March 18, 2009

அல்மோரா- 2 கோலு தேவி

மலைப்பாதையில் நடக்க ஆரம்பித்த இரண்டாவது நிமிடம் அந்த நாய் எங்கள் பின்னாடி வந்தது.. எனக்கும் என் பிள்ளைகளுக்கும் நாய்கள் என்றாலே சிம்ம சொப்பனம். அங்கே இருந்தவர்கள் வழக்கம்போல இது ஒன்றும் செய்யாது என்று சொன்னாலும் அது எங்கள் பின்னால் மிக நெருக்கமாக வருவது எங்களுக்கு திகிலாக இருந்தது. முதலில் நான் ஆரம்பித்து வைக்க மகள் தொடர அது கடைசியில் மகன் திரும்பி திரும்பி பார்த்து பயப்பட என்று தொடர்ந்தது.

கணவர் நீங்க திரும்பி பார்க்காமல் வந்தாலே அது ஒன்றும் செய்யாது என்று சொல்ல.. பிறகு கொஞ்ச நேரத்தில் அது சாலை அந்த புறமாக எங்களை தொடர்ந்து வந்தது. எங்கெல்லாம் நாங்கள் சற்றே ஓய்வெடுக்கிறோமோ அங்கெல்லாம் அதுவும் மலை மேலே ஏறியோ அல்லது ஓய்வெடுத்தோ விடாமல் தொடர்ந்தது. பார்த்த போது என்னவோ எங்கள் பாதுகாவலுக்கு வந்தது போலவே இருந்தது. ஜாகேஸ்வரர் கோயிலில் கணவரிட ம் இன்னும் கொஞ்சம் மேலேறினால் குபேரர் கோயில் இருப்பதாக சொன்னார்களாம். சரியாகக் கேட்டீர்களா பசியினால் நாம் மதிய உணவுக்கு திரும்பிவிட்டோமே.. அது பைரவர் கோயிலாய் இருக்குமோ என்று யோசித்தேன்.. பைரவர் தான் இந்த நாயை அனுப்பிவிட்டாரோ என்று :)

உயர உயரமான மரங்களை வேடிக்கைப்பார்த்த போது ஒரு கருமை நிறப்பறவை வித்தியாசமாக இருந்தது. காகத்தைப் போன்ற தோற்றம் ஆனால் நல்ல மஞ்சள் நிற
மூக்கு . படமெடுக்க இயலாதபடி அது தவ்வி தவ்வி கிளைமாறிக்கொண்டிருந்தது. அது மெக்பையோ , ஜங்கிள் குக்கூவோ, எதுவோ தெரியவில்லை. நேற்று ஒரு ஆராய்ச்சி செய்து பார்த்துவிட்டேன். பின்சர் என்கிற பறவைகள் சரணாலயம் ஒன்று இருக்கின்றதாம் அதில் 180 வகையான பறவைகள் உண்டாம். எங்கள் மூன்று நாள் திட்டத்தில் அது இல்லை.

வெளிநாட்டவர் ஒருவர் எதிரில் வந்து கொண்டிருந்தார் எங்களைப் பார்த்து புன்னகையோடு ஹலோ சொன்னார். நான் வீடியோ எடுத்தபடியே நடந்து கொண்டிருந்தேன.மலையை சேர்ந்த ஒரு பையன் எங்களை வேகமாக கடந்து சென்றான். மற்றபடி சாலை அமைதியான ஆற்றின் சலசலப்பு மட்டுமாக இருந்தது. கருப்பு நாய் தொடர்ந்து கொண்டோ முன்னே வழிநடத்திக்கொண்டோ சென்று கொண்டிருந்தது. அதனை நின்று போட்டோ எடுக்க மட்டும் தைரியம் வரவில்ல. வீடியோ மட்டுமே எடுத்தேன்.
வழிகளில் கூட அந்தகோயில்களின் சாயலை ஒத்த சில அமைப்புக்களைக் கண்டோம்.

ஒரு ஜீப் வரும் சத்தம் கேட்டது நின்று கை காட்டியதும் எங்களை கூட்டு ரோட்டில் இறக்கிவிட சம்மதிக்க நாங்கள் அதில் தொற்றிக்கொண்டோம். நாய் சோகமாக திரும்பிக்கொண்டது. கூட்டு ரோட்டில் சற்றே காத்திருக்க நேர்ந்தது. மற்றொரு ஜீப் வந்ததும் அதில் ஏறிக்கொண்டோம். ஜீப் காரர்கள் வேக ரேஸ்கார்களை ஒத்திருக்கிறது. வளைவுகளில் கூட சர்ரென்று எடுக்கும் போது ரோலர்கோஸ்டர்களைப் போல உணர்ந்தோம்.

வழியில் தான் கோலு தேவி கோயில் உள்ளது ஆனால் அது அடுத்த நாளைக்கான திட்டத்தில் இருந்ததால் நாங்கள் நேராக அல்மோராவுக்கே திரும்பினோம். கோலு தேவி கோயில் வரும்போது ஜீப் ஓட்டுபவர் வண்டியில் கட்டி இருந்த மணியை ஒரு அடி அடித்து விட்டு கும்பிட்டு க் கொண்டார்.
அல்மோராவில் மார்க்கெட் பகுதியின் கீழ் சாலையில் இறக்கிவிட்டுவிட்டார் அந்த ஜீப்வாலா. மேல் சாலைக்கு செல்ல எக்கச்சக்கமா படிகள் . ஆனால் அவர்களின் சந்தைகள் , கடைகளைப் பார்க்க நல்ல வாய்ப்பு.

அறைக்கு திரும்பும் வழியில் அடுத்தநாளுக்காக ஒரு வாடகை வண்டியை ஏற்பாடு செய்துகொண்டோம். முழுநாளுக்கான வாடகைக்குத்தான் வண்டி கிடைக்கும் என்பதால் தான் ஜாகேஸ்வர் மட்டுமான தினத்துக்கு நாங்கள் வண்டி எடுத்துக்கொள்ளவில்லை.
அறைக்குச் சென்று நல்ல வெந்நீரை பாதங்களுக்கு கொடுத்து இதமாக்கிக் கொண்டோம். இரவு சாப்பாடு முடித்து களைப்பால் நல்ல உறக்கம்.


மறுநாள் காலையில் வாடகை வண்டி வந்து காத்திருந்தது. முதல் இடமாக ப்ரைட்ஸ் அண்ட் கார்னர் சென்றோம். அங்கே பள்ளத்தாக்கின் அருமையான காட்சி விரிந்து கிடக்கிறது. ராமகிருஷ்ணா குடில் என்று ஒரு புத்தக நிலையம் இருக்கின்றது. நாங்கள் அதற்குள் செல்லவில்லை. மேலிருந்து அந்த காட்சியை மட்டும் கண்டு ரசித்தோம். சூரியோதயம் மற்றும் அஸ்தமனம் பார்க்க அங்கே கூட்டம் வருமென்று சொன்னார்கள்.

விவேகானந்தர் குறுக்கு சந்து துபாய் மாதிரி இல்லாம நிஜம்மாவே இங்க விவேகானந்தர் வந்திருந்து அமைதியாக தியானம் செய்திருக்கிறார்.

பள்ளத்தாக்கின் நடுவில் ஆறு வற்றிக்கிடந்ததை சுட்டிக்காட்டிய காரோட்டி . மர பயன்பாட்டிற்காக வைக்கப்பட்ட ஷீக் மரங்களால் தண்ணீர் தட்டுபாடும் மழையின்மை, வயல் வேலைகளில் தடங்கல்களும் ஏற்படுவதாகக் குறைபட்டுக்கொண்டார்.

காத்கோடகாமைச் சேர்ந்த காரோட்டி பல வருடங்கள் தில்லியில் இருந்துவிட்டு பிறந்த ஊரைப்பிரிந்திருக்க முடியாமல் திரும்பிவிட்டதாகக் கூறினார். முதல் நாளில் ம்யூசியக் காப்பாளரும் இதே போல பனிப்பொழிவே இந்த வருடம் இல்லை. காலநிலை மாற்றம் ரொம்பவும் மோசமாக நிகழ்கிறது என்று வருத்தப்பட்டார்.

ப்ரைட்ஸ் அண்ட் கார்னரிலிருந்து நாங்கள் கோலு தேவி கோயிலுக்கு சென்றோம். அங்கே பித்தளை மணிகளை வேண்டுதல் நிறைவேறியதென்று நன்றியாக சமர்ப்பிப்பது ஒரு வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த பக்கத்து மக்களுக்கு மிகப் பெரிய தெய்வமாக இருக்கிறாள் கோலு தேவி. செதுக்கபட்ட ஒரு சின்ன சுவற்றோடான மார்பிள் தேவிதான்.

எங்கே பார்த்தாலும் மணிகள் குழந்தைகளுக்கோ மகிழ்ச்சி கொண்டாட்டம். சின்னதும் பெரியதுமான மணிகளை அடித்துக்கொண்டே இருந்தார்கள். கோயிலின் பாதையிலும் கோயிலைச் சுற்றியும் பெரிய பெரிய முறுக்கு கம்பிகளை பொறுத்தி இருக்கிறார்கள் அதில் மணிகளை விருப்பமான இடத்தில் கோர்த்துக்கொண்டே போகலாம்.சமயபுரமாரியம்மன் கோயில் போல கடிதங்களூம் சேர்ந்து கட்டி தொங்கவிட்டிருக்கிறார்கள். அதுவும் திறந்த கடிதமாக தாள்கள், கோர்ட் கேஸ் பேப்பர்களின் காப்பிகள் . நானும் ஒரு சிறு மணியை வாங்கி இதுவரை செய்த எல்லா நன்மைக்கும் நன்றி தெரிவித்து இனியும் தேவைப்படுபவைகளை மனதிலேயே ஒரு லிஸ்ட் போட்டு கட்டி விட்டேன். சிவப்பு துணி ஒன்றை தேவியின் பாதத்திலிருந்து மணியில் சுற்றித்தந்தார் பூஜை செய்பவர்.

நம் ஊரில் ப்ரசாத தட்டு போல இங்கே ஒரு சாப்பாட்டு தட்டு குழித்தட்டு போல ஒன்றில் குங்குமம் மஞ்சள் அரிசி போட்டு தருகிறார்கள். தேங்கா சீனி மிட்டாய்கள் நம் விருப்பம். பூஜை செய்பவர் மந்திரங்கள் சொல்லியபடி மஞ்சளைகுழைத்து நெற்றியில் வைத்து பின்னே குங்குமம் குழைத்து அதையும் அது மேலேயே வைத்து இரண்டு அரிசியை ஒட்டவைக்கிறார். மக்கள் அந்த அரிசிபொட்டோடே ஊருக்குள் வலம்வருகிறார்கள்.

பெண்கள் குங்குமத்தை குழைத்து வகிட்டில் பூசுவதுமல்லாமல் மூக்கின் பாதியிலிருர்ந்து தொடங்கி வகிட்டு பாதி வரை பூசி இருக்கிறார்கள். அங்கிருந்து கட்டார்மல் என்கிற மலை கிராமத்திற்கு செல்ல வேண்டும். அங்கே நடக்க வேண்டிய தூரம் அதிகமென்பதால் வழியில் முதலில் மதிய உணவை முடித்துக்கொண்டோம். கட்டார்மல்லில் சூரியதேவ் மந்திர். அடுத்த பகுதியில்.

24 comments:

நட்புடன் ஜமால் said...

பச்சை மணிகள் அழகு

முத்துலெட்சுமி-கயல்விழி said...

பதிவை தமிழ்மணத்தில் போடுமுன்னே
பாய்ந்தோடி
பச்சை மணி பற்றி கமெண்ட் போட்டுட்டீங்களே ஜமால்.. :)

எம்.எம்.அப்துல்லா said...

:)

sindhusubash said...

அழகான புகைப்படங்கள்!இவ்வளவு மணிகளா?

இந்த இடங்களை பார்க்க ஆவலை தூண்டுகிறது.

முத்துலெட்சுமி-கயல்விழி said...

அப்துல்லா.. நன்றி..
------------------
சிந்து எல்லா அளவிலும் இருக்கிறது மணிகள். தூக்கிவிட தேவையில்லாம கீழேயும் இருக்கிறபடியால் குட்டீஸுக்கு ஒரே குஷி..டிங் டாங் டாங் ...

வித்யா said...

போட்டோச் சூப்பர்க்கா:)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

நன்றி வித்யா.. :)

கோபிநாத் said...

இப்போதைக்கு உள்ளேன் அக்கா ;))

தமிழ் பிரியன் said...

புகைப்படங்களுடன் பயணக் கட்டுரை எழுதுவதை ரசிக்க வைக்கின்றது..ம்.. தொடர்கின்றோம்.

நாகை சிவா said...

சூப்பர் :)))

முத்துலெட்சுமி-கயல்விழி said...

கோபி , தமிழ்பிரியன், நாகை சிவா.. நன்றி..

மிஸஸ்.டவுட் said...

பயணத்தைப் பற்றிய உங்கள் பகிர்வும் படங்களும் கொள்ளை அழகு .

ஆயில்யன் said...

//கணவர் நீங்க திரும்பி பார்க்காமல் வந்தாலே அது ஒன்றும் செய்யாது என்று சொல்ல.. //

இதான் இதுதான் பயந்தாலும் கூட தைரியம் கொடுக்கிற கேரக்டர் உள்ள என்னை மாதிரி ஆளுங்க செய்யற வேலை! :)

ஆயில்யன் said...

//நாம் மதிய உணவுக்கு திரும்பிவிட்டோமே.. அது பைரவர் கோயிலாய் இருக்குமோ என்று யோசித்தேன்.. பைரவர் தான் இந்த நாயை அனுப்பிவிட்டாரோ என்று :)
//
அம்புட்டு பயத்திலயும் கூட, உள் மனசு உங்களை காமெடி பண்ண வைச்சிருக்குது பாருங்களேன்!

ஆயில்யன் said...

//வெளிநாட்டவர் ஒருவர் எதிரில் வந்து கொண்டிருந்தார் எங்களைப் பார்த்து புன்னகையோடு ஹலோ சொன்னார்.//

எங்கத்தான் கத்துக்கிட்டாங்களோ அப்படி ஒரு அப்ரோச் ! ரியலி சூப்பர்!

ஆயில்யன் said...

//கருப்பு நாய் தொடர்ந்து கொண்டோ முன்னே வழிநடத்திக்கொண்டோ சென்று கொண்டிருந்தது. அதனை நின்று போட்டோ எடுக்க மட்டும் தைரியம் வரவில்ல. வீடியோ மட்டுமே எடுத்தேன்.//

அப்ப ரிஸ்க் எடுக்க விரும்பலை அப்படித்தானே....? :((

ஆயில்யன் said...

பின்னூட்ட டிஸ்கி :-

பதிவினை முழுவதும் படித்த திருப்தியோடு, எனக்கு பிடித்த பின்னூட்டத்தினை இங்கு அளித்துள்ளேன் -ஏற்றுக்கொண்டமைக்கு நன்றிகளுடன்.....ஆயில்யன்

நான் ஆதவன் said...

போட்டோ எல்லாம் சூப்பர் மேடம். ஆனா அந்த நாய் படம் மட்டும் மிஸ்ஸிங் :(

நாங்கெல்லாம் அங்க போக முடியுமான்னு தெரியல...உங்க பயணகட்டுரையில பார்த்தா தான் உண்டு

முத்துலெட்சுமி-கயல்விழி said...

டவுட் நன்றிப்பா..
-----------------------
ஆயில்யன் ... நீங்களாம் எப்படியாப்பட்ட தைரியசாலின்னு தெரியுது..

நான் கவனிச்சதுல அந்த ரிஸ்க்கை எடுத்திருக்கேன் போல படங்களை சரியா கவனிக்கல.. நாய் போட்டோ ஒன்னு இருக்கு..
--------------------------
நான் ஆதவன் இப்படி எல்லாம் வருத்தப்படக்கூடாது.. உடனே பழிக்கு பழியா உங்க ஊரைப்பத்தி அங்க டிசர்ட் இருக்கு .. அதுல அண்ணாந்து பாத்தா ஆயிரக்கணக்கான நட்சத்திரம் இருக்கும் அதை பார்க்க கண்கோடி வேணும்ன்னு எழுதிடனும்..

சந்தனமுல்லை said...

போட்டோ எடுக்கறதுக்குன்னே போன ட்ரிப் மாதிரி இருக்கு!! :-)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

முல்லை.. :)

வழக்கம்போல போற வர தெருவையே ..பதிவெழுத விசயம் கிடைக்குதான்னு பாக்க ஆரம்பிச்சிட்ட ப்ளாக்கரானப்பறம்... இதெல்லாம் வலை அரசியலில் சகஜம் தானே..

பாருங்க ஒரு தொடர்பதிவெழுத அப்ப எத்தனை செலவாகுதுன்னு.. :))

Jeeves said...

// வித்யா said...

போட்டோச் சூப்பர்க்கா:)//

repeateeeeey


புகைப்படங்கள் அருமை இந்த தடவை!!

ராமலக்ஷ்மி said...

மணிகள் படம் அருமை. பயணத்தைப் பற்றிய விவரிப்பும் மணிமணியா இருக்கு!

முத்துலெட்சுமி-கயல்விழி said...

நன்றி ஜீவ்ஸ் நன்றி ராமலக்ஷ்மி