March 19, 2009

அல்மோரா -3 கசார் தேவி

போன பதிவில் தவறுதலாக சூரியக்கோயில் தான் அடுத்த திட்டமென்று எழுதிவிட்டேன். கொஞ்சம் மறதி அதிகம். கோலு தேவியை அடுத்து நாங்கள் காளிமத் என்கிற இடம் சென்றோம். அங்கே கசார் குன்றின் மேல் தேவியின் கோயில் இருக்கிறது.
நுழைவு வாயிலின் அருகில் இருந்த பெரிய பாறையில் ஒரு நாக வடிவம் பெயிண்ட் செய்யப்பட்டிருந்தது. அந்த உருவம் சற்றே பாறையிலிருந்து செதுக்கப்பட்ட வடிவம் போல எம்போஸ் ஆகி இருந்தது. ஆனால் தானாக உருவானதாம். இது போன்றே வேறொரு சாலைப்பணியின் போது ஒரு இடத்தில் அனுமனின் கதை கிடைத்ததாம். அதனை முதலில் கவனிக்கவில்லையாம் . ஒருவருக்கு காயமேற்பட்டு பாதியில் வேலை நின்றபோது தான் அதனை கவனித்தார்களாம். காரோட்டி தெரிவித்த விசயம் இது.

ஏற்றமான பாதையில் சென்று கசார் குன்றின் மேல் அடைந்த போது அங்கே எங்களைத்தவிர யாருமில்லை. அமைதியான அந்த இடமும் பள்ளத்தாக்கின் விரிந்த காட்சியும்... ( வேறு பருவநிலையில் என்றால் தூரத்தில் பனிமலைகளும் தெரியும்) 1750 அடி கடல்மட்டத்திலிருந்து உயர்ந்த அந்த கோயில் 2 வது நூற்றாண்டின் கோயிலாம். விவேகானந்தர் மற்றும் பல ஆன்மீகப் பெரும்புள்ளிகள் அங்கே அமர்ந்து தியானம் செய்திருக்கிறார்கள். குகை போன்ற இடத்தில் தேவி . சுற்றிலும் சிறு அறையாக சன்னிதி.
அந்த இடத்தில் வைத்து மகளிடம் சொன்னது...
" இது போன்ற அமைதியான இடத்தில் தியானம் செய்து கடவுள் தன்மைய உணர்ந்த பெரியவங்க அதை கோயிலாக்கி மத்தவங்களும் உணர செய்திருக்காங்கன்னு '" ( இது தெகாவின் பின்னூட்டத்துக்கு பிறகு நினைவுக்கு வந்தது)

அங்கிருந்து சற்றே மேடான ஓரிடத்தில் சிவன் கோயில். அங்கிருந்து பனிமலைகளை காண அமர்விடமும் உண்டு.

திரும்பி வருகையில் ஒரு குடும்பம் ஏறிக்கொண்டிருந்தார்கள்.. உஃப் அம்மா அப்பா.. ஒரு கார் வரும்படி செய்திருக்கமாட்டார்களா என்றபடி.. குரங்குகள் சிலவும் அங்கே இங்கே அலைந்த படி இருந்தன.. ஆனால் எங்களை தொந்திரவு செய்யவில்லை. நாங்களும் அவர்களை தொந்திரவு செய்யவில்லை.

போன பதிவில் அந்த பைரவரை போட்டோ எடுக்கலை என்று சொன்னதும் ஆயில் ஆதவன் இருவரும் கேட்டதுக்கப்பறம் மீள்பார்வை பார்த்ததில் அந்த ரிஸ்க் எடுத்திருக்கேன் என்றே தெரிகிறது படம் தான் சரியாக வரவில்லை.. இதோ அவர்...

19 comments:

கானா பிரபா said...

படங்களோடு சுருக்கமா முடிச்சிட்டீங்க, நல்ல பதிவு

ஆயில்யன் said...

//கொஞ்சம் மறதி அதிகம்//

ஆமாம் நம்பிட்டோம்!

புதுகைத் தென்றல் said...

me the first

புதுகைத் தென்றல் said...

படங்கள் அருமையா இருக்கு.

நாகவடிவம் போட்டோ அழகா
எடுத்திருக்கீங்க.

முத்துலெட்சுமி-கயல்விழி said...

கானா நீளமா இருந்துச்சு இன்னோரு கோயிலும் சேர்ந்து .. சரி படிக்கிறவங்களுக்கும் கஷ்டம் தானேன்னு அதை அடுத்த பதிவாக்கிட்டேன்.. :)
-------------------------
ஆயில்யன்.. நிஜம்மாவே மறந்துடக்கூடாதுங்கறதுக்காகவே அவசரமா எழுதிட்டிருக்கேன் பதிவுகளை.. :)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

புதுகைத்தென்றல், 3 நிமிசத்தில் விட்டுட்டீங்க பரவாயில்லை..
:)

sindhusubash said...

அடுத்த தடவை பனி மலை தெரியும் போது தான் நீங்க அந்த கோவிலுக்கு போகணும்...என்னோட அன்பு கட்டளை.

முத்துலெட்சுமி-கயல்விழி said...

பனிமலையை இதுக்குமுன்ன முசோரி மற்றும் நானித்தாலிலிருந்து பாத்திருக்கோம் சிந்து.. பழய பதிவுகள் பாருங்க.. ஆனா அதுக்கென்னன்னா டிசம்பர் ஜனவரியில் போகனும் அப்ப இந்த ஊர்களில் இன்னும் நடுக்கும்.. அண்ட் பனிப்பொழிவு கூட இருக்கும் .. குழந்தைகள் தாங்கனுமே..

வித்யா said...

\\எங்களை தொந்திரவு செய்யவில்லை. நாங்களும் அவர்களை தொந்திரவு செய்யவில்லை.\\

:)

Jeeves said...

more photos :) keep going

Thekkikattan|தெகா said...

எனக்கு அந்த உயரம் பிடிச்சிருக்கு. பெரும் புள்ளிகள் அமர்ந்திருந்த இடமின்ன உடனே ஒரு வித்தியாசமான உணர்வும் அமைதியும் இருக்கிற மாதிரி ஃபீல் ஆகியிருக்குமே.

பனியோட மலை முகடுகள் காணக் கிடைத்திருந்தால் இன்னும் படங்கள் அழகோ அழகாக இருந்துருக்கும், இல்ல?

Poornima Saravana kumar said...

படங்கள் அழகு:)

2வது படம் டாப் வியூவில் எடுத்திருந்தால் இன்னமும் தெளிவா இருந்திருக்குமோ?

முத்துலெட்சுமி-கயல்விழி said...

வித்யா.. வாங்க :)
-----------------------------------
ஜீவ்ஸ் இன்னும் ஒரு பதிவுக்கு போட்டோ இருக்கு.. :)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

தொலைவில் இருக்கு பனிமலைகள் காணக்கிடைத்திருந்தாலும் அது அத்தனை தெளிவா படத்துலவருமான்னு தெரியல..

ம். அந்த உயரமும் அமைதியான இடமும் வித்தியாசமான உணர்வுகள் தந்தது தான். ஆஃப் சீசனா இருந்ததால் அந்த அமைதி கிடைச்சிருக்கும்ன்னு நினைக்கிறேன்..

தமிழ் பிரியன் said...

படங்களிலேயே அமைதியான இடம் என்பதை உணர முடிகின்றது. நிறைய இடங்கள் புதுப் பொழிவுடன் இருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது. இன்னும் மக்களிடம் புராதானங்களை பாதுகாக்கும் மனம் இருப்பது சந்தோசம்.

தமிழ் பிரியன் said...

இன்னும் ஒரு பதிவு தானா? ஸ்தல புராணங்களை கொஞ்சம் நீட்டி சொன்னால் மற்றவர்களுக்கு பயனாக இருக்குமே... துளசி டீச்சர் மாதிரி.. :)

நாகை சிவா said...

நல்ல பதிவு!

ராமலக்ஷ்மி said...

படங்கள் அருமை. பைரவரையும் விடவில்லை நீங்கள்:)!

முத்துலெட்சுமி-கயல்விழி said...

தமிழ்பிரியன் அப்படி எல்லாம் விரிச்சு எழுதத் தெரிஞ்சா நானும் டீச்சராகிடமாட்டேனா.. நான் இன்னும் ஸ்டூடண்ட் தானே.. :)) ..

------------------------------
நாகை சிவா... ராமலக்ஷ்மி நன்றி.. :)