March 16, 2007

முதல் பரிசு

முதல் பரிசு
------------------

முதன் முதலாய் துணிக்கடையில்,
ஆண்கள் பகுதிக்கு.
அளவு என்ன தெரியாது.
பிடித்த நிறம் என்ன தெரியாது.
முழுக்கை பிடிக்குமா அரைக்கையா ?
கையிலிருப்பதற்கு தேர்வானது அது.
அடர் நீலத்தில் ,
கட்டம் கட்டமாய்,
முழுக்கை வைத்து,
கொஞ்சம் பெரியதாகவே,
என்னவோ,
பிடித்திருப்பதாய் சொன்னாய்.

-------------------------------------------------------------

தேடல்
----------
ரயில் நிலையங்களில்
எதிர் படும் முகங்களில்.
சின்னத்திரையில்,
கேண்டிட் கேமிரா
காட்டும் முகங்களில்.
"நல்லாருக்கு பாக்கலாம்"
என நகரும் முகங்களில்.
சரியான வழி
தொலைத்ததை தொலைத்த
இடத்தில் தேடுவதாம் .
நான் தேடும் வழி தவறானதோ.

23 comments:

சென்ஷி said...

ஹைய்யோ... சூப்பராயிருக்குங்க கவிதைங்க...

அதுவும் முதல் பரிசு ஏ-ஒன் :))

சென்ஷி

முத்துலெட்சுமி said...

கவிதை எழுதினா
கூட்டம் கொஞ்சம் கம்மியாத்தான் வரும்ன்னு தெரியும் இருந்தாலும்
ஆசையாரை விட்டது.
வந்து படிச்சு மறுமொழி
எழுதியதுக்கு நன்றி சென்ஷி...

சென்ஷி said...

//முத்துலெட்சுமி said...
கவிதை எழுதினா
கூட்டம் கொஞ்சம் கம்மியாத்தான் வரும்ன்னு தெரியும் இருந்தாலும்
ஆசையாரை விட்டது.//

அப்படியெல்லாம் கிடையாது.. புரியறாமாதிரி 6 வரில இருந்தா எல்லோரும் வந்து பாப்பாங்க.. பின்னூட்டம் அதிகமாயிட்டா கும்பல்ல புரிஞ்சமாதிரி நடிப்பாங்க :))

சென்ஷி

Boston Bala said...

இரண்டுமே பிடித்திருக்கிறது

---அதுவும் முதல் பரிசு ஏ-ஒன் ---

அதே :)

ஜெஸிலா said...

துணிக்கடையில்
முதல் முறை ஆண்பிரிவில்.
கண்களால் அளந்திருந்ததால்
கச்சிதமாய் எடுத்துவந்தேன்.
பிடித்திருந்தது என்றாய்
சட்டையையல்ல
பரிசுக் கொடுக்கும் நாட்டத்தை.

ஹைய்யயோ உங்க கவித நல்லாயிருந்துதுங்க சும்மா இது என் முயற்சி மட்டும் ;-)

முத்துலெட்சுமி said...

\\ Boston Bala said...
இரண்டுமே பிடித்திருக்கிறது

---அதுவும் முதல் பரிசு ஏ-ஒன் ---

அதே :) //


நன்றிங்க பாலா.

\\துணிக்கடையில்
முதல் முறை ஆண்பிரிவில்.
கண்களால் அளந்திருந்ததால்
கச்சிதமாய் எடுத்துவந்தேன்.//

நன்றி ஜெஸிலா , உங்க முயற்சியும் நல்லாருக்கு.கண்ணால் அளக்கும் தொலைவுக்கும் அதிகமான தொலைவு
இக்காதலிக்கு.மற்றபடி பிடித்திருப்பதாய் சொன்னது உங்க கவிதையைப் போல
அதே அர்த்தத்தில் தான்.

குறைகுடம் said...

//இரண்டுமே பிடித்திருக்கிறது

---அதுவும் முதல் பரிசு ஏ-ஒன் ---

அதே :)

//
அதே, அதே.

ஆனாலும், முழுக்கையா, அரைக்கையான்றதுக்கு மேல, எங்களுக்கு பெரிசா சாய்ஸ் ஒண்ணும் இல்லீங்களே :-)

கோபிநாத் said...

ம்ம்ம்....கவிதை எல்லாம் சூப்பருக்கா ;)))

எனக்கு முதல் பரிசு தான் ரொம்ப பிடிச்சிருக்கு.

முத்துலெட்சுமி said...

நன்றி குறைகுடம்.
அரைக்கையா முழுக்கையான்னு என்ன
பெரிசா கலர்கூட உங்களுக்கு இல்ல
ப்ளு தான் அதிகம் உபயோகிக்கற
கலர் னு நினைக்கிறேன்.
பாவம் தான் நீங்கள்ளாம்.
பொண்ணுக்கு டிரஸ் எடுக்கப்போனா
அது இதுன்னு எடுக்க குழம்புவொம்.
பையனுக்கு என்னத்த எடுக்கறது
திருப்பி திருப்பி அதே பேண்ட் கால் சட்டை செட் தான். போர்.

முத்துலெட்சுமி said...

நன்றி கோபிநாத்.
சூப்பருன்னு எல்லாம் சொல்லி
கவிதை எழுதற
ஆசையை தொடர வைக்கறீங்க.

சேதுக்கரசி said...

இதில் பங்கேற்க வாருங்கள், உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்:

அன்புடன் கவிதைப் போட்டி
ப்ரியன் வலைப்பதிவில் தகவல்கள்

பங்கேற்று வெற்றி பெற வாழ்த்துக்கள்.

முத்துலெட்சுமி said...

யோசிச்சிட்டே இருக்கேன் சேதுக்கரசி
போட்டில எழுதற அளவு வருமான்னு தான்..இந்த காட்சிக்கவிதைன்னு
ஒன்னு இருக்கே அதுல வீடியோ மட்டும் இருந்தா சரியா..கவிதை தனியா எழுத்தா இருந்தா போதுமா.கொஞ்சம் விளக்க முடியுமா?

சேதுக்கரசி said...

கவிதைப் போட்டிக் குழுவிடம் விசாரிச்சேன் முத்துலட்சுமி. அவங்க பதில்:

//(காட்சிக்கவிதை) வீடியோ கவிதை என்பது அவரவர் கற்பனைக்கேற்ப விரிவது. பின்னணியில் காட்சிகள் ஓட, கவிதையை வாசிக்கலாம், பாடலாம், கீழே சப்-டைட்டில் போல ஓடவிடலாம்.... தானே நடனமும் ஆடலாம்.... கற்பனைக்கு ஏது எல்லை? எது சிறப்பாக இருக்கிறதோ அதுவே பரிசினைப் பெறும்//

ஒரு inside tip: அந்தப் பிரிவில் இதுவரை எந்த entry-யும் வரலை ;-) இதை ஒரு புதுமையான முயற்சியாகவே இணைச்சிருக்கோம். இதுக்கு entries கொஞ்சம் தான் வரும்னு எதிர்பார்க்கிறோம்.. அதனால வெற்றி பெறும் சாத்தியக்கூறுகள் அதிகம்.

சேதுக்கரசி said...

அன்புடன் கவிதைப் போட்டியில் காட்சிக்கவிதைப் பிரிவில் நடுவர் நிலாச்சாரல் நிலா தெரிவில் இரண்டாம் பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள் முத்துலட்சுமி!

உங்கள் கவிதையை esnips-இல் காணப் பலரும் சிரமப்படுகிறார்கள். மடல்கள் பார்த்தீர்களா?

முத்துலெட்சுமி said...

thakavallukku nanri sethukkarasi,
nan tharpothu net cafe la irunthu ithanai parthathaal oriru varaththil katchiyai kanpatharkku eetRrapadi seykiren.

அபி அப்பா said...

வாழ்த்துக்கள்! இப்போ நெட்ல இருக்கீங்கலா? இப்போ தான் பரிசு கிடைத்த செய்தி தெரியுமா? வாழ்த்துக்கள்:-)))

முத்துலெட்சுமி said...

நன்றி அபி அப்பா ஓரிரு முறை இப்படி நெட் சென்டர் வந்து பார்க்க முடிந்தது இந்த வாரத்தில்.அடுத்த வாரம் முதல் கொஞ்சம் வசதியாக தமிழ்மணமோ மெயிலோ பார்க்கமுடியும் .மங்கை தொலைபேசியில் அழைத்து பரிசு விவரம் சொன்னார்கள். ஆனால் இங்கே நெட் சென்டரில் முதலில் தமிழ் படிக்க முடியவில்லை எனவே முழுமையான தகவல் அறியக் காலதாமதமாகிவிட்டது.

நொந்தகுமாரன் said...

நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.

சிறு முயற்சி என்பதால், உங்களை சீரியசாக விமர்சிக்க முடியவில்லை.

தப்பித்துப் போங்கள்!

மங்கை said...

வாழ்த்துக்கள் லட்சுமி..சீக்கிறம் வாங்கப்பா...:-))

முத்துலெட்சுமி said...

நன்றி நொந்த குமாரன் . என்ன பேரு சார் இது?
நல்ல கவிதை அப்படின்னு சொல்லிட்டு சீரியஸா விமர்சனம் பண்ணலாம்ன்னு வேற பார்த்தேன் அப்படின்னு சொல்லறீங்க புரியலை.

முத்துலெட்சுமி said...

மங்கை இதோ வந்திட்டே இருக்கேன்...கவலைப்படாதீங்க கொஞ்ச காலம் வலையில் சந்திப்போம். அப்புறம் நேரில்.

SurveySan said...

முதல் பரிசு நல்லா இருந்தது.

ரெண்டாவது புரியல :(

முத்துலெட்சுமி said...

சர்வேசன் அது...
என்றோ தொலைத்த ஒரு முகத்தை எங்காவது எப்போதாவது
ஒரு இனிய விபத்தாகவோ தற்செயலாகவோ மீண்டும்
காண்பதற்கான ஒரு தேடல்.