எதுவும் தனியே கிடைப்பதில்லை.
நான் எனும் தனிமைச்சொல்
கொண்டிருப்பதோ இரண்டெழுத்து.
இன்பமிருக்கும் இடத்தில் துன்பமிருக்கும்
துன்பமிருக்கும் இடத்தில் இன்பமிருக்கும்
பிரிக்க இயலா உறவு அது
உறவின் பொருளி்லிலும் இவையடங்கியே இருக்கும்.
ரசம் பூசிய கண்ணாடியென
பின்மறைவில் மற்றொன்றை வைத்து
விளையாடும் வாழ்க்கை.
அனுபவதினங்கள் தேய்த்து தேய்த்து
ரசம் நீங்கிய கண்ணாடி வழி
இன்பமும் துன்பமும்
உண்மையும் பொய்யும்
அருகருகில் இரட்டைபிறவியென .
தனிமை தனிமை என்ற ஒளி
பட்டு திரும்பிய கதிரெல்லாம்
இன்று ஊடுருவிச் சென்ற பக்கம்
காணக்கிடைக்கும் பல புன்னகை முகங்கள்.
photo .. thanks Leslie marr
சென்ஷியின் நான் எனும் தனிமைச் சொல் கவிதைக்கு எதிர் கவிதை. மேலே இருக்கும் குழந்தை அந்த பக்கம் அறியா இன்பத்திலிருக்கிறது. :))
38 comments:
//தனிமை தனிமை என்ற ஒளி
பட்டு திரும்பிய கதிரெல்லாம்
இன்று ஊடுருவிச் சென்ற பக்கம்
காணக்கிடைக்கும் பல புன்னகை முகங்கள்//
புன்னகை பூசிய போலி முகங்கள் அவை :-(
மீ த செகண்ட்
// இனியவள் புனிதா said...
//தனிமை தனிமை என்ற ஒளி
பட்டு திரும்பிய கதிரெல்லாம்
இன்று ஊடுருவிச் சென்ற பக்கம்
காணக்கிடைக்கும் பல புன்னகை முகங்கள்//
புன்னகை பூசிய போலி முகங்கள் அவை :-(
///
அப்பிடியெல்லாம் சொல்லப்பிடாது அக்கா:))))
போட்டோ கலக்கல் :)
புனிதா என்னங்க அவசரம் அதுக்குள்ள..மீத பர்ஸ்ட் போட்டிருக்கலாம்ல..:)
எதிர் கவுஜயே நல்லா இருக்கே.. அப்ப நேர் கவுஜ எல்லாம் எழுதுவீங்களா?
//ரசம் பூசிய கண்ணாடியென
பின்மறைவில் மற்றொன்றை வைத்து
விளையாடும் வாழ்க்கை.
அனுபவதினங்கள் தேய்த்து தேய்த்து
ரசம் நீங்கிய கண்ணாடி வழி
இன்பமும் துன்பமும்
உண்மையும் பொய்யும்
அருகருகில் இரட்டைபிறவியென //
இந்த வரிகளில் பிரும்மாண்டமாய் தெரிகிறது வாழ்க்கை :)
சாரிக்கா! நான் தான் பர்ஸ்ட்டா? ஜஸ்ட் மிஸ் ;-)
நல்ல முயற்சி ;))
//ஆயில்யன் said...
// இனியவள் புனிதா said...
//தனிமை தனிமை என்ற ஒளி
பட்டு திரும்பிய கதிரெல்லாம்
இன்று ஊடுருவிச் சென்ற பக்கம்
காணக்கிடைக்கும் பல புன்னகை முகங்கள்//
புன்னகை பூசிய போலி முகங்கள் அவை :-(
///
அப்பிடியெல்லாம் சொல்லப்பிடாது அக்கா:))))//
Grrrrrrrrrr :-P
ஆரம்பிச்சீட்டீங்களா கவிதை.. குட் குட்...
எல்லாத்துக்கு இலவச இனைப்பு இருக்குங்கறீங்க...
//மேலே இருக்கும் குழந்தை அந்த பக்கம் அறியா இன்பத்திலிருக்கிறது. :))//
ஆமாம்க்கா.. கண்ணாடிக்கு அந்த பக்கம் சுவர்தான் இருக்குதுன்னு அந்த குழந்தைக்கு தெரியல :(((
//ரசம் பூசிய கண்ணாடியென
பின்மறைவில் மற்றொன்றை வைத்து
விளையாடும் வாழ்க்கை.
//
சத்தியமான வார்த்தைகள்..
சூ... சூ........
//மேலே இருக்கும் குழந்தை அந்த பக்கம் அறியா இன்பத்திலிருக்கிறது.///
அந்த குழந்தையை பார்க்கும் போது
நமக்கு இன்பமாகத்தான் இருக்கிறது!
அடுத்து என்ன துன்பம் என்பதை அறியாமல்!
சரி! ''கட்டா பாணி'' அப்படின்னா ரசம் தானே ?
யப்பா.. இப்பத்தான் அங்கெ போயி நானிருக்கேன் ராசா ஒனக்கு-ன்னு பின்னூட்டீட்டு வரேன்..
நல்லாச் சொன்னீங்க மு.க!!!
புனிதா அதான் சொல்லி இருக்கேனே எதும் தனியா இருக்காதுன்னு. அந்த பொய் முகம் ங்கறீங்களே அதன் பின் இருக்கற உண்மையை கண்டுபிடிக்கட்டும்..:)
-----------------------------
தமிழ்பிரியன் இதுவரை எழுதியதெல்லாம் நேர் கவிதை தான் ..இது தான் எதிர்கவிதை..முதல் முயற்சி :)
------------------
ஆயில்யன் சரியா சொன்னீங்க அப்படில்லாம் சொல்லக்கூடாதுன்னு.. :) பிரம்மாண்டமான வாழ்க்கையில் நான் என்று எப்படி தனிமைப்படுத்திக்கிறது ..?
/தமிழ் பிரியன் said...
எதிர் கவுஜயே நல்லா இருக்கே.. அப்ப நேர் கவுஜ எல்லாம் எழுதுவீங்களா?
/
ரிப்பீட்டேய்...
ஆஹா இன்னுமொரு கவிஞரா??
வாழ்த்துக்கள். ரொம்ப ரசிச்சேன்
புனிதா நீங்க எங்க மிஸ் செய்தீங்க? எதையும் மிஸ் செய்யலையே .இப்பயும் நீங்க தான் பர்ஸ்ட்.. :):)
------------------------
கோபி :)
---------------------
மங்கை நீங்க சொல்றது ரொம்ப உண்மை ..இலவசங்கள் தான் .. ஆனா சில சமயம் தாங்க இலவசம் நமக்கு தேவையான பொருளா இருக்கும்..பலசமயம் இலவசமா வந்த பொருள் வேண்டாத ஒண்ணாவோ நம்ம ப்ராண்டாவொ இருக்காது.. ஆகா என்ன ஒரே தத்துவமா வருது.. ஹ்ம்.. என்னவோ போங்க..:)
சென்ஷி ரசம் பூசிய கண்ணாடியின் வாழ்க்கை விளையாட்டுத்தானே வாழ்க்கையை சுவாரசியப்படுத்துவதும் கூட.. :)
------------------
சிவா வருத்தப்படாதீங்க.. அவ்வள்வு மோசமாவா ஆகிடுச்சு.. :)
--------------------
ஜீவன் கட்டாபாணின்னா புளிப்பு சுவையானதுன்னு மகள் சொல்றா.. இப்ப எதுக்கு அது? கவிதைக்கு எதாச்சும் பொருந்துதா..? :(
//ஜீவன் கட்டாபாணின்னா புளிப்பு சுவையானதுன்னு மகள் சொல்றா.. இப்ப எதுக்கு அது? கவிதைக்கு எதாச்சும் பொருந்துதா..? :(//
''கட்டா பானி'' அப்படின்னா ''ரசம்'' ன்னு சொன்னாங்க ''ரசம்''
ரசம் பூசின கண்ணாடி அதான் கேட்டேன் ''
;;;)))
இதனை மேலும் மெருகூட்ட இன்னும் கொஞ்சம் நேரமெடுத்துருக்கலாமோ...
இரட்டைத் தன்மையிலேதானே நம்மின் ஒட்டு மொத்த வாழ்வுமே நகர்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.
முயற்சிக்கு ஓர் வாழ்த்துகள்!
எதிர் கவிதை சூப்பர்..
//
ரசம் பூசிய கண்ணாடியென
பின்மறைவில் மற்றொன்றை வைத்து
விளையாடும் வாழ்க்கை.
//
கலக்கல் வரிகள் முத்துக்கா..
ஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ், இங்க என்ன நெஜமான கவித போட்டிருக்கு, நான் எதிர்கவுஜன்னவுடன் ஜாலியா ஓடி வந்தேன்:):):)
இதுக்குத்தான் சென்ஷிண்ணே, சாம்பார் பூசின கண்ணாடிப் போட்டு பழகிக்கணும்:):):)
//ரசம் பூசிய கண்ணாடியென
பின்மறைவில் மற்றொன்றை வைத்து
விளையாடும் வாழ்க்கை.//
அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.
excellent. ethirkavithaila eppavum negative approach irukkum.
inga positive
super
good one.
///ரசம் பூசிய கண்ணாடியென
பின்மறைவில் மற்றொன்றை வைத்து
விளையாடும் வாழ்க்கை.
////
indha varigalukku, super photo pudichirukkeenga.
பரிசல் :) நன்றி..பரிசலாக கரைகடக்க சென்ஷிக்கு நீங்க இருக்கீங்களே அப்பறம் என்ன..?
---------------------
நிஜம்மா நல்லவன் நாம எழுதறது கவிதையோ இல்லையோ அப்படி போட்டிக்கிறோம்ல அப்படியே நேர்கவிஜன்னு ஒன்னு எழுதிட்டாபோச்சு இத்தனைபேர் கேட்டுட்டீங்களே.. :)
-----------------------
தென்றல்..நீங்க இன்னுமா என்னை ஒரு கவுஜாயினின்னு ஏத்துக்கல.. ம்ம்ம்.. அழறேன்.. எத்தனை கவிதை எழுதி இருக்கேன்.. :)))
ஜீவன் :))
--------------------
தெகா வாங்க.. மெருகேற்ற எல்லாம் நேரமில்லங்க.. அவசரமான எதிர்கவிதை.. :))
------------------------
பூர்ணிமா நன்றிப்பா..
கவிதையில் பெரும் புகழ்பெற்ற ராப் நீங்க உங்க வாயாலே இது உண்மைக்கவிதைன்னு சொன்னதுல எனக்கு பெருமை.. :)
----------------------------
ராமலக்ஷ்மி இப்படி ஏமாத்திட்டீங்களே.. எங்கே உங்க அடுக்குவசனப்பின்னூட்டம்..
எங்கே உங்க
எதுகை மோனை பின்னூட்டம்..
:(
முரளிக்கண்ணன் நன்றிங்க..நீங்க எல்லாத்தையும் ரொம்ப வித்தியாசமாவே யோசிக்கிறீங்க உங்கள் பதிவுகளைப்போலவே ..:)
-------------------------
சர்வேசன்.. நான் நிறைய படம் தேடினேன் அப்பறம் இது சரியா தோணுச்சு. என்ன அழகு பாப்பா.. இல்ல :)
//ராமலக்ஷ்மி இப்படி ஏமாத்திட்டீங்களே.. எங்கே உங்க அடுக்குவசனப்பின்னூட்டம்..
எங்கே உங்க
எதுகை மோனை பின்னூட்டம்..
:(//
கொஞ்சம் பயமாயிட்டுங்க ஓவர் டூ பண்றேனோன்னு:))! தமிழ் பிரியனும் ஒருமுறை இதைக் குறிப்பிட்டிருந்தார். கடைசில என்னை டி.ஆர் ரேஞ்சுக்கு நினைத்திடக் கூடாதேன்னு ஒரு கவலை வந்துடுச்சு
:(!
சரி உங்களுக்குப் பிடிச்சிருந்தா தொடருகிறேன்:))!
நிச்சயமாய் ராமலக்ஷ்மி நாங்க அதை படிக்க ஆர்வமாய் இருக்கோம் தயங்காமல் எழுதுங்க..
அனுபவதினங்கள் தேய்த்து தேய்த்து
ரசம் நீங்கிய கண்ணாடி வழி
இன்பமும் துன்பமும்
உண்மையும் பொய்யும்
அருகருகில் இரட்டைபிறவியென .//
அழகா அருமையா சொல்லியிருக்கீங்க.
ம், ரசம் போன கண்ணாடியாத்தான் இருக்கு வாழ்க்கை, குழந்தையென்று ஒன்று வரும் வரையில்.
படம் அழகு.
//மேலே இருக்கும் குழந்தை அந்த பக்கம் அறியா இன்பத்திலிருக்கிறது. :))//
அதை அறியா வரைதான் இன்பமே....
அன்புடன் அருணா
Post a Comment