விடுமுறை வேண்டும் . ஏதோ ஒருவாரம் இரண்டு வாரம் இல்லீங்க...ஒன்றரை மாதம் முழுதாக வேணும். பதிவு ஆரம்பித்த
இந்த ஆறுமாதத்தில் தினசரி வாழ்க்கையில் ஒன்றாக ஆகிவிட்ட தமிழ்மணம் மற்றும் தோழமைகளை விட்டு பிரிவது மிகவும் கடினமான ஒன்றாகத் தோன்றுகிறது. இருந்தும் வேறு வழியில்லை .
தையல்காரங்களைப் பார்த்து இருக்கீங்களா ? பேசிக்கிட்டே இருப்போம் ...இங்க இப்படி பிடிச்சு இருக்கனும் , சரியில்லன்னு உடையில் தான் இருக்கும் கண். செருப்பு தைக்கிறவர் காலில் தான் கண்ணா இருப்பார். அது மாதிரி எழுத வந்ததும் பார்ப்பது எல்லாமே பதிவு மற்றும் எழுத்து இவற்றின் கண்ணோட்டத்தில் தான் இருக்கிறது. அதனால் இந்த விடுமுறையில் நிறைய படித்து , பார்த்து எழுத விஷயம் சேர்த்துக்கொண்டு மீண்டும் வருகிறேன். எல்லாரும் சிறுமுயற்சி பக்கத்தை மறந்துவிடாமல் இருங்கள்.
பி.கு.
அபி அப்பா மற்றும் சென்ஷி எனக்காக நல்ல பதிவுகளில் ப்ராக் ஸி குடுங்க சரியா?
29 comments:
விடுமுறையை இனிதாய் கழித்து வெற்றிகரமாய் திரும்பிவர வாழ்த்துக்கள்...
என்சாய்ய்ய்ய்ய்ய்ய்ய்....
உங்க விடுமுறையை நல்ல படியாக கழிச்சுட்டு வாங்க.. இங்கே நாங்க காத்திருக்கோம். :-)
ஏப்பா, இன்டர்நெட் இல்லாத காடு எதுக்கும் போறியா?... இப்பல்லாம் குக்கிராமத்தில கூட இன்டர்நெட் வச்சிருக்காங்கய்யா.. இந்தியான்னா என்ன ஆப்பிரிக்கக் காடுன்னு நினச்சிட்டியளோ?
நன்றி பங்காளி...நன்றி மை பிரண்ட் இதுக்குத்தான் நட்பு வேணுங்கறது...பாருங்க வெற்றியோடன்னு ஒருத்தர்..காத்திருக்கிறோம்ன்னு ஒருத்தர் சொல்லறீங்களே...
நன்றி அனானி அப்படியும் என்னோட பதிவ ஒரு நெட் செண்டர்லேர்ந்து எழுதக்கூடாதான்னு கேக்கறீங்க?...விளையாட்டுக்குத்தானே கேட்டீங்க..
குடும்பமா சுத்திக்கிட்டு இருப்போம் நடுவில் படிக்க வேணா செய்யலாம்...ஆனா பதிவெழுத முடியாது...எப்பவாச்சும் முடிஞ்சா பின்னூட்டம் ஆங்கிலத்தில் போடுவேன்.
நான் எனக்கே ப்ராக்ஸிக்கு ஆள் தேடுரேன்! சரி முடிஞ்ச அளவு பாத்துக்க நம்ம பாசமலர்கள் இருக்காங்க! 'பார்ப்போம்':-))
//பங்காளி... said...
விடுமுறையை இனிதாய் கழித்து வெற்றிகரமாய் திரும்பிவர வாழ்த்துக்கள்...
என்சாய்ய்ய்ய்ய்ய்ய்ய்....//
//.:: மை ஃபிரண்ட் ::. said...
உங்க விடுமுறையை நல்ல படியாக கழிச்சுட்டு வாங்க.. இங்கே நாங்க காத்திருக்கோம். :-)//
//Anonymous said...
ஏப்பா, இன்டர்நெட் இல்லாத காடு எதுக்கும் போறியா?... இப்பல்லாம் குக்கிராமத்தில கூட இன்டர்நெட் வச்சிருக்காங்கய்யா.. இந்தியான்னா என்ன ஆப்பிரிக்கக் காடுன்னு நினச்சிட்டியளோ?//
இது எல்லாத்துக்கும் சேத்து ரிப்பீட்டேய்ய்ய்... :))
//அபி அப்பா மற்றும் சென்ஷி எனக்காக நல்ல பதிவுகளில் ப்ராக் ஸி குடுங்க சரியா? //
கண்டிப்பாக... :))
சென்ஷி
@அபி அப்பா said...
//நான் எனக்கே ப்ராக்ஸிக்கு ஆள் தேடுரேன்! சரி முடிஞ்ச அளவு பாத்துக்க நம்ம பாசமலர்கள் இருக்காங்க! 'பார்ப்போம்':-))
//
அபி அப்பா, நோ வொர்ரீஸ்.. அதுக்குதான் நாங்க இருக்கோமில்ல.. ஆட்டத்துல உங்க பேரை அனானியா போட்டுடுறோம். சரியா?
[ஆனால், நானும் இன்னும் சில நாட்கள்ல ப்ளாக்ல இருந்து லீவு எடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கு! கட்டாயம் எடுக்கணுமா இல்லையான்னு அடுத்த வாரம்தான் சொல்ல முடியும்] :-(
ஓ... டாட்டா பாய் அக்கா :))
//'பார்ப்போம்':-))//
அண்ணே,
கண்டிப்பாக பார்க்கலாம் :)))
அபிஅப்பா அதான் தெரியுமே ஒருத்தர் ப்ராக்ஸி குடுக்க ஆரம்பித்தால் தன்னால அவங்க வரலன்ன்னா இன்னொருத்தர்குடுத்துடுவீங்களே உங்க
குடும்பத்துல தான்...அநத நம்ப்பிக்கையில் தானே கேட்கிறேன்..
---------------
சென்ஷி பின்னாடி வந்தா ஒரு நன்மை ரிப்பீட்டேய் சொல்லிடலாம்...
என்னா கோவை போறீங்களா சொல்லவேஏஏஏ இல்ல.
//சென்ஷி பின்னாடி வந்தா ஒரு நன்மை ரிப்பீட்டேய் சொல்லிடலாம்...
என்னா கோவை போறீங்களா சொல்லவேஏஏஏ இல்ல.//
எனக்கும் தெரியல. போவேனான்னு
:(
ஆணி அதிகம்.. :(
மை பிரண்ட் ப்ளாக்ல லீவு எடுக்கறதுன்னா நீங்களும் கவலைப்படறீங்க இல்லயா...?
டோண்ட் வொர்ரி ரொம்ப அவசியம்ன்னா சீக்கிரம் முடிச்சுட்டு வந்துடுங்க பின்னூட்ட க்குடும்பத்துக்கான வேலை எல்லாம் பாக்கி இருக்கு இல்ல.
டாடா பை இராம்...பார்த்துக்கோங்க..
------
சென்ஷி போய்ட்டுவாங்க எப்படித்தான் சென்ஷி வலையுலக வரலாற்றுல இடம்பிடிக்கறது அப்பறம்.
//------
சென்ஷி போய்ட்டுவாங்க எப்படித்தான் சென்ஷி வலையுலக வரலாற்றுல இடம்பிடிக்கறது அப்பறம். //
அது சரி... :))
இதுல உள்குத்து ஏதும் இல்லியே :))
சென்ஷி
@முத்துலெட்சுமி:
//மை பிரண்ட் ப்ளாக்ல லீவு எடுக்கறதுன்னா நீங்களும் கவலைப்படறீங்க இல்லயா...?//
போறதுன்னா முழுசா போகலை.. இங்கே நெட்லதான் உலாவிட்டு இருப்பேன்.. ஆனா ப்ளாக் படிகக்வும் எழுதவும் டைம் கிடைக்காதோ என்கிற அச்சம்தான்.. முடிந்த வரை சில பதிவுகளை எழுதிவச்சிட்டு காணாமல் போகலாம்ன்னு நினைக்கிறேன். அப்போதான் நான் இங்கே இல்லைன்னாலும் நான் இங்கே இருக்கிற மாதிரி இருக்கும். :-P எனக்காக பாசக்கார குடும்பத்தினர் எல்லா ப்ளாக்லேயும் போய் பின்னூட்டம் போட்டுடுவாங்க.. அதுக்கு பிரச்சனை இல்லை. :-D அதானே! ;-)
//டோண்ட் வொர்ரி ரொம்ப அவசியம்ன்னா சீக்கிரம் முடிச்சுட்டு வந்துடுங்க பின்னூட்ட க்குடும்பத்துக்கான வேலை எல்லாம் பாக்கி இருக்கு இல்ல. //
கண்டிப்பா சீக்கிரம் முடிச்சுட்டு வரணும்.. மத்தவங்க இல்லைன்னா நமக்கு பொருப்பு அதிகம் ஆயிடுமே.. ஆங்காங்கே போய் பின்னூட்டம் போடனுமே.. :-)
\\அபி அப்பா said...
நான் எனக்கே ப்ராக்ஸிக்கு ஆள் தேடுரேன்! சரி முடிஞ்ச அளவு பாத்துக்க நம்ம பாசமலர்கள் இருக்காங்க! 'பார்ப்போம்':-))\\
அதான் அபி அப்பாவே சொல்லிட்டாரே...."பார்ப்போம்"
என்ஜாய் முத்து லஷ்மி.
பதிவுலகத்துல யாரு யாரு எப்படின்னு நல்லாவே ஸ்டடி பண்ணி வச்சிருக்கீங்க.[பிராக்ஸி மேட்டர்தான்]
ஹ்ம்ம்ம்..அக்கா நல்ல என்ஜாய் பண்ணீட்டு வாங்க...நம்ம ஊர்ல எல்லாரையும் கேட்டேன்னு சொல்லுங்க
சோழ சாம்ராஜ்யம் உங்களை வரவேற்க காத்துக் கொண்டு இருக்கிறது.
அங்குட்டு உங்களை கண்டாலும் காணலாம். எதுக்கும் நாகைக்கு வர ஒரு தேதி ஒதுக்கி வச்சுக்கோங்க... ;-)
@delphine நன்றிங்க...
--------------------
@ சென்ஷி ,
உள்குத்து வெளிக்குத்து எல்லாம் இருக்கு அதுல..வெறும் பின்னூட்டம் மட்டும் போட்டு ஓட்டறீங்க அதான் சொன்னேன்...வரலாற்றில் இடம்பிடிக்க எதாச்சும் செய்யணும் இல்லயா..?
--------------------
@கோபி
ஆமாமா
அண்ணன்பேச்சுக்கு(அபிஅப்பா) மறுப்பு ஏது ? என்ன சரியா ... :)
@ கண்மணி,
கண்மணி அதானே ஸ்டடி பண்றது தானே நம்ம வேலை...அப்பறம் எப்படி எழுதவரும்?
-------------
@அவந்தி கண்டிப்பா சொல்றேன்டா
---------------
@நாகை சிவா எங்க மாநாடு...? போட்டுறலாம் அதுக்கென்ன.
நல்ல படியா, பத்திரமா, சந்தோஷமா, நிம்மதியா, நல்ல பொண்ணா போயிட்டு வாங்க..:-)..
சந்தோஷமா போய்வாங்க முத்துலெட்சுமி. வந்து விலாவரியா எழுதுங்க; பார்த்ததை, கேட்டதை, சிந்திச்சதை. நாங்க எங்கப் போயிரப் போறோம்? இங்கே தான் இருப்போம்.
எழுதறதுதான் இருக்கவே இருக்கு. நீங்கபாட்டுக்கு நல்லா விடுமுறையை
அனுபவிச்சுட்டு 'மேட்டர் தேத்திக்கிட்டு' வாங்க. அப்பப்ப இப்படி இருக்கணும்.
இல்லேன்னா 'வித்ட்ராயல் சிம்டம்ஸ்' வந்து கஷ்டபபட வேண்டி இருக்கும்:-)
ஒருச் சின்னத் துறவு:-)))))
ஊர்லே எல்லாரையும் கேட்டதாச் சொல்லுங்க.
பத்திரம். குழந்தைகளுக்கு அன்பு.
மங்கை , நல்ல படியா, பத்திரமா, சந்தோஷமா, நிம்மதியா,இதெல்லாம் சரி அது என்ன நல்ல பொண்ணா போயிட்டு வாங்க..என்ன வோ போங்க...சொல்றீங்க..கேட்டுக்கறேன்.
--------------------
காட்டாறு ரொம்ப நன்றிப்பா...இப்ப தைரியமா இருக்கு யாரும் மறக்க மாட்டீங்கள்ள..அதுக்குத்தான் சொல்லிக்கிட்டுப் போறது.
--------
துளசி சரியாச் சொன்னீங்க...மேட்டர் தேத்தத்தான் சுற்றுப்பயணமே அப்படிங்கற எண்ணம் தான் மனசுல...
:)
வருஷம் தவறாம போறது தான் ஆன இந்த தடவை தான் இப்படி தோணுது.
எஞ்சாய்!
மாதினியின் பாடல் அரங்கேறியது. போட்டி ஆரம்பம் :)
இங்கே க்ளிக்கி பார்க்கவும்.
விடுமுறை முடிஞ்சிடிச்சா?? இல்ல இன்னும் சுத்திட்டு இருக்கீங்களா??
கண்மணி அக்கா பதிவுலையும் காயத்ரி பதிவுலையும் உங்களதான் டார்கெட் பண்ணிருக்காங்க :))
படிச்சேன் ஜி பின்னூட்டம் போட்டிருக்கேன் அங்கயும்...விடுமுறை முடிந்தது...வந்தாச்சு ஃபார்முக்கு...
சென்னைப்பதிவர் சந்திப்பு பதிவு ஒன்னு செட்டச்சு இன்னைக்கு..
மெதுவா நம்ம சந்திப்பு பத்தி என்னோட பதிவும் போடறேன்.
Post a Comment