January 12, 2011

13 வது நாடகத்திருவிழா - மிருக விதூஷகம்

நேஷனல் ஸ்கூல் ஆஃப் ட்ராமா பெயர் பலகையை பலமுறை வாசித்துக்கொண்டே
உள்ளே என்ன நடக்கும் என்று யோசித்துக்கொண்டே கடந்து போவோம். அதனைப்பற்றிய செய்திகளை பத்திரிக்கையில் வாசித்துக்கொண்டே எப்படித்தான் அவை நடக்கும் என்று பார்க்கவில்லையே இதுவரை என்று உள்ளூர எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது.

லிவிங் ஸ்மைல் வித்யா,  தான் பங்கேற்கும் நாடகம், இயக்குனர் முருக பூபதியின் ‘மிருகவிதூஷகம்*அங்கே திறந்தவெளி அரங்கில் 11ம் தேதி இரவு நடக்குமென்று தொலைபேசியில் செய்தி அனுப்பினார். நானொரு கிறுக்கியைப்போல ‘குளிருமே’ என்று மறுசெய்தி அனுப்பிவிட்டு
யோசித்துக்கொண்டிருந்தேன். அன்றோ துணைக்கு அழைத்தால் வீட்டில் ஒருவருக்கும் வரும் வகையுமில்லை . மெட்ரோ துணையிருக்க , பெண்கள் பெட்டியும் இருக்க என்ன குறை.

திறந்தவெளி அரங்கின் வழி விசாரித்து நெருங்கிய போது நாடகத்தின் முதல்
காட்சியாகத்தான் இருக்கவேண்டும். விழுதுகள் தொங்கும் ஆலமரத்தின் மேடை முழுதும்
மணல் நிரப்பப்பட்டிருந்தது. வித்தியாசமான ஒளி அமைப்புகளும் மெல்லிய ஒலியாக குழுவினர் இசைப்பதும் அழகாக இருந்தது. அமர நாற்காலிகள் இருந்தும் வசதியானபடிக்கு நின்று கொண்டே தான் அந்த ஒன்றரை மணி நேர நாடகத்தை பலரும் பார்த்தோம். நாடகத்தில் பயன்படுத்தும் பொருட்களைப் பற்றி இயக்குனர் குறிப்பிட்டபடி இன்று பயன்பாட்டில் இல்லாத முறம், கோழிக்கூடைகள் ,சாக்கு போன்றவற்றையைக் கொண்டு அவர்கள் நாடகம் செய்கின்றதும் புல்லாங்குழல் மற்றும் மேளங்களின் ஒலியும் வேறு ஒரு வித்தியாசமான சூழலாக இருந்தது.

ஆரம்பக்கட்டங்களில் மிருகங்களாகவே மாறிவிட்டனரோ எனும்படி அவர்களின் ஒலியும் அசைவுகளும் இருந்தது. மிகச்சிரமப்பட்டுத்தான் நடிக்கின்றனர். விழுவதென்றால் நிஜமாக விழுகிறார்கள். இன்றைய நகரமயமாக்கலால் பாதிக்கப்பட்டும் இழிவுபடுத்தப்பட்டும் வரும் மக்களை அவர்களின் துயரங்களை பேசுகிறதாக அமைந்திருக்கும் நாடகத்தின் முதல் பகுதிகள். பின் இலவசங்களால் விளம்பரங்களால் தொழில்நுட்பத்தால் மதிக்கப்படாமல் மாறிவிட்ட மனிதர்களின் வாழ்நிலையைக் காட்டும் பகுதிகள். திறந்த வெளி தான் அந்நாடகத்துக்கும் நல்ல பொருத்தம்.
வித்யா நன்றாக செய்திருந்தார். டம் டம் என்ற ஓசையோடு அவர் ஆடிவருகின்ற காட்சி மிரட்டியது .

தொலைபேசியோடு  பேசிக்கொண்டே  அலையும் நகரக்காட்சியில்  தமிழ் புரிந்தவர்கள் சிரித்து ரசித்தனர். என்ன இருந்தாலும் உரையாடல் சட்டென்று புரிபடுகிறதே. மற்ற பகுதிகள் புதிரான ஒரு நவீன பாணி இருப்பதும் அவசியமானதானாலும் எங்களுக்கு உரையாடல் பகுதிகள் எளிதாகப் புரிந்தது.

“எங்கள் பொருட்களைப் பயன்படுத்தியவர்கள் தான் சினிமாவில் செயித்திருக்கிறார்கள்.”

அனைவருக்கும் வழங்கப்படும் இலவச சுருக்கு கயிறு ,
“எனக்கும் கயிறுதான் குடுத்திருக்கிறார்கள்”
“எனக்கு இலவசம் வேண்டாம் சார் ப்ளீஸ் ப்ளீஸ்”
“குழாயடி சண்டையைப் படம் பிடித்து அனுப்பினால்” போன்ற பகுதிகளில் கூட்டத்தினர் ரசித்து சிரித்தனர்.கதை சொல்லிகளும் உண்மைகளைச் சொல்லும் கோமாளிகளும் இல்லாது போன காலகட்டத்தில் அல்லது ஒழிக்கப்பட்டுவிட்ட காலத்தில் “ நல்ல கதை உண்மைக்கதை வேண்டாண்டா” என்று அவற்றை சொல்லவரும் இன்னோருவரை அடக்க நினைக்கிற இடங்கள் நன்று.

அழிக்கப்பட்ட அபூர்வ சிறு பூச்சிக்காகவும் குருவிகளுக்காகவும் மிருகங்களுக்காவும் கூட குரல் கொடுத்த விசயம் எல்லா ஊடகம் மூலமாகவும் சொல்லப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டிய விசயம் தான்.
 காமெடி வகை நாடகங்களிலிருந்து நாட்டிய நாடகம் , இந்த நவீன நாடகம் வரை எது ஆனாலும் அதனதன் நிலையில் என்னை ரசிக்கவைக்கின்றன. துணுக்குத் தோரண காமெடி நாடகங்களைக்கூட எனக்கு வெறுக்கமுடியாது.

இன்னும் அந்த பிண்ணனி ஒலிகள் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. வாழ்த்தி நினைவுப்பரிசை இயக்குனருக்கு வழங்கும்போது நடிகர்கள் அனைவரும் குலவையிட்டனர். அழைப்பனுப்பிய லிவிங் ஸ்மைல் வித்யாவுக்கு நன்றி. அவர்கள் குழுவினருக்கும் வாழ்த்துக்களும் நன்றியும்.

19 comments:

துளசி கோபால் said...

ரொம்ப நல்லா இருக்குதுன்னு புரிஞ்சு போச்சு. தில்லியில் இருந்து அப்படியே சண்டிகருக்கு வந்து நாடகம் போட்டுருக்கலாம். இங்கே அம்பதாயிரம் தமிழர்கள் இருக்காங்க.

ராமலக்ஷ்மி said...

சிறப்பான பகிர்வு. அருமையான படங்களுடன். நன்றி.

கோபிநாத் said...

நல்ல பகிர்வுக்கா ;)

கவி அழகன் said...

நல்லா இருக்கு

☀நான் ஆதவன்☀ said...

இந்த குளிர்லயும் தனியா போய் நாடகத்தை ரசிச்சு வந்திருக்கீங்களே..பாராட்டுக்கள்க்கா.

நல்ல பகிர்வு

ADHI VENKAT said...

இவரும் வந்து சொன்னார் கலந்துக்க முடியலைன்னு. படங்களை பார்த்தாலே நல்லா இருந்திருக்கும் என்று தெரியுது. பகிர்வுக்கு நன்றி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

படங்கள் நன்று. நல்ல பகிர்வு.

கோமதி அரசு said...

டெல்லி குளிரில் திறந்தவெளி அரங்கத்திலா?

உடல் நலமா?

படங்களைப் பார்த்தால் பார்க்க ஆவல் ஏற்படுகிறது.

Chitra said...

படங்களே அட்டாகசமாக இருக்குதுங்க....

சாந்தி மாரியப்பன் said...

நல்லா இருந்திருக்கும்ன்னு தோணுது.. அருமையான பகிர்வு.

வெங்கட் நாகராஜ் said...

புகைப்படங்களும் உங்கள் விமர்சனமும் நான் வர இயலவில்லையே என்ற ஆதங்கத்தினை இன்னும் அதிகப் படுத்துகிறது. :(

நல்லதோர் விமர்சனம் அளித்ததற்கு மிக்க நன்றி.

'பரிவை' சே.குமார் said...

அருமையான படங்களுடன் சிறப்பான பகிர்வு.

விக்னேஷ்வரி said...

வாவ், போகும் போது ஒரு வார்த்தை கூப்பிட்டிருக்கக் கூடாது. பேட் அக்கா. :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி துளசி.. ஓ நீங்க சண்டிகர் வந்தாச்சா? அதுக்குள்ள..:)
---------------
நன்றி ராமலக்‌ஷ்மி மீதி படங்களெல்லாம் ஷேக் ஆகிடுச்சு ..இன்னும் நிறைய எடுத்தேன் ப்பா.. ப்ளாஷ் இல்லாம எடுக்கிறது இரவுக்காட்சிகளில் மிகச் சிரமம் எனக்கு.
---------------------
நன்றி கோபி..:)
------------------------
நன்றி யாதவன் :)
-------------------
நன்றி ஆதவன் :) மதியம் அடிச்ச வெயில் கொஞ்சம் தைரியம் குடுத்தது..
------------------
நன்றி ஆதி :)
-------------------
நன்றி புவனேஸ்வரி :)
---------------------
நன்றி கோமதிம்மா.. ம்பர்வாயில்ல கொஞ்சம் முதுகுவலி இருந்தது அடுத்த நாள் வெயிலில் உட்கார்ந்து சரி செய்தாச்சு :)
---------------------
நன்றி சித்ரா :)
---------------------

நன்றி சாரல்..:)
------------------
நன்றி வெங்கட்..
நண்பர்கள் சந்தரமோகன் மற்றும் செல்வா வந்திருந்தார்கள். உங்களுக்கும் அலுவல் தடை செய்யவில்லை என்றால் வந்து ரசித்திருக்கலாம்..
-----------------------
நன்றி சே.குமார். :)
-----------------------
விக்கி சும்மா சொல்லக்கூடாது.. நல்ல நாளிலேயே நீ மாலைக்கு பிறகுன்னா வரமாட்டியே.. இந்த நடுக்கும் குளிரில் கூப்பிட்டதும் வந்திருப்பியா நான் நம்பமாட்டேன்ப்பா..

நான் ஃபேஸ்புக் ல போட்டேனே..பார்க்கலை போல

Asiya Omar said...

உங்க ப்ளாக் மிக அருமையாக இருக்கு.வித்தியாசமான பகிர்வு.மிக்க நன்றி.

அன்புடன் நான் said...

மிக நுணுக்கமான பகிர்வு.... நாடகத்தை மிக அனுக்கமாக ஒன்றி அதை பகிர்ந்திருக்கிங்க.... படங்களை காணும் போதே தெரிகிறது நாடகத்தின் தரம்

பகிர்வுக்கு நன்றிங்க.

அன்புடன் நான் said...

உங்களுக்கு என் பொங்கல் வாழ்த்துக்கள்.

Unknown said...

அருமையான படங்களுடன் நல்ல பகிர்வு.பார்த்தாலே ஆசையா இருக்கு.இந்த முறை மிஸ் பண்ணிட்டேன்.அடுத்த முறை நடக்கும் போது கூப்பிடுங்க.வர்றேன்.

மாதேவி said...

நல்ல பகிர்வு.

இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.