March 2, 2007

சந்தோஷம் நிம்மதி கொஞ்சம் பெருமை

கணவரின் நண்பர் குழந்தையைப் பார்க்கப் போனோம். கஷ்மீரிக்காரங்க போனதும் முந்திரி பாதாம் கிண்ணத்தில்
நிரப்பி வைத்தார்கள். ஆளுக்கு ஒரு கப் டீ குடுத்தாங்க. அப்புறம்
வேலைக்காரப் பெண் ஒரு கெட்டில் கொண்டு வந்தா என்னன்னு கேட்டா இன்னும் கொஞ்சம் டீ வேணும்ன்னா ஊத்திக்கவாம் அவங்க குளிர் ஊரில் இதமாய் இப்படி டீ குடிச்சிக்கிட்டே
பேசிக்கிட்டு இருப்பாங்களாம்.

அவங்க மனைவி குழந்தையை கொஞ்சநேரம் கைகளில் கொஞ்ச குடுத்துவிட்டு பால் கொடுத்து தூங்க வைத்துவிட்டு வருவதாகப் போய் விட்டார்கள். நண்பர் ஆரம்பித்தார் யூ நோ ?
இதெல்லாம் அவுட்சோர்ஸ் பண்ணப்போறாங்களாம் . ஆபீஸ்ல
இவங்க இவங்க லெவல் எவ்வளவோ அதுக்கும் மேல அதிகம்
சம்பாதிக்கறாங்களாம் . கேட்டாத்தான் கொடுப்பாங்களாம்.
இனிமே அதெல்லாம் கட்டாமே. அவர் டிவோர்ஸ் பண்ணிட்டு
நம்ப சேல்ஸ் ஹெட்ட கல்யாணம் பண்ணிக்கப் போறாராம்.

எல்லாத்துக்கும் நம்ம தலைவர் சிரிப்போட அப்படியா ஓகே. ஒகே. சாப்பிட்டு கிளம்புவதற்குள் ஆபிஸின் அத்தனை அரசியலும் பேசி ஓய்ந்தார் நண்பர். எல்லாமே புதிதாய் கேட்ட
தலைவரைப் பார்த்து இவர் என்ன பார்க் பெஞ்சிலயா படுத்து
இருந்துட்டு வரார் . ஆபிஸ் தான் போறாராங்கற சந்தேகம் வந்துவிட்டது.

வீட்டுக்கு போகிற வழியில் என்னப்பா நேத்து வந்த பையன் என்ன என்னமோ சொல்றான் அப்படின்னு கேட்டா , நானெல்லாம்
மேஜைக்கடியில் வேலை செய்யறேன். சாதாரண தொழிலாளி.
எனக்கென்ன தெரியும் அப்படிங்கறார் தலைவர்.

''நமக்கு தெரிஞ்சவங்கள்ளாம் ஒன்னு அமெரிக்காவுலயோ
சிங்கப்பூரிலயோ குப்ப க் கொட்டிக்கிட்டு போன் மூலமே பேசறவங்க..இல்லன்னா செக்யூரிட்டி எலக்ட்ரிசியன் மாதிரி வேலைகளை செய்யறவங்க. பாதி நாள் என் வேலை செர்வர் ரூமில் கலர் பார்க்கறது ( வயர் கலர்ங்க ) .தனியாள் நான் .
அரட்டை நமக்கு பழக்கமில்லை .நானுண்டு என் லேப்டாப் உண்டு. நான் ரொம்ப நல்ல பையனாக்கும் .''


மகிழ்ச்சி. நிம்மதி. கொஞ்சம் பெருமை.

3 comments:

வடுவூர் குமார் said...

சிங்கப்பூரிலயோ குப்பக்

இங்கு அதுக்கு தண்டனைங்க!!
:-))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அப்ப அமெரிக்காவுல தண்டனை இல்லயா என்ன ..உங்கூருக்கு மட்டும்
சொல்லறீங்க.
எந்த ஊரானாலும் குப்ப வரத்தான்
செய்யும் அதக் குப்பக்கூடையில்
போடனும். வகை பிரிச்சு வேற
போடனும். வேலை தானே.
அவங்க வலை பதிவு படிக்கரதில்ல
படிச்சா ஒருவேளை ஆணி புடுங்கறதுன்னு சொல்லிஇருப்பாங்க.

மங்கை said...

சந்தோஷம். நிம்மதி. கொஞ்சம் பெருமை..
Nijamavea.. hmm..