January 10, 2008

புதியவானம் ...வானம்...வானம்...

எம்ஜிஆர் படம்ன்னா நினைவுக்கு வருவது உடனே அன்பேவா தான். ஏன்னா அதோடவசனக் கேசட் பக்கத்துவீட்டுல வச்சிருந்தாங்க.. கேட்டு கேட்டு மனப்பாடம் ஆகிப்போச்சு.. அந்த சாருக்கு (அவர் எனக்கு கெமிஸ்ட்ரி ட்யூசன் எடுத்தாரு கொஞ்சநாள் ) எம்ஜிஆருன்னா ரொம்ப பிடிக்கும். எப்பவும் வீட்டுல கேசட் எடுத்து படம் போட்டா கண்டிப்பா எம்ஜிஆர் படம் இருக்கும்.


அவர் படத்துல் பாட்டு எல்லாமே அருமையா இருக்கும் அவர் பாட்டுன்னா எனக்கு உடனே நினைவுக்கு வருவது ... புதிய வானம் புதிய பூமி தான்.. பிள்ளைக்கூட்டங்களைப்பார்க்கையிலே பிஞ்சுமொழிகளை கேட்கயிலே நல்லவர் எல்லாம் நலம் காண்பார் எனும் நம்பிக்கை பிறக்கிறது .....
.பழயபடம்ன்னா எங்க ஊருல கிருஷ்ணா தியேட்டர். மன்னாதி மன்னன் மாதிரி எம் ஜி ஆர் படம்ன்னா புதுப்படம் போற ஆசையோட போய் பார்ப்போம்.


மார்கழி மாசம் கோலம் போடறது திருவிழா அப்போதெல்லாம்.. இப்பவெல்லாம் இல்லை . இங்க தில்லியில் ஒரு 6 க்கு 6 புள்ளி வச்சி கோலம் போட்டாலே அதிசயம். அப்படி கிருஸ்துமஸ் கோலம் போட்டிட்டுருக்கும் போது தான் பக்கத்துவீட்டு சார் சைக்கிளில் வந்து இறங்கி எம்ஜிஆர் இறந்து போயிட்டாருன்னு சொன்னாங்க.. அந்த கிருஸ்துமஸ்ல சார் சந்தோஷமா வே இருக்கலை.

எங்கவீட்டுல எம்ஜிஆர் ரசிகர்கள் தான் அதிகம். சிவாஜின்னா அழுமூஞ்சின்னு வச்சிக்கிட்டோம். பாக்காம இல்ல பாகப்பிரிவினை
தில்லானா மோகனாம்பாள் இதெல்லாம் கூட மனப்பாடமா இருக்கும் தான். ஆனா கேசட் எடுத்தா சிவாஜி படம் எடுத்து பாக்கறதுமட்டும் இல்ல.
சினிமா தியேட்டர் இல்லாட்டி டிவி தான் சிவாஜிக்கு.
அவர் படத்துலயும் பாட்டெல்லாம் அருமைதான். உடனே நினைவுக்கு வருவது ..""எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அங்கே எனக்கோர் இடம் வேண்டும் ""


எங்க சித்தி வீட்டு சித்தப்பாக்கு சிவாஜி தான் பிடிக்கும் . சிவாஜி பத்தி சொன்னா கோபம் வரும் . போங்கடி உங்க எம்ஜிஆருக்கு அழத்தெரியுமா உடனே செவுத்தப்பாக்க திரும்பிக்குவார் இல்லாட்டி முகத்தை மூடிப்பார்.எங்க சிவாஜி மாதிரி நடிக்கத்தெரியுமான்னு கேப்பாங்க. ஆமா ஓவரா நடிப்பாரு சித்தப்பா.. ஒரு வார்த்தையை சொல்லனும்னா கூட புருவத்தை அசக்கி உதட்டை மடித்துன்னு அய்யோ போங்க சித்தப்பான்னு வம்பு வளப்போம்.


ஜெமினின்னா மிஸியம்மா தான் நினைவுக்கு வரும். டிரிம்மா வந்து வெடுக்குவெடுக்குன்னு பேசற சாவித்திரி கூட வம்பு செய்யற ஜெமினி. இல்லாட்டி யார் பையன் ஜெமினி. அய்யோ பாவமா உன் அப்பா பேரென்னடா என்றதும் என்அப்பா பேரா என் அப்பா பேரு மகாகனம் பொருந்திய ஸ்ரீமான் சுந்தராஜனு சொல்லும்போது
அந்த குட்டி பையன் வாயை அடைக்கமுடியாம திண்டாடுவாரே.. கொஞ்ச வருசம் முன்ன மைக் மோகன் முழிப்பாரே அதே மாதிரி இருக்கும் .
பாட்டுன்னா அவ்ரோடது நினைவுக்கு வருவது "சின்ன சின்ன கண்ணனுக்கு என்ன தான் புன்னகையோ "


இதென்ன திடீர்ன்னு இதெல்லாம் ஒரு அலசலும் கொசுவத்தியும்ன்னு கேட்டீங்கன்னா... மொக்கை டேக்காமே அதுக்கு காட்டாறு கூப்பிட்டுருக்காங்க..
யோசிக்காம போட்டாதான் மொக்கையாமே.. அட நேத்துக்கூட யோசிக்காமதான் லைஸ் மை பாதர் டோல்ட்மீன்னு எழுதினேன் அந்த பதிவு அப்ப மொக்கையில்லையான்னு கேட்டா... அருட்பெருங்கோ சொல்றாரு.."" அக்கா நீங்க எழுதுங்க வந்து படிச்சிட்டு மத்தவங்க சொல்லுவாங்க .அதுமொக்கையா? இல்லையான்னு ""
இது மொக்கதானே சொல்லுங்கப்பா..

சரி யாரைக்கூப்பிடுவது .... மங்கை நேத்து தான் ஒரு பதிவு போட்டாங்க இருந்தாலும் எனக்காக ஒன்று போடட்டுமே
தீபா படமெல்லாம் பாத்து கண்ணு சரியாகிடுச்சாப்பா வாங்க வந்து எனக்காக ஒரு பதிவு.
பதிவு போடறதுன்னா யோசிக்கறதுக்கு ஒரு நிமிசம் கூட வேணாம் எங்கள் தங்கம் சென்ஷீக்கு அவர் ஒரு பதிவு போடட்டும். எழுதிடுங்கப்பா எல்லாரும் .

11 comments:

dondu(#11168674346665545885) said...

//பிள்ளைக்கூட்டங்களைப்பார்க்கையிலே பிஞ்சுமொழிகளை கேட்கயிலே நல்லவர் எல்லாம் நலம் காண்பார் எனும் நம்பிக்கை பிறக்கிறது .....//
இதே மாதிரி குழந்தைகளை வச்சு ஒரு காமெடி நடிகர் (வடிவேலு அல்லது விவேக்?) பாட முயல, பிள்ளை பிடிப்பவன் என்று உதை வாங்கும் சீன் ஞாபகத்துக்கு வருகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மங்கை said...

மொக்கைக்கு டெபனிஷன் என்ன
அதை சொல்லுங்கப்பா முதல்ல

காட்டாறு said...

யக்கோவ்....சொன்னதும் டாண்ணு பதிவு எழுதி டாக்(tag) மானத்தையே காப்பாத்திட்டீங்களே... சூப்பர் போங்க.
நன்றிங்கோவ்!

காட்டாறு said...

முக்கியமானதை சொல்ல மறந்துட்டேன் போன மறுமொழில. இது நெசமாவே கொசுவர்த்தி பதிவு தான். எனக்கு
ஜெமினின்னா இப்போ(?) வந்த அவ்வை சண்முகி தான் நினைவுக்கு வரும். கண்ணை உருட்டி சண்முகி சண்முகின்னு உருகுவாரே...ம்ம்ம்ம்... சுப்பர் நடிப்பு.

கண்மணி/kanmani said...

எனக்கு சிவாஜிதான் புடிக்கும் .ஆனா அழகுக்கு எம்.ஜியார்தான்.இன்னைக்கும் அவரின் பழைய படங்களைப் பார்த்தால் அவரின் பர்சனாலிட்டி கவர்ச்சி ஆச்சர்யமாக இருக்கும்.

துளசி கோபால் said...

புல்லரிக்குது மொக்கைகளைப் படிச்சு.

நம்மூட்டுலேயும் ஒரு எம்ஜிஆர் விசிறி இருக்கார்.

இருந்துட்டுப்போகட்டுமேன்னு விட்டுட்டேன்.

மத்தபடி............

கோபிநாத் said...

\இது மொக்கதானே சொல்லுங்கப்பா..\\

செல்லாது..செல்லாது..;))

கண்மணி/kanmani said...

நம்ம விளையாட்டுக்கும் வாங்க ஆத்தா
உங்க பெஸ்ட் எது?[நாட் ஆல் ஒன்லி ஒன் ]
http://kouthami.blogspot.com/2008/01/blog-post_12.html

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆமாம் நாங்க கூட எம்ஜிஆர் தூக்கினா மாதிரி யாராவது தூக்கினா இப்படி சொல்லுவாங்கன்னு கமெண்ட் அடிச்சிருக்கோம் அதையே காமெடியாக்கிட்டாங்க இப்ப...

-----------

மங்கை என்க்கிட்டயா கேக்கறீங்க.. எனக்கு தெரிஞ்சதெல்லாம் மொக்கை பென்சில் சார்ப் செய்யனும் அப்பத்தான் எழுதும்ங்கற வார்த்தை ப்ரயோகம் தான்..

----------

காட்டாறு நன்றிப்பா எனக்கு பதிவுபோட சோம்பேறித்தனமா இருந்தது இப்ப டக்குன்னு வேகம் வந்துடுச்சு ...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆமாம்ப்பா.. எம்ஜிஆர் ன்னா அழகு தான்... அந்த காலத்து ஸ்டைல் மன்னர்.

-------

துளசி இருந்துட்டு போகட்டுமேன்னு விட்டுருக்கீஙகளா சரிதான்.. பாவம் மனுசன்..
----
கோபி இது செல்லாதுன்னு சொன்னதுக்கு சந்தோஷப்படுறதா வருத்தப்படறதான்னு தெரியலயேப்பா.? :)

Unknown said...

இப்படி கொசுவத்தி சுத்திட்டு இதெல்லாம் மொக்கைனு சொன்னா ஒத்துக்க முடியாது…

மொக்கைனா மொக்கத்தனமா இருக்கனும்… மொக்கத்தனம்னா என்னனு கேட்பீங்க… மொக்கைனு எதிர்பார்த்தே வந்தாக்கூட படிக்க முடியாத அளவுக்கு மொக்கையா இருந்தா அதுதான் மொக்க… இப்போ மொக்கைனா நான் சொல்லாமலே உங்களுக்குப் புரிஞ்சிருக்குமே :)