October 3, 2007

அமிர்தசரஸ் ஸ்பெஷல்- 1(லஸ்ஸி,குல்ச்சா,தாபா)

போனவாரக்கடைசியில் அமிர்தரஸில் இருந்தேன். கொஞ்ச நாளாவே எதுவும் எழுத தோன்றாமல் இருந்தேன்.. போகும் முன்னரே நண்பர்கள் அப்ப உங்களுக்கு எழுத விசயம் கிடைச்சிடுச்சு என்று கிண்டலடிக்க ஆரம்பித்தார்கள். அதான் வந்தவுடன் ஒரு பதிவு போடறேன்.



193 வருசமா இருக்காம்நாங்க லஸ்ஸிவாங்கி குடிச்ச ஞான்சந்த் ஹலுவாயி கடை .. (93 ஐ தான் ஆட்டோக்காரர் சொல்லி இருப்பாரோ நம்ம இந்தி அறிவுக்கு அப்படி கேட்டிருக்குமோன்னும் ஒரு சந்தேகம்.) சின்ன எவர்சில்வர் பானையில் மோர் கடையற மிசின் பொருத்தி இருக்காங்க.. தட்டு தட்டா அலமாரியில் தயிர் அடுக்கி வச்சிருக்காங்க.தயிரோட மேல் ஆடையை தனியா எடுத்து வச்சிட்டு தயிரை உள்ள போட்டு ஐஸ்கட்டி போட்டு கடைஞ்சு பைப் பைத் திறந்துவிட்டு பெரிய்ய்ய்ய டம்ளரில் ஊத்திவைக்கிறான் சின்ன பையன்.

கடை ஓனர் ஒரு கிண்ணத்துல இருந்து வெண்ணை ஒரு உருண்டையும் தயிர் ஆடை கொஞ்சமும் போட்டு "கேவ்டா எசென்ஸ்" ( அது வாசனைக்காம் என்ன எஸென்ஸென்று தெரியல) ஊத்தி கொடுத்தார். முழு டம்ளரும் அந்த ஊருக்காரங்க அனாயாசமா குடிக்கறாங்க.

இது காலையில் இருந்து காலியான தயிர் தட்டுக்கள் மதியத்துக்குள். இன்னமும் அலமாரியில் ஒரு தட்டுக்கும் இன்னோரு தட்டுக்கும் நடுவில் இரண்டு கட்டை வைத்து (ஒட்டிக்காமல் இருக்க) அடுக்கடுக்காக அடுக்கி வைத்திருந்தார்கள்.
தயிரும் ஒரு கிண்ணம் நிறைக்க வாங்கி சாப்பிடறாங்க.நல்ல கெட்டித்தயிர் அதனால் தான் அந்த ஊரு காரங்க அப்படி கொழுக்கு மொழுக்குன்னு இருக்காங்க போல.



அப்பறம் குல்ச்சாஹட் ராணி பாக் தெரு. இதுவும் ஒரு பேமஸான கடையாம். சின்ன கடை தான்.
இதுல சப்பாத்திக்குள்ள உருளைக்கிழங்கை வச்சு தந்தூரி அடுப்பில் போட்டு எடுக்கறாங்க. ஒரு பட்டர் சதுரத்தை மேலே வச்சுத்தராங்க வித் சென்னா மசாலா. எதோ இண்டியன் பிட்ஸா மாத்ரி இருக்கு.



கேசர்க்கா தாபா இந்த ஹோட்டல் 1916 ல் இருந்து இருக்காம். அந்த ரோட்டுக்குள்ள மத்த நாளில் கால் வைக்க இடம் இருக்காதாம். ஞாயிறு சாயங்காலம் என்பதால் பரவாயில்லை என்றார் ஆட்டோக்காரர். ஆனால் அதுவே ஒரு திரில்லிங் அனுபவம் தான் மிக சின்ன சின்ன சந்துபொந்துகளில் திறமையாக ஓட்டும் திறனிருந்தால் மட்டுமே முடியும். ஒலிப்பான் உபயோகிக்காமல் யாரும் ஓட்டுவதே இல்லை . அதிவேகம் , இடித்தாலும் யாரும் சண்டை போட்டு பார்க்கவில்லை நாங்கள். காற்றில் மாசு அதிகம்.
கடையின் சமையலறை தரையைப் பார்த்தால் சிலர் சாப்பிட மறுக்கக்கூடும்.
தரை முழுதும் ஈரம் சதசத என்றிருக்கிறது. ரொட்டி செய்பவர்கள் பெரிய மேடைகள் அமைத்து அதன் மேல் அமர்ந்து செய்கிறார்கள் அதனால் பரவாயில்லை. சின்ன சின்ன கவர்களில் தால் விற்கிறார்கள்.. வீட்டில் ரொட்டி செய்து கொண்டு தால் கடையில் வாங்கிக் கொள்வார்கள் போல. எங்கெங்கிருந்தோ இந்த கடையின் பெயரை விசாரித்து வருகிறார்கள்.



பராத்தா , ஸ்டஃப்டு பராத்தா
கொஞ்சம் தயிரில் பூந்தி போட்ட ராய்தா , முழூஉளுந்து போட்ட குழம்பு (தால் மக்கனி) சென்னா மசாலா வெங்காயம் ம் ஷாகி பனீர் இது நாங்கள் டேஸ்ட் செய்த ஐயிட்டங்கள். வீடியோ எடுக்க சமையலறை உள்ளே போன எங்களுக்கு ஒரே மரியாதை நல்லா போஸ் கொடுத்தாங்க எல்லாரும்.

45 comments:

துளசி கோபால் said...

இப்பத்தான் பதிவு பதிவா இருக்கு.
நம்ம டிபார்ட்மெண்ட் ஆச்சே:-)

அந்தக் கெவ்டா எஸ்ஸென்ஸ் ஒரு வகை தாழம்பூ வாசனையாம்.

ச்சென்னையில் அந்தக் காலத்தில் காசினோ தியேட்டர்( இப்ப இருக்கா?) எதிரில் ஒரு கடையில் லஸ்ஸி சூப்பர். அங்கெ பன்னீர் ஊத்திக்கொடுப்பாங்க. அப்படியே ரோஜா வாசனை ஆளைத் தூக்கும்.

அவ்வளவு தூரம் போனீங்களே, கொஞ்சம் பொற்கோயிலுக்குள்ளே எட்டிப் பார்த்துருக்கலாமுல்லெ?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாங்க குருவே... என்ன அப்படி கேட்டுட்டீங்க... உங்களமாதிரி நானும் ஒன்னு ரெண்டுன்னு பதிவு தலைப்பில் சேர்த்திருக்கேனே பாக்கலயா...
பொற்கோயில் ..வாஹா பார்டர்.. ஜாலியன் வாலாபாக் , ராம் தீர்த் ன்னு வரிசையா பதிவு போட்டு தாக்கறதா ஐடியா...எனக்கும் மறக்காம இருக்கும்ல எழுதிவச்சிக்கிட்டா... :)

துளசி கோபால் said...

குல்ச்சா தின்னும் அவசரத்தில் 'ஒன்'னைக் கண்டுக்காம விட்டுட்டேன்(-:

MyFriend said...

என்னமோ சாப்பிடுற ஐட்டமா இருக்கேன்னு வந்து பார்த்தா :-((( ஆயிட்டேன்..

எல்லாத்துலேயும் தயிர், பால், மோர், நெய்ன்னு போட்டிருக்காங்களே. அப்புறம் எப்படி சாப்பிடுறதாம்??

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மை பிரண்டு கவலைப்படாம சாப்பிடுங்க... நாங்க அப்படித்தான் சாப்பிட்டோம்... தினமும் சாப்பிட்டாத்தான் தப்பு... ஒரு நாள் சுத்திப்பாக்கப்போனப்போ சாப்பிட்டா குண்டால்லாம் ஆக மாட்டீங்க... :)

மங்களூர் சிவா said...

//
நல்ல கெட்டித்தயிர் அதனால் தான் அந்த ஊரு காரங்க அப்படி கொழுக்கு மொழுக்குன்னு இருக்காங்க போல.
//
நல்ல தகவல்

அந்த ஊர்ல பொண்ணு பாத்திடலாம் போலிருக்கே!?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மங்களூர்சிவா பொண்ணு அந்த ஊருல பாருங்க ஆனா..ஒரு விசயம்..பொண்ணை பாக்கறதுக்கு முன்னால அவங்க அம்மாவை பாத்துடுங்க ///கொஞ்ச நாளானதும் அவங்கம்மா மாத்ரீ தான் அதுவும் ஆகிடும்... அவங்க்ம்மா அணுகுண்டு மாதிரி இருப்பாங்க எனி டைம் வெடிச்சுடுவாங்க. இப்படி சாப்பிட்டா அப்பறம் எப்படி? :))

அபி அப்பா said...

நாக்கிலே எச்சல் ஊறுதுப்பா:-)) நம்ம ஊர்ல பஸ்ட்ட்டாண்ட் முன்ன பஞ்சாபி லஸ்ஸி கிடைக்கும் இதே பாணி தயாரிப்பு தான். ஆனா அதைவிட தஞ்சை பழைய பஸ்ட்டாண்டில் சூப்பரா நீங்க சொல்லும் அதே ஸ்டைலில் இருக்கும் லஸ்ஸி! நிறைய பதிவு வரும் போல இருக்கே, அசத்துங்க:-))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆமாம் எதோ போன இடத்தை பத்தி போட்டு கொஞ்சநாள் ஒப்பேத்தலாம் ன்னு தான் அபி அப்பா. ஒரு 4 பதிவு போடலாம்ன்னு நினைக்கிறேன்..

நாகை சிவா said...

ஆகா.... நீங்க சொல்லுறாப்புல.. இது எல்லாம் எப்பவாச்சும் ஒரு தடவை சாப்பிட தான் சரிப்பட்டு வரும்... நமக்கு இரண்டு வருசமா வட இந்தியர்களுடன் தங்கி இந்த அயிட்டம் எல்லாம் அத்துப்படி ஆச்சு....

ஆனாலும் நெய் அள்ளி இல்ல மொண்டு ஊத்துவாங்க... அதை பாத்தா தான் நமக்கு உதறரும்... :)

நாகை சிவா said...

தொல்ஸ் சொன்னது போல... தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகில் நீங்க சொன்னது போல லஸ்சி போட்டு தருவார்கள்... அருமையாக இருக்கும், தயிர் ஆடை மேல் சிறிது சீனி போட்டு கொடுப்பார்கள்... இரண்டு கிளாஸ் அடிச்சா சும்மா திவ்யமா இருக்கும்....

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆமா புரட்சி புலி... ஒரு கிளாஸ் குடிச்சதுக்கே மதியம் சாப்பாடே வேணாம்ன்னு இருந்தோம். முதல்ல கடையில் பெஞ்சிலிருந்து எந்திரிக்க ஒரு கை குடுக்க வேண்டியதா போச்சுன்னா பாருங்க.

ஆயில்யன் said...

//இரண்டு கிளாஸ் அடிச்சா சும்மா திவ்யமா இருக்கும்....//
அக்கா சொன்னா மாதிரி ஒரு கிளாஸ் குடிச்சாலே தாங்கறது கொஞ்சம் கஷ்டம்! இதுல நீங்க ரெண்டு கிளாஸ் அடிச்சாத்தான் திவ்யமா இருக்குமா????!!!
ரொம்ப ஸ்ட்ராங்கான ஆளுதான் நீங்க

ஆயில்யன் said...

//அபி அப்பா said...
நாக்கிலே எச்சல் ஊறுதுப்பா நம்ம ஊர்ல பஸ்ட்ட்டாண்ட் முன்ன பஞ்சாபி லஸ்ஸி கிடைக்கும் இதே பாணி தயாரிப்பு தான்!//

அண்ணே இப்பவும் நம்ம மெட்ராஸ் காபி பாராண்ட சூப்பரான லெஸி கிடைக்குது!
ம் என்னது? எங்க இருக்குதுன்னு கேட்றீங்களா? அட அதான் ஞானம்பிகை காலேஜ் புள்ளைங்க போகும்ல அந்த தெருவுலதான்..!
(பாலக்கரை டிராபிக் பூத் உங்களுக்கு தெரியதுன்னு நினைக்கிறேன்!!!).

சரி! சரி..! அக்கா வெளியூருலருந்துக்கிட்டு வெளியூரை சுத்தி பாத்து, சாப்பிட்டுட்டு போடுற சாப்பட்டு ஐட்டங்கள்
சுவைப்போம் பார்த்து..!

கோபிநாத் said...

இனி அட்டம் ஆரம்பிச்சிட்டிங்க போல இருக்கு...
அப்ப இனி கலக்கல் தான் ;)

நமக்கும் இந்த லஸ்ஸிக்கும் ரொம்ப தூரம்....ஆனா அடுத்த மேட்டாரு ஓகே....இங்கையும் அந்த மாதிரி ஆயிட்டாங்கள் இருக்கு...அதுவும் பாகிஸ்தானி கடைகளில் சூப்பராக இருக்கும்.

கோபிநாத் said...

\\ச்சென்னையில் அந்தக் காலத்தில் காசினோ தியேட்டர்( இப்ப இருக்கா?) எதிரில் ஒரு கடையில் லஸ்ஸி சூப்பர். அங்கெ பன்னீர் ஊத்திக்கொடுப்பாங்க. அப்படியே ரோஜா வாசனை ஆளைத் தூக்கும்.\\

ம்....இன்னும் தியேட்டர் இருக்குன்னு தான் நினைக்குறேன் (நான் போயி ஒரு வருஷம் ஆகாபோகுது)

\\முத்துலெட்சுமி said...
ஆமா புரட்சி புலி...\\

ஆஹா....சூடான் புலி போயி இப்ப புரட்சி புலியா !! ;-)))

மங்கை said...

போயிட்டு வந்த உடனே சூடா பதிவா
ஹ்ம்ம்

சாப்பிடறடுக்கே போகனும் போல..

எல்லாம் சரி அந்த' தால் மக்கனி' அது தான் நமக்கு ஆகாது..பேரும் பிடிக்கலை, சுவையும் பிடிக்கலை.. மற்ற பால் ஐட்டம் எல்லாம் வெட்டலாம்..:-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாங்க ஆயில்யன்...அது என்ன அபி அப்பாக்கிட்டயும் நாகைசிவாக்கிட்டயும் என் ப்ளாக்ல இருந்து சேட் செய்யறீங்க :)))
நம்ம ஊருல நிறைய இடம் எனக்கு தெரியாது ... ஞானாம்பிகை காலேஜ் திசைபக்கம் கூட போனது இல்ல.. இதுல லெஸ்ஸி யாவது ஒன்னாவது..ஹோட்டல் பக்கம் கூட அதிகம் போனது இல்ல.. இப்பத்தான் இந்த சுத்தல் எல்லாம்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கோபி வெட்டியோட ப்ளாக் பாக்கலயா நீங்க எல்லாருக்கும் புரட்சி பட்டம் குடுத்து புரட்சி செய்த்ருக்காரே அதான்..புரட்சி புலி..
லஸ்ஸி குடிக்கறது இல்லயா..சரி உப்பு போட்டு நீர் மோர் குடிங்க உடம்புக்கு நல்லது..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆமா மங்கை சூட்டோட போடலன்னா மைசூர் டிர்ப் போலஅது
மறந்துடுச்சு இது மறந்துடுச்சுன்னு
எழுத வேண்டியதாகிடுமேன்னு
பயம்தான்.. என்ன பண்ண
வயசாகுதுல்ல.. ;))

இலவசக்கொத்தனார் said...

பெங்களூரில் சீக்கியர் கோயில் பக்கத்தில் இந்த மாதிரி ஒரு சின்ன கடையில் இந்த மாதிரி ஐட்டங்கள் சூப்பரா இருக்கும். முன்ன எல்லாம் நல்லா வெட்டறது ஆனா இப்போ அங்க போடற வெண்ணையும் நெய்யும் பார்த்தா பயமா இருக்கு!

இரண்டாம் சொக்கன்...! said...

//என்ன பண்ண வயசாகுதுல்ல.. ;))//

ஏய் இந்த அம்மாவுக்கு என்னமோ ஆயிருச்சுப்பா...உண்மையெல்லாம் பேசறாங்க...

ஹி..ஹி..

Unknown said...

நானும் தலைப்ப பாத்துட்டு வேற மாதிரி படமிருக்கும்னுதான் வந்தேன்…
எல்லாம் சாப்பாட்டு வகைங்களப் பத்தியில்ல இருக்கு.
ம்ம்ம்… அடுத்த மொற இந்தமாதிரி படம்போட்டா செய்முறையையும் போடுங்கக்கா.. பின்னாடி ஒதவியா இருக்குமில்ல?

மங்களூர் சிவா said...

//
கொஞ்ச நாளானதும் அவங்கம்மா மாத்ரீ தான் அதுவும் ஆகிடும்... அவங்க்ம்மா அணுகுண்டு மாதிரி இருப்பாங்க எனி டைம் வெடிச்சுடுவாங்க. இப்படி சாப்பிட்டா அப்பறம் எப்படி?
//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Anonymous said...

மங்களூர் சிவாக்கு ஒரு பொண்ணு பாத்துருங்க. அப்பறம் அவர் வெடிக்கறாறா இல்ல அந்தப்பொண்ணு வெடிக்குதான்னு பாருங்க. (அதை வைச்சு ஒரு பதிவும் போட்டுருங்க):}:}

Deepa said...

ஆஹா.. சூப்பரா இருக்கே.. எனக்கு எந்த ஹோடெல் போனாலும்.. லஸ்ஸி கணடிப்பா வேணும்.. ஐஸ்க்ரீம் கூட ரெண்டாம் பக்ஷம் தான்.. ஆங்.. நான் ரசித்து-ருசித்து சப்பிடும் இன்னொரு சப்ஜி..பைங்கண்-கா-பர்தா..அதுவும் கத்திரிக்கய்யை கனலில் சுட்டு தருவாங்க..

குசும்பன் said...

இதே போல் எங்க தஞ்சையில் ஒரு கடை இருக்கு சாந்தி லெஸி கடை கூட்டம் அலைமோதும் லெஸி குடிக்க, செம சூப்பராக இருக்கும் பக்கதிலேயே பல கடை இருந்தாலும் இங்கு மட்டும்தான் கூட்டம் வரிசையில் நின்னு வாங்கும். பகலில் லெஸி மாலையில் கல்கண்டு பால். தஞ்சை பழைய பேருந்து நிலையம் வெளியே இருக்கும், அந்த பக்கம் போனா இதையும் ஒரு முறை டிரை செய்து பார்க்கவும்!!!

குசும்பன் said...

ஆஹா எனக்கு முன்னாடியே அபி அப்பாவும் ,புலியும் அந்த கடையை பத்தி சொல்லி இருக்காங்க போல!!!

கடை பெயர் சாந்தி லெஸி கடை!!!

தஞ்சை M.L.A உபயதுல்லாவின் கடை!

எதிரில் ஒரு கடை இருக்கும் டால்டா பரோட்டா கடை பேரும் அதே பேருதான் சாந்தி உணவகம்.

மங்களூர் சிவா said...

//
சின்ன அம்மிணி said...
மங்களூர் சிவாக்கு ஒரு பொண்ணு பாத்துருங்க. அப்பறம் அவர் வெடிக்கறாறா இல்ல அந்தப்பொண்ணு வெடிக்குதான்னு பாருங்க. (அதை வைச்சு ஒரு பதிவும் போட்டுருங்க
//
முத்துலட்சுமியக்கா பதில் போட்டவுடனே நான் அந்த ஐடியாவயே ட்ராப் பண்ணிட்டேன்.

உங்களுக்கு ஏன் இந்த தம்பி மேல இப்பிடி ஒரு 'மர்டர்'வெறி

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆமா இலவசகொத்தனார் ... நாமதான் உருளைன்னா பயம்..நெய்யுன்னா பயம் ... பாலை..மோரை க்ண்டால் பயம்ங்கறோம்..அவங்க அதே வாழ்க்கையா வாழறாங்க.. பழக்கம் தான் அதோட,, சரி சமமா வேற வெந்த்யக்கீரை லேர்ந்து சுரைக்காய் கூட்டு வரை அவங்க சேத்து சரிகட்டிடறாங்களே..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாங்க மாயாவி... காமிக்ஸ் இரும்புக்கை மாயாவி மாதிரி நீங்களும் அடிக்கடி மறைஞ்சு மறைஞ்சு வர்ரீங்க..
நான் எப்போதுமே உண்மை பேசறவளாக்கும்... மதுரைக்காரரா இருந்து கிட்டு ஊருக்காரவுங்களை இப்படி எல்லாம் வாரக்கூடாது. சொல்லிட்டேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அருட்பெருங்கோ அடுத்தடுத்த பதிவுல அந்த் படஙகளெல்லாம் வரும்..
சமையல் செய்முறை எல்லாம் வேற பதிவு ""சாப்பிடவாங்க"" ல போடறேன் ( ஒருவேளை அது செய்ய தெரிஞ்சா ) :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சின்ன அம்மணி இது என்ன மங்களூர் சிவா பாவம் ப்போட்டும் தெரியாம கேட்டுட்டார்.. என்ன இருந்தாலும் ந்ம்ம தமிழ் பெண்கள் போல வருமா.. அவங்க ம்மா அப்பா பாத்துவைப்பாங்க ( ஒருவேளை அவருக்கு செலக்ட் செய்ய தெரியலன்னா)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தீபா பைங்கன்கா பராத்தா சூப்பரான அயிட்டம் தான்.. ... ஒரு நாள் இட்லின்னா இன்னோரு நாள் நார்த் இண்டியா தான் எங்க வீட்டுல..சின்னதுல சமைக்ககத்துக்கிட்ட அப்பவே நார்த் இண்டியன் தான் பிடிக்கும்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

குசும்பன் பக்கத்துல இருந்தா அருமை தெரியாதுங்கற மாதிரி நம்ம ஊரு விச்யம் எனக்கு அவ்வளவா தெரியாது ..அதுமில்லாம ஊருக்கு எங்க போனாலும் எங்க வீட்டுல சின்னதுல ..சாப்பாடு கட்டி க்கிட்டு போயே பழக்கமா ஹோட்ட்லன்னா என்னான்னு இருந்தோம்.. இப்பத்தான்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி துளசி... அவ்வளவுக்கு நல்லா இருக்கா ... :)

மலைநாடான் said...

முத்துலெட்சுமி!

படங்கள் எல்லாம், அருமையா வந்திருக்கு.

இன்னும் நிறைய வரும் போல.. :)

இராம்/Raam said...

:) நல்லா எழுதியிருக்கீங்க.... :)

லஸ்ஸி'லே ஐஸ் போட்டு குடிச்ச தொண்டை கெட்டு போயிருமாம்.... அப்புறம் சரியா பேசமுடியாது'லே... :))

இராம்/Raam said...

//இலவசக்கொத்தனார் said...

பெங்களூரில் சீக்கியர் கோயில் பக்கத்தில் இந்த மாதிரி ஒரு சின்ன கடையில் இந்த மாதிரி ஐட்டங்கள் சூப்பரா இருக்கும். முன்ன எல்லாம் நல்லா வெட்டறது ஆனா இப்போ அங்க போடற வெண்ணையும் நெய்யும் பார்த்தா பயமா இருக்கு!//


கொத்ஸ்,


அல்சூரு லேக் பக்கத்திலே இருக்கிற தாபா'தானே சொல்லுறீங்க..... அங்க வர வர ரொம்ப கூட்டமாகிட்டே வருது.... :(

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி மலைநாடன்.. வீடியோகூட லஸ்ஸி மற்றும் தாபாவை எடுத்தேன் .. அதெல்லாம் சேர்த்து எடிட் செய்து அமிர்தசரஸ் ஸ்பெஷல் வீடியோ அடுத்த மாதம் போடலான்னு இருக்கேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இராம்..அல்சூர்லேக்குக்கிட்ட மட்டுமா வர வர பெங்களூரே கூட்டாமாத்தான் ஆகிட்டுருக்கு...

இன்னும் தொண்டை கட்டற விசயத்தை மறக்கலயா நீங்க.... ஐஸ் கட்டி சாப்பிட்டுட்டு வெயிலில் போகக்கூடாது அவ்வளவு தான்.. ;))

நானானி said...

ஹையோ..ஹையோ..இப்பவே அமிர்தசரஸ் போணும் போலிருக்கே!
அந்த தயிர்,வெண்ணைய்,ஆடை,கெவ்டா எஸ்ஸென்ஸ் எல்லாம் போட்டு கலக்கி
அடிக்கணுமே!!அத்தோடு இந்தியன் பீட்ஸா....சூப்பர் முத்துலெட்சுமி!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி நானானி, கண்டிப்பாக போய்ப்பார்க்கவேண்டிய ஊருதான் ஒரு முறை வாங்க வட இந்தியாவுக்கு... சாப்பாடுன்னா இவங்கள மாதிரி ரசிச்சு சாப்பிடனும்..

வவ்வால் said...

ஒரிஜினல் பஞபி லஸ்ஸினா அதை குடிக்கவே முடியாது கெட்டிய ஸ்பூன் வைத்து தான் சாப்பிட முடியும் குடிக்கிறாப்போல செய்றது பாம்பே லஸ்ஸி என்று சொல்கிறார்கள். ஒரு முறை மும்பை போன போது தான் இந்த விவரம் தெரிந்து கொண்டேன், தாதர் ரெயில் நிலையம் அருகே இப்படி ஒரு கடை இருக்கு, அங்கே இருந்த ஒரு வாரம் முழுவதும் கெட்டி லஸ்ஸி தினமும் இரண்டு சாப்பிட்டேன்.10 ரூபாய்க்கு பெரிய குவளையில் தருவார்கள். 6 ரூபாய்க்கு சின்ன குவளை.இது 4-5 வருடங்கள் முன்னர் இப்போ விலை ஏறி இருக்கலாம்.

அந்த லஸ்சியில் எதோ மாவு ஒன்றும் போட்டிருக்கிறார்கள் என நினைக்கிறேன், தயிர் அந்த அளவுக்கு கெட்டியாக வராது, ஆனால் சுவை பிரமாதம் அப்புறம் எங்கே ஆராய்ச்சிலாம்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஏங்க வவ்வால் .. பஞ்சாப்புக்கே போய்
லஸ்ஸிக்கு ஸ்பெஷல் கடை எது?ன்னு விசாரிச்சு போய் எப்படி செய்றாங்கன்னு பாத்து சொன்னா அது பாம்பே லஸ்ஸிங்கறீங்களே நல்லா சொன்னீங்க போங்க.. நாங்க குடிச்சதையும் ஸ்பூன் வச்சு தான் குடிச்சோம்.. அதை போடலை போல.. வெண்ணை ஆடையை சாப்பிடத்தான் ஸ்பூன் ...விட்டோம்ன்னா அது டம்ளருக்குள்ள மூழ்கிபோய்டும் ஏன்னா டம்ளர் பெரிசாச்சே.. ஆனா மாவெல்லாம் போடலைங்க அவங்க.. தயிர் நல்ல கெட்டியாத்தான் இருந்தது ..