாக்கலாம் என்று கிளம்பிட்டியள்.

பாலபாரதியின் இடத்தில சந்திப்பு நடந்து அது மிகச்சிறந்த மொக்கைச் சந்திப்பாக அமையாதது எனக்கும் வருத்தம்தான்.

எனது ரசிக கண்மணிகளுக்கு நன்றி

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அய்யோ சோமி நான் தான் சொல்லிட்டேனே நீங்க பெரிய ஆள்..

உங்க வேலை என்ன வென்று சொல்லி முடிக்க முடியாத அளவு பெரியதாக இருந்தது..
கடையை மூடுவதற்குள் ஒரு பார்வை பார்த்துக்கொண்டே பேசலாம் என்று தான் சொன்னேன்....

அப்பாடி உங்கள் மிகப்பெரிய வேலைக்களுக்கிடையில் நீங்கள் வந்து படித்து பின்னூட்டமிட நான் ரசிகர்மன்றத்தில் வேறு சேர்ந்திருக்கிறேனாக்கும்.

லக்ஷ்மி said...

பொன்ஸ், பொன்ஸ், பொன்ஸ் - எங்கிருந்தாலும் உடனே இங்கே வரவும்.

//பொன்ஸ் அப்படி எல்லாம் நினைக்க மாட்டாங்க..// அப்படின்ற தைரியத்துல
//இப்படியே போனா அவங்க யானையை மிஞ்சிடுவாங்க அதுக்கு தான் சொன்னேன்.// இப்படியெல்லாம் பேசறாங்களே... கேக்கறதுக்கு ஆளில்லையா?

பின்குறிப்பு - வாரத்துக்கு நாலு பேருக்குள்ளயாவது மூட்டி விடறதுன்னு குலதெய்வத்துக்கு ஒரு வேண்டுதல், அதுதான் இப்படி. ஹிஹி....

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அலோ !! லக்ஷ்மி பத்து வருஷமா குடும்பத்துல எத்தனை அனுபவப்பட்டுருக்கோம்..அப்படி எல்லாம் மூட்டி விட முடியாது..
இங்கே எழுதி இருக்கும் எல்லாமே நேரடியாக பொன்ஸிடம் சொன்னதே அன்றீ வேறில்லை..வேறில்லை..
எனவே உங்கள் வேலை பலிக்காது..
இந்த அப்பாவி யை மாட்டி விட எண்ணுவது மிக தவறு.
:))

பொன்ஸ்~~Poorna said...

//இங்கே எழுதி இருக்கும் எல்லாமே நேரடியாக பொன்ஸிடம் சொன்னதே அன்றீ வேறில்லை..வேறில்லை..//
இதெல்லாம் சரிதான்.. ஆமாம், அது யாருங்க அப்பாவி? கூட்டத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் பரிதாபமாக இங்குமங்கும் ஓடிக் கொண்டிருந்த உங்க மகன் தானே?

ஜி said...

//அப்புறம் கொடுக்கப்பட்ட நேரம் தவிர பேசாம நல்ல பிள்ளைகளா விவாதம் முடிந்ததும் கொஞ்சம் பேசிக்கிட்டோம். இருந்தும் சரியாக பேசமுடியாத வருத்தம் இருக்கு.//

என்னது உங்கள பேச விடலையா?? என்ன கொடுமை சரவணன்??

சரிக்கா.. சீக்கிரம் நம்ம மீட் பத்தி ஒரு பதிவு போடுங்க :))

லக்ஷ்மி said...

//பரிதாபமாக இங்குமங்கும் ஓடிக் கொண்டிருந்த உங்க மகன் தானே?// பொன்ஸ், சரியான உள்குத்து.

ஸ்ஸப்பா... என்னாதிது, நாம நினைக்கிற அளவு Reaction எதுமே ரெண்டு சைடிலிருந்து வர மாட்டேங்குதே.....

மங்கை said...

உஸ் உஸ் னு சொன்னாங்களா... இது எல்லாம் ஆண்டவனுக்கே அடுக்காது.. பொன்ஸ், எங்க தலைவியையே பேச விடலையா நீங்க...அன்னைக்கு நைட் அவங்களுக்கு காய்ச்சல் வந்துடுச்சு தெரியுமா

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பொன்ஸ் ,அப்பாவியா என் மகனா நீங்க வேற எல்லார் போனையும்...கேமராவையும் ஒரு கை பார்த்த அவனா அப்பாவி...நீங்க வேற.. நீங்க ரொம்ப சீரியஸா பேசிட்டு இருந்ததால உங்களுக்கு தெரியல...கொஞ்சம் விட்டா பாவம் பிரியனை பாடாய் படுத்தி இருப்பான்.

_--------

லக்ஷ்மி அப்படி ப்பட்ட ரியாக்ஷன் வரவே வராது ...ரொம்ப ஆசைப்படாதீங்க...நாங்கள்ளாம் யாரு?ஆனாலும் இது ரொம்ப ஓவர் தான்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஜி அந்த கொடுமைய ஏன் கேக்கறீங்க...நம்ம சந்திப்பு கல்லூரின்னா..அது ஸ்கூல்...வேறென்ன சொல்ல...

சீக்கிரமே போடறேன்...லக்கேஜை வீட்டுல எறக்கி வச்ச கையோட நான் பதிவு போட்டிருக்கேனாக்கும்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மங்கை எனக்கு காய்ச்சல் வந்தது எப்படி உங்களுக்கு தெரியும்....
:) பேசலைன்னா எப்படி உயிர் வாழறது அதான்.

Anonymous said...

ஆக்சுவலா நான் கூட உங்களைப் பார்த்துப் பேசணுமின்னு நினைச்சேன்.. மிஸ் பண்ணிட்டேன்..

ஆனந்த விகடன்ல கவிதை பிரசுரம் ஆக அட்வான்ஸ் வாழ்த்துகள் :-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ப்ரகாஷ் உங்களுக்கு நன்றி சொல்லனும் என்பதற்காகவே பேச நினைத்தேன்..சிலருடைய பதிவுகளில் உங்கள் பின்னூட்டங்கள் அப்படி இருந்தது.

வல்லிசிம்ஹன் said...

மொக்கைப் பதிவே புரியலை.

இதில மொக்கைப் பதிவர் சந்திப்பு வேறயா.:))))))

பதிவர் பட்டறைல புரியறமாதிரி ஏதாவது சொன்னாங்களா.

எனக்குப் புரியும்னா சொல்லுங்க.:)))

siva gnanamji(#18100882083107547329) said...

//நம்ம சந்திப்பு கல்லூரின்னா....
அது ஸ்கூல்.......//

அப்ப சென்னை சந்திப்புதான் அஸ்திவாரம்;அதன்மீது எழும்பிய கட்டடம் அந்த சந்திப்பு என்று சொல்றீங்களா?

சரியான உள்குத்துதான்.....

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாங்க வல்லி...பதிவர் பட்டறை ஆகஸ்ட் மாதம் மெட்ராஸ் யுனிவர்ஸிட்டி கூட சேர்ந்து பண்ணப்போறாங்க...அதுல கொஞ்சம் தெரிஞ்சவங்களுக்கு இன்னம் டெக்னிக்கல் இம்ப்ரூவ்மெண்ட் சொல்லித்தருவாங்க..ஒன்னுமே ப்ளாக் பத்தி தெரியாதவங்களுக்கு ப்ளாக் ஆரம்பிக்கறதுலேர்ந்து சொல்லித்தருவாங்களாம்...அதுக்கு என்ன என்ன செய்யணும்ன்னு ஒரு யோசனை க்கூட்டம் தான்நடந்தது.

இராம்/Raam said...

//அப்புறம் கொடுக்கப்பட்ட நேரம் தவிர பேசாம நல்ல பிள்ளைகளா விவாதம் முடிந்ததும் கொஞ்சம் பேசிக்கிட்டோம். இருந்தும் சரியாக பேசமுடியாத வருத்தம் இருக்கு.//


யக்கோவ்,

நீங்க சென்னை சந்திப்பிலே பேசிறதுக்காக மாயவரத்திலே சரியா கூட பேசாமே???? போனீங்களே!!!

இப்பிடி ஒங்களையெல்லாம் வருத்தப்பட வைச்சிட்டாங்களே??? :(((

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சிவ்ஜி என்ன இது நீங்களுமா?
அப்பாவி அப்பாவி ன்னு சொல்லிட்டே இருக்கேன் எல்லாரும் உள்குத்து வெளிக்குத்துன்னு சொல்லிட்டு..

அப்படி பார்த்தா சென்னையில் துளசியோட போட்ட என் முதல் சந்திப்பு என்ன கலகலன்னு இருந்தது அது தாங்க இன்னைக்கு நான் தைரியமா சென்னை சந்திப்ப்புக்கு வரக்காரணம்.

மங்கை said...

//வல்லிசிம்ஹன் said...
மொக்கைப் பதிவே புரியலை.

இதில மொக்கைப் பதிவர் சந்திப்பு வேறயா.:))))))

பதிவர் பட்டறைல புரியறமாதிரி ஏதாவது சொன்னாங்களா.

எனக்குப் புரியும்னா சொல்லுங்க.:)))//

ஆஹா..வல்லிம்மா இது தான் சூப்பர்..
இத தனி பதிவா போடனும்...:-)))))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இராம்...என்ன செய்ய?

இல்லப்பா கொஞ்சம் மாயவரத்துல குறைச்சு பேசினதுல தொண்டை கெட்டுப்போகாம இருந்தது இல்லயா இல்லன்னா கொடுத்த ரெண்டு நிமிடத்துல கர்ண கடூரமா பேசினா என்ன ஆகறது...ஏற்கனவே குரல் சுத்தம்.

இராம்/Raam said...

/கொஞ்சம் மாயவரத்துல குறைச்சு பேசினதுல தொண்டை கெட்டுப்போகாம இருந்தத//

அதுசரி.... :)

நீங்க பேசாமே அமைதியா இருக்கீங்கன்னு மங்கை போன் பண்ணுறோப்ப சொன்னதுக்கு அவங்க அப்பிடியா உண்மையா?'னு நூறு தடவை கேட்டாங்க?? :))

இதுக்கு மேலே என்ன சாட்சி வேணும்??? :))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வேற யாரு வேணும் சாட்சிக்கு நானே தான் சொல்லறேனே சிலர் மூச்சு உள் இழுத்து , விட்டு உயிர் வாழ்வாங்க ..நான் பேசி பேசி உயிர் வாழறவ...போதுமா. :)

கோபிநாத் said...

\\எனக்கு தனியாக அடுத்த முறை ஒரு நாள் ஒதுக்கும் படி கேட்டுக்கொண்டு அவர்களிடம் பேச ஆசை\\\


ஒரு நாள் போதுமா? ;)))))

கோபிநாத் said...

\\முத்துலெட்சுமி said...
சென்ஷீ வாப்பா வா...
நம்ம சந்திப்பு எழுதணுன்னா கொஞ்சம் நிதானமா எழுதணும் அதான் .என்ன ஒரு அழகான சந்திப்பு அது...இல்லையா? \\

ரொம்ப மகிழ்ச்சியாக இருந்த நாளுக்கா அது ;)))

நிதானமாக அழகாக எழுதுங்க ;))

சோமி said...

அக்கா அநியாயத்துக்கு அழ விடாதிங்கக்க்க நான் சின்னப் பெடியனக்க்கா....பொன்ஸ் அக்கா மாதிரி பெரியாக்களுக்கு மத்தியில எங்கட பேரும் எடுபடுரதுக்காக சும்மா மொக்கை போட்டா அதையே விடாமப் பிடிகிறியள்.இனி தவறாம உங்களுக்கு பின்னூட்டம் போடுவன் என்னைய விட்டுங்கக்கா....நாம விரைவில் டெல்லியில சந்திப்பம்...

நம்ம பிரதிபா அன்ரி ராஜ்பவனுக்கு வரட்டும் அப்புறமேட்டு நாம டெல்லிக்கு வாறம்....அன்னை சோனியா மாதஜிக்கு ஜேய்........

துளசி கோபால் said...

போற போக்கைப் பார்த்தா..........

விடுமுறை இப்போதைக்கு முடியுமுன்னு தோணலை:-)))))

துளசி 'சந்திப்பு' மாதிரி வராதுல்லே? :-)))))))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கோபிநாத் நீங்க அதிகம் பேசலன்னாலும் சந்தோஷமா சிரிச்சுக்கிட்டே எல்லாரும் பேசறத கவனிச்சிட்டு இருந்தீங்க..பாவம் அலைய விட்ட அபி அப்பாவால அப்படி இருந்தீங்களோ என்னவோ?
நம்ம மீட்டிங் பத்தி எழுதறேன் கண்டிப்பா.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆகா ரெண்டாவது பின்னூட்டம் ஃப்ரம் சோமி...அழாதீங்க சோமி...:)
நேரம் கிடைக்கையில் இதே போல வந்து பதிவுக்கு எட்டிப்பாருங்கள்..பின்னூட்டம் போட்டே ஆக வேண்டும் என்ற கட்டாயமெல்லாம் இல்லை..டில்லி வந்தால் தகவல் தெரிவிக்கவும்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

துளசி விடுமுறை முடிந்தது..போதும் போதும் என்கிற அளவு சுத்தியாயிற்று.
இனி இதே டில்லிதான்.

ஆமாமா அந்த சந்திப்பு க்கு ஈடு இணை இல்லை... பதிவை படிக்கமட்டும் செய்யும்
அவ்வளவு அனானிக்கூட்டம் வேறு எந்த பதிவர் சந்திப்புக்கு வந்தாங்க...சொல்லுங்க..

கப்பி | Kappi said...

//இதே மாதிரி எல்லாரும் சொல்லறாங்க என்று கொஞ்சம் பொறாமையா??(சும்மா) சொன்னார். //

அது அன்பால சொன்னது :))

வோட்டு போட்டதுக்கு பெட்டி இன்னும் வந்து சேரலையே? :))

சென்ஷி said...

//siva gnanamji(#18100882083107547329) said...
//நம்ம சந்திப்பு கல்லூரின்னா....
அது ஸ்கூல்.......//

அப்ப சென்னை சந்திப்புதான் அஸ்திவாரம்;அதன்மீது எழும்பிய கட்டடம் அந்த சந்திப்பு என்று சொல்றீங்களா?

சரியான உள்குத்துதான்.....//

அட ஆண்டவா,
அக்கா ஒரே சமயத்துல ரெண்டு மீட்டிங்ல கலந்துக்கிட்டா இதான் பிரசினை.
ஆனாலும் சென்னையில உங்க தனித்தன்மைய பேசிக்காட்டியிருந்தா இந்த மாதிரில்லாம் பேச்சு வருமா :))

ஆனாலும் தமிழ்நதிய பாக்கப்போறேன்னு நீங்க அடிச்ச அலம்பல். சூப்பர்..

நினைச்சாலே சிரிப்புதான் வந்தது.

சென்ஷி