பார்க்கவேண்டும் என்று தோன்றியது. ஆனால் எதோ வீட்டுவேலைகளின் நியாபகத்தில் ஆரம்பத்தை விட்டுவிட்டேன்.. சில நிமிடங்களுக்கு பிறகுதான் பார்க்க ஆரம்பித்தேன்... ஆரம்பம் பார்க்காமல் பார்ப்பதா என்ற எண்ண ஓட்டத்தை படத்தின் காட்சிகள் ஓரம்கட்டி வைத்துவிட்டது. அந்த படம் "கெஸ்" kes. பிரிட்டிஷ் படத்துலயே நல்ல பத்து படத்துல ஒன்றாமே.
அப்பா வீட்டைவிட்டு போய்விட்ட ஒரு குடும்பம் . அம்மா அண்ணன் இருவராலும் எதற்கும் லாயக்கில்லாதவன் என்று உதாசீனப்படுத்தப்பட்டும், அண்ணனால் கெட்டவார்த்தையால் திட்டப்பட்டும் அடிஉதை என்று பாடாய்படுத்தப்படும் ஒரு சிறுவனின் கதை. அவனுக்கு கிடைக்கும் ஒரு புத்தகத்தை படித்து ஒரு கழுகைத்(கெஸ்ட்ரல் ) தேடி வளர்க்க ஆரம்பிக்கிறான்.
பள்ளிக்கூடத்தில் எதையும் கவனிக்காமல் கனவு கண்டு கொண்டு அதற்காக பிரின்ஸ்பாலிடம் திட்டும் பிரம்படியும் வாங்கிக்கொண்டு வகுப்பில் அனைவரும் ஏளனம் செய்யும் படியாக இருக்கும் அவனுக்கு அந்த கழுகை வளர்ப்பதுமட்டுமே இன்பமான பொழுதுபோக்காக இருக்கிறது. கெஸ் என்று அதற்கு பெயரிட்டு வளர்க்கிறான். கழுகை வளர்ப்பதைப்பற்றி வகுப்பின் நடுவில் அவன் திறமையாக பேசுவது மூலம் ஒரு ஆசிரியரின் கவனிப்பு அவன் பக்கம் நல்லவிதமாக திரும்புகிறது . எதோ தாரே ஜமீன்பர் பார்த்த மாதிரி இருக்கிறதா?
குழந்தைங்க என்ன வேலைக்கு நாளைக்கு போகலாம்ன்னு ஒரு இண்ட்ர்வியூ நடத்தறாங்க எனக்கு ஒரு நம்பிக்கையும் இல்லை உன்கிட்டன்னு அவர் திருப்பி அனுப்பறார். படிப்பு என்பது ஒரே மாதிரி இருப்பதுனால் எப்படி சில குழந்தைங்களோட தனித்தன்மை பாதிக்கப்படுதுங்கறதுக்கு இவன் உதாரணம். புத்தகத்தைப்பார்த்தே அவன் எப்படி எல்லாம் கழுகை பக்குவமா ஒரு வளர்க்கிற கலைய அழகா செய்யறான் ஆனால் அவன் எதுக்கும் உபயோகம் இல்லாத க்ரேட் வாங்கியிருக்கான்னு ஆசிரியர்கள் சொல்றாங்க..
சினிமாத்தனமாக அவன் கழுகை வளர்த்து பெரியாளாகி சுரங்கத்தொழிலாளியாகும் அந்த ஊரின் உழைக்கும் வர்க்கத்தின் ஒரே வழியிலிருந்து அவன் தப்பிப்பதாக எல்லாம் காண்பிக்கவில்லை. அவனுக்கும் அவன் அண்ணனுக்கும் நடக்கும் பிரச்சனையால் அவன் கழுகு இறப்பதாக காண்பித்து கதையை முடித்துவிடுகிறார்கள். அவங்க அண்ணன் கட்ட சொன்ன பந்தயத்தில் பணம் கட்டினா தோத்துப்போவான்னு இவனா முடிவு செய்து அந்த பணத்தை தன் கழுகுக்கு உணவு வாங்க உபயோகிக்கறதால அவங்கண்ணன் அந்த கழுகை கொன்னுடறான்.
இயல்பா நடக்கிற வகுப்பறை மற்றும் பள்ளிக்கூட காட்சிகளும் அவன் கழுகை பழக்கும் இடமும் உங்களுக்கும் ரொம்ப பிடிக்கும்.
5 comments:
எதார்த்தமான படமா தெரியுது.
//படிப்பு என்பது ஒரே மாதிரி இருப்பதுனால் எப்படி சில குழந்தைங்களோட தனித்தன்மை பாதிக்கப்படுதுங்கறதுக்கு இவன் உதாரணம். //
இப்போது பள்ளிகளில் கொஞ்சம் இந்த மனப்பாங்கு மாறி வருவதுன்னு நெனைக்கிறேன்.
கொஞ்சம் மாறித்தான் வருது ...காட்டாறு. சின்ன க்ளாஸில் எழுதி கை ஒடிய வேணாம் ஆனா பத்து பன்னிரண்டுல வித்தியாசம் இல்ல.. ஆனா முழுசா மாறவும் முடியாது..
நல்ல நல்ல படம் பார்க்கறீங்க.. சந்தோஷம்...
\\\மங்கை said...
நல்ல நல்ல படம் பார்க்கறீங்க.. சந்தோஷம்...\\
அதே..அதே ;)
மங்கை கோபிநாத் ரெண்டுபேருக்கும் நன்றி... நல்ல படம் நல்லா இல்லாத படம் எல்லாமே பார்த்து நேரத்தை தள்ளிக்கிட்டு இருக்கேன்.. நல்லப்படம் மட்டும் உங்க கிட்ட சொல்லிக்கறேன்..;)
Post a Comment