January 27, 2011

வானவில் இற்றைகள் - ஜனவரி 2011

இற்றைகள்* - அப்டேட்ஸ்

அந்தந்த நாட்களின் என் அனுபவங்களில் பகிர்ந்துகொள்ளப்பட வேண்டியவற்றை குழந்தைகளிடமும் பேசுவது வழக்கம். டிவிட்டரில் தமிழ்நாடு மீனவர்களுக்காக அனைவரும் #tnfisherman  என குறிப்பின் கீழ் இணைந்து ஊடகத்தால் தங்கள் கவலைகளைப் பகிர்ந்துகொள்வதையும் ஆனால் தொலைக்காட்சி ஊடகத்தில் அவை வராதது பற்றியும் நானும் மகளும் பேசிக்கொண்டிருந்தோம்.
அதிரடியாக அவள் சொன்னாள்.

”டீவிக்காரங்களுக்கு யாராச்சும் லவ் செய்து தற்கொலை செய்துகொண்ட பையனைப்பற்றிப் பேசவே நேரம் போதாது. அவங்க எங்க உருப்படியா வேலை செய்யப்போறாங்க.. அவங்க பொலிட்டிக்கல் ஆளுங்களோட சேர்ந்துட்டாங்கம்மா “ 

இந்த வாரம் தான் நொய்டாவில் ஒரு ஷாப்பிங்மாலின்  நான்காவது மாடியிலிருந்து ஒரு பையன் கீழே விழுந்து இறந்துவிட்டான். அவளுடைய தோழிகள் எல்லாம் அதுபற்றியே பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள். மேலும் இது போன்ற ”நடந்தது என்ன?” எனும் மிரட்டும் பிண்ணனியோடு வரும் நிகழ்வுகளையே அவர்கள் விரும்பிப் பார்ப்பதாகவும் சொல்லிக்கொண்டிருந்தாள்.



------------------
பீம்சிங் ஜோஷி இறந்துவிட்டார் என்ற செய்தியைப்பற்றிப் பேசிக்கொண்டே இணையத்தில் அவர் படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தோம். தலையைத் திருப்பி சின்னவர் பார்த்தார். மீண்டும் காண்பிக்கச்சொல்லிப் பார்த்துவிட்டு. ..
வயசாகி நாமளும் செத்துப்போவோமா?
ஆமா
அப்பறம் திரும்பி பிறப்போமா?
ஆமா
அப்பன்னா நான் திரும்பி பிறக்கறதுக்கு முன்னயே நீங்களும் அப்பாவும் பிறந்துடுவீங்கன்னான்..
ஏண்டா அப்படி ?
அப்பறம் தான் நான் பிறப்பேன்.

அடுத்த ஜென்மத்துலயும் எங்களுக்கே மகனாக பிறக்க ஆசைப்படுகிறானே என்ன பேறு பெற்றோம்.


---------------------------
எங்கள் பகுதியில் குடியரசு தினவிழாக்கொண்டாட்டத்தில் மகன் லெமன் ஸ்பூனில் 3 வது பரிசும்
மகள் ம்யூசிக்கல் சேர் ல் 2 வது பரிசு.

தனியாக அக்காவும் தம்பியும் சென்றார்கள், வென்றார்கள், வெங்கலம் மற்றும் வெள்ளிமெடல்களுடன், வந்தார்கள்.
---------------------
ஆங்கிலமற்றும் கணித பயிற்சி ஏடுகளில் மூன்று நட்சத்திரம் எப்போதும் கிடைத்துவிடுகிறதாம்.
ஹிந்தியில் மட்டும் இரண்டு தான் என்று வருத்தப்படுவான். சின்னதாக ஒரு விசயம் நாம் மாற்றினாலும்
“ அய்யோ அந்த டீச்சர் அடிக்கடி கோவப்படுவாங்க இப்படி எதும் செய்யாதீங்க “ என்று பயப்படுவான்.

உன்னை இதுவரை திட்டியதில்லையே அப்பறம் ஏன்? என்றாலும் ஒரு குழப்பமான முகபாவம் தான் .
பள்ளியின் ஆசிரியர் சந்திப்பு தினத்தில் ஹிந்தி ஆசிரியை வேறு ஒரு தளத்தில் இருப்பதால் உங்களுக்கு எதுவும் பேச வேண்டுமானால் சென்று சந்திக்கலாம் என்று சொன்னார்கள்.
புத்தகக்கண்காட்சி ( பள்ளியில் ஆசிரியரை சந்திக்கும் தினத்தில் வைப்பார்கள் வியாபார உத்தி) செல்லும் ஆவலுடன் கூட,ஆசிரியையை சந்திக்கும் பயமும் சேர்ந்து கொள்ளவோ என்னவோ
”நான் தான் ஹிந்தி நல்லா படிக்கிறேனே எதுக்கு பார்க்கனும்.”
:)
------------------
புத்தகக்கண்காட்சியில் ஆக்டிவிட்டி செய்கிற புக் வேண்டாம் அதுபோல நிறைய வீட்டில் இருக்கிறது என்று நான் மறுத்ததற்கு ..
நான் கந்தி (கெட்ட) அம்மா ஆகிவிட்டேன்..

டிஸ்னியின் தி ஜங்கல் புக் வாங்கினான். அக்கா அடிக்கடி புத்தகம் வாங்கினாலும் முடித்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பாள் என்பதால் அவளைக்காட்டி நீ புத்தகம் வாங்கக்கூடாது. இனி இந்த புத்தகத்தை முழுதாக வாசித்துக் காண்பி அதற்குப் பிறகு தான் அடுத்த புத்தகம் என்று வேறு சொல்லிவிட்டேன். கொஞ்சம் ஆதங்கம் தான் .
------------------------
சபரியின் தளம் புதிய இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அவருடைய நடனநிகழ்ச்சியின் காணொளி இற்றைப்படுத்தப்பட்டிருக்கிறது.

15 comments:

pudugaithendral said...

செல்லங்களுக்கு வாழ்த்துக்கள்

கோமதி அரசு said...

//அடுத்த ஜென்மத்துலயும் எங்களுக்கே மகனாக பிறக்க ஆசைப்படுகிறானே என்ன பேறு பெற்றோம்.//

இதை விட வேறு என்ன பேறு வேண்டும்!

நம்ம வேறு எங்காவது பிறந்து இருக்கலாம் என்று சொல்லவில்லையே.

மாதினி நன்கு யோசிக்கிறாள்.

வாழ்த்துக்கள் குழந்தைகளுக்கு.

'பரிவை' சே.குமார் said...

வானவில் இற்றைகள் சுவை.
குட்டீஸ்க்கு வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

"[G]கந்தி அம்மா’ பரவாயில்லையே, அம்மா என்றாவது சொன்னாரே! நம்ம வீட்டில பொண்ணைத் திட்டினால், கோபம் கொண்டால் [G]கந்தா [B]பச்சா!" தான்.

நல்ல பகிர்வுக்கு நன்றி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி தென்றல் :)
---------
நன்றி கோமதிம்மா..:)
---------------
நன்றி குமார் :)
-----------
வெங்கட்.. கந்தேபச்சே கூட முன்னாடி இருந்தது, இப்ப சில சமயம் ஆப் கந்திஹோ சில சமயம் கந்தி அம்மா... எப்படியோ அவங்க உணர்வை தெரியப்படுத்திடறாங்க..:)

கோபிநாத் said...

\\,ஆசிரியையை சந்திக்கும் பயமும் சேர்ந்து கொள்ளவோ என்னவோ
”நான் தான் ஹிந்தி நல்லா படிக்கிறேனே எதுக்கு பார்க்கனும்.” \\

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ;-)))

Chitra said...

cho chweet! குட்டீஸ்களுக்கு வாழ்த்துக்கள்!

Unknown said...

இப்பவே "ஆப் சுப் ஓஜாவ்" என்கிறாள் இரண்டரை வயது பெரிய மனுசி...

Thekkikattan|தெகா said...

அவங்க எங்க உருப்படியா வேலை செய்யப்போறாங்க.. அவங்க பொலிட்டிக்கல் ஆளுங்களோட சேர்ந்துட்டாங்கம்மா “//

செம! இப்பவே நிறைய புரிதல்.

how sure are you -இரண்டாவது பிறப்பு :)

பசங்க ஒன்னத்தியும் சொல்லுறதிற்கு இல்ல, மண்டை!!

ராமலக்ஷ்மி said...

அழகான பகிர்வு.

//சென்றார்கள், வென்றார்கள்,//

பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.

// ப்ரான்ஸ் மற்றும் வெள்ளிமெடல்களுடன்,//

குடும்பத்துக்கு இது மெடல் மா..தம்!!! [சன் டிவி அறிவிப்பு போல சொல்லிப் பார்த்துக் கொள்ளுங்கள்:)]

ADHI VENKAT said...

மாதினி கரெக்டா தான் சொல்லியிருக்கா. சபரி மாதிரி தான் இங்க ரோஷ்னியும் கேள்வி நிறைய கேட்கிறாள்.

ஹுஸைனம்மா said...

//ப்ரான்ஸ் மற்றும் வெள்ளிமெடல்களுடன்/

வெண்கலம் எழுதிருக்கக்கூடாதா? ஒரு நொடி, இறால்னு நினைச்சுட்டேன்!! ;-)))))

//அவங்க பொலிட்டிக்கல் ஆளுங்களோட சேர்ந்துட்டாங்கம்மா//

பெரியவன்கிட்ட ஐ.ஏ.எஸ். படிடான்னதுக்கு, என்னை பாலிடிக்ஸ்ல நுழைக்காதேங்கிறான்!! :-))))))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஹுசைனம்மா நன்றி மாத்திட்டேன் :))

சாந்தி மாரியப்பன் said...

//அடுத்த ஜென்மத்துலயும் எங்களுக்கே மகனாக பிறக்க ஆசைப்படுகிறானே என்ன பேறு பெற்றோம்//

ஆஹா!!..

Anonymous said...

ஏங்க... மானாட... மயிலாட காசு வரும்
மீனவன பார்த்த வெறும் கருவாடு தான் வரும்...