January 14, 2008

கவிதையும் மலைச்சாரலும்

படித்ததில் பிடித்ததாமே ...பதிவுகள் வரிசையாக வந்து நின்று கொண்டிருக்கின்றன. என்னை என்னை என்று அவை கெஞ்சியும் கொஞ்சியும் அழைக்கிறது. கவிதைகள் தான் அடித்து பிடித்து முதலில் வந்து நிற்கின்றது. ஒன்று மயக்கம் தருகிறது இன்னொன்று யோசிக்கவைக்கிறது. சரி உங்கள் பின்னால் யார் கொஞ்சம் தள்ளுங்கள் என்றால் வெட்கப்பட்டபடி இரண்டு மூன்று சிறுகதைகள் கூடவே ஒரு அனுபவக்கதையும்.

குப்பையெல்லாம் ஒழுங்காப்போடனும் என்று எழுதிய
நட்சத்திரவாரப்பதிவு என்னவோ தான் பெரிய நட்சத்திரமானதாக நினைத்துக்கொண்டு நின்றது. இருந்தும் யோசித்ததில் கவிதையில் ஒன்றைத்தான் குறிப்பிடவேண்டும் என்று தோன்றியது
என்று நிகழ்தகவின்விதிப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கவிதை சிறகு பெற்ற மனது கவிதையும் இந்த நிகழ்தகவின்படி.. கவிதையும் அதன் மென்மைகாரணமாய் பிடிக்கின்றது.


சுற்றுலாப்பதிவுகளில் நானித்தால் பற்றி எழுதிய பதிவு கொஞ்சம் மனதுக்கு குளுமையானது என்பதாலும் இன்றும் அந்த மலைச்சாரலில் சென்று வந்ததை அடிக்கடி நினைவுக்கு கொண்டுவர அடிக்கடி எடுத்து படிக்கத்தூண்டும் பதிவு ...அதை கூப்பிட்டு உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன் . இரண்டு பதிவுகள் மட்டும் என்பதால் மற்றவர்களை தேற்றி அனுப்பிவிட்டு வருகிறேன்.

கண்மணி அழைப்புக்கு நன்றி...

நான் அழைப்பது ... கோபி..
காயத்ரி..
சென்ஷி.

12 comments:

கோபிநாத் said...

இது பதிவர் முத்துலெட்சுமி பதிவு தானே!??

பதிவு ரொம்ப சின்னதாக இருக்கு அதான்..;))

கோபிநாத் said...

\\நிகழ்தகவின் படி என்றேனும்\\

எனக்கும் பிடித்த கவிதை அது..;))

அழைப்புக்கு ஒரு நன்றி ;)

விரைவில் எழுத முயற்சிக்கிறேன் ;)

முத்துலெட்சுமி said...

ஆகா கோபிநாத் நல்ல காமெடிப்பா.. என் போஸ்டே தான்.. நம்புங்க..
அது மாதிரியே இதுகோபிநாத் பின்னூட்டம் தான்னு நம்பறதுக்கு ரெண்டு பின்னூட்டம் ஒன்னு பின்னால ஒன்னு வந்துடுச்சு போலயே...

கப்பி பய said...

உங்க அமிர்தசரஸ் தொடரும் நல்லாயிருக்கும்.

கோபியண்ணே..இப்படியே உங்களை இந்த மாசம் நாலஞ்சு பதிவு எழுத வச்சிருவாங்க போல...க்ளூகோஸ், ஹார்லிக்ஸ்லாம் வாங்கி சாப்பிடுங்க :)))

காட்டாறு said...

உங்களுடைய குறும்படம் (அயர்னிங் செய்பவரைப் பற்றியது) எனக்கு மிகவும் பிடித்த பதிவு.

முத்துலெட்சுமி said...

கப்பி ரொம்ப நன்றி.. ஆமா நான் எழுதினதுல நிறைய நல்ல பதிவு இருக்கு போல :-P

கண்மணி said...

நன்றி முத்து
ஆனா இன்னும் கொஞ்சம் காரணம் சொல்லியிருக்கலாம்.
ஏன் பிடித்தது என்று [அதுதான் விதி]

கண்மணி said...

சர்வேசனுக்கு பதிவர்களின் லிங்க் குடுத்துக்கிட்டிருக்கேன்[பெஸ்ட் ஆப் மைன்].அதை ஓரு தனிப் பதிவாப் போடப் போறார்.

ஏன் பிடித்ததுன்னு சொல்லனுமாம்.
இந்த பதிவையே எடிட் பண்ணி சொல்லிடுங்க முத்து

முத்துலெட்சுமி said...

நான் என்னைக்கு விதியெல்லாம் ஒழுங்கா படிச்சிருக்கேன்.. பிதாக்கரஸ் தேற்றம் விதி இதெல்லாம் மண்டைக்குள்ள ஏத்திக்கறது கஷ்டமாச்சே. சரி சரி மாத்தி காரணம் எழுதிட்டேன்.. ஆனாசர்வேசன் போட்டி யில் எல்லாம் தேர்ந்த்டுக்கும் அளவுக்கா இருக்கிறது.. விடுங்க அப்படின்னா சிறகு பெற்ற மனது கவிதையை குடுத்திருக்கலாமோ.. :-P

முத்துலெட்சுமி said...

காட்டாறு புல்லருக்குதும்மா.. இப்படி எல்லாம் ஏத்திவிடறீங்களே.. ரொம்ப நன்றி ஆமா அந்த வீடியோக்காக சமைத்துவைத்துவிட்டு அவங்களைத்தேடி அவங்க வேலல நேரம் பார்த்து ஓடியது எல்லாம் நினைவுக்கு வருகிறது..

காயத்ரி said...

யக்கா! காயத்ரின்னா நானா? ஜி3 யா? ??!!??

முத்துலெட்சுமி said...

nethamnma .. unkkitta solla vittu pochu.. ore velai.