August 24, 2009

இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு

ஞாயிறு காலையில் கானா ப்ரபாவின் ஸ்டேட்டஸில் நேரலை பதிவர் சந்திப்பின் தொடுப்பினைக் கண்டதும் லைவ் ஸ்ட்ரீமில் நுழைந்தேன். வெகுநேரமாக நடந்து கொண்டிருந்த சந்திப்பின் முடிவில் ஒன்றரை மணி நேரம் நானும் கலந்துகொண்டேன். அறுபது எழுபது பேருக்கு மேற்பட்ட கூட்டத்தில் ஒன்பது பெண்கள் வந்திருந்தது மகிழ்ச்சியாக இருந்தது. யாரும் நடுத்தர வயதுப் பெண்களாகத் தெரியவில்லை. இளையவர்களே ... அதிலென்னவா .. நடுத்தர வயதுப்பெண்கள் வந்திருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பேன்.

காணொளியில் கூட்டத்தினரின் உரைகளை கேட்டுக்கொண்டிருக்கையிலே அருகிலிருந்த அரட்டைப் பெட்டியில் இணைய விருந்தினர்கள் வேகமான தட்டச்சிக்கொண்டிருந்தார்கள் . கானாவிடம் நாங்களும் அங்கே தட்டச்சலாமா என்று கேட்டுவிட்டு பின் புனைப்பெயராக முத்துலெட்சுமியையே தேர்ந்தெடுத்து நேரலை பதிவர் சந்திப்புக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்தேன்.

பெண்களை பேசவிடுங்கப்பா.. அவரைப் பேசியது போதுமென்று உக்கார சொல்லுங்கப்பா, முதுகு காட்டறவர் யாரப்பா? என்று அங்கே அவ்வப்போது நடந்த தட்டச்சு உரையாடல் களேபரங்கள் கல்லூரியை நினைவு படுத்தியது. குட்டிப்பதிவர் ஒருவர் வந்திருந்தார் .. 6 ம் வகுப்பு படிக்கிறாராம். நான் நுழைந்தபோது யாழ் தேவி யாழ் தேவி என்று எதோ பேச்சு நடந்து கொண்டிருந்தது. பின் வந்தவர்கள் எல்லாருடைய பேச்சிலும் அது அடிபட்டது.

ஒருபோது தான் தன் எழுத்தினால் விசாரிக்கப்பட நேர்ந்தது என்றும் ஆனால் அதுவே எல்லாருக்கும் ஏற்படாது என்று சொல்லிவிட்டு உண்மைபெயரைக் கொண்டே எல்லாரும் எழுதவேண்டும் அப்போது தான் பொறுப்புணர்வோடு எழுதத்தலைப்படுவோம் என்று ஒரு பதிவர் சொல்லிக்கொண்டிருந்தார். ஆங்கிலம் கற்றால் தான் வாழ்க்கை என்று சொல்லப்படும் காலத்தில் இருப்பதால் தங்களுக்கு தமிழின் கடினமான சொற்கள் புரிவதில்லை என்றார் ஒரு பெண்பதிவர். அவர் ஒருவர்தான் எழுந்து பேசிய பெண் என்று கேள்விபட்டேன்.

சிங்கை நாதனைப்பற்றிய குறிப்பு மற்றும் உதவி செய்ய விரும்புவர்கள் கோவிகண்ணன் பதிவைப் பார்க்குமாறு அறிவுறுத்தபட்டார்கள்.

முடிவில் “இருக்கிறம்” என்கிற ஒரு இதழ் எல்லாருக்கும் வழங்கப்பட்டது. இணையத்திலிருந்து நிகழ்வில் பங்கு கொண்டிருந்தவர்கள் ( 40) ”நாங்களும் இருக்கிறம்” என்று சொன்னப்போதிலும் எங்களுக்கு கிட்டவில்லை. ஊரோடி தன் மடிகணினி மூலமாக நிகழ்வை இணையத்தில் காட்டிக்கொண்டிருந்தார். முடிவில் அனைவரும் முகம் காட்டிவிட்டு செல்லும்படி சொல்ல அதற்கு பதில் ஒரு நல்ல யுக்தி செய்தார் . வாயில்படியருகே நின்று கொண்டு எல்லாரையும் காட்டிக்கொண்டிருந்தார்.

இலங்கையில் பதிவர் சந்திப்பு சிறப்பாக நடந்தேறியது மட்டுமல்லாமல் தமிழ் இணைய வரலாற்றில் முதல் முறையாக நேரலையாக காணொளி பரிமாறப்பட்டது என்கிற பெருமையும் சேர்ந்து கொண்டது . அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

மேலும்பலரின் பதிவர் சந்திப்பினைப்பற்றிய பதிவுகளுக்கும் தொடுப்புகளுக்கும்.
.

17 comments:

கோபிநாத் said...

உங்கள் நடையில் சந்திப்பு பற்றி நன்றாக தொகுத்துயிருக்கிங்க ;))

பகிர்வுக்கு நன்றி ;)

ஆயில்யன் said...

//இலங்கையில் பதிவர் சந்திப்பு சிறப்பாக நடந்தேறியது மட்டுமல்லாமல் தமிழ் இணைய வரலாற்றில் முதல் முறையாக நேரலையாக காணொளி பரிமாறப்பட்டது என்கிற பெருமையும் சேர்ந்து கொண்டது . அவர்களுக்கு வாழ்த்துக்கள்.///

நிச்சயம் பெரிய சாதனையாக்கி காண்பித்திருக்கும் தமிழ் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள் !

தொடர்ந்து பல நல்ல முயற்சிகளை சாதனைகளாய் முன்னெடுத்து செல்வதற்கும் வாழ்த்துக்கள் !

Thekkikattan|தெகா said...

ஓ! இப்படியெல்லாம் கூட வலைப்பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளமுடியுமா? நன்று....

கானா பிரபா said...

அட, பதிவாவே போட்டுட்டீங்களா ;) நானும் இதைப்பற்றி எழுத இருக்கிறேன்

வல்லிசிம்ஹன் said...

தெரியாமல் போய்விட்டதே. சுவார்ஸ்யமாக இருந்திருக்கும்.
நல்லாத் தொகுத்து வழங்கி இருக்கீங்க முத்துலட்சுமி.

சுபானு said...

உங்களின் பார்வையில் எழுதிய எழுத்துக்கள் அழகாக இருக்கின்றன.. நன்றி..

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

க.பாலாசி said...

//நான் நுழைந்தபோது யாழ் தேவி யாழ் தேவி என்று எதோ பேச்சு நடந்து கொண்டிருந்தது. பின் வந்தவர்கள் எல்லாருடைய பேச்சிலும் அது அடிபட்டது.//

கடைசிவரையில் அந்த யாழ்தேவியை பற்றி சொல்லவேயில்ல...

பதிவர்கள் சந்திப்பு என்றால் எனக்கு டாஸ்மாக்கும் பாரும் ஞாபகம் வரும்.(நான் குடிப்பவன் அல்ல) இதை போன்றவகையிலும் ஆரோக்கியமான பதிவர் சந்திப்பு நடப்பதை அறிந்து மகிழ்கிறேன்.

Thamiz Priyan said...

நானும் பார்க்க வேண்டும் என எண்ணி இருந்தேன். இணைய இணைப்பை துண்டித்து விட்டதால் பார்க்க முடியாமல் போய் விட்டிருந்தது. நேரடி ஒளிபரப்புடன் கலக்கலாக நடத்தப்பட்டதற்கு வாழ்த்துக்கள்!

☀நான் ஆதவன்☀ said...

//இளையவர்களே ... அதிலென்னவா .. நடுத்தர வயதுப்பெண்கள் வந்திருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பேன். //

நீங்களும் யூத்து தான்..யூத்து தான்..யூத்து தான். ஸோ டோண்ட் வொர்ரிக்கா

☀நான் ஆதவன்☀ said...

//இலங்கையில் பதிவர் சந்திப்பு சிறப்பாக நடந்தேறியது மட்டுமல்லாமல் தமிழ் இணைய வரலாற்றில் முதல் முறையாக நேரலையாக காணொளி பரிமாறப்பட்டது என்கிற பெருமையும் சேர்ந்து கொண்டது . அவர்களுக்கு வாழ்த்துக்கள். //

ஆமாம் புதிய சாதனை தான் இது. வாழ்த்துகள்

கோமதி அரசு said...

இலங்கையில் பதிவர்சந்திப்பு சிறப்பாக நடந்தேறியது அறிந்து மகிழ்ச்சி.

இலங்கை வலைப்பதிவர்களுக்கு,வாழ்த்துக்கள்.

தொகுத்து அளித்த முத்துலெட்சுமிக்கு
வாழ்த்துக்கள்.

சென்ஷி said...

// ஆயில்யன் said...

//இலங்கையில் பதிவர் சந்திப்பு சிறப்பாக நடந்தேறியது மட்டுமல்லாமல் தமிழ் இணைய வரலாற்றில் முதல் முறையாக நேரலையாக காணொளி பரிமாறப்பட்டது என்கிற பெருமையும் சேர்ந்து கொண்டது . அவர்களுக்கு வாழ்த்துக்கள்.///

நிச்சயம் பெரிய சாதனையாக்கி காண்பித்திருக்கும் தமிழ் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள் !

தொடர்ந்து பல நல்ல முயற்சிகளை சாதனைகளாய் முன்னெடுத்து செல்வதற்கும் வாழ்த்துக்கள் !//

வழிமொழிகிறேன்!

வந்தியத்தேவன் said...

உங்கள் தொகுப்பு நன்றிகள் முத்துலட்சுமி அவர்களே, இணையத்தினூடாக பார்வையிட்ட நண்பர்களில் நீங்களும் ஒருவர் என்பது சந்தோஷமான விடயம். முதல் முயற்சி என்பதால் இணைய வழி ஒளி/ஒலிப்ரப்பில் சில சிக்கல்கள் நிகழ்ந்தன அதனால் தெளிவு குறைவாகவே இருந்திருக்கும், அடுத்த சந்திப்பில் இவை களையப்பட்டு ஸ்கைப் மூலமோ இல்லை வேறு எதாவது தொடர்பாடல் மென்பொருள் மூலமோ ஏனைய நாட்டு உறவுகளுடன் நேரடியாக பேசும் வசதியும் ஏற்படுத்த நினைத்திருக்கின்றோம்.

Unknown said...

//இணையத்திலிருந்து நிகழ்வில் பங்கு கொண்டிருந்தவர்கள் ( 40) ”நாங்களும் இருக்கிறம்” என்று சொன்னப்போதிலும் எங்களுக்கு கிட்டவில்லை.//
ம்... வாஸ்தவமான ஆசை தான்...
எங்கள் சந்திப்பைப் பற்றி எழுதியமைக்கு நன்றி.
வாசித்து மகிழ்ந்தேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கோபிநாத், ஆயில்யன், கானா,வல்லி , தெகா, சுபானு , செய்திவளையம் , தமிழ்ப்ரியன் நன்றிகள்..
-------------------------------
க.பாலாஜி , யாழ்தேவி என்பதும் ஒரு திரட்டியாம்..
---------------------
நான் ஆதவன் , வருத்தம் வயதுக்காக இல்லை.குறிப்பிட்ட வயதுக்கு மெல் பெண்கள் இதுபோல விசயங்களுக்கென வெளியே வர பல தடங்கல்கள் பொறுப்புகள் அதை சொல்லவந்தேன்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கோமதி அரசு , சென்ஷி
நன்றிகள்
-----------------------
வந்தியதேவன் வருகைக்கு நன்றி..ஆமாம் மடிகணினி யின் தூரமாக இருப்பவர் பேசும்போது தெளிவு இல்லைதான்..அடுத்த முயற்சியில் இன்னமும் சிறப்பாக செய்ய வாழ்த்துக்கள்.
---------------------------------
கனககோபி வருகைக்கு நன்றி.