எப்போவெல்லாம் நான் பாடம் படிக்கலாம்ன்னாலும் பையன் அம்மா எனக்கு போராகுதுன்னு சொல்வான். எத்தனை நாள் தான் விளையாட்டா பாடம் படிக்கிறது. அதனால் அப்பப்ப பாடம் படிப்பதும் தினம் கொஞ்சம் உக்காருவதும் கடமை என்று உணர்த்தப்பார்க்கிறேன் முடியவில்லை.
இன்றைய விளையாட்டு..
ஒன்று (இரண்டை மனதில் நினைக்கனும்) மூன்று ( நான்கை மனதில் நினைக்கனும்)
இப்படியே வேகமாக சொல்லனும்.. அவனும் அதை விளையாட்டு என்றே நினைத்து விளையாண்டு விட்டான்.
அடுத்த நம்பர் என்ன முன்னால் இருக்கும் நம்பர் என்ன என்பதை நிச்சயமாக விளையாட்டு என்று நம்ப மாட்டான். ஆனால் அதையே ஒரு கற்பனை கணினி விளையாட்டாக விளையாண்டோம். ஈஸி, மீடியம், ஹார்டு என்கிற மூன்று லெவல் இருக்கிறது என்றதும் அவனாகவே ஒரு கட்டத்தை காற்றில் க்ளிக் செய்துவிட்டு இப்ப ஹார்டு என்றான். என்ன ஒரு தைரியம் ம் பார்க்கலாம்.. 33_ , 46 _, 99 _ எல்லாவற்றிற்கும் சரியான பதில் சொல்லிவிட்டு இப்ப ஈஸி லெவல் எப்படி இருக்கும்ன்னு பார்க்கலாம் என்று காற்றில் க்ளிக்கினான்.
-----------------------------------------
கடையில் 5 மிட்டாய் கேட்டான். கடைக்காரர் ரவுண்ட் செய்ய 6 மிட்டாயாக குடுத்துவிட்டார்.
ஒன்றை வழியிலேயே சாப்பிட்டுவிட்டு.. பர்ஸில் 6 இருக்கா என்றான். அது எப்படி நீதான் ஒன்று சாப்பிட்டு விட்டாயே என்றதும் அப்ப எத்தனை இருக்கு என்று கேட்டான். நீயே சொல்லு யோசித்து என்றேன். ம்.. 5 இருக்கா ? என்று கணக்கு செய்து கொண்டான். அட கழித்தல் கணக்குக்கூட செய்ய ஆரம்பித்துவிட்டான் . :-)
------------------
ரிஷிகேசத்தில் இருந்தபோது குளிரின் காரணமாக மிட்டாய் தரவே இல்லை .அம்மா தில்லி போனபின்னாவது தருவியா என்றான். அங்கயும் குளிர்தான்ப்பா ..நோ ... என்றது..
’ஸ்.. ஏ மம்மி கபி சுதரேகி நஹி ‘ என்று சலித்துக்கொண்டான்.
நான் இவன் என்ன சொல்கிறான் என்று புரியாமல் முழித்தேன். மகள் சொன்னாள்.
அம்மா அவன் என்ன சொல்றான் தெரியுமா.. ’இந்த அம்மா எப்பவும் திருந்தவே மாட்டாள் ‘
:(
அது எதோ டோரிமான் கார்டூன் கேரக்டர் பையன் சேட்டை செய்வதற்கு சொல்வதாம்.
-----------------------------------
வானவில் இற்றைகள் 1
34 comments:
Good idea! Over here, my daughter says they follow similar games to do maths at school. :-)
கணக்கை இப்படியும் சொல்ல முடியுமா?.......நல்லா இருக்கு..
//கடையில் 5 மிட்டாய் கேட்டான். கடைக்காரர் ரவுண்ட் செய்ய 6 மிட்டாயாக குடுத்துவிட்டார்.
ஒன்றை வழியிலேயே சாப்பிட்டுவிட்டு.. பர்ஸில் 6 இருக்கா என்றான்//
5 மிட்டாய் இங்கே இருக்கு இன்னொன்னு எங்கேன்னு கேட்டு இருக்கணும்
//இந்த அம்மா எப்பவும் திருந்தவே மாட்டாள் ‘//
:):):):)
//இப்ப ஈஸி லெவல் எப்படி இருக்கும்ன்னு பார்க்கலாம் என்று காற்றில் க்ளிக்கினான்.//
:)!
//பர்ஸில் 6 இருக்கா//
:))!
//’ஸ்.. ஏ மம்மி கபி சுதரேகி நஹி‘//
:)))!
ரசித்தேன்!!!
இது சிறு முயற்சி இல்லீங்க..பெரிய முயற்சி..ஆனா பசங்க கண்டு புடிச்சிட்டான்களே
//ஸ்..ஏ மமமி கபி சுதரேகி நஹி//
சபரியின் ஆதங்கம் புரிகிறது.
திருந்துங்கள் முத்துலெட்சுமி,அவன் கேட்பதை இடை,இடையே கொடுக்க.
கணக்கு போடும் முறை நல்லா இருக்கு.
:))
சித்ரா நன்றி நான் சரியான பாதையில் தான் போகிறேன்னு சொல்லிட்டீங்க..:)
பொண்ணு எதுன்னாலும் பள்ளியில் நடந்ததை சொல்வா.. இவர் சொல்லமாட்டார்..
-------------------------
நன்றி நாடோடி , எப்படியாச்சும் சொல்லவேண்டி இருக்கே.. :)
-----------------------
நசரேயன், அவனுக்கே கொஞ்சம் சேட்டை சாஸ்தி நீங்க வேற சொல்லிக்குடுப்பீங்க போலயே..:)
அட என்ன ஒரு மகிழ்ச்சி பாருங்க சின்ன அம்மிணிக்கு :)
-------------------
ராமலக்ஷ்மி எதையும் பாஸிட்டிவா பார்க்கனுமாம் அதனால் .. அவங்கப்பா சொல்றாங்க இவன் கிட்ட இருந்து நல்ல ஹிந்தி கத்துகலாம் நம்ம ..சுதரேஹி ந்னா இப்பத்தானே தெரிஞ்சது :)
---------------------
புலவரே பிள்ளைங்கள ஏமாத்தறது கஷ்டம் தான்.. ;)
கோமதிம்மா குடுத்துட்டே தான் இருக்கேன்.. எங்க விடறான்..;)
---------------
புதுகைத்தென்றல் நன்றிப்பா..
//’ஸ்.. ஏ மம்மி கபி சுதரேகி நஹி‘//
;-))))
அட இத படிக்கும்போது என் பையன் லாலிபாப்புக்கு அடம் பிடிச்சிகிட்ட்ருக்கான்..:))
நல்லா இருக்குங்க, நானும் ட்ரை பண்றேன்..:)
//இந்த அம்மா எப்பவும் திருந்தவே மாட்டாள் ‘//
சபரி எனும் ஞானி :))
’இந்த அம்மா எப்பவும் திருந்தவே மாட்டாள் ‘
:(
:))))))))))) ஏன் அம்மா இப்படியிருக்கீங்க.
ஹஹ்ஹா...இப்போவே ஆரம்பிச்சாச்சா...சீக்கிரம் திருந்துங்கப்பா! :-)
நல்லா இருக்குங்க....
நானும் முயற்சி செய்து பார்க்கிறேன்...
ஹா ஹா!!!
/*’இந்த அம்மா எப்பவும் திருந்தவே மாட்டாள்
*/
திருந்துங்கப்பா...
முயற்சி திருவினையாகட்டும் :))
ரசிக்குபடியாக இருக்குங்க
எனக்கு கணக்கு பாடத்தை இது மாதிரி யாரும் கற்பித்தது இல்லை.இது சிறு முயற்சி மட்டும் அல்ல நல்ல முயற்சியும் தான்
என்னைய வச்சு காமெடின்னா பிடிக்கிற ஆளுங்களா நீங்கள்ளாம்..
தமிழ்பிரியன்,சஞ்சய்,அமிர்தவர்ஷினி அம்மா, அமுதா, முல்லை நன்றி நன்றி..:)
---------------
@பலாபட்டறை
என்னது லாலிபப்பா அது காரணமாத்தான் கேக்கறாங்க.. ரெண்டு மிட்டாய் மூணு மிட்டாயை சேத்து சாப்பிடற சைஸாச்சே லாலிபப் :(
சங்கவி முயற்சி செய்யுங்கள் நன்றி..
கண்மணி நன்றிப்பா..
ஞானசேகரன், மின்னல் உங்களுக்கும் நன்றிகள்.
நல்ல ஐடியா.
//ரிஷிகேசத்தில் இருந்தபோது குளிரின் காரணமாக மிட்டாய் தரவே இல்லை .அம்மா தில்லி போனபின்னாவது தருவியா என்றான். அங்கயும் குளிர்தான்ப்பா ..நோ ... என்றது..//
என்னா வில்லத்தனம்....
//நசரேயன் said...
//கடையில் 5 மிட்டாய் கேட்டான். கடைக்காரர் ரவுண்ட் செய்ய 6 மிட்டாயாக குடுத்துவிட்டார்.
ஒன்றை வழியிலேயே சாப்பிட்டுவிட்டு.. பர்ஸில் 6 இருக்கா என்றான்//
5 மிட்டாய் இங்கே இருக்கு இன்னொன்னு எங்கேன்னு கேட்டு இருக்கணும்//
அதான் இதுன்னு பதில் வந்து இருக்கும்...
//சின்ன அம்மிணி said...
//இந்த அம்மா எப்பவும் திருந்தவே மாட்டாள் ‘//
:):):):)//
சின்ன அம்மிணிக்கு ஏன் இவ்ளோ சந்தோஷம்னு தெரியலியே... ஒருவேளை அவங்க சொல்ல வந்ததை குழந்தை சொன்னதால இருக்குமோ?? என்னா வில்லித்தனம்?
நல்ல பதிவு.... அதுவும் அந்த கணக்கு சொல்லி கொடுத்த முறை ஆஹா... பலே...
வாழ்த்துக்கள் முத்துலெட்சுமி...
குழந்தை விளயாட்டு நல்லா இருக்கு, முத்துலெட்சுமி.
//இந்த அம்மா எப்பவும் திருந்தவே மாட்டாள் ‘//
இது ரொம்ம்ம்ப நல்லா இருக்கு.
//அதையே ஒரு கற்பனை கணினி விளையாட்டாக விளையாண்டோம்//
நல்ல டெக்னிக்..
நல்லா இருக்கு :-)
உங்களோடCreativity ரொம்ப நல்லா இருக்கு
நீங்களே ஒரு student மாறுனதால்தான் இது உங்களுக்கு தோனிருக்கும் நினைக்கிறேன்
:))) சபரி ராக்ஸ்!
கண்ணகி , பாலாஜி , கோபிநாத் , ஆர் கோபி , அம்பிகா, ஸ்வர்ணரேகா , சிங்கக்குட்டி, நன்றி நன்றி..
----------------
கிச்சான் சரியாச் சொன்னீங்க..எனக்கே மனக்கணக்கு வராது .. அதனால் நானும் ஸ்டூடண்ட்டா மாறித்தான் ஈஸி வழி கண்டுபிடிச்சிருப்பேன் போல..அடுத்தது கணக்கு ட்ரயின் கண்டுபிடிச்சிருக்கோம் அது அடுத்த இற்றைகளில் வெளிவரும்.. ;)
நல்ல பதிவு. குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கும் போது தான் நமக்கே நெறைய புரிகிறது.
பிள்ளைகளோடு நின்றால் நிறைய கற்று கொள்ளலாம்..
சுவாரசியமாக இருந்தது..
Post a Comment