August 26, 2009

அன்புக்கதை

குழந்தைகள் சில விசயங்களை திரும்பத் திரும்ப செய்வார்கள் அவர்களுக்கு அலுப்பே இருப்பதில்லை. குழந்தைகளை உற்று கவனித்திருந்தால் நீங்கள் இதனை அறிந்திருக்க வாய்ப்புண்டு . அதிகபட்சமாக 24 முறைவரை செய்யக்கூடும் என்று சொல்கிறார்கள். பிறகே சற்றே அலுப்புதட்டி மற்ற ஒரு செயலுக்கு நகர்வார்கள். சில நேரங்களில் மற்றவர்களின் கவனம் கவர்வதற்காக செய்வார்கள் சிலநேரம் அவர்களின் உண்மையான ஆர்வத்தின் காரணமாகவும் செய்வார்கள். அவைபோலவே அவர்கள் கேள்விக்கணைகளும் தொடுப்பது வழக்கம்.
இது என்ன?
ஏன் இப்படி இருக்கிறது?
ஏன் அப்படி இல்லை?
இன்னும் இன்னும் நீங்கள் எதிர்பார்க்காத வகையில் அவை வருவதுண்டு.

அவ்வாறான கேள்விகளை எதிர்ப்படும் நேரங்களில் ஒவ்வொருவரின் வெளிப்பாடும் வேறுபடுவதுண்டு. நாம் நம் குழந்தைகள் என்கிற அன்பு மிகுதியினால் அவர்களின் கேள்விகள் அவர்களை வளர்க்கின்றன என்று உணர்ந்து கொண்டு பதிலளிக்கவும் கூடும். சிலர் பொறுமையுடன் சிலமுறைகள் பதில் அளிப்பதும் நேரம் செல்லச் செல்ல பொறுமை இழப்பதும் அதன் பின் ’சற்று நேரம் அமைதியாக இருக்ககூடாதா’வென்று பொறுமை இழந்தோ அல்லது கோபத்தின் உச்சத்தில் சென்று இரைந்து கத்தியோ இருக்கலாம்.

ஆனால் வயதான காலத்தில் பெற்றோர்கள் பேச்சுத் துணைக்கென ஏங்கி நிற்கிற போது மறுதலித்து ஒதுங்கி இருத்தல் என்பது போன்ற கடுமையான செயல் வேறெதுவுமில்லை. ஒருகாலத்தில் கண்ணின் மணி போல காத்து இருந்த பெற்றோரிடம் சற்றே அமர்ந்து பேசி இருக்கத்தான் எத்தனையோ தடங்கல்கள்.

க்ரேக்க இயக்குனர் Constantin Pilavios இன் இந்த குறும்படத்தை நீங்கள் ஏற்கனவே பாத்திருக்கலாம். இல்லையென்றால் என்னைப்போல முதல் முறை பார்ப்பவராக இருக்கலாம். குறும்படங்கள் என்று குறிப்பிடுகின்றோமே தவிர நீள நீள கதை வசனக்காட்சிகள் கூட நமக்குள் இவைபோன்றதொரு தாக்கமேற்படுத்த முடியாது. மெல்லிய தாலாட்டைப் போன்ற ஒலியுடன் தொடங்கி ஒரு வீட்டின் முன்பகுதியின் அழகை துளித்துளியாக துல்லியமாக காட்டுகின்றது கேமிரா. இசையின் குழைவில் ஆயிரம் அன்புக்கதை மீதமிருக்கிறது. சில நிமிடங்கள் கள்ளமற்ற குழந்தையாகவும் வீட்டிற்குள் சென்று திரும்பிய சில நிமிடங்கள் கம்பீரமான தந்தையாக உருமாறும் போது தந்தை கதாபாத்திரம் வியக்கவைக்கிறார். நாட்குறிப்பில் இருப்பதை மகன் வாசிக்கையில் அவர் பெருமூச்சிடும் பொழுது காலங்களின் தொலைவில் அவர் கொண்ட அன்பின் பாரம் நம்மையும் ஒரு சேர அழுத்துகிறது.


ஈரம் மிச்சமிருக்கும் இதயங்கள் கண்டால் நிச்சயம் கண்கள் குளமாகலாம் .அன்பில் இதயம் கனக்கலாம். அர்த்தமுள்ள நல்லமாற்றம் ஒன்றை விதைக்கும் என்பதில் மட்டும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.





Directed by: Constantin Pilavios
Written by: Nikos & Constantin Pilavios
Director of photgraphy: Zoe Manta
Music by: Christos Triantafillou
Sound by: Teo Babouris
Mixed by: Kostas Varibobiotis
Produced by: MovieTeller films

(ஈழநேசன் இணைய தளத்திற்காக எழுதியது)

இந்த குறும்படத்தை நான் இப்பொழுது தான் பார்க்கிறேன் என்றாலும் இதனுடைய எழுத்துவடிவம் பலநாட்களாக மின் மடலாக பலருடைய பார்வைக்கும் வந்திருப்பதாகத் தெரிகிறது. எப்பொழுதுமே எழுத்துவடிவத்தில் நாம் முதலில் பார்த்த விசயத்தை காட்சிவடிவமாக நம் மனதில் ஒரு விதமாக உருவகப்படுத்தி இருப்போம். அதனால் அது நமக்கு பிடிக்காமல் போகவும் வாய்ப்புண்டு. மகன் செயற்கையாக நடிப்பது போல தெரிகிறது என்று ஒரு நண்பனுக்கு தோன்றியதாம். ஒருவருடைய குணம் ஒரு நிகழ்வினால் உடனே மாறிவிடாது.அந்நேரத்து குற்ற உணர்ச்சியால் அவன் அப்படி மட்டுமே செயற்கையாக இருக்கலாம் என்று தோன்றியது. எனக்கு எப்படித்தெரியுமா? எனக்கும் வந்ததே குற்ற உணர்ச்சி.

இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு என் அம்மாவுடன் வாய்ஸ் சேட்டில் பகிர்ந்து கொள்ள நினைத்தபோது நான் பாதிக்கதைக்கு மேல் சொல்லமுடியாமல் தொண்டை அடைக்க அழுதுவிட்டேன். ஒருநாளில் அன்புமயமாக மாற இயலாது. ஆனால் இன்னும் கொஞ்சம் மாற்றிக் கொள்ளவேண்டும் என்ற உந்துதல் தோன்றியிருக்கிறது .

33 comments:

சென்ஷி said...

நிறைய்ய தடவை மெயில்ல படிச்சுருந்ததால என்னால சட்டுன்னு அந்த குறும்படத்துல ஒட்ட முடியலை.

முன்னாடியே படிச்சுட்டதால அதுல நடிக்குறவங்களைப் பத்தின ஒரு கற்பனையை மனசுல ஏத்தி வச்சிருந்ததால கூட இந்த குறும்படம் என்னைக் கவரலையோ என்னமோ!

நீங்க எழுதியிருக்கறது நல்லாருந்தது. குறிப்பா

//நாட்குறிப்பில் இருப்பதை மகன் வாசிக்கையில் அவர் பெருமூச்சிடும் பொழுது காலங்களின் தொலைவில் அவர் கொண்ட அன்பின் பாரம் நம்மையும் ஒரு சேர அழுத்துகிறது.

//

ரொம்ப ரசிச்சு எழுதியிருக்கறது தெரியுது. ’அன்புக்கதை’ தலைப்பும் ரொம்ப நல்லாருக்குது.

குறும்படங்களைப் பத்தின விமர்சனங்களையும் எதிர்பார்க்கிறோம்.

Thekkikattan|தெகா said...

மனதை நெகிழச் செய்த குரும்படம்!

அப்படித்தானே இருக்கிறோம் நம்மில் பலரும்? குழந்தைகளாக ஆனால் விபரங்கள் அறிந்து, புரிந்த நிலையில் மீண்டும் அதில் எல்லாம் என்ன இருக்கிறது என்று விட்டொழித்துவிட்டு சாதாரண விசயங்களில் நாட்டம் கொள்ளும் பெரியவர்களிடம் அமர்ந்து பேச எங்கே இருக்கிறது நேரமும், பொறுமையும் ??

நல்ல பகிர்வு, நன்றி!

ஆயில்யன் said...

//ஆனால் வயதான காலத்தில் பெற்றோர்கள் பேச்சுத் துணைக்கென ஏங்கி நிற்கிற போது மறுதலித்து ஒதுங்கி இருத்தல் என்பது போன்ற கடுமையான செயல் வேறெதுவுமில்லை.///


:(((

படம் பார்க்கல பார்த்தா இன்னும் மனம் பாரம் ஏறுமோ என்று எண்ணி...!

ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு எல்லாமே பெறுகின்றோம் - இது போன்ற இன்பங்களை இழந்து....!

செல்வநாயகி said...

நல்ல பகிர்வு, நன்றி!

சந்தனமுல்லை said...

அப்புறமா பாக்கிறேன்! பகிர்வுக்கு நன்றி! //
ஆனால் வயதான காலத்தில் பெற்றோர்கள் பேச்சுத் துணைக்கென ஏங்கி நிற்கிற போது மறுதலித்து ஒதுங்கி இருத்தல் என்பது போன்ற கடுமையான செயல் வேறெதுவுமில்லை.//

நல்லா சொல்லியிருக்கீங்க!!

அமுதா said...

நானும் இது பற்றி படித்துளேன்... பார்க்கவில்லை... நல்ல பகிர்வு, நன்றி!

☀நான் ஆதவன்☀ said...

எனக்கும் இதைப் பார்த்தபோது மனது கஷ்டமாக தான் இருந்தது. ஆனால் படிக்கும் போது இருந்த ஒரு சுவாரஸியம் அந்த பையன் நடிப்பை பார்க்கும் போது இல்லை.

//இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு என் அம்மாவுடன் வாய்ஸ் சேட்டில் பகிர்ந்து கொள்ள நினைத்தபோது நான் பாதிக்கதைக்கு மேல் சொல்லமுடியாமல் தொண்டை அடைக்க அழுதுவிட்டேன்.//

:(

Porkodi (பொற்கொடி) said...

:) எனக்கும் இந்த வீடியோ ரொம்ப பிடிக்கும்.. ஆனா ஒரு எண்ணம் என்னனா, அப்பா பையனுக்கு விபரம் தெரியாமல் இருந்து கேட்டப்போ சொன்னது.. அதே பையன் 15 வயசு இருக்கும் போது 45 வயசு அப்பா கிட்ட கேட்டுருந்தா சொல்லிருப்பாரா? இல்லை இதே பெரிய பையன் தன்னோட குட்டி பையன் கேட்கும் போது எரிஞ்சு விழுவானா? ரெண்டுமே இல்லை. சின்ன குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் எவ்வளவோ ஒற்றுமை இருந்தாலும், வயதானவர்களுக்கு விபரம் அறிந்தவர்கள் என்ற வேற்றுமை உண்டே? எப்போது பார்த்தாலும் இந்த எண்ணம் தலை தூக்கிய பின் தான் அடுத்த வேலைக்கு போவேன் :-)

Porkodi (பொற்கொடி) said...

ஆமா நீங்க தானே கயல்விழி முத்துலெட்சுமி? :-/ பேரு சுருங்கிடுச்சா? :D

என்னுடைய கடைக்கு தங்கள் வருகைக்கு நன்றி!

Anonymous said...

இது ஒரு கிரேக்க சிறுபடம். யூ ட்யூப்ல பிரபலமா இருந்தது.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பொற்கொடி உங்களுக்குத்தான் முதலில் பதில் சொல்லனும்.. நாந்தாங்க அந்த கயல்விழி முத்துலெட்சுமி என் பெயர்க்காரணமெல்லாம் பெரியகதை..இப்பத்தைக்கு சுருங்கி இருக்கு.. :)

சரி விசயத்துக்குவருவம், அன்பு இருக்கே ஒருவழிப்பாதையாவே பயணிக்குது.. உங்க சந்தேகம் சரியானதே ... அவன் தன்னோட மகன் கேட்டா நிச்சயம் அமைதியா பதில் சொல்ல வாய்ப்பு இருக்கு.. அது தான் தவறு..

முதல்ல காட்சிய முன்னுக்குத் தள்ளிக் கொஞ்சம் பாருங்க அமைதியான இடத்தில் அப்பாவும் மகனும் .. அப்பா என்னசெய்யறார் பையன் என்ன செய்துட்டிருக்கான்.. அவர் என்ன எதிர்பார்க்கிறார் அவன் என்ன செய்யறான்.. ?

இதே அந்த சிறுவயதுக்காட்சியை நீங்க கற்பனை செய்துபாருங்க.. நிச்சயம் அவங்க பார்க் போயிருக்கும் போது அந்த அப்பா பேப்பரோ புக்கோ வாசிச்சிட்டிருந்திருக்க மாட்டார்.. அவன் விளையாடி இருந்தா அதை கவனமா கவனிச்சி பூரிச்சிருப்பார்.. தடுக்கி விழுந்திருந்தா எழுப்பி உதவி இருப்பார்.. கேள்விகளுக்கு பதில் அளித்திருப்பார்.. அப்படிப்பட்ட மனிதருக்கு அருகில் அமர்ந்து பேச்சே இல்லாம அப்படி ஒரு மனிதர் அமர்ந்திருக்கும் சிந்தனையே இல்லாமல் வேறெதோ சிந்தனயா இருந்தா அவருக்கு அவனை திசை திருப்பவும் பழசை அசைபோடவும் ஆசையா இருந்திருக்கலாம்..

தருமி said...

சொல்ல வந்த விஷயம் சொல்லப்பட்ட விதம் நல்லா இருக்கு.

ஆனா ஒரு நெருடல்: நினைவின்றி குருவியைத் திரும்பத் திரும்ப கேட்கும் அப்பா தன் டைரியில் எப்படி அவ்வளவு சரியா நல்ல நினைவாற்றலோடு அந்தப் பக்கத்தை எடுத்துக் காண்பிக்கிறார் என்று மனதில் ஒரு நெருடல் ....

நிஜமா நல்லவன் said...

/ஒருநாளில் அன்புமயமாக மாற இயலாது. ஆனால் இன்னும் கொஞ்சம் மாற்றிக் கொள்ளவேண்டும் என்ற உந்துதல் தோன்றியிருக்கிறது ./

சரியா சொல்லி இருக்கீங்க!

நிஜமா நல்லவன் said...

தலைப்பு நல்லா இருக்கு!

Thekkikattan|தெகா said...

//ஆனா ஒரு நெருடல்: நினைவின்றி குருவியைத் திரும்பத் திரும்ப கேட்கும் அப்பா தன் டைரியில் எப்படி அவ்வளவு சரியா நல்ல நினைவாற்றலோடு அந்தப் பக்கத்தை எடுத்துக் காண்பிக்கிறார் என்று மனதில் ஒரு நெருடல் ...//

தருமி, அப்பாங்கிறவர் அந்த இடத்தில ஒரு zen மாதிரி நினைச்சிக்கோங்க, தன் பிள்ளை பார்க்ல இருக்கும் பொழுது அதுவும் தன்னை மாதிரியான அப்பா பக்கத்தில இருக்கும் பொழுது - அங்கே என்ன நிகழணுமோ அதை விட்டுட்டு அப்படி என்ன செய்தித்தாளில் முங்க வேண்டும்.

அந்த வயசிலும் வாழ்க்கைப் பாடம் எடுக்கிறார்னு வைச்சிக்குவோமே... அதே பையன் தன் சிறு குழந்தையை அதே பார்க்குக்கு கூட்டியாந்தாலும் அதே பொறுப்பில்லாத்தனத்தைக் காட்டினா... சோ, அவரு தெரிஞ்சே செய்றார் :))

கோபிநாத் said...

நீங்களும் போட்டுட்டிங்களா!! ;))

உங்களோட பார்வையில் அன்புக்கதை நல்லாயிருக்கு ;)

Porkodi (பொற்கொடி) said...

mmmm neenga apdi yosikringla... :)))) oru chinna video epdi vidham vidhamana ennangalai valarkudhu illa?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி சென்ஷி.. :) நல்ல படம் இருந்தா சொல்லுங்க விமர்சனம் எழுதிடலாம்..
------------------------

நன்றி தெகா..

------------------------
கண்டிப்பா பார்க்கனும் ஆயில்யன்..
-------------------------------
செல்வநாயகி தொடர்ந்து உங்கள் பக்கங்களில் நீங்க எழுதறதும் இங்க பின்னூட்டமிடறதும் ஆச்சரியமான மகிழ்ச்சியா இருக்கு..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

முல்லை அமுதா நன்றிகள்.. :)
--------------------------
ஆதவன் ஃபேஸ்புக்ல இதுக்காக கண்ணீர்விட்டேன்னு எழுதிய கமெண்ட்டுகளை படிச்சு .. அப்படிகூடவா அழுவாங்கன்னு தோணிச்சுதான் எனக்கும்.. ஆனா நானே அதை சொல்லமுடியாம நின்னப்ப தான் உணர்ந்தேன்..எதோ செய்யுது இந்த் செய்தின்னு

----------------------------
சின்ன அம்மிணி நான் இப்பத்தான் ப்பா பாக்கரேன்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தருமி உங்க கருத்துக்கு நன்றி..
ஆமா நீங்க சொல்றமாதிரி ஒரு அப்பா சொன்னா அது என்னவோ குத்தம் சொல்றாப்பலயோ எதிர்பார்க்கராப்ப்லயோ ஆகும் தான்.. ஆனா தெகா சொல்றாப்ல நினைச்சிக்கிட்டா சரியாகிடும்ன்னு தோணுது...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி நிஜம்மா ந்ல்லவன்..

நன்றி தெகா..
நன்றி கோபிநாத்

பொற்கொடி ஆமாங்க யோசிக்க குழம்பித்தெளிய பயன்பட்டுச்சு இந்த குறும்படம்.

SurveySan said...

அஞ்சு நிமிஷத்துல ஒரு மேட்டர சொல்றது பெரிய விஷயம்தான்.

நல்லாவே இருந்துச்சு, ஆனா, நீங்க சொன்ன மாதிரி கண்ணெல்லாம் கலங்கல.
ஈரமில்லையோ? :)

Unknown said...

பின்னூட்டமாகத்தான் துவங்கினேன். நீளம் அதிகமாகிவிட்டதால் என் வலைப்பூவில் பதிவாகவே தட்டிவிட்டேன்.
இங்கே பார்க்கவும்
படித்துவிட்டு பின்னூட்டம் போடவும்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சர்வேசன் இந்த பதில் மேலயும் இருக்கு திரும்ப அடிக்கிரேன் பாருங்க
\\ஆதவன் ஃபேஸ்புக்ல இதுக்காக கண்ணீர்விட்டேன்னு எழுதிய கமெண்ட்டுகளை படிச்சு .. அப்படிகூடவா அழுவாங்கன்னு தோணிச்சுதான் எனக்கும்.. ஆனா நானே அதை சொல்லமுடியாம நின்னப்ப தான் உணர்ந்தேன்..எதோ செய்யுது இந்த் செய்தின்னு//

நீங்கள் கண்னீர்விடாததால் ஈரமில்லாதவர்ன்னு அர்த்தமில்ல.. நான் அப்படி பதிவில் சொல்லி இருக்க கூடாதுன்னு நினைக்கிறேன்.. உண்மையில் இதைப்பார்த்தப்ப நான் கண்ணீர் விடல..அதைப்பத்தி யோசிக்க, என் வாழ்க்கயோட பொருத்திப்பார்க்க ஆரம்பிச்சப்பத்தான் கஷ்டமா வந்து தொண்டை அடைச்சது..

அதனால் லேசா இதைப்பார்ப்ப அப்படி தோணலைங்கரதுக்காக நீங்க வருத்தப்படவேண்டாம்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

முகிலன் நன்றி.. அங்கே படிக்கிறேன்..

Thamiz Priyan said...

நெகிழ்வாக இருந்தது.

சென்ஷி said...

//உண்மையில் இதைப்பார்த்தப்ப நான் கண்ணீர் விடல..அதைப்பத்தி யோசிக்க, என் வாழ்க்கயோட பொருத்திப்பார்க்க ஆரம்பிச்சப்பத்தான் கஷ்டமா வந்து தொண்டை அடைச்சது..//

அப்போ, அப்பா உங்ககிட்ட அது என்னன்னு கேட்டப்ப குருவின்னு நீங்க சொல்லலையாக்கா :-(

சென்ஷி said...

// தமிழ் பிரியன் said...

நெகிழ்வாக இருந்தது.//

வெயில்ல காய வைங்க. சரியாகிடும் :)

pudugaithendral said...

பகிர்தலுக்கு நன்றி

முத்துலெட்சுமி/muthuletchumi said...

புதுகைத்தென்றல் , தமிழ்பிரியன் நன்றி..

சென்ஷி அவங்க குருவியக் கேக்கல வேற எதாச்சும் கேட்டிருப்பாங்க அப்ப புரிய்வைக்கமுடியாத மூணாவது தடவை கத்தி இருக்கேன்...

கோமதி அரசு said...

வயது முதிர்ந்தவர்களும், குழந்தைகளும்

ஒன்று தான்.தங்கள் கேள்விக்கு பதில் வரும் வரை கேட்டுக் கொண்டு இருப்பார்கள்,அதுவும் தங்களைப் பார்த்து சொல்லவே விருப்பபடுவார்கள், குழந்தைகள் என்றால் நம் முகத்தை தன்
கையால் திருப்பிக் கேட்க்கும்.

குறும் படத்தில் வரும் அப்பாவிற்கு,
பூங்காவில் அந்த பறவையை பார்த்தவுடன் தன் மகன்சிறு வயதில்
அந்த பறவையைப் பற்றி தன்னிடம் கேட்டகேள்வியும் தான் பொறுமையாக
சொன்ன பதிலும் நினைவுக்கு வந்துஇருக்கும். தன்னை அந்த மகனாகவும்,கற்பனை செய்து கொண்டு
மகன் மாதிரியே கேள்வி கேட்டு பார்த்து இருப்பார்.

க. தங்கமணி பிரபு said...

வணக்கம், எல்லோர்க்கும் எப்படியும் ஏதாவ்தோரு நல்ல விஷயத்தை மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானமாக செய்து வரும் மனமாஎந்த பாரட்டுதல்களுக்குரிய உங்களிடம் ஒரு வேண்டுகோள்! தயவு செய்து என் ப்ளாக் http://chinthani.blogspot.com/ கடந்த இரு பதிவுகளையும் அதை தொடர்ந்து அதில் குறிப்பிட்டுள்ள மற்ற ஆங்கில இணையப்பக்கங்களையும் படித்து உங்கள் மனதுக்கு சரியென்று படுவதை உங்கள் ப்ளாக்கை படிப்பவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும்!! இது ஒரு மொத்த இனத்தின் வாழ்வாதார போராட்டத்துக்கு நம்மால் முடிந்த உதவி!

தோட்டா! said...

அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்