August 7, 2009

இனிது ! இனிது! தமிழினிது!

தில்லி நகரில் வடக்கு வாசல் இதழுக்காக நடைபெறும் இசைவிழாக்கள் என்றாலே தமிழிசையை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கத் தொடங்குவது வழக்கம். இம்முறை பக்தி இசைவிழா என்று மூன்று நாட்கள் அறிவிப்பு கிடைத்தது. எதிர்பாராதவிதமாக திருமதி பட்டம்மாளின் இழப்பினால் நித்யஸ்ரீ அவர்களின் கச்சேரி இருந்த தினம் மட்டும் விழா நடைபெறவில்லை.

முதல் நாள் விழாவை கேட்க இயாலதபடி வேலை வந்தது. இரண்டாம்நாள் சஞ்சய் சுப்ரமணியத்தின் கச்சேரிக்கு அரை மணி முன்னதாகவே போய் இடம் பிடித்து அமர்ந்து கொண்டோம். அது என்ன மாயமோ? இசைக்கச்சேரிகளில் 80 விழுக்காட்டிற்கும் மேல் வயதான தாத்தாவும் பாட்டியுமாகவே வந்து இறங்குகிறார்கள். அவர்கள் ரசிப்பதில் தவறு ஏதும் இல்லை. ஆனால் இளையவர்களும் நடுவயதினரும் சம பங்காக இருந்தால் நன்றாக இருக்குமே என்று ஒரு ஆசை தான்.


’ என்ன புண்ணியம் செய்தாயோ’ என்று சஞ்சய் பாடியபோது இது போன்ற தமிழிசைக் கச்சேரிகளைக் கேட்க நிச்சயம் புண்ணியம் தான் செய்திருக்கவேண்டும் என்று எனக்குத் தோன்றியது.ஒரு பாடலுக்கும் இன்னொரு பாடலுக்குமான இடைவேளையில் ஒரு சின்ன துண்டுச் சீட்டு வந்தது. சரிதான் யாரோ பாட்டு கேட்டிருப்பார்களோ அது என்ன பாட்டாக இருக்கும் இப்படி ஆவலோடு (ரசிகர்கள் எல்லாரும் தான்) இருந்தோம். சஞ்சய் ஒருநிமிடம் அமைதியாக அதை வாசித்துவிட்டு சிரித்தபடி ” ஒரு வண்டி ரோடை ப்ளாக் செய்து நிற்கிறதாம் நம்பர் -----” என்றார். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த பென்னேஸ்வரன் அவர்கள் இதைத் தனியாக வேறு யாரையும் கொண்டு அறிவித்திருக்கலாமே என்று சொல்ல ஓடினார் என்று நினைக்கிறேன். சிச்சுவேசன் சாங் ஐ போல ”யாருக்கும் அடங்காத நீலி” என்று சஞ்சய் ஆரம்பித்ததும் எல்லாரும் சிரிக்கத்தொடங்கினார்கள்.

ஷண்முகப்பிரியாவில் பார்வதி நாயகனே! கண்டேன் கலி தீர்ந்தேன் , மாலனை மன்றாடி மைந்தனை ,பூத்தவளே புவனம் பதினாங்கையும் .. என அவர் தொடர்ந்து இசை மழையாய் பொழிய.. உற்சாகமாய் பாடிக்கொண்டே தானும் ரசித்து மற்றோரையும் ரசிக்க செய்து கொண்டிருந்தார். பக்கவாத்தியங்களும் வயலினில் எஸ்.வரதராஜனும் நெய்வேலி வெங்கடேஷ் மிருதங்கத்திலுமாக களை கட்டி இருந்தது. பாடுவது நமக்காக இல்லாமல் தானும் ரசித்து அவர் பாடும் போது ரசிகர்களுக்கும் அவருக்குமான ஒரு மகிழ்ச்சி அங்கே சமன்பாட்டில் இருந்தது.
” குழலினிது யாழினிது” குறளின் ஈரடிகளை வைத்துக்கொண்டு ஓர் அற்புதமே நிகழ்த்தினார். ( இது பெஹாக் என்கிற ராகம் என்று தலைவாசல் கட்டுரையைப் படித்து அறிந்துகொண்டேன் ) என்னதான் மகளோடு இசை வகுப்பில் போய் அமர்ந்தும் அங்கே இங்கே கேட்டும் வந்திருக்கிற கீர்த்தனை , கிருதி என்கிற கேள்வி ஞானம் கொஞ்சம் இருந்தாலும் தமிழில் பாட்டைக் கேட்டு ரசிப்பதன் இன்பம் தனிவிதம் தான். சில ராகங்களை மட்டும் உடனே கண்டுபிடித்துவிடுவேன் அதில் சகானா முதலிடம். சஞ்சய் சஹானாவில் ஒரு பாட்டு பாடிய போது மகிழ்ச்சியாக இருந்தது.( அன்றைக்கு அவர் சஹானாவில் பாடவே இல்லைன்னு மட்டும் யாரும் சொல்லிடாதீங்க)

சஞ்சய் சுப்ரமணியம் பாடியதைக் கேட்டதிலிருந்து வீட்டுக்குட்டிப்பையன் ராகம் பாட ஆரம்பித்திருக்கிறான். மேடையில் இருப்பது சபரி என்று அவனே சொல்லிகொண்டான் (மைக் ஆசை வந்துவிட்டதோ?). விழா நடந்த வாரத்திலேயே எழுதி இருந்தால் அழகாக சொல்லி இருக்கலாம்.. இது நினைவில் வைத்து (வைக்க) சேமித்த சிறு குறிப்புக்கள்

’வடக்குவாசல்’ பென்னேஸ்வரன் அவர்கள் தமிழிசையை அனைவருக்கும் கொண்டுசேர்ப்பதற்காய் பற்பல நன்றிகள்.

25 comments:

☀நான் ஆதவன்☀ said...

இன்னும் பாட்டு ரெடி ஆகலையே :(

சென்ஷி said...

:)

//கீர்த்தனை , கிருதி என்கிற கேள்வி ஞானம் கொஞ்சம் இருந்தாலும் தமிழில் பாட்டைக் கேட்டு ரசிப்பதன் இன்பம் தனிவிதம் தான்./

சரியா சொன்னீங்கக்கா. நான் கூட இளையராஜா, ரஹ்மான், தேவா, சிற்பி, இன்னும் நிறைய்ய பேர் மியுசிக் பண்ண பாட்டை விரும்பி கேப்பேன்.

ஆனா இதுவரைக்கும் ஒரு முறைக்கூட தமிழிசைக் கச்சேரி போய் கேட்க மனசு வந்ததில்லை. புரியாதுங்கற பயம்மா கூட இருக்கலாம் :-(

பகிர்விற்கு நன்றி.

இணைப்பிலிருக்கும் பாடலை பொறுமையாகக் கேட்கிறேன்!

☀நான் ஆதவன்☀ said...

//அவர்கள் ரசிப்பதில் தவறு ஏதும் இல்லை. ஆனால் இளையவர்களும் நடுவயதினரும் சம பங்காக இருந்தால் நன்றாக இருக்குமே என்று ஒரு ஆசை தான்.//

சரிதான். கேட்க நேரம் வேண்டுமே இந்த ஃபாஸ்ட் புட் உலகத்தில :)

தமிழ் பிரியன் said...

Antha 80 sathathil neengalum oruvara akka? ;-)))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பாட்டு எனக்குக் கேட்குதே ஆதவன்..

பாஸ்ட் புட் க்கு போக மட்டும் தான் அவங்களுக்கு நேரம் இருக்குமா பாஸ்ட் புட் காலத்துல :))

தமிழ் பிரியன் said...

Naan romba nala unga veetil irunthu oru thamil paattu ketkuren. Intha leavilum emanthutten.... :(

கோபிநாத் said...

;))

பாட்டு இரவு கேட்கிறேன்..பகிர்வுக்கு நன்றி ;)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சென்ஷி தமிழிசைங்கறதில் என்ன பயம்?
ஆலாபனை , ஸ்வரஜதி எல்லாம் இளையராஜாவும் தான் வைக்கிறார்.. அதை மனப்பாடமா ஹம் செய்யமுடியுதே உங்களால.. கூட வர வார்த்தைகள் இங்கயும் தமிழ் தானே .. பயம் விட்டு தமிழால் ரசிக்கனுன்னு தானே தமிழிசையா வைக்கிறதே.. வார்த்தைகள் புரிஞ்சுடுச்சுன்னா , இசையை ரசிக்கறவங்களுக்கு கூடுதல் பலன் தானே.. :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அந்த எண்பது சதத்தில் நான் இருக்கலாம்.. கூட கூட்டிட்டுப் போன என் குட்டீஸ் இளையவர்கள் ல வராங்களே .. கணக்கு சரியாகிடுச்சு..தமிழ்பிரியன்..

மன்னிக்கனும் என் பொண்ணு இங்க தான் பிசி ஊருல போய் பயிற்சி எடுக்க வைக்கலாம்ன்னு இருந்தேன் . ஆனா ஊருல இத விட பிசியா இருந்தா.. முயற்சி தொடரும்.. :)

nivaz said...

i planned to come but unfortunately i didnt attend......


ushushsushsush........

ippavae kanna kattuthae

சந்தனமுல்லை said...

நல்லாருக்கு உங்க அனுபவப்பகிர்வு!! உங்கள் ஆசை நிறைவேறட்டும்! :-)

பாலாஜி said...

//இது நினைவில் வைத்து (வைக்க) சேமித்த சிறு குறிப்புக்கள்//

இருந்தாலும் அழகுதான். தாங்கள் சொல்லிய விதமும் அருமை.

Anonymous said...

//வீட்டுக்குட்டிப்பையன் ராகம் பாட ஆரம்பித்திருக்கிறான். //

நல்லா ஆர்வமூட்டுங்க. சின்ன வயசில வரும் ஆர்வம் என்னைக்குமே மறையாது. நீறு பூத்த நெருப்பு மாதிரி இருக்கும்.

துபாய் ராஜா said...

நல்லதொரு தமிழிசைப்பகிர்வு.

'குட்டீஸ்' இசை படிப்பது மகிழ்ச்சி.

வாழ்த்துக்கள்.

ராமலக்ஷ்மி said...

//இது நினைவில் வைத்து (வைக்க) சேமித்த சிறு குறிப்புக்கள்//

ரசித்தவற்றை நினைவு கூர்ந்து நல்ல ரசனையுடன் சொல்லியிருக்கிறீர்கள்:)!

குழந்தைகளுக்கு என் வாழ்த்துக்கள்!

நேசமித்ரன் said...

மிக நல்ல பகிர்வு .ராஜ்குமார் பாரதியின் பாரதி பாடல்கள் கேட்பதுண்டு
இந்தப் பாடலை இரவில் கேட்கிறேன்
நன்றி

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கோபி நன்றே செய் இன்றே செய் கேள்விபட்டதுண்டா.. :)
புண்ணியத்தைப் பகிர்ந்தளிக்க நினைச்சேன். ஆனா அதை எடுக்கவேண்டி ஒரு சூழ்நிலை .எடுத்துட்டேன்..
-----------------------
நிவாஸ் .. நானும் இப்படித்தான் போகததுக்கு சாக்கு சொல்வேன்.. போனா வராத மத்தவங்கள கேள்வி கேப்பேன் கண்டுக்கக்கூடாது.. :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

முல்லை உங்க வாக்கு பலிக்கட்டும். :)
---------------------
நன்றி பாலாஜி.. அதுவும் அந்த வரி எனக்கே பிடிச்சிச்சு ..அதை குறிப்பிட்டதுக்கு ரொம்ப நன்றி .. :))
--------------------------

சின்னம்மணி அவனும் அக்கா வகுப்பில் உக்காந்து வாய்ப்பாப்பனில்ல அதனால் உள்ள இருக்கு வெளிய கொண்டுவரனும்.. :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி துபாய் ராஜா..
-----------------------------
ராமலக்‌ஷ்மி நன்றி நன்றி
------------------------
நேசமித்ரன் நன்றி..
மன்னிக்கனும் இங்கே இணைத்தப்பாடல் தற்போது இங்கே இல்லை.. :(

துளசி கோபால் said...

உண்மைக்குமே புண்ணியம்தான் செஞ்சுருக்கணும் இதையெல்லாம் அனுபவிக்க:-)

ஆமாம்.இளையவர்களை யாரும் வரவேணாமுன்னு சொல்லிட்டாங்களா?

அண்ணாத்தையின் பாட்டுக் கச்சேரியில் கார் குறுக்கே நின்னா நாந்தான் அறிவிப்பேன்:-)

rapp said...

//
’ என்ன புண்ணியம் செய்தாயோ’ என்று சஞ்சய் பாடியபோது இது போன்ற தமிழிசைக் கச்சேரிகளைக் கேட்க நிச்சயம் புண்ணியம் தான் செய்திருக்கவேண்டும் என்று எனக்குத் தோன்றியது.//

இப்டித்தான் முத்து எனக்குத் தெரிஞ்சவங்களும் சொல்றாங்க, ஆனா, அவங்க என் கச்சேரிக்கு வராதப்போ இதைச் சொல்றதுதான் ஏன்னு புரியல:):):)

கோமதி அரசு said...

//மேடையில் இருப்பது சபரி எனறு
அவனே சொல்லி கொண்டான்//

அவனும் பாட்டு கற்றுக் கொண்டால்
அக்காவுடன் சேர்ந்து பாட்டு கச்சேரி
செய்யலாம்.

R.Gopi said...

//இளையவர்களும் நடுவயதினரும் சம பங்காக இருந்தால் நன்றாக இருக்குமே என்று ஒரு ஆசை தான்.//

நீங்க வேற மேடம். இது பாழாய்ப்போன "நாக்க முக்க" ரசிக்கிற காலம். அவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது சங்கீதம் என்றால் என்ன என்று? ஆயினும், இப்போதும் சிலர் விரும்பி கற்பதை மறுப்பதற்கில்லை. (நேத்திக்கு ஒரு பாட்டு கேட்டேன்.... அது என்ன பாட்டுன்னா (டேய்...கையை வச்சுக்கிட்டு சும்மா இருடா..அருமையான டூயட்
பாடல்) என்ன தவம் செய்தேனோ இந்த பாடலை கேட்பதற்கு....

//என்ன புண்ணியம் செய்தாயோ’ என்று சஞ்சய் பாடியபோது இது போன்ற தமிழிசைக் கச்சேரிகளைக் கேட்க நிச்சயம் புண்ணியம் தான் செய்திருக்கவேண்டும் என்று எனக்குத் தோன்றியது.//

உண்மை.... சஞ்சயின் குரல் கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கும்...

//என்னதான் மகளோடு இசை வகுப்பில் போய் அமர்ந்தும் அங்கே இங்கே கேட்டும் வந்திருக்கிற கீர்த்தனை , கிருதி என்கிற கேள்வி ஞானம் கொஞ்சம் இருந்தாலும் தமிழில் பாட்டைக் கேட்டு ரசிப்பதன் இன்பம் தனிவிதம் தான்//

உண்மையை வெகு சாதாரணமாக சொல்லி இருக்கிறீர்கள் முத்துலெட்சுமி...

//விழா நடந்த வாரத்திலேயே எழுதி இருந்தால் அழகாக சொல்லி இருக்கலாம்.. இது நினைவில் வைத்து (வைக்க) சேமித்த சிறு குறிப்புக்கள்//

நல்ல விஷயங்களை எப்போது சொன்னால் என்ன?!!

R.Gopi said...

//இளையவர்களும் நடுவயதினரும் சம பங்காக இருந்தால் நன்றாக இருக்குமே என்று ஒரு ஆசை தான்.//

நீங்க வேற மேடம். இது பாழாய்ப்போன "நாக்க முக்க" ரசிக்கிற காலம். அவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது சங்கீதம் என்றால் என்ன என்று? ஆயினும், இப்போதும் சிலர் விரும்பி கற்பதை மறுப்பதற்கில்லை. (நேத்திக்கு ஒரு பாட்டு கேட்டேன்.... அது என்ன பாட்டுன்னா (டேய்...கையை வச்சுக்கிட்டு சும்மா இருடா..அருமையான டூயட்
பாடல்) என்ன தவம் செய்தேனோ இந்த பாடலை கேட்பதற்கு....

//என்ன புண்ணியம் செய்தாயோ’ என்று சஞ்சய் பாடியபோது இது போன்ற தமிழிசைக் கச்சேரிகளைக் கேட்க நிச்சயம் புண்ணியம் தான் செய்திருக்கவேண்டும் என்று எனக்குத் தோன்றியது.//

உண்மை.... சஞ்சயின் குரல் கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கும்...

//என்னதான் மகளோடு இசை வகுப்பில் போய் அமர்ந்தும் அங்கே இங்கே கேட்டும் வந்திருக்கிற கீர்த்தனை , கிருதி என்கிற கேள்வி ஞானம் கொஞ்சம் இருந்தாலும் தமிழில் பாட்டைக் கேட்டு ரசிப்பதன் இன்பம் தனிவிதம் தான்//

உண்மையை வெகு சாதாரணமாக சொல்லி இருக்கிறீர்கள் முத்துலெட்சுமி...

//விழா நடந்த வாரத்திலேயே எழுதி இருந்தால் அழகாக சொல்லி இருக்கலாம்.. இது நினைவில் வைத்து (வைக்க) சேமித்த சிறு குறிப்புக்கள்//

நல்ல விஷயங்களை எப்போது சொன்னால் என்ன?!!

Annam said...

பகிர்வுக்கு நன்றி ;)