October 17, 2011

பனிஊழிக்காலங்கள்

தோல்வி

சிறுமிகட்டிய
சின்னச் சின்ன மணற்கோபுரங்கள்
நான் ஒளித்த ஈர்க்குச்சியை
ஒவ்வொருமுறையும்
கண்டுகொண்டாய்.
ஒருமுறைகூட விளையாட்டாய்
தோற்கத்தெரியாதா?

சில வார்த்தை ஒளிக்கிறேன்
பெரியவள்
ஒருமுறை கூட நீ அதன் பொருள்
அறிந்துகொள்ளவில்லை

-------------------------------------------------------


முடிவு

நூற்றாண்டுகளாய்
உறைந்துகொண்டிருந்த பனி
உருகிக்கொண்டிருந்தது
வெளிகாட்டும் படிமங்கள்
நிகழ்ந்த
பிறப்பும் இறப்பும்
காட்டிக்கொண்டிருக்க
னி ஊழிக்கு காத்திருக்கும்
குளிர் தேடியலையும்
உயிர் ஒன்றின் காலடியில்
எங்கோ
நீர் உயர்ந்துகொண்டிருந்தது

------------------------------------------------
 வழி

காரணங்கள் உருவாக்க
அவசியமிருக்கவில்லை
இல்லாத ஒன்றை
இருக்கின்றதென்றும் சொல்லவில்லை
இல்லாததற்காக
ஆகாத்தியமும் தேவையில்லை
நினைத்துக்கொண்டாற்போல
மறந்துகொள்வதற்கு
கோபத்திற்கான காரணங்களாவது வேண்டும்
பெரியவிசயமில்லை
வரிகளுக்கிடையில் படிக்கலாம்
கிடைக்காமலா போகும்
-----------------------------------------------------------

நாடகம்

பாடப்புத்தகத்தின் பக்கங்களில்
கிரீடம் வைத்த அரசனுக்கு
ஒரு கண்ணைக் கருப்படித்தாள்
சிலபல தலைகளை வரைந்தாள்
பயங்கரனைப் போல
ஆக்கிவிட்டோமா என்று
தூரநிறுத்திப் பார்த்துக்கொண்டாள்
முடிந்தவரை
அவனே வந்தாலும்
தன்னையறிய முடியாதபடிக்காய்
அதை
ருமாற்றிக்கொண்டிருந்தாள்

11 comments:

ராமலக்ஷ்மி said...

அனைத்தும் நன்று.

முதலும் கடைசியும் நிரம்பப் பிடித்தன.

வல்லிசிம்ஹன் said...

டில்லியில் குளிர் ஆரம்பித்துவிட்டதா கயல்.
கொஞ்சம் புரிகிறது.
புரிந்த வரை ஏதோ வருத்தம் தெரிகிறது.

கோபிநாத் said...

முடிவு அருமை ;-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி ராமலக்‌ஷ்மி நம்மைச் சிறுமியாக்கும் விசயங்கள் எப்பயும் அழகு தானே :))

-----------------------
வல்லிம்மா டில்லியில் குளிர் இன்னும் வரலை..:) லேசா காலையில் சில்லென்று இருக்கிறது.. இந்த முறை வெயில் அதிகம்..

ஓ வல்லி உங்க அன்புக்கு நன்றி :))

கோமதி அரசு said...

கவிதைகள் நன்றாக இருக்கின்றன.

மகள் பள்ளியில் கவிதை எழுதி பாராட்டு பெற்றவுடன் கவிதை எழுத நினைவு வந்து விட்டதா?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி கோபி .. :) நீங்களும் ஸ்கூல்ல இப்படி படத்தை கிறுக்கி கிழிச்சிருப்பீங்க போலயே..

----------------------------
கோமதிம்மா.. இது ஒரு மாதக்காலமாக கூகிள் பஸ்ஸில் துண்டு துணுக்குகளாக எழுதிச்சேர்த்தது..:) இங்கே சேமிப்புக்காகவும் ப்ளாக் படிப்பவர்களுக்காகவும்..

சாந்தி மாரியப்பன் said...

எல்லாமே நல்லாருக்குங்க..

வெங்கட் நாகராஜ் said...

கவிதைகள் நல்லா இருக்குங்க!

வாழ்த்துகள்....

goma said...

பனிமழையாய் கவிதை மழை பொழிகிறது....
ஜில்ன்னு இருக்கு

Thekkikattan|தெகா said...

ஒரு புத்தகத்தின் அடுத்த அடுத்தப் பக்கங்களில் வரப் போகிற உள்ளடக்கம் அதன் தலைப்பில் சொல்லி நிற்க வேண்டும் அதனையொத்தே பனிஊழிக்காலங்கள் - தலைப்பும் கவிதைகளும் பிடிச்சிருக்கு.

Anonymous said...

”தோல்வி” என்ற தலைப்பிட்ட கவிதை மிக நன்றாயிருக்கிறது.