January 17, 2011

பொங்கல் பரிசாய் தமிழ்மண விருது - நன்றி

சிறுவயதிலிருந்தே நான் அதிகமாக போட்டிகளில் கலந்து வழக்கமில்லை. மூன்றாம் வகுப்பிலிருக்கும் போது ஒருமுறை பாட்டுப்பாடி ஒரு பென்சில் வைக்கிற டப்பா பரிசு வாங்கியதை அடிக்கடி அப்பா அம்மா சொல்லிக்கொண்டிருப்பார்கள். அது நீலநிறமும் வெள்ளை மூடியுமா இருந்ததோ.. சரியாக நினைவில்லை.

அதற்கு பிறகு படித்த பள்ளிகளில் எதும் போட்டிகள் பரபரப்பாக நடந்ததுமில்லை. எட்டாம் வகுப்பு படிக்கும் போது ஒருமுறை பாட்டுப்போட்டிக்கு வகுப்பாசிரியையே தேர்ந்தெடுத்து அனுப்பிவைத்தார்கள். ரோட்டரி க்ளப் போட்டி. (பரிசு கிடைத்திருந்தால் தான் சொல்லி இருப்பேனே ? என்னன்னு யாரு கேட்பது) அத்தோடு சரி. கல்லூரியில் வயலினில் கோல்ட் மெடல் வாங்கிய கதை தான் முன்பே எழுதி இருக்கிறேனெ..

அதற்கு பிறகு காட்சிக்கவிதை பரிசு 500 ரூ புத்தகப் பரிசு அன்புடன் குழுமத்தின் ஆண்டுவிழாவில் கிடைத்தது. இணையம் தான் தன்னம்பிக்கை அளித்திருக்கிறது. போனவருடத்தின் தமிழ்மணப்போட்டியில் இருத்தலின் அடையாளமாக பதிவை சேர்த்திருந்தேன். பரிசு ஒன்றும் கிடைக்கவில்லை. மேலும் இந்த வருடம் அனுப்புவதற்கு என்னிடம் ஒன்று நல்ல பதிவு இருப்பதாக நான் நினைத்திருக்கவில்லை. நன்றாக எழுதியபதிவுகள் என நான் நினைப்பவற்றை நான் வேறு ஒரு தளத்துக்கு அளித்து பின் அவர்கள் வெளியிட்டபின் தான் என் பதிவில் இணைத்திருந்தேன். அதனால் அது தமிழ்மண விதிகளுக்குள் அடங்காது.

யோசித்தபடியே இருந்தபின் கடைசியாக பெண்கள் பிரிவில் மட்டும் வியல் விருதுகள் பதிவை இணைத்தேன். அது முழுக்க முழுக்க பெண்களை பேட்டிகண்டு எழுதிய பதிவு மற்றும் ஆக்கபூர்வமாக முன்னெடுத்துச் செல்ல அழைத்து அவர்களுக்கு வழங்குவதற்கான விருதை கூகிள் ஸ்கெட்சப் மூலமாக தயார் செய்து பின் நகர்படமாக மாற்றி பதிவிட்டதுமாகும். அப்பதிவின் உட்கருத்து , அனைவரிடமும் கருத்தினைப் பெற்று ஒருங்கிணைத்த முயற்சி, மேலும் வியல்விருதின் வடிவமைப்பு போன்றவற்றிற்காக அதனை போட்டியில் சமர்பிக்க தைரியம் பெற்றேன்.

என் பதிவின் 5 ம் வருட துவக்கத்திற்காக அப்பதிவினை எழுதத்தூண்டிய கோபிநாத் க்கு என் நன்றிகள். மேலும் தொடர்ந்து பதிவில் எழுதி வர ஊக்கமும் நம்பிக்கையும் அளிக்கும் இணைய நட்புகளுக்கும்.. என் குடும்பத்தினருக்கும் நன்றி.

வியல் விருது பதிவினை இரண்டு சுற்றுக்களிலும் தேர்ந்தெடுத்த நண்பர்களுக்கும் மூன்றாம் சுற்றில் தேர்ந்தெடுத்த தமிழ்மணம் குழுவினருக்கும் நடுவர்களுக்கும் நன்றி நன்றி.
வியல் விருதுக்கு இரண்டாம் பரிசு.

49 comments:

ராமலக்ஷ்மி said...

நல்வாழ்த்துக்கள் முத்துலெட்சுமி:)!

ஆனந்தி.. said...

இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள் சகோதரி...

அமைதிச்சாரல் said...

விருதுக்கு வாழ்த்துகள் முத்துலெட்சுமி.. இதேபோல இன்னும் நிறைய விருதுகள் கிடைக்க வாழ்த்துகள்.

சே.குமார் said...

விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் அக்கா.

புதுகைத் தென்றல் said...

நம்ம நண்பர்களுக்கெல்லாம் பரிசு கிடைச்சிருப்பதில் மகிழ்ச்சி.

மனமார்ந்த வாழ்த்துக்கள்

meenamuthu said...

உளம் நிறைந்த வாழ்த்துகள் கயல்!

Samudra said...

congrats!

துளசி கோபால் said...

விருது பெற்றதற்கு எங்கள் இனிய பாராட்டுகள்.

மேன்மேலும் உயர!

ராமலக்ஷ்மி said...

//நன்றாக எழுதியபதிவுகள் என நான் நினைப்பவற்றை நான் வேறு ஒரு தளத்துக்கு அளித்து பின் அவர்கள் வெளியிட்டபின் தான் என் பதிவில் இணைத்திருந்தேன். அதனால் அது தமிழ்மண விதிகளுக்குள் அடங்காது.//

உண்மைதான் முத்துலெட்சுமி.

//தேர்வு நடைமுறை விதி:5 //முந்தைய ஆண்டுகளின் படைப்புகளின் மீள்பதிவுளாகவோ அல்லது வேறு அச்சிதழ் அல்லது இணைய தளங்களில் வெளியிடப்பட்ட படைப்புகளின் மீள்பதிவுகளாகவோ இருத்தலாகாது.//

இது குறித்து “சமூகம் பிரிவில் தகுதிவாய்ந்த நல்ல கருத்துள்ள பதிவுகள் இதனால் போட்டிக்குத் தர இயலாமல் ஒதுக்கப் பட்டு விடக் கூடாதென்பதால்” தெளிவு படுத்தக் கோரி தமிழ்மணத்துக்கு நான் மடல் இட்ட போது //முதலில் உங்கள் வலைப்பதிவில் வெளிவந்து அதன்பிறகு வேறு தளங்களிலோ இதழ்களிலோ வந்திருந்தால் பரவாயில்லை// என்று கூறினார்கள் முதலில்.

“ஒன்றுக்கு மேலான திரட்டிகளை நாடிச் செல்வது போல பதிவர்களும் இன்னொரு வாசகர் வட்டத்தை அடையும் ஆவலில் இணைய இதழ்களுக்குக் கொடுக்கிறோம்.” எனும் என் மடலுக்கு //வருமாண்டில் உங்கள் கருத்துக்களையும் கவனத்தில் கொள்கிறோம்.// என நல்ல பதில் தந்ததுடன், [நடப்பு ஆண்டில் எழுதப்பட்டு] ஒரே நாளில் உயிரோசை இணைய இதழிலும் வலைப்பூவிலும் வெளியான என் கட்டுரையை போட்டியில் கலந்து கொள்ள அனுமதியும் அளித்திருந்தார்கள்.

சொல்லப் போனால் இது ஒரு சுழற்சி போலவே. பதிவுலகத்தில் கிடைக்கும் உற்சாகத்தினால் பத்திரிகை, இணைய இதழ்கள் பக்கம் செல்லுகிறோம். அங்கு கிடைக்கிற அங்கீகாரங்களை பதிவுகளில் பகிர்ந்து கொள்கிறோம். அடுத்த வருடம் தமிழ்மணம் இதை கவனத்தில் எடுப்பார்கள் என நம்புவோம். பரிசுகளைத் தாண்டி நமது பங்களிப்பில் நமது நல்ல படைப்பாக நாம் கருதுபவை இடம்பெற வேண்டும் என்பது எழுதும் எவருக்குமான நியாயமான ஆதங்கம்தானே?

ராமலக்ஷ்மி said...

அதுவுமில்லாமல், பெண்கள் எல்லோரும் போல மூன்று பிரிவுகளில் போட்டியிட்டு, நாலாவதாக ‘மகளிர்’ பிரிவில் போட்டியிடுகிற மாதிரியாகவும் அடுத்த வருடம் பரிசீலிக்க இருப்பதாக ஒரு போனஸ் தகவலும் தந்திருந்தார்கள்:)! அது நமக்கான இன்னொரு ‘வியல்’ விருதாக அமையட்டும் வரும் வருடம்! என்ன சொல்றீங்க:)?

asiya omar said...

தமிழ்மண விருதிற்கு வாழ்த்துக்கள்.உங்களை எண்ணங்களை பகிர்ந்தது மிகவும் சிறப்பு.

జ్యోతి said...

Congratulations Lakshmi.. Keep going..

சந்தனமுல்லை said...

வாழ்த்துகள் முத்து :-)

KABEER ANBAN said...

பாராட்டுகள், நல்வாழ்த்துகள் :)

///அது முழுக்க முழுக்க பெண்களை பேட்டிகண்டு எழுதிய பதிவு மற்றும் ஆக்கபூர்வமாக முன்னெடுத்துச் செல்ல அழைத்து... ///

ஆக்கப்பூர்வமான 'சிறு' முயற்சிக்கு அவசியமாக கொடுக்கப்பட வேண்டிய பெரிய விருதுதான். வோட்டளித்த வாசகர்களுக்கும் பாராட்டுகள்.

அமுதா said...

நல்வாழ்த்துக்கள்

வெங்கட் நாகராஜ் said...

வியல் விருது அளித்த உங்களுக்கு விருது அளித்ததன் மூலம் தமிழ்மணம் கூடுதல் மணம் பெற்றது. விருது பெற்ற உங்களுக்கும் வாழ்த்துகள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்களுக்கு நன்றி ராமலக்‌ஷ்மி..
மேலும் தமிழ்மணத்தைத் தொடர்புகொண்டு இன்னும் சிறப்பான அடுத்த வருடத்திற்கு முயற்சி எடுத்ததற்கு இன்னும் ஒரு நன்றி. :)

------------------------------
நன்றி ஆனந்தி :)
------
நன்றி சாரல் :)
------------------
நன்றி சே.குமார் :)
--------------
நன்றி தென்றல் :)
---------------------
நன்றி மீனா முத்து :)
--------------------
நன்றி சமுத்ரா :)
------------------
நன்றி துளசி :)
--------
நன்றி ஆசியா :)
----------------------
நன்றி முல்லை :) உங்களுக்கும் வாழ்த்துக்கள்

------------------
நன்றி அமுதா :)
-----------------------
நன்றி கபீரன்பன் :)
------------------
நன்றி வெங்கட் :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\జ్యోతి said...
Congratulations Lakshmi.. Keep going..

1/17/2011 2:37 PM//

thankyou joythi :)

☀நான் ஆதவன்☀ said...

வாழ்த்துகள் க்கா :)

ஆயில்யன் said...

வாழ்த்துகள் :))


சமகாலத்தில் போட்டிகளில் கலந்துகொள்வதில் பெரிதும் விருப்பமின்றி அப்படியே இருந்தாலும், அகப்படும் அளவு பதிவுகள் ஏதுமின்றி கிடந்துறங்கும் கடகத்தின் வழியே இணையப்பெருவெளியில் உலாவிக்கொண்டிருக்கும்
ஆயில்யன்

கானா பிரபா said...

நான் அப்பவே சொன்னேனே விருது உங்களுக்குத் தான்னு

கானா பிரபா said...

அப்புறமா ஏதோ விருதுப்பணத்தை ஓட்டுப்போட்டவங்களுக்கு பகிர்ந்துக்கிறதா பேசினாப்ல

ஆயில்யன் said...

2011ன் ஆரம்பத்தில் சர்வேதேச வானொலியில் பேட்டி அளித்த செய்தியினை பகிர்ந்துகொள்ளும் நாள் எப்போதோ? #ஆர்வமுடன் ஆயில்யன்

ஆயில்யன் said...

//புதுகைத் தென்றல் said...

நம்ம நண்பர்களுக்கெல்லாம் பரிசு கிடைச்சிருப்பதில் மகிழ்ச்சி.//

ஹைதை அக்கா அப்ப நானெல்லாம் ! :(

சோகமே உருவாய்
ஆயில்யன்

ஆயில்யன் said...

//கானா பிரபா said...

நான் அப்பவே சொன்னேனே விருது உங்களுக்குத் தான்னு//

அது போன வருசம்

இது இந்த வருசம்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி ஆதவன் :) உங்களுக்கும் வாழ்த்துக்கள்
----------------
ஆயில்யன் இப்பத்தான் தெரிஞ்சுது நீங்க ஏன் போட்டியில் கலந்துக்கலன்னு..

என்ன இலக்கியவியாதி பீடிச்சிடுச்சா புக் போடபோறீங்களா.. ?
:)
-------------------
கானா நன்றி ..
விருது புக் தானே
வேண்ணா புக்கை ரொட்டேசன்ல படிக்க விட்டுருரேன்.. :)
சேர்ந்து புக் செலக்சன் செய்வமா..:)
---------------------
ஆயில்யன் அந்த ஒலிக்கோப்பை எதுலயாவது ஏற்றிவிட்டுத்தானே பகிரனும்.. அதான் அடுத்து அதான்..:)

கானா பிரபா said...

//புதுகைத் தென்றல் said...

நம்ம நண்பர்களுக்கெல்லாம் பரிசு கிடைச்சிருப்பதில் மகிழ்ச்சி.//


;( அப்ப நானு

பா.ராஜாராம் said...

பென்சில் வைக்கிற டப்பா தொடங்கி தமிழ்மணம் வெற்றி வரைக்கும் வாழ்த்துகள் முத்து! (அப்புறம் அந்த டப்பா கலரை கொஞ்சம் தீவிரமா யோசிச்சு பாருங்க. ஒரு முயற்சிதானே!) :-)

கலாநேசன் said...

நல்வாழ்த்துக்கள்....தொடர்ந்து கலக்குங்க...

புவனேஸ்வரி ராமநாதன் said...

வாழ்த்துக்கள்.

கோபிநாத் said...

வாழ்த்துக்கள் அக்கா ;))

கோவை2தில்லி said...

தமிழ்மண விருது பெற்றதற்காக வாழ்த்துகள் முத்துலெட்சுமி.

"உழவன்" "Uzhavan" said...

வாழ்த்துக்கள் :-)

கோமதி அரசு said...

வாழ்த்துக்கள் முத்துலெட்சுமி.

இந்த ஆண்டு பல விருதுகள் பெற வாழ்த்துக்கள்.
ராமலக்ஷ்மியின் முயற்சிக்கும் வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்.

சேட்டைக்காரன் said...

சர்க்கரைப்பொங்கலைப் போல தித்திப்பான செய்தி. எத்தனையோ புதிய பதிவர்களை உற்சாகப்படுத்திய உங்களுக்கு இன்னும் இதுபோன்ற பல பரிசுகளை அள்ளித்தர எதிர்காலம் காத்திருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கயல், வியல் விருதுக்குக் கிடைத்த விருதுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.மகளிர் பிரிவு என்று அமோகமாகச் சாத்தித்தவர்களின் பட்டியலில், நீங்கள்,சாரல்,ராம்லக்ஷ்மி அனைவரும் இருப்பது அளவில்லாத பூரிப்பாக இருக்கிறது. மனம் நிறைந்த வாழ்த்துகள் மா.

siva gnanamji(#18100882083107547329) said...

CONGRATULATIONS!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சிவஞானம் ஜி வாங்க
நன்றி நன்றி :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பா.ரா நன்றி..

அம்மாகிட்ட கேட்டுடலாம்..அது என்ன கலர்ன்னு .. :)
--------------
கலாநேசன் நன்றி :)
--------------
புவனேஸ்வரி நன்றி :)
--------------------
கோபி நன்றி :)
---
ஆதி நன்றி :)
---------------
உழவன் நன்றி :)
-------------
அம்மா நன்றி :)
--------------------
நன்றி சேட்டைக்காரன் :)
------------------
நன்றி வல்லி :)

Thekkikattan|தெகா said...

வாழ்த்துக்கள், முத்து! keep it going...

ஸாதிகா said...

வாழ்த்துக்கள் சகோதரி.மேலும் பற்பல விருதுகள் கிடைக்க வாழ்த்துக்கள்!

அமிர்தவர்ஷினி அம்மா said...

மனம் நிறைந்த வாழ்த்துக்கள் முத்துலெட்சுமி

தொடர்ந்து கலக்குங்க

வின்சென்ட். said...

இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்

முகுந்த் அம்மா said...

வாழ்த்துக்கள் முத்துலெட்சுமி அவர்களே!

Chitra said...

Congratulations!!!!

Rathi said...

மேலும் மேலும் விருதுகள் பெற வாழ்த்துக்கள், முத்துலெட்சுமி.

அபி அப்பா said...

வாழ்த்துக்கள் முத்துலெஷ்மி!யூ டிசர்வ் ஃபார் தட்!

செல்வநாயகி said...

வாழ்த்துகள்.

அப்பாவி தங்கமணி said...

நல்வாழ்த்துக்கள் முத்துலெட்சுமி... very happy to hear this