January 18, 2011

போகி அன்றைக்கே பொங்கல்thai.mp3
 போகி அன்றைக்கே பொங்கி இருக்கோம் ல வானொலியில்


கானா ப்ரபா தொகுத்து வழங்கும் தித்திக்கும் வெள்ளி எனும் ஆஸ்த்ரேலிய வானொலி நிகழ்ச்சியின் போது பொங்கல் நினைவுகளைப் பகிரும் படி அழைத்திருந்தார். ஆனால் தொலைபேசி இணைப்பு கிடைத்த நொடி (அது நேரலை) தமிழ்நாட்டு பொங்கலைப்பற்றி என்று ஆரம்பித்தார். எனக்கு என்றைக்கும் என்னைச் சுற்றி நடப்பதை கூர்ந்து கவனிக்கும் பழக்கமெல்லாம் இல்லை :( நான் எதாவது ஒன்றை முக்கியமாக எடுத்துக்கொண்டு அதைதவிர எல்லாவற்றையும் அவுட் ஆஃப் ஃபோகஸில் வைத்திருப்பேன் சிலவற்றை மறந்தே போயிருப்பேன்.

என் ஊரைக்கூட முழுமையாகத் தெரிந்ததாகச் சொல்லமுடியாது. தற்போது மாயவரத்துக்காரர்கள் பலர் இங்கிருக்கிறார்கள்.. மாயவரத்துப் பொங்கல் இப்படி மட்டுமா என்று யாரும் கேட்டுவிடாதீர்கள். நான் கொண்டாடியதைத்தானே நான் சொல்லமுடியும். வீடு இருந்த இடத்தில் மாடு கன்னு வளர்த்தவர்கள் இல்லை. பொங்கலுக்கு எந்த விவசாய நிலம் வைத்த தோழிகள் வீட்டுக்கும் போனதில்லை. அதனால் என் வீட்டு பொங்கல் , என் நினைவில் தங்கி இருக்கும் பொங்கல் பற்றி சொல்லிக்கொண்டிருந்தேன். இடையில் புகுந்து எதோ கேள்வி கேட்க முயன்றிருக்கிறார் கானா :) நல்லதொரு நேயர் ப்ரண்ட்லி ஆள் கானா . நம்மை பேசும்போது இன்னும் பேசவைப்பது போன்ற வார்த்தைகளை இடையில் சொல்லி வைப்பார்.

அவருடைய நிகழ்ச்சியில் பலர் தண்ணி குடிச்சு குடிச்சு பேசுவாங்க . ஆனாலும் தொடர்ந்து பேச வாய்ப்பளிப்பார். ஏனென்று கேட்டபோது.

 தமிழ்பேச அவர்களுக்கு இருக்கும் ஒரே ஒரு  வாய்ப்பென்று சொல்லுவார் கானா.. எனக்கும் பழைய நினைவுகளை நினைத்துப்பார்க்க வாய்ப்பளித்தார் நன்றி.

--------------

தில்லியில் இவ்வருடம் குளிர்காற்றில் உறைந்து கொண்டிருந்தோம். ஆனால் போன வருடங்களைப்போல இல்லாமல் பொங்கலன்று கனிவோடு சூரியன் அழகாக முகம் காட்டினார். பொங்கல் பானையை திடீரென உதித்த யோசனையோடு கணவர் வெளியில் வை கும்பிடலாம் என்றார்கள். அவசரக்கோலமொன்று போட்டு பால்கனியில் வைத்து கும்பிட்டோம். கரும்பு காய்கறிகளோடு சாமியறையில் பொங்கல் வைத்தபோது படமெடுக்க மறந்துவிட்டது.

பொங்கல் பொங்கி சாமி கும்பிட்டு விட்டு மலைமந்திர் சென்று முருகனை வழிபட்டுவந்தோம். மதியம் நல்ல சுகமான வெயில் .
                                பால்கனியில் லஞ்ச் 
பொங்கிய பொங்கலுக்கு தேங்காய்துவையலும் ,அப்பளம் வத்தலோடு பல காய் சாம்பாரும் , நெஸ்லே தயிரும் ... பிறகு கரும்பும் என பொங்கல் இனித்தது.

சக்கரைப்பொங்கலுக்கு அடிமையான பையர் ப்ரவுன் பொங்கல் தா தா என்று நாலு வேளையும் பொங்கலே சாப்பிட்டார்.

36 comments:

புதுகைத் தென்றல் said...

சூப்பர்.

பொங்கலுக்கு சூப்பர் ஜோடி வெறும்கொத்துமல்லித்தழை, வரமிளகாய் கொஞ்சம், ப.மிளகாய் உப்பு, புளி சேர்த்துஅரைத்து தாளித்து கொட்டினால் கூட 4 கரண்டி பொங்கல் உள்ளே போகும்.

sakthistudycentre-கருன் said...

very nice

சேட்டைக்காரன் said...

அப்பாலிக்கா கேட்டுப்புட்டு வர்றேன்.

ஆயில்யன் said...

//போகி அன்றைக்கே பொங்கி இருக்கோம் ல //

சூப்பர் :))

ஊர் பெயரை சர்வதேச வானொலியில் முழங்கிய முத்தக்காவுக்கு மிக்க நன்றிகள் :)

ஆயில்யன்
மாயவரம் மாஃபியா சார்பாக

ஆயில்யன் said...

அன்னிக்கே ரேடியோவுல கேட்டாச்சு! செமஃப்ளோவுல கொசுவத்தி சுத்திங் :)

சே.குமார் said...

//போகி அன்றைக்கே பொங்கி இருக்கோம்ல //

சூப்பர்...

அமைதிச்சாரல் said...

ஜூப்பருங்கோ..

ப்ரவுன் பொங்கல் :-)))))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆமா தென்றல்..முதலில் பொங்கலுக்கு நாலு கரண்டி துவையலும்.. துவையலுக்காக நாலுகரண்டி பொங்கலும் .. என்ற கணக்குல சாப்பிட்டாங்க..:)

----------------
நன்றி கருன்
:)
--------------
@ சேட்டைக்காரன் , கேட்டத்துக்கப்பறமா அப்ப டவுட்டுதானா வரது? :)
----------------
ஆமா சுத்தன கொசுவத்திக்கு நம்மூர்ல இருந்து நீங்களே பாராட்டும் போது மகிழ்ச்சி ஆயில்யன்..:)
--------------------
நன்றி குமார் :)
---------------------
நன்றி சாரல்.
அடுத்தநாளும் ப்ரவுன் பொங்கல்ல் செய்யறியான்னு கேட்டான்:)

☀நான் ஆதவன்☀ said...

பையருக்குகாகவாச்சும் இனி அடிக்கடி ப்ரவுன் பொங்கல் செய்யுங்கக்கா :)

வாழ்த்துகள்

கோமதி அரசு said...

ஆதவன் சொன்னதை வழி மொழிகிறேன்.

மாயவரம் பொங்கல் நினைவுகள் அருமை.

வானொலி பேட்டிக்கு வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

பேட்டியை கேட்டுவிட்டேன். நல்ல பேட்டி. ப்ரௌன் பொங்கல் - வாவ்!

வாழ்த்துகள்.

நட்புடன்

வெங்கட் நாகராஜ்

கோபிநாத் said...

சூப்பரு ;)

ராமலக்ஷ்மி said...

பேட்டியை ரசித்துக் கேட்டேன். அந்தக்கால நினைவுகளை எழுப்பி விட்டன. குறிப்பாக பொங்கல் வாழ்த்து. அவித்தோ சுட்டோ சாப்பிடும் பனங்கிழங்கை விட்டுப்புட்டீங்களே?

டெல்லி பொங்கல் படங்களும் பகிர்வும் அருமை. சூரியனை வரைந்து கும்பிடும் விஷயம் புதிது. மார்கழி குளிரில் தலைகாட்ட மறுக்கும் சூரியனார் பெங்களூரில் தை பிறந்ததும் தயவு காட்டி வருகிறார்:)!

கோவை2தில்லி said...

பேட்டியை கேட்டேன். நல்ல பங்களிப்பு. ”பால்கனியில் பொங்கல்” நல்லா இருந்தது.

சந்தனமுல்லை said...

பையர்!!.. அவ்ளோ வளர்ந்துட்டாரா..:-)

பேட்டியை முழுவதுமாக கேட்டேன்... முத்து. இயல்பாக இருந்தது.

goma said...

அத்திக்கிலிருந்து பொங்கலிட்டு மகிழ்ந்த முத்து லெட்சுமிக்கு
இத்திக்கிலிருந்து அனுப்புகிறேன்,
தித்திக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்

sury said...

பொங்கல் படங்கள் அழகு.
பொங்கல் பானையும் அழகு.
அப்பானையின் கழுத்திலாடும்
மஞ்சள் கொத்தும் அழகு.
கொத்தின் கீழ் பரிணமிக்கும்
குங்குமமும் அழகு.

பானை அழகு, அதனுள்ளே
பொங்கும் பாலும்
பாகும் பருப்பும் அமுது.
திவிட்டாத திராட்சையும்
நெய்யில் பொன்னாய் வறுத்த‌
மின்னும் மிந்திரியும்
மூக்கைத் துளைக்கும் ஏலக்காய் வாசனையும்
மூவுலகிலும் உண்டோ = சக்கரைப்
பொங்கலுக்கோர் இணை !

சுப்பு ரத்தினம்.

வல்லிசிம்ஹன் said...

வானொலி கேக்கலை. பதிவைப் படிச்சிட்டேன். சர்க்கரைப் பொங்கலுக்கு காரத்துகையல் தொட்டுக் கொள்ளுவீங்களா. சூப்பரா இருக்கும் போல் இருக்கே.
இதொ ரெடியோ கேக்கப் போறேன்:)
இனிய பொங்கல் வாழ்த்துகள் முத்து.

Chitra said...

Super! Super! Super!

asiya omar said...

அருமையான பகிர்வு,
பால்கனியில் லஞ்ச் பொங்கிய பொங்கலுக்கு தேங்காய்துவையலும் ,அப்பளம் வத்தலோடு பல காய் சாம்பாரும் , நெஸ்லே தயிரும் ... பிறகு கரும்பும் என பொங்கல் இனித்தது.

--ஆகா சூப்பர்.

அன்புடன் அருணா said...

ம்ம்ம் எல்லோரும் கலக்குறீங்க!டெல்லிலே பட்டமெல்லாம் விடமாட்டீங்களா?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆதவன் ரொம்ப நாளா எங்கவீட்டில் எந்த விசேசம்ன்னாலும் பாயாசம் வைப்பதே இல்லை.. பொங்கல் தான்.. :) பாயாசம் யாருக்கும் பிடிக்காது (என்னைத்தவிர)
------------------
நன்றி அம்மா :) முடிந்தவரை அனைவருக்கும் பிடித்தமாக செய்துகொடுக்கிறேன்.
----------------------
நன்றி வெங்கட் :)
-------------------
நன்றி கோபி :)
--------------------
ராமலக்‌ஷ்மி அந்த சோகத்தை ஏன் கேக்கரீங்க.. பனங்கிழங்கு வாங்கித்தரேனு மலைமந்திர் கூட்டிட்டு போனாங்க அங்க ஆனா கடை ஒன்னும் இல்லை.. :)இனி ஊருல இருந்து தான் பார்சல் வரவைக்கனும்
-----------------------
நன்றி ஆதி :) உங்க வீட்டு பொங்கல் போட்டோ எங்கே..உணவை அலங்காரமா போட்டோ எடுப்பதில் சமர்த்தாச்சே
--------------------
நன்றி முல்லை.. கானாவே நீங்க எப்பவும் பேசராப்பல பேசலாம்ன்னு சொல்லிட்டார்.. அப்பரமென்ன..:)
பையர் 6 வயசாகிட்டானேன்னு ஒரு மரியாதை தான் :)
-----------------------
நன்றி நன்றி கோமா.. எத்திக்கிலிருந்தாலும் தித்திக்கும் வாழ்த்துக்களையும் அனுபவங்களையும் நாம் இங்கே பகிர்ந்து இன்புற்று இருப்போம் :)
--------------------
சூரிசார் அழகான பொங்கல் பாட்டு க்கு நன்றி.. :)
----------------
@ வல்லி .
துவையல் சக்கரை பொங்கலுக்கு இல்லை .. அது வெள்ளை பொங்கலுக்குத்தான் வெங்கலப்பானையில் பொங்கிய சாதத்துக்கு :)
------------------------
நன்றி நன்றி நன்றி சித்ரா :))
--------------------
ஆசியா நன்றி :)
-------------------
இல்லை அருணா உங்கள் பதிவு இப்பத்தான் படிச்சுட்டு வந்தேன்.. இது எனக்கு புதுமையான விசயம் தான்.. இங்க பட்டமெல்லாம் விடரதா தெரியலயே.. ஆகஸ்ட் பதினஞ்சுக்குத்தான் இங்க பட்டம் (விடுவாங்கனு நினைக்கிறேன்)..

Lakshmi said...

நான் இப்பத்தான் உங்க பக்கம் வந்தேன். வரவேற்பே பொங்கலுடன். சூப்பர்.

ஆமினா said...

சூப்பர் முத்து லெட்சுமி

Dubukku said...

Happy Pongal

தமிழ்மண விருதுக்கு மனமர்ந்த வாழ்த்துகள் - You deserve it

கோமதி அரசு said...

இங்கும் பனங்கிழங்கு கிடைக்கவில்லை இந்த முறை.

பச்சையாக கிடைக்கா விட்டாலும் வேகவைத்த பனங்கிழங்கு கிடைக்கும் இப்போது அதுவும் கிடைக்க வில்லை.

ராமலக்ஷ்மி said...

@கோமதி அரசு,
கேள்வியைக் கேட்ட எனக்கும் பெங்களூரில் கிடைக்கவில்லை கோமதிம்மா!

அமுதா said...

/*ப்ரவுன் பொங்கல் */
:-)
சிறுவயதில் போகியன்று வேப்பிலையும், பூளைப்பூவும் சேர்த்து கூரையில் செருகி, இரவெல்லாம் கோலம் போட்டு என்று நினைவுகளைத் தூண்டிவிட்டீர்கள்.

கானா பிரபா said...

அட ;)

மணிநரேன் said...

ரொம்ப நல்லா இருந்ததுங்க பொங்கலும், மாயவரம் நினைவுகளும்.

Jaleela Kamal said...

பொங்கலுக்கு பால்கனியில் லஞ்ச் வித்தியாசமாக நல்ல இருக்குமே.

Jaleela Kamal said...

வானொலியில் உங்கள் அருமையான பேட்டி சூப்பர்,

கனாக்காதலன் said...

நல்ல பகிர்வு !

தேனம்மை லெக்ஷ்மணன் said...

அட பொங்கல் பானை சூப்பர்.. முறித்தவலை என நினைக்கிறேன்.. டில்லியில் நாங்கள் கரோல் பாக்கில் இருந்த போது சூரியனை மொட்டை மாடியில்தான் பார்க்கலாம்..:))

ஹுஸைனம்மா said...

பால்கனிப் பொங்கல் நல்லாருக்கு. நல்லா வெளிச்சம் தெரியுதே படத்துல, அப்புறம் சூரியனைப் பாக்கீரது கஷ்டம்னு பேட்டியில சொல்லிருக்கீங்க? :-))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

லக்‌ஷ்மி வாங்க பொங்கல் விருந்துக்கு வந்ததுக்கு நன்றி..:)
---------
ஆமினா நன்றி :)
---------
ஓ பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்க நன்றி டுபுக்கு..:)
-------------
என்ன அங்கயும் கிடைக்கலயாம்மா..:(
-----------
ராமலக்‌ஷ்மி அப்ப நம்ம சாரல் மும்பையில் கிடைச்சு அதை புகைப்படம் எடுத்துப் போட்டிருக்காங்க அதைத்தான் பாத்து மகிழ்ச்சிப்படுத்திக்கனும் போல..
---------------
அமுதா நமக்கெல்லாம் நினைவுகள் தானே மகிழ்ச்சி ..:)
-----------
வாங்க கானா நன்றி இன்னோரு முறை :)
--------------
மணிநரேன் நன்றி :)
---------
நன்றி ஜலீலா, நிஜம்மாவே மகளுக்கு வித்தியாசமா இருந்ததால் ரொம்ப மகிழ்ச்சி :)
--------------
கனாக்காதலன் நன்றி :)
------
தேனம்மை ஆமா அது ஒரு காலம் சூரியனைத்தேடிக்கொண்டிருந்தோம்.:)
----------
ஹுசனைம்மா இந்த முறை தான் கருணை கண் கொண்டு வந்தார் சூரியன்..
மற்ற பொங்கலில் எல்லாம் நாங்கள் சூரியனைப் பார்ப்பது அபூர்வம் தான்.. மூட்டமா இருக்கும்.