April 12, 2008

எம்.பி.த்ரி மை எம்.பி.த்ரி

எந்த ஒரு பாடலோ ஒலியோ நீங்கள் கணினியில் கேட்பதை அப்படியே பதிவு செய்து எம்பித்ரி ஃபார்மட்டில் சேமித்துக்கொள்ளலாம்.. அதற்கு நல்ல தொரு சாப்ட்வேர் mp3mymp3 2.0 சர்வேசனின் ஜனகணமண பாடல் பாடவாங்க என்ற அழைப்பின் பதிவில் அவர் இந்த சாப்ட்வேர் பற்றி சொல்லி இருந்தார். அதன்பிறகு கொஞ்சநாட்கள் வெறுமே பாட்டை பாடி அப்படியே எம்பித்ரி ஃபார்மட்டில் சேமிக்க
செய்ய மட்டுமே பயன்படுத்தி வந்தேன்..


பிறகு ஒரு முறை தேன்கிண்ணத்தில் சேர்ந்த பின்னர் என்னிடம் இல்லாத பாடல் ஒன்றை நேயர்விருப்பமாக ஒருவர் கேட்டிருக்க.. அதற்காக எம்பெட் செய்யும் வசதியோடு அந்தப்பாடலைத் தேடி தேடி இணையத்தில் அலைந்து கொண்டிருந்தேன். பிறகு சரி பாட்டை அப்படியே ரெக்கார்ட் செய்து போட்டுவிடலாம் என்று நேரடியாக அந்த் பாடலை கணினியில் பாடல் தளங்களிலிருந்து ஓடவிட்டு செய்து பார்த்தேன். பிறகு மின்விசிறி சத்தம் ...தெருவில் செல்லும் வண்டிகளின் சத்தம் கேட்டதால் .. இந்த் சாப்ட்வேரை கொஞ்சம் ஆராய்ச்சி செய்ததில்.. அதில் ஆடியோ சோர்ஸை மாற்றினால் , மைக்ரோபோனிலிருந்து ஸ்டிரியோ மிக்ஸ் என்ற வகையை தேர்ந்தெடுத்தால் வெளிப்புற சத்தமின்றி அழகாக சேமிக்கிறது என்று கண்டு கொண்டேன்..


பிறகு எங்கள் பகுதியில் ஒரு நாடகம் போடவேண்டும் என்று தோழி அழைத்தபோது.. அதே ரெக்கார்டரில் பிண்ணனிக்குரலாக ஒவ்வொருவரின் நேரம் கிடைக்கும் போது தனித்தனியாக அந்த காட்சிகளை சேமித்து வைத்துக்கொண்டேன். பிண்ணனி இசை தனியாக சேமித்துக்கொண்டேன். பிறகு அதே ரெக்கார்டரில் ப்ரவுஸ் என்கிற பட்டனை தட்டி நாம் சேமித்து வைத்திருக்கும் அத்தனை ஃபைல் களையும் அங்கே வரிசையாக கொண்டுவந்து கொள்ளும் வசதி இருக்கிறது.


பின்னர் ரெக்கார்ட் பட்டனை தட்டிவிட்டு நீங்கள் எந்த வரிசையில் எதிர்பார்க்கிறீர்களோ அந்த வரிசையில் ஃபைல்களை ஒவ்வொன்றாக ப்ளே செய்ய மொத்தமாக ஒரே தொகுப்பாக்கிக்கொள்ளும்படி இருக்கிறது. பிறகென்ன பிண்ணனி இசையை வேறு ஒரு விண் ஆம்ப் ப்ளேயரில் ஓடவிட்டு .. இந்த ஃபைல்களை ஒவ்வொன்றாக ஓடவிட்டு நடுநடுவில் பிண்னனியிசை ஃபைல்களை சேர்த்து ஒரு வழி ஆக்கியாகிவிட்டது.


அது குழந்தைகள் நடிக்கப்போகிற நாடகம் அவர்களுக்கோ தமிழ் படிக்கத்தெரியாது என்பதாலும் கொடுக்கப்பட்ட 4 நாட்களில் உச்சரிப்பை திருத்த இயலாது என்பதாலும் இப்படி பிண்ணனி முயற்சியை செய்தோம். ஆரம்பிக்கும் போது நான் இத்தனைக்கு நடக்கும் என்றே நினைக்கவில்லை. என் தோழியோ பிடிவாதமாக இன்னின்ன மாதிரி வேண்டும் என்று சொல்லிவிட்டு உங்களால் முடியும் செய்யுங்கள் என்று [பட்டியலிட்டுவிட்டார்கள்.

சரி வந்தது வரட்டும் என்று ஆரம்ப்த்தபின் அதை கணினியில் இருந்து இற்க்கி எப்படி நிகழ்ச்சி நடக்கும் இடத்துக் கொண்டு செல்வது.. தோழி சரி கணவரின் லேப்டாப்பையே கொண்டுவந்துவிடலாம் என்கிறார். எதற்கும் பார்க்கலாம் என்று என்னுடைய நோக்கியா N72 ல் அதை அப்படியே மாற்றியும் வைத்துக்கொண்டோம்.
முதல் முயற்சியாக அந்த சின்ன அரங்கத்தில் ஒலிபெருக்கியின் முன் கொண்டுப்போய் நோக்கியாவின் ஸ்பீக்கரை வைத்துப் பார்த்தோம் நன்றாகவே கேட்டது . பிறகென்ன வெற்றிகரமான அந்த 5 நிமிட குறுநாடகம் நடந்தேறிவிட்டது.


இன்னும் ரெக்கார்ட் செய்வதை எந்த நேரத்தில் தொடங்கவேண்டும் என்று சொன்னால் அந்த நேரம் அது செய்யத்தொடங்கும் வசதியும் உண்டு .. செட்டிங்க் பகுதியில் ஸ்டார்ட் ரெக்கார்டிங் டைம் என்ற இடத்தில் தற்போதைய நேரமும் அதில் நீங்கள் எப்போது செய்யத்தொடங்கவேண்டும் என்ற கட்டளைக்கான நேரத்தைத் தட்டச்சிக்கொள்ளலாம்.


இப்படி நாமாக செய்துபார்த்து கற்றுக்கொள்வதில் நல்ல விசயம் இருக்கிறது அது மறப்பதில்லை.
நீங்களும் முயற்சித்துவிட்டு இன்னும் என்னவகையில் இதை உபயோகிக்கலாம் என்று மற்றவர்களுக்கும் சொல்லுங்களேன்..
http://www.mp3mymp3.com/

பின்னூட்டத்தில் குமார் அவர்கள் சொல்லியது போல உங்களில் எவருக்கும் ஸ்டீரியோ மிக்ஸ் வேலைசெய்யவில்லை என்றால் அவர் எழுதிய பதிவை பார்க்கவும்..

30 comments:

Yogi said...

தகவலுக்கு நன்றி :)

Unknown said...

இன்று முதல் நீங்கள் நுட்பப் பதிவர் என்று அழைக்கப்படுவீர் ;)
நாடகத்தையும் வலையேற்றவும்!!!

மங்களூர் சிவா said...

/
அருட்பெருங்கோ said...
இன்று முதல் நீங்கள் நுட்பப் பதிவர் என்று அழைக்கப்படுவீர் ;)
/

rippEateyyyyyyyyy

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி பொன்வண்டு

அருட்பெருங்கோ , மங்களூர்சிவா .. நல்லா குடுக்கறீங்க பட்டம்.. நன்றி நன்றி..
( பதிவுல டேக் குடுக்கும் முன்னயே கொஞ்சம் யோசிச்சிருக்கனுமோ ) :))

G.Ragavan said...

இதை அறிமுகப் படுத்தியதிற்கு நன்றி. இப்பவே இறக்குமதி செஞ்சுர்ரேன்.

கோபிநாத் said...

சும்மா வா பதிவுக்கு சிறு முயற்சின்னு வச்சிருக்கிங்க..!!

சூப்பர் நீயூஸ்..மிக்க நன்றிக்கா ;))

சென்ஷி said...

மிகப்பயனுள்ள தகவல்.. அதற்கான நன்றிகள் :))

சென்ஷி said...

//அருட்பெருங்கோ said...
இன்று முதல் நீங்கள் நுட்பப் பதிவர் என்று அழைக்கப்படுவீர் ;)//

:)))

இதற்கு ரிப்பீட்டே போடுவது மட்டுமே இன்றைய என் தலையாய பணி...

கானா பிரபா said...

தகுந்த விளக்கத்துடன் நல்ல பதிவாக அமைந்திருந்தது

மங்கை said...

ஆஹா..அம்மணி கலக்கரீங்க...இருங்க ட்யூஷன்க்கு வரேன்...ஏன்னா நம்ம லட்சியத்துக்கு இது உதவும் இல்ல..
:-))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கோபி, சென்ஷி , ஜி. ரா நன்றி நன்றி .. பதிவைப்போடும்போது சிலருக்கு இதனைப்பற்றி தெரிந்திருக்கலாம் ..போடலாமா வேண்டாமா என்று கூட யோசித்தேன்.
ஆனால் எப்போதும் பதிவிடும் முன் அதனை பற்றி கூகிள் செய்துபார்ப்பது வழக்கம்.. அப்படி பார்த்ததில் வடுவூர் குமார் வேறு ஒரு மென்பொருள் பற்றி எழுதி இருந்தார் இதனைப்பற்றி தமிழில் இல்லை.. அதான் சிறுமுயற்சியில் போட்டாச்சு.. :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கானாப்பிரபா விளக்கமா இருக்கா நன்றி நன்றீ.. பாட்டுத்தலைவன் நீங்களே சொல்லிட்டபின் என்ன வேண்டும்..

----

மங்கை எந்த லட்சியம் பாடற லட்சியம் தானே.. அட வாங்க உங்களுக்கு பிண்ணனி இசையெல்லாம் சேத்து தரேன் பாடி கலக்குங்க..

Thamiz Priyan said...

///கோபிநாத் said...

சும்மா வா பதிவுக்கு சிறு முயற்சின்னு வச்சிருக்கிங்க..!!

சூப்பர் நீயூஸ்..மிக்க நன்றிக்கா ;)) ///
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே போட்டுக்கிறேன்... :)

Thamiz Priyan said...

அப்படியே நானும் முயற்சி பண்ணி பார்த்து சொல்றேன்...நன்றி :)

ரசிகன் said...

உபயோகமான பதிவு & சுட்டி..:)
நன்றி.

ரசிகன் said...

//இப்படி நாமாக செய்துபார்த்து கற்றுக்கொள்வதில் நல்ல விசயம் இருக்கிறது அது மறப்பதில்லை.//

உண்மைதான்:)

Thekkikattan|தெகா said...

புக் மார்க் பண்ணியாச்சு... நன்றி!

ஆயில்யன் said...

//வடுவூர் குமார் வேறு ஒரு மென்பொருள் பற்றி எழுதி இருந்தார் இதனைப்பற்றி தமிழில் இல்லை.. அதான் சிறுமுயற்சியில் போட்டாச்சு.. :)//
ஆமாம் அது அடாசிட்டி என்றொரு மென்பொருள்!

இதுவும் நல்லா சூப்பரா இருக்கு :)

இனி பலருக்கு இதன் மூலம் சிறு முயற்சிகள் ஆரம்பிக்கப்படலாம் :) (அதாகப்பட்டது நிறைய பேர் சொந்த குரலில் பாட ரொம்ப நாளா ஆச ஆரம்பிப்பாங்கன்னு சொல்ல வந்தேன்)

வடுவூர் குமார் said...

மைக்ரோபோனிலிருந்து ஸ்டிரியோ மிக்ஸ



இது எனக்கு வேலை செய்யவில்லை ஏனென்றால் என்னுடைய ஆடியோ இன் மற்றும் அவ்ட்புடையும் கேபிள் கொண்டு இணைக்கவில்லை.
இதே முறை ஆடாசிட்டியிலும் வேலைசெய்யும்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தமிழ் பிரியன் , ரசிகன் , ஆயில்யன் , தெக்கிக்காட்டான் நன்றி..
--------
வடுவூர்குமார் , இப்படி எல்லாம் வேற இருக்கா அந்த அளவு நுட்பமெல்லாம் எனக்குத்தெரியாதுங்க.. நானா எல்லாத்தை செய்து பார்த்து ஒர்க் ஆச்சேன்னு எழுதினேன்.. சரி ஸ்டிரியோ மிக்ஸ் வேலை செய்யாதவங்களுக்காக உங்க பதிவின் லிங்கை குடுத்துவிடலாம்..நன்றி

Deepa said...

இதுவல்லவோ.. R & D
ஜமாய்ச்சிட்டீங்க..
தொடரட்டும் உங்கள் பணி ...
would not miss this lesson for life !!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தீபா இந்த பதிவு எழுதியதின் முதல் காரணம் நீங்கதான்..பதிவெழுதி எல்லாருக்கும் நுட்பம் சொல்லித்தர நீங்களே நல்ல மென்பொருள் இது முன்னாடி எனக்குதெரியாதேன்னு சொன்னதால தான் :)

சத்யா said...

தகவலுக்கு நன்றி! ஆனா எனக்கு பாட எல்லாம் வராதே :(

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நீங்கள் பாடலைன்னா என்ன வேற யாராவது பாடியதை எம்பித்ரியாக்க இது உதவுமே.. :)

ஆனா பாடவராதுன்னு ஒன்னுமே இல்ல சத்யா.. பேசவர எல்லாருக்கும் பாட வரும்.. ஆனா மத்தவங்களால கேக்கமுடியுமா முடியாதா அங்க தான இருக்கு விசயம்.. :)))

சென்ஷி said...

//கயல்விழி முத்துலெட்சுமி said...
நீங்கள் பாடலைன்னா என்ன வேற யாராவது பாடியதை எம்பித்ரியாக்க இது உதவுமே.. :)

ஆனா பாடவராதுன்னு ஒன்னுமே இல்ல சத்யா.. பேசவர எல்லாருக்கும் பாட வரும்.. ஆனா மத்தவங்களால கேக்கமுடியுமா முடியாதா அங்க தான இருக்கு விசயம்.. :)))
//

:))

அட்றா சக்க.. அட்றா சக்க..அட்றா சக்க.. அட்றா சக்க..அட்றா சக்க.. அட்றா சக்க..அட்றா சக்க.. அட்றா சக்க..அட்றா சக்க.. அட்றா சக்க..அட்றா சக்க.. அட்றா சக்க..அட்றா சக்க.. அட்றா சக்க..அட்றா சக்க.. அட்றா சக்க..அட்றா சக்க.. அட்றா சக்க..அட்றா சக்க.. அட்றா சக்க..அட்றா சக்க.. அட்றா சக்க..அட்றா சக்க.. அட்றா சக்க..அட்றா சக்க.. அட்றா சக்க..அட்றா சக்க.. அட்றா சக்க..அட்றா சக்க.. அட்றா சக்க..அட்றா சக்க.. அட்றா சக்க..

Anonymous said...

நல்ல விஷயம்! வாத்துக்கள்! கண்டுபிடிங்க நான் யாருன்னு!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ரொம்ப ஈஸி... ..

( பட் இனி இந்த வாழ்த்து எப்பவும் வாத்தாக வேண்டாம்.. தயவு செய்து அபி அப்பா.. )
அப்படி வாத்து தான் போடுவீர்கள் என்றார்கள்.. :(

நிஜமா நல்லவன் said...

தகவலுக்கு ரொம்ப நன்றி.

ஆ.கோகுலன் said...

கட்டணம் அறவிடும் ஒன்லைன் ஓடியோ பதிவிறக்க இணையதளத்தினர் உங்கள் மீது கோபிக்கப்போகிறார்கள்.
:-) மிகவும் பயனுள்ள தகவல் நன்றி.

மலைநாடான் said...

அடுத்த முறை பொட்டியத் தூக்கிட்டு டெல்லிக்கே வந்துவிட வேண்டியதுதான்..:)