March 26, 2009

சாரு ன்னா ச்சோர் (திருடன்)

நான் எப்பவும் கருமணியில் தான் தாலி போடறது. தில்லிக்கா போற? கல்யாணம் செய்துன்னு அப்பவே தில்லி என்பது கொள்ளைக்காரங்க நகரம்ன்னு எல்லாருக்கும் பதிஞ்சு போய் இருந்தது.
கருமணி செட்ல இருந்த லெக்ஷ்மி டாலரை கழட்டிட்டு தாலியை அதுல கோர்த்து போட்டுக்கிட்டேன். என் பொண்ணு எப்பவும் அதுல தான் விளையாடுவா.. அதனால் அது அடிக்கடி அந்து போகும்..தங்க வளையல் தங்க செயின்ல விளையாட விடறேயேன்னு திட்டுவாங்க தான் ...பெரியவங்க சொல்றதை நாம என்னைக்கு கேட்டிருக்கோம்.. என் பிள்ளைக்கு இல்லாததான்னு ஒரு எண்ணம்.

மாயவரம் போகும்போதேல்லாம் பத்தர் கிட்ட ஒரு அப்பாயிண்ட்மெண்ட் வச்சிக்கிட்டு அதை ஒட்டிக்கிவேன்.. பின்ன தில்லியிலும் ஒரு பத்தர் பாத்து வச்சிக்கிட்டேன் பத்து ரூபாய்க்கு ஒட்டித்தருவார்... இப்படித்தான் ஒருமுறை அது அறுந்து அறுந்து ஒட்டி ஒட்டி குட்டியாபோச்சுன்னு அம்மா ரிப்பேர் செய்துவைக்கிறேன்னு வாங்கிவச்சிட்டாங்க.. கணவருக்கு கல்யாணத்துக்குப் போட்ட மைனர் செயினை எடுத்து அதில தாலியக் கோத்து வச்சிருந்தேன். கணவர் ஒரு மைனரும் இல்லை நகையும் போடறதில்ல என்பதால் அது பளபளன்னு இருந்தது.

நான் ஆறேமுக்காலுக்கா பிக் ஷாப்பரை எடுத்துக்கிட்டு சந்தைக்கு கிளம்பினேன். என்னைத்தாண்டி ஒரு பையன் வேகமாப் போனான். நான் என் தோழி வீட்டுக்குப் போய் ஒரு விசயம் சொல்லிட்டு சந்தைக்கு போறதா திட்டம். தோழிவீட்டுத்தெருவில் நடமாட்டமே இல்லை. நான் அங்கே திரும்பும் முன்ன வேகவேகமாப்போன பையன் திரும்ப வந்தான். நானும் நம்மளைப்போல ஒரு ஆளு போல..எதை மறந்தானோ வீட்டுலன்னு நினைச்சிக்கிட்டேன். முதல் ப்ளோர்ல தோழிவீடு. ரெண்டாவது படியில் நான் நிக்கும் போது முதல் படியில் அந்த பையன் நிக்கிறான். அய்யோ ன்னு ஆகிடுச்சு. மேடம் உங்க பேரு என்னன்னு கேக்கறான்.

என்னடா இது தேர்வுக்குபோறாப்பல அவசரமாப்போனவன் திரும்ப வந்து என்கிட்ட பேரு கேக்கறானே சரி என்னமோ இருக்குன்னு யோசிக்கிறதுக்குள்ள அவன் என் கழுத்து செயினை பிடிச்சுக்கிட்டிருக்கான் . நான் இடதுபக்கம் புடிச்சு வச்சிருக்கேன். அவன் வலதுபக்கம் இழுக்கிறான். அந்த நேரம்ன்னு பாத்து ஆங்கிலத்தில் கத்தவா ஹிந்தில கத்தவான்னு யோசிக்கமுடியல.. தோழியோட பெண் பேரு சாரு .. சாரு சாரு யாராச்சும் வாங்கன்னு தமிழிலேயே கத்தினேன். அவங்கவீட்டுல கொஞ்சமா யாரோ கூப்பிட்டாபல கேட்டுச்சுன்னு அப்பரமா சொன்னாங்க.

சாரு ச்சோர்ன்னு கேட்டிருக்கும்போல எதிர்த்த பில்டிங்காரங்க லைட்டைப்போட்டு விட்டாங்க.. அவன் கத்துக்குட்டி திருடன் போல பயந்து ஓடிட்டான். கையைப்பார்த்தா செயின் கையில் இருக்கு ரெண்டு துண்டா.. மேலே ஏறி தோழிவீட்டுல தண்ணி குடிச்சு ஆசுவாசப்படுத்தும் போது தான் தெரிந்தது கழுத்தில் ரத்தம்.

பிறகு அடுத்தநாள் தெரியவந்தது என்னன்னா.. அவன் வேகமா நடக்கல ஓடி இருக்கான். வேற ஒருத்தங்ககிட்ட திருட முயன்று அவங்க ஆகிருதியா இருந்ததால அவனை தள்ளிவிட்டுட்டாங்களாம்.. அங்கருந்து ஓடியவன் தான் ...ஆகா மாட்டினாடான்னு என்கிட்ட வந்திருக்கான்.

இப்ப ஏன் இந்த கதையா?? செயின் திருடி போரடிச்சிடுச்சாம்... போன வாரம் துப்பாக்கி முனையில் வைரத்தோடு ஒன்றை கழட்டிக்குடுக்க சொல்லிவாங்கிட்டுப் போனானாம் திருடன். இந்த வாரசந்தையில் எல்லாபெண்களும் மங்களகரமான மஞ்சள் கயிற்றோடும். ஹிந்திக்காரர்கள் எல்லாம் வெற்றுக்கழுத்தோடும் வந்திருந்தார்கள்.

கொள்ளைக்கார நகரத்தில் கொண்டவனை மனசில் வைத்தால் போதுமென்று தாலியை எல்லாரும் கழட்டிவைக்கவேண்டியது தானே..

60 comments:

வெயிலான் said...

// அந்த நேரம்ன்னு பாத்து ஆங்கிலத்தில் கத்தவா ஹிந்தில கத்தவான்னு யோசிக்கமுடியல.. //

பதற்றத்தில் இருக்கும் போது பேச்சு வராது. இனியாவது மிகவும் கவனமாயிருங்கள்.

நட்புடன் ஜமால் said...

\\கொள்ளைக்கார நகரத்தில் கொண்டவனை மனசில் வைத்தால் போதுமென்று தாலியை எல்லாரும் கழட்டிவைக்கவேண்டியது தானே..\\

இந்த நிலைக்கு கொண்டுவந்துட்டாய்ங்க

சென்ஷி said...

:-)

மீ த பர்ஸ்ட்ட்

மிஸஸ்.டவுட் said...

சாருன்ன உடனே நான் வேற ஏதோ இல்ல நினைச்சிட்டேன் ,வந்து பார்த்தா அக்கா சொந்தக் கதை இது,தாலி செயின் முக்கியம் தான் அதை விட முக்கியம் தாலி போட்டுக்க கழுத்தும் வேணுமே பழுதில்லாம ,அதனால செயினைக் கழட்டி வச்சாக் கூட தப்பில்லை தான் போல.

நான் ஆதவன் said...

சூடான இடுக்கைக்கு ஒரு இடம் புக் பண்ணுங்கப்பா...நல்ல தலைப்பு ஒன்னு கிடைச்சிருக்கு..

துளசி கோபால் said...

அடப்பாவி..... இப்படியா பண்ணான்?

பத்திரம்ப்பா. தாலியிலா புருசன் உயிர் இருக்கு? கழட்டிவச்சா ஒன்னும் ஆகாது.

அந்தக் காலத்துலே திருட்டுப்புருசன்கிட்டே இருந்து தங்கத்தைக் காப்பாத்தணுமுன்னு ஒரு அம்மா....தாலியைக்கழட்டவே கூடாது சொல்லிவச்சு அது முக்கியமாப்போயிருக்கலாமுல்லே மனித வாழ்க்கையிலே.

நானெல்லாம் கழட்டிவைக்குறவதான்.

நீங்க சொன்னதுபோல கோபாலை மனசுலே உக்காரவச்சாச்சு அதுவும் சிம்மாசனம் போட்டு:-))))

நான் ஆதவன் said...

//
கொள்ளைக்கார நகரத்தில் கொண்டவனை மனசில் வைத்தால் போதுமென்று தாலியை எல்லாரும் கழட்டிவைக்கவேண்டியது தானே..//

அதுவும் சரிதான் :)). நம்ம ஊர விட மோசமா இருக்கும் போல...

ராமலக்ஷ்மி said...

"ச்சாரு ச்சாரு"

நல்லவேளையா கழுத்துக்கு வந்தது
கத்தலோடு போச்சுது. கவனமாயிருக்கணும்னு எல்லோருக்கும் தந்திருக்கும் எச்சரிக்கையும் நன்று.

முத்துலெட்சுமி-கயல்விழி said...

நன்றி வெயிலான்.. இப்பல்லாம் நல்ல கவனம்ங்க. .. பாதி நாள் சந்தைக்கு கணவரையே அனுப்பிடறது.. :))
------------------
ஆமாங்க ஜமால் நகை விக்கிற விலை அப்படில்ல எகிறுது...

முத்துலெட்சுமி-கயல்விழி said...

சென்ஷி பதிவைப்படிக்கிரதுக்கு முன்னாடி மீ த பர்ஸ்ட் போடனும்.. பதிவைப்பூரா படிச்சிட்டு போடக்கூடாது.. :)
-----------------------
டவுட் ... சாருன்னா ஏன் எல்லாரும் வேற வேறமாதிரி எல்லாம் நினைக்கிறீங்க..:)
என்னையும் கேட்டாங்கப்பா ..கத்தினியே கத்திவச்சிருந்து குத்தினா என்ன செய்திருப்பேன்னு.. :)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

நான் ஆதவன்.. இது சூடாகுமா? அப்பபுக்கிங்ல தான் சூடாகுதா பதிவெல்லாம்.. :)

------------------------
துளசி வாங்க.. :) நீங்க சொல்றாப்பல கதையும் இருக்கலாம்..

மனசிம்மாசனத்துல வைரம் வைடூரியமெல்லாம் பதிச்சிருக்குமா..

ராஜ நடராஜன் said...

டில்லியில் ஆள் நடமாட்டம் குறைவான பாஷ் ஏரியாவில்(கைலாஷ் நகர்?பெயர் மறந்து விட்டது) பேச்சிலர்களாக நண்பர்கள் தங்கியிருந்தோம்.இரவு சுமார் 10 மணிக்கு சாக்கடைக்குள்ளிருந்து ஒரு உருவம் ஒளிந்து ஒளிந்து பங்களாவை நோக்கி வரவும் நண்பர்கள் அனைவரும் துரத்திக் கொண்டு ஓடினோம்.அவன் மீண்டும் சாக்கடை வழியிலேயே திரும்ப ஓடி விட்டான்.திருடன் மாட்டுவானா என்ன?

ராஜ நடராஜன் said...

இட்லிக்காரம்மா மிஸஸ்.டவுட் நேத்து இட்லி சுட்டுட்டு இருந்தாங்க.பாஸ் கூப்பிடற வேகத்துல சட்னி கூட தொட்டுக்காம ஓடி விட்டேன்.நான் அங்கே போகிறேன்:)

அபி அப்பா said...

முத்து இந்த விஷயத்தை நீங்க நேர்ல சொன்ன போது (நம் வீட்டு மாடி படியி இருந்து)நானும் கண்மணி டீச்சரும், சென்ஷியும், கோபியும், பாலைத்தினை காயத்ரியும் காயத்ரி அம்மாவும், இராமும், இம்சைஅரசி ஜெயந்தியும், ஜி யும் என் பெரிய அக்காவும் கொஞ்சம் ஆடித்தான் போனோம். அட என்னடா இப்படியேல்லாம் ஆண்டவான்னு நெனச்சுகிட்டோம்..

ம் பின்ன கருகமணி தாலி பத்தி கிருஷ்ணா என் கிட்ட கேட்டு பின்ன ஒரு கருகமணி செயின் வாங்கிய வகையில் ஒரு பத்தாயிரம் போச்சு :-))

ஆயில்யன் said...

//கணவர் நகையும் போடறதில்ல என்பதால் அது பளபளன்னு இருந்தது.
//
அட அத்தான் எங்க குரூப்பு:)

தங்கம் வெறுக்கும் தளபதிகள் :)
(சங்கமாக்கிட்ட நிறைய பேர் சங்கமிக்குவாங்க போல...!!)

ஆயில்யன் said...

//பிறகு அடுத்தநாள் தெரியவந்தது என்னன்னா.. அவன் வேகமா நடக்கல ஓடி இருக்கான். வேற ஒருத்தங்ககிட்ட திருட முயன்று அவங்க ஆகிருதியா இருந்ததால அவனை தள்ளிவிட்டுட்டாங்களாம்.. அங்கருந்து ஓடியவன் தான் ஆகா மாட்டினாடான்னு என்கிட்ட வந்திருக்கான்.
//

ஓ....!

ப்ர்ஸ்ட் அட்டெம்ப்ட்ல பெயிலான பயபுள்ள செகண்ட் அட்டெம்ப்ட்ல பாஸ் பண்ணியே ஆகணும்ன்னு அப்பாவி மாதிரி தெரிஞ்ச உங்ககிட்ட திருட டிரைப்பண்ணியிருக்கான் போல...!

ஆடுமாடு said...

எங்க வீட்டுல எல்லாம் வீட்டுக்காரன்(அதாவது நான்) நகையை சுட்டுட கூடாதுன்னு, இன்னும் அவங்க அம்மா வீட்டுலயே பத்திரமா இருக்கு தாலி செயின். இங்க மஞ்சள் கயிறு.

ம்ஹூம்... என்னமோ போங்க.

ஆயில்யன் said...

//அபி அப்பா said...
ம் பின்ன கருகமணி தாலி பத்தி கிருஷ்ணா என் கிட்ட கேட்டு பின்ன ஒரு கருகமணி செயின் வாங்கிய வகையில் ஒரு பத்தாயிரம் போச்சு :-))///


ரைட்டு !

தமிழ் பிரியன் said...

அச்சச்சோ... பழைய கதை தானா? நான் என்னமோ ஏதோன்னு ஓடி வந்தேனே.. ;-))

பரிசல்காரன் said...

நல்லாக் கெளப்புறீங்களே பீதிய!

முத்துலெட்சுமி-கயல்விழி said...

ராமலக்ஷ்மி நல்லாசொன்னீங்க.. ஆனா பாருங்க வீட்டுல இருந்த கணவரும் என் தம்பியும்.. என்ன நீ இப்படி வந்து நிக்கிற ..போலீஸ்ல பிடிச்சிக்குடுத்துட்டு வீரமங்கையா வந்திருக்கவேண்டாமான்னு கிண்டல்..
:)
-----------------------------
ராஜநடராஜன், ராத்திரி தானே சொல்றீங்க..இங்க பட்டபகலில் நடக்குது இது எல்லாம்.. சரி வெயில் அதிகமான மந்தமான மதியம்ன்னாலும் பரவாயில்லை காலை பதினோரு மணிக்கு பிசி ஏரியாவில்...
----------------
அபி அப்பா சந்தோஷப்படுங்க.. அன்னைக்கு நான் சொன்ன கதையால பத்தாயிரத்துக்கு வாங்கினீங்களே அது இப்ப 40 ஆயிரம் ஆகிப்போச்சு.. அபிக்கு ஒரு சேமிப்பாச்சே.. :)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

ஆயில்யன். .. அந்த பையன் கூட அப்பாவியா.. ஒரு டீசண்டான ஆளாத்தான் தெரிஞ்சான்.. என் தம்பிமாதிரின்னா பாத்துக்கோங்க.. இப்பல்லாம் தழும்போட .. பயமுறுத்தற மாதிரி திருடன் இல்லைல்ல..
-------------------------------

ஆடுமாடு .. என்ன நீங்களும் தலைப்பால ஓடிவந்தீங்களா..?
சுடறது வீட்டுத் திருடன்னாலும் வெளியில் இருக்கற திருடன்னாலும் நகைக்கு பாதுகாப்பு தேவைதானே...
--------------
தமிழ்பிரியன் உங்ககிட்டயும் இந்த கதையை சொல்லிட்டேனா.. ஏன்னா இதுக்கு முன்ன எல்லார்கிட்டயும்சொல்லி சொல்லி
ஒருவேளை பதிவில் போட்டுட்டேனோன்னு கூட சந்தேகமா தேடிப்பார்த்தேன்.. ஆமா ஏன் அத்தனை பதட்டம் ..:)

ச்சின்னப் பையன் said...

அடடா.... பாத்துக்கோங்க..

நெக்ஸ்ட் டைம் உங்களோட (அல்லது என்னோட) ப்ளாக் அட்ரஸ் கொடுத்து படிக்க சொல்லுங்க. தொழிலையே விட்டுட்டு எங்காவது ஓடிடுவான்....

:-))

முத்துலெட்சுமி-கயல்விழி said...

பரிசல் நீங்க மூடிய , பகிரங்க கடிதமெழுதி கிளப்பற பீதிக்கு முன்ன இதெல்லாம் என்ன பெரிசா? :)
--------------------------
ச்சின்னப்பையன்... ப்ளாக் காண்பிச்சா அவனும் பதிவெழுத வந்து நம்ம ப்ளாக்கை திருட ஆரம்பிச்சிருவான்.. நாம நல்லாருக்கறது பிடிக்கலையா..

ஒருவேளை உங்க ப்ளாக் படிச்சு சிரிச்சே .. ஆஸ்பிட்டலில் அட்மிட் ஆனாலும் ஆவான்..( இந்திக்காரனுக்கு தமிழ் படிக்கவ்ருமா)

மாதேவி said...

இங்கும் இதேகதைதான்.லேட்டஸ் மோட்டார் சைக்கிலில் வந்து பறிப்பது.

"கொள்ளைக்கார நகரத்தில் கொண்டவனை மனசில் வைத்தால் போதுமென்று தாலியை எல்லாரும் கழட்டிவைக்கவேண்டியது தானே"..

இப்பொழுது அநேகர் போடுவதில்லை.

தமிழ்நதி said...

'சாரு என்றால் திருடனா?'ம் இதுகூட நல்லாத்தானிருக்கு. முத்துலட்சுமி, புருசன் மனதில் இருந்தால் போதாதா? தாலியிலா இருக்கிறார்... நீங்கள் சொன்னால் சரிதான்:)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

மாதேவி லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கா ..இங்க அது ரொம்ப நாளா இருக்கு..ரிக்ஷாவில் போற அம்மணி செயினைபிடிக்க ரிக்ஷாக்காரனை மெதுவா ஓட்டு இல்லாட்டி குத்திருவேன்னு மெரட்டுறாங்கப்பா..
சவுத் இண்டியன்லயும் கூட மலையாளிங்க தாலி போடறதில்ல.. நார்த் இண்டியால சீப்பெஸ்ட் குங்குமத்தை வகிட்டில் தீட்டினா முடிஞ்சது.. :)
----------------------------
தமிழ்நதி ஏன்ப்பா ஏன்.. இப்படி..:) சாருன்னா திருடன் இல்லீங்க ச்சோர் ன்னா தான் திருடன்.. அந்த எதிர்த்த வீட்டு அம்மாவுக்கு சாரு சாருன்னு கத்தினது சோர் சோர் ன்னு விழுந்து புண்ணியமாப் போச்சு..

கானா பிரபா said...

ஆயில்யன் said...

//கணவர் நகையும் போடறதில்ல என்பதால் அது பளபளன்னு இருந்தது.
//
அட அத்தான் எங்க குரூப்பு:)//

ரிப்பீட்டேஏ


கைவசம் மிளகாய்ப்பொடியை டப்பாவில் கொண்டு போனால் இப்படியானவனுக வந்தால் ஒரே எத்து எத்திடலாம், என்ன நாஞ் சொல்றது?

வாழவந்தான் said...

என்னங்க தலைப்ப பார்த்துட்டு எதோ எதிர்வினை, விவாதம், பின்நவீனத்துவம் இப்படி எதாவது இருக்கும்னு பார்த்தா செயினுக்கு வந்தது பெயினோட(ரத்தம் வந்திச்சில்ல பாவம்)போச்சின்னு ஒரு பதிவு போட்டிருக்கீங்க

நான் ஆதவன் said...

மேடம் நான் சொன்னேன்ல..சூடாகும்ன்னு :)))

நாகை சிவா said...

கவனம் தேவை!

Thekkikattan|தெகா said...

என்னோட களவானிப் பயலுக பதிவைத் தொடர்ந்து உங்களோட உண்மையான களவானி பதிவா, என்னே ஒற்றுமை :-)

ஆமாங்க டெல்லியில ரொம்ப மோசமின்னு நினைக்கிறேன் இந்த மாதிரி விசயங்களைப் கேள்விப் படும் பொழுது. நான் அங்கு ஒரு முறை வந்திருந்த பொழுது இப்படித்தான் ஓடும் ரயிலில் ஜன்னலின் வழியாக கையை விட்டு பெரிய தாலிச் சங்கிலியை அறுத்துக் கொண்டு இறங்கி விட்டான் ஒருவன், பாவம் அந்த ஜோடிகள் புதிதாக திருமணமான ஆட்கள் போல, பொண்ணு கிட்டத்தட்ட சென்னை வரும் வரையில் நினைத்து நினைத்து ஒரே அழுகைதான்... கொடுமை அதிலும் இந்த துப்பாக்கி காட்டி கழட்டுற அளவிற்கு வந்தாச்சுன்னா கஷ்டமோ கஷ்டம்தான் இனி...

மின்னல் said...

முத்துலெச்சுமி கழுத்து காயம் ஆறி போச்சா?

சரி தலைப்பை பார்த்துட்டு சாரு பிரியர்கள் சண்டைக்கு வரபோறாங்க பார்த்துக்கோங்க.

சந்தனமுல்லை said...

ஆகா..சூடான இடுகைன்னு முடிவு பண்ணிட்டீங்க போல! ;-)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

கானாபிரபா இந்த பதிவை எழுதினதே இந்த மிளகாய்ப்பொடி போடறது அதுஇதுன்னு எங்க பாட்டுக்ளாஸீல் நடந்த பெரிய விவாதத்தால் தான்.. :)
-----------------------------
வாழவந்தான்.. வழக்கோன்னு பாக்க வந்தீங்களா..பின் நவீனத்துவமெல்லாம் எனக்குதெரியாதே :))
------------------------------
ஆதவன் அதான் புக் பண்ணிட்டீங்கள்ளா...
---------------------------------
நன்று நாகை சிவா.. இப்பல்லாம் கவனமா நகையே போடறதில்ல. :)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

தெகா... புதுசா கல்யாணமான பொன்ணா அப்ப நிறைய போட்டிருக்குமே.. நான் அன்னைக்கு செயினை பிடிச்சே இருந்ததுக்கு காரணம்.. எங்கப்பா கஷ்டப்பட்டு சம்பாதிச்சதாச்சே.. :)
-----------------------------
மின்னல் இந்த நிகழ்ச்சி நடந்து ஒரு 5 வருசமாவது இருக்கும்ங்க.. கழுத்து புண் ஆறிடுச்சு.. :)

என்ன மின்னல் சொல்றீங்க புரியலையே.. சாருவோட அம்மா அப்பா நிச்சயமா சண்டைக்கு வரமாட்டாங்க.. ஏன் அவங்க பாட்டிக்கூட சண்டைக்கு வரமாட்டாங்க..:)
-------------------------
முல்லை வாங்கப்பா ..பாருங்க நான் சாதரணமாத்தான் எழுதினேன் சாருன்னு கத்தினா சோர் ன்னு நினைச்சிக்கிட்டாங்கன்னு..அதை இவங்களா சூடாக்கிட்டாங்க ...

வல்லிசிம்ஹன் said...

என்னப்பா. கூலா எழுதீட்டீங்க. பாவம் எவ்வளவு பயமா இருந்திருக்கும்.
எப்படியோ இதோடு போச்சு,. எல்லோரும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்கிற
விழிப்புணர்வு வந்தால் சரி.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

நானும்தான் நீங்களுமான்னு யோசனையோடதான் உள்ளாற வந்தேன்..

தப்பிச்சிட்டீங்க அக்கா.. தப்பிச்சிட்டீங்க..

டெல்லிதான் சிறு குற்றங்களில் முதலிடம் வகிப்பதாகச் சொல்கிறார்கள். உண்மையாகத்தான் இருக்கும் போலிருக்கு..

இனிமே எங்க தனியா போனாலும் கைல ஒரு கத்தியை வைச்சுக்குங்க.. வீசிரலாம்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//நானெல்லாம் கழட்டிவைக்குறவதான்.
நீங்க சொன்னதுபோல கோபாலை மனசுலே உக்காரவச்சாச்சு அதுவும் சிம்மாசனம் போட்டு:-))))//

நம்ம ரீச்சரோட பதிபக்தி எல்லை மீறி போய்க்கிட்டிருக்கு..

இதைப் பார்த்து நாலு பேரு இதே மாதிரி மனசுல மட்டும் வைச்சுக்கப் போறம்னு சொல்லி கெடப் போறாங்க..!

பிரேம்குமார் said...

சாருன்னா சோர்...... அப்படீன்னு பாத்துட்டு நான் ஏதோ இலக்கிய உலக அரசியல் பதிவுன்னு நினைச்சுட்டேன் :)

மங்கை said...

தில்லியல எந்த குற்றம் தான் நடக்குல..

கத்துக்குட்டி திருடன்..:-))

முத்துலெட்சுமி-கயல்விழி said...

ஆமா வல்லி ரொம்ப நாள் அந்த நடுக்கம் இருந்துட்டே இருந்தது... இருட்டும் முன்ன கடைக்கு போய்ட்டு வந்துட்டுருந்தேன்.. ஆனா இப்ப பகலிலேயே ஆரம்பிச்சிட்டாங்களே..
-----------------------------
உ.தமிழன்.. கத்திய வீசி என்ன செய்ய? உன்கிட்ட இல்லன்னா நான் தரேன்னு எடுத்துக்கொடுக்கறதுக்கா.. என் பலம் எனக்குத்தெரியாதா..?

அது என்ன அப்படி ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க .. சொல்லிக்கிடப்போறாங்களா..
சொல்லிக்கெடப்போறாங்களா..
மெட்டிய ஆண்கள் விட்டமாதிரி இதையும் விட்டா என்ன தப்பு..
-------------------------
ப்ரேம்குமார்.. அதான் இங்கன ஒரே கூட்டமாக்கிடக்கு.. வராதவங்கள்ளாம் வாராங்க...

நசரேயன் said...

//கொள்ளைக்கார நகரத்தில் கொண்டவனை மனசில் வைத்தால் போதுமென்று தாலியை எல்லாரும் கழட்டிவைக்கவேண்டியது தானே..
//

நல்ல முடிவு, அப்படியே தங்கம் வாங்குறது இல்லைன்னு முடிவு எடுத்தா ரெம்ப நல்லதா இருக்கும்

//கணவர் ஒரு மைனரும் இல்லை நகையும் போடறதில்ல//

ஹை.. என்னை மாதிரி

கோபிநாத் said...

அன்னிக்கு என்றாலும் சரி அன்னிக்கு என்றாலும் சரி எப்போதும் கவனமாக இருங்க.

அபி அப்பா பின்னூட்டத்தை பார்த்து நானும் கொசுவத்தியை சுத்தி சுத்தி பார்த்தேன்...ம்ஹூம் ஞாபகமே வரல ;)

நிஜமா நல்லவன் said...

தமிழ்மணத்தில் பதிவு வந்த போதே நினைச்சேன் சூடாகிடும் என்று....ஆகிடுச்சி...:)

ஜி said...

ஆஹா!! பாத்து இருங்கக்கா..

//நானும் கண்மணி டீச்சரும், சென்ஷியும், கோபியும், பாலைத்தினை காயத்ரியும் காயத்ரி அம்மாவும், இராமும், இம்சைஅரசி ஜெயந்தியும், ஜி யும் என் பெரிய அக்காவும் கொஞ்சம் ஆடித்தான் போனோம்.//

அண்ணே!! இந்த மேட்டர அன்னைக்கே சொன்னாங்களா? எனக்கு மீட் பண்ணதும் அன்னைக்கு மதியம் பிரியாணி சாப்டதும்தான்னே ஞாபகத்துல இருக்கு...

தமிழ்நெஞ்சம் said...

சாருன்னா.... சோர்... இது என்னமோ அவர் (சாரு நிவேதிதா) பற்றிய பதிவா இருக்கும்னு வந்தேனாக்கும்..

சஞ்சய் said...

முத்தக்கா.. கொஞ்சம் கவனமா இருங்க. இப்போ காயம் சரியாய்டிச்சா?

முத்துலெட்சுமி-கயல்விழி said...

ஆமா மங்கை என்ன குற்றம் தான் இங்க நடக்கலை.. :(
------------------------
நசரேயன் நான் நகையே வாங்கறதில்ல.. நிஜம்மாவே .. பத்து இருபது ரூபாய் தோடு இருந்தா போதும் எனக்கு எப்போதுமே.. எல்லாம் பெரியவங்க அனத்தலால தான் நகைங்கறதே..:)
-----------------------------------
கோபி கவனமா இருக்கேன்ப்பா..
அன்னைக்கு பாதியில் ச்சேர்ல் உக்காந்து தூங்கிட்டயோ என்னவோ?
--------------
நி.நல்லவன் இப்படி எல்லாருமே ஜோஸியக்காரங்களா இருக்கீங்களே:)
------------------
தமிழ்நெஞ்சம்...அப்படில்லாம் நினைக்கக்கூடாது
-------------------------
சஞ்சய் நன்றி..இது நடந்தது பலவருடங்களுக்கு முன்...

கே.ரவிஷங்கர் said...

தாலி பெண்ணுக்கு வேலி?

//கொண்டவனை மனசில் வைத்தால் போதுமென்று தாலியை எல்லாரும் கழட்டிவைக்கவேண்டியது தானே..//

சினிமா/டிவியில் நடிக்கும் திருமண ஆனப் பெண்கள்/சில நியூஸ் படிக்கும் பெண்கள் தாலி அணிவதில்லை. ஒரு
தேவை காரணமாக.அது மாதிரிதான்
இதுவும்.செய்யலாம்.

இங்கு மோட்டார் சைக்கிளில் வந்து செயின் இழுப்பதால் என் மனைவி
ரோட்டில் நடக்கும்போது ஒரு விதி
வைத்திருக்கிறாள். என்ன விதி?

எப்போதும் ரோட்டின் வல்து பக்கமாகவே முன்னோக்கி நடப்பது.
(Always keep to the right )

சாலை விதிகள் படி வாகன்ங்கள் எல்லாம் இடது பக்கம் போக வேண்டும். அதனால் பின் பக்கம் வந்து பறிக்க முடியாது.

வல்து பக்கம் வந்து பறிப்பது கடினம்.
நீங்கள் அவனை approach செய்யும் போது நேருக்கு நேர் பார்ப்பதால்.

முத்துலெட்சுமி-கயல்விழி said...

ரவிஷங்கர் வாங்க.. நேத்து தான் ஒரு நண்பர்கிட்ட கேட்டேன்.. டிவி சேனலில் வருகிற நியூஸ் ரீடர்ஸ் தாலிய எப்படி ஒளிப்பாங்கன்னு..உண்மைதானா அது :))

என்ன நீங்க நேருக்கு நேர் வந்தும் தான் சூப்பரா பறிக்கிறாங்க..
ஒன்னும் சொல்லிக்கமுடியல...

Vinitha said...

நான் வேற எதோன்னு (எழுத்தாளர்) நினைச்சேன்! :-)

Thekkikattan|தெகா said...

சாலையில் எப்பொழுதும் நடப்பவர்கள் வாகனம் நம்மை நோக்கி வரும் திசையில் முகம் கொடுத்து நடப்பதே பல விசயங்களில் நல்லது. அது இங்கே ஓட்டுநர் புத்தகங்களில் கூட அறிவுருத்தப் பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன்.

முத்துலெட்சுமி-கயல்விழி said...

நினைப்பீங்க வினிதா..இதுக்கு நீங்க என்னோட பதிவெல்லாம் தொடர்ந்து வாசிச்சிருந்தா பதில் கிடைச்சிருக்கும்..
நான் என்ன எழுதுவே என்ன எழுதமாட்டேன்னு :)
--------------------------
தெகா எனக்கும் அந்த ரூலை எங்கப்பா சொல்லியதா நினைவு..6 வது படிக்கும்போதிலிருந்து பள்ளிக்கு நடக்கும் போது அப்படித்தான் எதிர் எதிரா பாத்து நடப்பேன்.. இப்பவும் குட்டீஸுக்கு அதே சொல்வேன்.. பின்னாடி வாகனம் வருவது தெரியாது இடதுபக்கமா போனா..இல்லையா.. ? கீப் ரைட் ரைட்..:)

" உழவன் " " Uzhavan " said...

தெருவில் தனியாக நடந்து சென்றுகொண்டிருந்த பெண்ணிடமிருந்து, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் தாலிசங்கிலியை பிடுங்கிச் சென்ற பக்கத்துத் தெரு சம்பவம்தான் ஞாபகத்திற்கு வருகிறது. உஷார் பெண்மணிகளே..
கழுத்து எப்படி இருக்கிறது இப்போது? குணமடைய வாழ்த்துகள்!

//கொள்ளைக்கார நகரத்தில் கொண்டவனை மனசில் வைத்தால் போதுமென்று தாலியை எல்லாரும் கழட்டிவைக்கவேண்டியது தானே//
தாலி செண்டிமெண்டெல்லாம் இப்போ ஒர்க்கவுட் ஆகாதோ? :-)

sindhusubash said...

கல்யாணமான புதிதில் என்னோட தாலிசெயினை வீட்டுகுள்ளே வந்து திருடிட்டி போயிட்டான்.

பிறந்த வீடும்,புகுந்த வீடும் திட்டி திட்டியே ஒரு வழி பண்ணிட்டாங்க.

முத்துலெட்சுமி-கயல்விழி said...

உழவன் செண்டிமெண்ட்ல்லாம் இப்பல்லாம் ஒர்கவுட் ஆகாது.. :)
அன்றன்றைய காலக்கட்டத்தில் எல்லாமே காலத்திற்க்கேற்றவாறு மாறிக்கொண்டே இருக்கும்..இருக்கனும் .. உயிர் முக்கியமா செண்டிமெண்ட் முக்கியமா?
----------------------------
சிந்து என்னப்பா இதெல்லாம் எங்களுக்கு பதிவெழுதி சொல்லவேண்டிய விசயம்.. நாங்க உங்க வீட்டாளுங்க மாதிரி திட்டமாட்டோம் .. எழுதுங்க. ப்ளீஸ் :)
வீட்டுக்குள்ளேயே வந்து திருடும் வரை என்னங்க செய்தீங்க :) சரி சரி இது திட்டுன்னா சொல்றீங்க விசாரிப்புங்க... :)

ஜி said...

என்னுடைய பின்னூட்டத்திற்கு மட்டும் ரிப்ளை செய்யாத முத்தக்காவை கன்னா பின்னாவாக கண்டமானிக்கு கண்டிக்கிறேன் கண்டிக்கிறேன் கண்டிக்கிறேன்... :))

முத்துலெட்சுமி-கயல்விழி said...

ஜி வழக்கமா தங்கிலீஷ்லயே வேணும்ன்னே டைப் செய்யற ஆளு தமிழில் அடிச்சதும் கவனிக்க விட்டுப்போட்டு போலயே..

எப்பவும் போல் 4 பின்னூட்டம் வந்தா பரவாயில்ல..இத்தனை வந்தா கொஞ்சம் தடுமாற்றம் தான் இதெல்லாம் கண்டுகிற கூடாது..இதே மாதிரி பின்னூட்டம் போட்டு ஏன் பதில் போடலன்னு கேட்டிறனும் அதான் நல்ல பிள்ளை..
நான் கவனமா இருக்கேன் நன்றி நன்றி..

பாச மலர் said...

நூத்துக்கு நூறு உண்மை முத்துலட்சுமி...கென்யாவில் இருந்த போது தாலியை எல்லோரும் வீட்டில் பத்திரப்படுத்திவிட்டுதான் வெளியே போவோம்...மஞ்சள் கயிற்றில் போட்டால் கூட அங்கே திருடர்களுக்குத் தெரியும் தங்கத்தாலி விஷயம்...கழுத்திலோ வீட்டிலோ எங்கேயோ பத்திரமாக இருந்தால் சரிதான்..துளசி மேடம் சொன்ன மாதிரி மனசின் சிம்மாசனம் போதாதா..

பத்திரம் முத்துலட்சுமி..