October 2, 2011

திருத்தம்




திருத்தம் 



உணவாக்க விழையாத இழைகளை
வட்டத்துக்குள் சிக்காமல்
குறுக்கில் நடந்து கடக்கிறாய்
இழைகளை
உண்டு செரிக்கத் தயாராகிறேன்
--------------------------------------------



எல்லாம் அறிவாய்
வேண்டி நிற்பதும் அறிவாய்
காட்சி எப்போது?
அல்லது யாருக்கு?
கர்வம் மிக்கது எது?
கசிந்துருகுவது எது?
கடமைக்காய் இருப்பது எது?
கடந்து போவது எது?
கல்லாய் நினைப்பது எது?
துல்லியமாய் அறிவாய்
அறியாதது
நீ யாரென்பது மட்டும்.
-----------------------------
காதல் எழுதுபவர்கள்
காதலில் இருக்கிறார்கள்
மரணம் எழுதுபவர்கள்
மரணித்துக்கொண்டும்
கருணை எழுதுபவர்கள்
கசிந்துருகிக் கொண்டும்
இவ்வாறெனில்
எவ்வளவு எளிது
இவ்வுலகம்.

-------------------------------

கூகிள் பஸ் பற்றி அறிந்தும் ரொம்ப நாள் அந்தப்பக்கம் எட்டிப்பார்க்கவில்லை.. டிவிட்டர் அளவுக்கு யோசிக்கவைக்காமல்.எவ்வளவும் தட்டச்சலாம்.. என்பதால் அங்கே அவ்வப்போது தோன்றியதை எழுதி வந்தேன். அதனை இங்கே சேமித்து வைக்கிறேன்.

-----------------------------

9 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

திருத்தமான கவிதை..

Unknown said...

// இவ்வாறெனில்
எவ்வளவு எளிது
இவ்வுலகம்.//

எழுத்தையும் எழுதுபவனையும் நாம் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. நல்பதிவு.

ராமலக்ஷ்மி said...

மூன்றுமே மிக அருமை.

Rathnavel Natarajan said...

நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

மூன்றுமே நல்ல கவிதைகள்....

இன்னும் நிறைய எழுதுங்கள்....

கோமதி அரசு said...

அறியாதது
நீ யாரென்பது மட்டும்.//

நான் யார் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து கொண்டால் நல்லது.

நல்ல கவிதை.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

குணசீலன் , கலாநேசன் ..ராமலக்‌ஷ்மி,
ரத்னவேல், வெங்கட், கோமதிம்மா எல்லாருக்கும் நன்றிகள் :)

ADHI VENKAT said...

மூன்றுமே நன்றாக இருந்தன.

தொடர்ந்து எங்களுக்கு இது போல் கவிதைகளைத் தாருங்கள்.

'பரிவை' சே.குமார் said...

மிக அருமை.