October 14, 2011

வானவில் இற்றைகள் அக்டோபர் 2011

உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னும் கிரிக்கெட் பிடிக்கும் விளையாடுவான் பேசுவான் . ஒருமுறை நேராக என் மூக்கைப்பார்த்து பந்தை இறக்கி, அதிலிருந்து ”அம்மா உங்கள் மேல் அடிக்கமாட்டேன் வாங்க விளையாடலாம்” என்பான். இறுதிப்போட்டியில் வெற்றிக்கோப்பையைப் பெற்ற உடன் தெருமுனையில் டோல் அடித்து குழு நடனங்கள் நடந்தது. இதுநாள் வரை பூஸ்ட் க்கு கிடைத்த கிரிக்கெட் மட்டைகளை வைத்து விளையாண்டு கொண்டிருந்தவர் புது மட்டைக்கு அடிப்போட்டார். நான் மறுக்க அப்பா வாங்கிக்கொடுத்துவிட்டார்கள். அவர்கள் அடுத்தவர்களுடையது வைத்து விளையாடிய நினைவு வந்து மகனின் கனவை நினைவாக்கி விட்டார்கள். அது கிடைத்ததும் அடுத்து இந்தியா டீசர்ட்டுக்கு அடிபோட்டார். அது இவர் அளவுக்கு கிடைக்காததால் ஒருவருசம் போகட்டும் உடம்பைத் தேத்தப்பா என்று சொல்லிவைத்தேன்.

கடைக்கு செல்லவேண்டியதினத்தில் சீக்கிரமே எழுந்து அம்மா அப்பாவுக்கு குட்மார்னிங்க் வைத்து எல்லாரையும் கடைக்கு தயாராகச்செய்து ..என்ன ஒரு நல்லபையன்.

புது கிரிக்கெட் பேட் வாங்கியபின் விளையாட விடாமல் ஒரு நடன அரங்கேற்றம் பார்க்க அழைத்துச்செல்ல ஒரே அழுகை . விடுமுறையில் விளையாட விடவில்லையே .” நாங்கள் சிறுபிள்ளையாக இருந்தபோது விடுமுறை நாட்களில் கோயிலுக்கு வார வழிபாடு என்று அழைத்துச் செல்வார்கள். (கொஞ்சம் பெரிசானதும் நாங்கள் குறைத்தோம் தான்) காரிலா போனோம்? நடந்து போனோம்” என்று வழக்கமான அறிவுரையைக் கேட்டுக்கொண்டிருந்தான். டீவி இல்லை , கார் இல்லை,ஃபிரிட்ஜ் இல்லை என்று சொன்ன கதைகளை அடிக்கடிக் கேட்டுக்கேட்டு கடுப்பாகி

அப்பறம் எப்படித்தான் வாழ்ந்தீங்க?

”ஏன் அது எல்லாம் இல்லாம வாழமுடியாதா என்ன? முடியும்டா?
இருக்கிற அத்தனை விளையாட்டு சாமன்களையும் வைக்க இடமில்லை. மேலும் மேலும் கேட்பதை நிறுத்து ” என்று அடுத்த அறிவுரை..... அவன் படுத்து தூங்கிவிட்டான், பின்சீட்டில்...
----------------------------------
தலைமுடியை எப்பப்பாருங்க க்ரோஷா பின்னல் போல சுற்றிக்கொண்டே இருப்பான். முன் பக்கம் செய்வதால் யாரிடமாவது பேசும்போது அப்படி சுழட்டுவது பார்க்க நன்றாக இல்லை.  ஏண்டா அப்படி செய்கிற  என்று கேட்டால்  அது மகிழ்ச்சியைக்கொடுப்பதா சொல்வான் ( மஜா ஆரஹாஹெ )

முடிவெட்டிவிட்டு வந்த நாள் ....உடையில் எதோ ஒரு நூலைப் பிடித்து அதே போல சுற்றிக்கொண்டிருந்தான். என்னடா அதை விட்டு இப்ப இதா என்று கேட்ட என்னிடம் ஒரு கேள்வி கேட்டான். அதைக்கேட்டதும் எனக்கு இதயமே வலித்தது. என்னவா?

‘ அம்மா இதும் எனக்கு மகிழ்ச்சியா இருக்குன்னு சொன்னா நீங்க எடுத்துடுவிங்களா..? ‘

நான் என்ன அவன் மகிழ்ச்சியைவா பிடுங்கறேன். ஹ்ம்.. :(  உன்னை நாலு பேர் ஸ்மார்ட் பாய் ந்னு அப்பத்தானே சொல்வாங்க..இப்படி முடியை சுத்திட்டிருந்தா என்ன பையன் இவன்னு சொல்வாங்களே அதுக்குத்தானே சொன்னேன் என்று புரியவைக்க முயற்சித்தேன். ஆமா முயற்சித்தேன்னு தான் சொல்லனும். முடிந்ததா என்று தெரியல.

-------------------------------
புது புது ஹிந்தி அல்லது ஆங்கில வார்த்தைகள் தெரிந்துகொண்டால் அது ஒரு வாரகாலம் அதே வைத்து தான் பேசுவது வழக்கம். பெஹோஷ் மயக்கம் என்று ஒரு வார்த்தை தெரிந்தது. அம்மா சீக்கிரம் வாங்க இந்த கேம் ல நான் எவ்ளோ பாயிண்ட் எடுத்திருக்கேன் தெரியும..? ம் சொல்லுப்பா.. கேட்டா நீங்க பெகோஷ் ஆகிடுவீங்க.. என்று சொல்லிவிட்டுத்தான் பாயிண்ட் எவ்ளோ என்று சொல்வது. இப்போதெல்லாம் நான் கூப்பிட்டால் சீக்கிரம் சொல்லு பெகோஷ் ஆகி விழனும்ல்லன்னு சொல்லிட்டு கீழே விழப்போகும் மாதிரி நிற்பது கண்டு அவனுக்கு ஒரே வெட்கம். ரொம்ப அதிகமாப்போனா அம்மா ந்னு ஒரு கோவம்..
-------------------------------------------
महानो का यह पवित्र देश‌
अब क्यो बदल रहा है अपना वेश?
स्वतंत्र तो हो गये है मगर,
कब छाएगा एकता का अम्बर?
இது என் மகள் அவளோட பள்ளி கையெழுத்துப் பத்திரிக்கைக்காக எழுதியது.

ஹிந்தியில் கவிதை வேணும் என்றதும்.. எல்லாரும் இவளை கைகாட்டி இருக்காங்க..நான் ஆங்கிலத்தில் தான் எழுதுவேன் என்று சொன்னதும்..டீச்சர் அதெல்லாம் ஹிந்தியிலும் வரும் ட்ரை செய்யு என்று சொல்லிட்டாங்களாம்..
வந்து என்ன எழுத எழுத ந்னு தொணத்தொணத்தா எழுதுடி எதயாச்சும் எழுதிட்டு காமி சொல்றேன்னேன்..

அப்பறம் எதோ எழுதினா. நம்ம தேசம் , இதோட மன்ணுன்னு ஒரே பெருமையா இருந்தது கவிதையில்..இதே மாதிரி தானெ எல்லாரும் எழுதிட்டு வருவாங்க..கவிதை எழுதினா அதுக்கு உண்மையா இருக்கனும்.. எழுதனுமேன்னு இருந்தா எழுதாதே வரலைன்னு சொல்லிடு டீச்சருக்குந்னு சொல்லிட்டேன்.. அதோட வராதுனு கவலையில் முகத்தைத் தூக்கிவச்சிட்டிருக்காதே ..
இதை எடுத்துட்டுபோ இன்னும் ஒரு நாள் டைம் கிடச்சா வேற எழுதுன்னேன்.. அதே மாதிரி வகுப்பில் எல்லாரும் அதே மாதிரி எழுதி இருக்கவும் திரும்ப வந்தா..

என்ன எழுதனுமோ அதை ஆங்கிலத்தில் எழுது அப்பறம் அதுக்கான வார்த்தைய ஹிந்தியில் தேடுன்னேன்.. கவிதைய சமைக்கச்சொன்னேன்..:)) திருத்தி எழுதப்பட்டது ..
டீச்சர் இதை நீதான் எழுதினியா மண்டபத்துல வாங்கிட்டுவந்தியான்னு எல்லா வார்த்தைகளுக்கும் அர்த்தம் கேட்டுக்கிட்டாங்களாம்..:))

மகான்களால் நிறைந்த இந்த புண்ணியதேசம்
ஏன் கலைக்கிறது அதன் வேஷம்
சுதந்திரம் வந்துவிட்டது ஆனால்
எல்லாரும் சமமென்ற வானம் விரிவதெப்போது ?
- இது நான் என் அறிவுக்கு அதை மொழிபெயர்த்திருக்கிறேன்..
---------------------
தூங்கிட்டிருந்தவளை எழுப்பி ’அன்ஷுல் நம்பர் சொல்லும்மா..’
’போன்ல தானேடா இருக்கு.. ’
’அன்ஷுல் 4 மணிக்கு என் வீட்டுக்கு விளையாடவா..’
6 மணிக்கு ’அன்ஷுல் உன் வீட்டுக்கு போற டைமாகிடுச்சுல்ல..வா நானும் உன்கூடவே உன் வீட்டுக்கு வரேன்..’

’அம்மா அன்ஷுலுக்கு அவன் வீட்டுக்குப்போனும் கொண்டுவிடு..
நானும் அப்படியே போறேன்..’
’டேய் யாருடா திரும்ப 7 மணிக்கு கூட்டிடுவருவா.. ’
’நீதான்மா..’
நானில்லைன்னு தலையாட்டிட்டிருக்கும்போதே..
கிரிக்கெட்ல அவுட் செய்துட்டா பவுலர் செய்ய்ரமாதிரி எல்போ மடக்கி.. எஸ் ந்னு கத்திக்கிட்டே

‘ நான் உன் வீட்டுக்கு வரேன் அன்ஷுல்..’
----------------------------------------------
’தாயே பராசக்தி என்னைக்காப்பாத்தும்மா ‘- நான்..

என்னைத்திட்டரதுக்குத்தானேம்மா சக்தி கேக்கரே.. என்னை அடிக்கிறதுக்குத்தானே - குட்டிப்பையன்

அவ்....
----------------------------
ஷாப்பிங் போன இடத்துல குட்டிப்பையன் சொன்னதை நான் வாங்கலைன்னு , ப்ளே ஏரியால விளையாட விடலைன்னு ஒரே சண்டை.. நிருலாஸ் ல சாப்பிடப்போனா ,அங்க வரைக்கும் முகத்தை உம்முன்னு வச்சிக்கிட்டு.. பேசினா பேசாம..நான் உக்காந்திருக்கும் டேபிளில் எதிர்சேர்ல கூட உக்காரமாட்டானாம்.. உன் கூட பேசமாட்டேன் ந்னு சொல்லிட்டு எங்க டேபிள் ,அத்தை மாமா உக்காந்திருந்த டெபிள் எல்லாம் சுத்திட்டு அப்படியே திரும்ப வந்து , நீங்க எப்பவும் என் பேச்சுக்கேக்கறதில்ல., எப்பவும் திட்டறீங்கன்னு சொல்லிக்கிட்டே மடியில் ஏறி உக்காந்தாச்சு..

ஏ ஒருத்தன் என்கிட்ட பேசமாட்டேன்னு சொன்னானே அவன் எங்கே ?
இப்ப அவன் அவ்வ்..:))


12 comments:

siva said...

ஒரு ஒரு
சின்ன சம்பவங்களும்
உங்கள் குழந்தைகளுக்கு பொக்கிசமாய்
அழகான வரிகள் கொண்டு
நேரில் காண்பது போல பகிர்ந்து இருக்கீங்க
நன்றி

thirumathi bs sridhar said...

ரொம்ப ரசிச்சேன்.நானும் என் பதிவில் ஒரு புராணத்த வச்சிட்டு வந்தேன்.நீங்களும் பதிவிட்டீங்க,same கிள்ளு.

महानो का यह पवित्र देश‌
अब क्यो बदल रहा है अपना वेश?
स्वतंत्र तो हो गये है मगर,
कब छाएगा एकता का अम्बर?

மஹானோ கா யஹ் பவித்ர தேஷ்
அப் கியோ பதல் ரஹா ஹே அப்னா தேஷ்?
சவந்த்ர தோ ஹோ கயே ஹை மகர்
கப் சூயேகா யேக்தா கா அம்பர்.

நான் படித்திருப்பது சரியா?
பிழை திருத்தவும்.நிச்சயமா நீங்க இதுக்கு தமிழ் அர்த்தம் சொன்னதால் கொஞ்சம் சபாஷ் போட்டுகிட்டேன்.இல்லைனா நான் ஒரு புது அர்த்தம்தான் சொல்லியிருப்பேன்.இந்த ஹிந்தி இன்னும் ஒழுங்கா வரமாட்டிங்கிதே>..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சாயேகா ப்பா அது.. :) லாஸ்ட் வரியில்..
ஓ இந்த புராணம் தினம் படிப்பதால் உங்க புராணம் வாசிக்கல இன்னும் வாசிக்கிறேன்..

--------------------
சிவா நன்றி..:)

கோபிநாத் said...

\\அப்பறம் எப்படித்தான் வாழ்ந்தீங்க?\\

;-)))))))))))) சூப்பரு...சூப்பரு ;-)

புதுகைத் தென்றல் said...

பலவித நிறங்கள், உணர்வு. ரசித்தேன்

கோவை2தில்லி said...

நல்லாயிருக்குங்க இற்றைகள்....

கவிதையும் அருமை.

சில நேரம் பசங்களுக்கு புரிய வைக்குறதுக்குள்ள பொறுமையே போய் விடும்.

ஹுஸைனம்மா said...

/அவன் படுத்து தூங்கிவிட்டான், பின்சீட்டில்/

அவ்வ்வ். இங்கயும் அப்படித்தான் நடக்கும் அப்பப்ப...

ஆரம்பத்தில், அதிசயம்போல, கண்ணை விரிச்சு, “ஃபோன் கிடையாதா? ஃப்ரிட்ஜ் கிடையாதா?”ன்னு கேக்கும்போது அழகா இருக்கும். அப்புறம், “ஸ்டாப்” போர்ட் வைக்காத குறைதான்!! :-))))

வெங்கட் நாகராஜ் said...

ஒவ்வொரு நிகழ்வுகளையும் கோர்த்து ஒரு அழகிய பதிவாக்கியிருப்பது நன்றாக இருக்கிறது. சில விஷயங்களை நீங்கள் பஸ்-ல் ஓட்டியதால் இன்னமும் ரசிக்க முடிந்தது...


கவிதை நன்றாக இருக்கிறது. கவிதாயினிக்கு பாராட்டுகள்...

அமைதிச்சாரல் said...

//கடைக்கு செல்லவேண்டியதினத்தில் சீக்கிரமே எழுந்து அம்மா அப்பாவுக்கு குட்மார்னிங்க் வைத்து எல்லாரையும் கடைக்கு தயாராகச்செய்து ..என்ன ஒரு நல்லபையன்//.

இல்லியா பின்னே :-))))

கோமதி அரசு said...

\\அப்பறம் எப்படித்தான் வாழ்ந்தீங்க?\\

நல்ல கேள்வி.
சபரியின் குறும்புகளும், அருமை.

மாதினியின் கவிதை அருமை.
மேலும் சிறந்த கவிதைகள் எழுத ஆசிகள்.

ராமலக்ஷ்மி said...

குழந்தைகள் உலகம் எத்தனை அழகானது!!

//
என்னைத்திட்டரதுக்குத்தானேம்மா சக்தி கேக்கரே.. //

:))!

மாதினிக்கு தொடர்ந்து எழுத ஊக்கம் கொடுங்கள்.

பாச மலர் / Paasa Malar said...

அழகான பதிப்புகள் உங்கள் வானவில் இற்றைகள்...பின்னொரு காலத்தில் குழந்தைகள் படிக்கும்பொழுது எவ்வளவு நன்றாக இருக்கும்...வரப்போகும் அந்த உணர்வுகளும் சரி..நீங்கள் பதியும் பாங்கும் சரி..அழகு...