March 20, 2007

மணாலி தொடர்ச்சி ஹாடிம்பா

மறு நாள் போனது ஹாடிம்பா தேவி கோயில் இது பார்க்கறதுக்கு ரோஜால வருமே மதுபாலா கூட கும்பிடப்போவாங்களே காஷ்மீர் கோவில் அதுபோலவே இருந்தது. எங்கபார்த்தாலும் வண்டிகளில் ஹாடிம்பா தேவி பேர் போட்டு இருந்தது. நம்ம ஊரில் மாசாணிஅம்மன் துணை என்று
போட்டிருப்பது போல.ஹாடிம்பா என்பது இடும்பன் தங்கை இடும்பி தான். பீமன் மனைவி. இந்தக்கோயில் 1553 ல் கட்டப்பட்டதாம். மகாபாரதத்தில்
மெழுகு அரண்மனையிலிருந்து தப்பி ஹாடிம்பர் ராக்ஷசர்களின் இடத்தில் பாண்டவர்கள் இருக்கும்போது பீமன் ஹாடிம்பாவை காதலித்து மணக்கிறார். . ஹாடிம்பா தன் மக்களிடன் அன்பும் கருணையும் மிக்கவளாம். கடோத்கஜன் அவர்கள் மகன் .மகனிடம் நாட்டை ஒப்படைத்து துங்ஹிரி வனத்தில் சென்று தவம் செய்ததால் துங்கிரிவனக் கோயில் என்றும் ஹாடிம்பா கோயில் என்றும் சொல்கிறார்கள். குலு நாட்டு அரச குடும்பத்தின் முக்கிய கடவுளாம். மே மாதம் நடுவில் மூன்று நாள் திருவிழா வருமாம்.கோயில் வாசலில் புசுபுசு வென்றிருந்த யாக் மேல் உட்கார்ந்து மகளை ஒரு புகைப்படம் எடுத்தோம். சிகப்பு கலரில் இருந்த சேலை போன்ற ஒன்றை சுற்றி சுற்றி ஒரு பின் போட்டு வெள்ளி கலரில் இருந்த நகைகளை போட்டு பின்னால் ஒரு கூடைய மாட்டிவிடறதுக்கு பத்து ரூபாய். மலையாளுங்க போல ஒரு புகைப்படம் நானும் எடுத்துக்கிட்டேன்.
-----
மனாலி யில் இருந்து 3 கிமீ நடைபயணமாக keylong கிராமத்தின் வழியில் ராமர் கோயில் ஒன்றும் வசிஷ்டர் கோயில் ஒன்றும் போனோம். hot sulper வெந்நீர் ஊற்று இருக்கும் இடம் மக்கள் எங்கெங்கு இருந்தோ துவைக்க துணி மூட்டைகளை எடுத்துக்கொண்டும் குளிப்பாட்ட சிறு குழந்தைகளை அழைத்துக் கொண்டும் வருகின்றனர். வெதுவெதுப்பாக வந்தது. கோயிலுக்குள் பெண்கள் , ஆண்கள் தனித்தனியாக குளிக்க தடுப்புகள் இருந்தது.இங்கு நிறைய துணிக்கடைகள் இருந்தன. அங்கே தாஸ்மினா சால்கள் என்று ஒன்று விற்கப்படுகிறது. இதயநோயுடையவர்கள்
அதை உபயோகித்தால் நல்லதாம் . வெளிநாட்டினர் மற்றும் பெரும்பணக்காரர்கள் வாங்குவார்களாம். ஒரு ஷாலின் விலை 2 அல்லது 3 ஆயிரம் ஆகுமாம். அது ஒரு வகை ஆட்டிடம் இருந்து செய்யப்படுமாம்.
This wool is taken from the under belly of the Pashmina goat existing in Tibet. The shawls woven from Pashmina range from a fine to super- fine quality. They are pure and light, yet tremendously warm. Owing to the high cost of labor involved in the sorting of fine Pashmina fiber they are pretty expensive but trendy.ஆட்டை துன்புறுத்தக்கூடாது என தடை செய்யப்பட்டதால் இறந்த ஆட்டிடம் இருந்தோ எப்படியோ எடுக்கப்பட்டு ஒரு ரஜாய் போன்ற போர்வையாக தாயாரித்து வைத்திருக்கும் அதனை 5 வருடம் போர்வையாக நாம் உபயோகித்தால் அது நம் சூட்டில் நல்ல படி ஆகுமாம் அப்புறம் அதை திருப்பி வாங்கிக்கொள்வானாம். அதற்கு வருடாவருடம் பல பரிசுகள் அனுப்பிவைப்பானாம். பலர் பணம் கட்டி இது ஒரு பிசினஸாக
வாங்கி சென்றதாக புகைப்படம் காட்டினான். என்ன கதையோ நம்பவே முடியவில்லை.திபெத்தியன் புத்தர் கோயில் ஒன்று சென்றோம். தங்க கலரில்
பெரிய புத்தர்...அமைதியான அந்த சூழ்நிலை அருமையாக
இருந்தது. அங்கிருந்த ஒரு இளம் துறவி பயிற்சிக்காக வந்திருந்தாராம் . பிரிந்து செல்லும் முன் அங்கிருக்கும் மற்றொரு துறவி நண்பனுக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுத
உதவி கேட்டார்.. எழுதிக் கொடுத்தோம். நான் உன்னை விட்டு
பிரிய மனமில்லாமல் செல்கிறேன் . என் மனதில் நீ எப்போதும்
நிறைந்திருப்பாய் என்று அவர் ஹிந்தியில் சொல்ல ஆங்கிலத்தில் எழுதித்தந்தோம்.அர்ஜுனன் குகை என்ற ஒரு இடம் . மனாலியில் இருந்து 5 கிமீ பிரினி கிராமத்திற்கருகில்{pirini village} இவ்விடம்
இருக்கிறது. இங்கு அர்ஜுனன் பாசுபதா அஸ்திரத்திற்காக இந்திரனை நோக்கி தவமிருந்ததாக சொல்லப்படுகிறது.


நாங்கள் சென்றபோது ரொதன்பாஸ் [51 கிமீ] மூடிவிட்டது பனியால். அங்கே வேத வியாஸர் தவம் செய்த இடமும் பியாஸ் நதியின் ஆரம்பம் இருப்பதாக அறிந்தோம்.


மணாலி இந்தியாவின் சுவிட்சர்லாந்து. இம்மலையின் தொடர்ச்சியில் எத்தனை எத்தனையோ இடங்கள் இருக்கின்றன. ராணிகேத் , கார்பெட் வைல்ட் லைப் சேன்ச்சுரி
என்று கணக்கிலடங்காதது. நான் முழுதும் பார்த்துவிட்டேன் என்று எவரும் குறிப்பிடமுடியாத அளவு இயற்கை அழகு கொஞ்சும் இடங்கள் நிறைந்தது. இத்தளத்துக்கு சென்று தங்குமிடம் மற்றும் விவரங்கள் அறிந்து கொள்ளுங்கள். பல விஷயங்கள் இன்று வலை மூலமே பதிவு செய்துகொள்ளும் வசதியோடு இருக்கிறது. நாங்கள் உபயோகித்துக்கொண்ட தளங்கள் சில

himachal tourisam office
NEW DELHI
CHANDERLOK BUILDING36, JANPATH, NEW DELHI-110001.Tel: (011) 23325320, 23324764 Fax: (011) 23731072E-mail: hptdcdelhi@hub.nic.in

http://himachaltourism.nic.in/kulu.htm

தங்குமிடபதிவுக்குonline booking


பேருந்து வசதிக்கு

முந்தையபதிவு மணாலி ஷிவ் லிங்க் பற்றியது இங்கே

4 comments:

மோகன்தாஸ் said...

நான் டெல்லியில் வேலை செய்த பொழுது(சொல்லப்போனால் வேலையில் சேருவதற்கு முன்) இரண்டு தடவை ஒரே வருடத்தில் சிம்லா-குல்லு-மணாலி போய்வரும் வாய்ப்பு கிடைத்தது.

மிகச் சுவையான அனுபவங்கள், ஊட்டி கொடைக்கானல் எல்லாம் பார்த்திராத எனக்கு நேரடியாக இமாச்சல் அனுபவம்.

பசுமையான அனுபவங்கள், நான் பாரா கிளைடிங், ரோப் கிளைம்பிங்(கங்கைக்கு இரண்டு பக்கமும் உள்ள மரத்தில் கயிறு கட்டி, நீங்களா மறுபக்கம் போய்ட்டு வரணும்.) செய்தேன்.

எங்க சித்தப்பு கொஞ்சம் பிடிவாதமான ஆசாமி அதனால அஞ்சு மணிக்கெல்லாம் எழுந்து(மணாலி குளிரில்) ரோதங் பாஸ் போனோம். ஆனா அதோட பயன் கிடைத்தது. லேட்டா கிளம்பியிருந்தா அழுக்கு பனியில் தான் விளையாடியிருக்கா முடியும்.

அங்கயும் இப்படித்தான் ஒரு பனிக்கோவில் இருக்கும், வியாஸ்(பியாஸ் - Byas) அங்க ஒரு கைப்பிடி அளவு ஓடிவரும். அற்புதம் அற்புதம். கீழ அதே பியாஸ் கங்கை மாதிரிவரும். White water rafting எல்லாம் செய்யணும் ஆசை, அந்த முறை நிறைவேறலை.

இன்னொருதரம் வந்து நிச்சயம் செய்யணும்.எழுதுறதுக்கு இன்னும் நிறைய இருக்கு. நேரம் தான் இல்லை.

முத்துலெட்சுமி said...

நன்றி தாஸ் , நான் பதிவிலேயே குறிப்பிட்ட மாதிரி நான் முழுதும் பார்த்துவிட்டேன் என்று எவரும் குறிப்பிடமுடியாத அளவு இயற்கை அழகு கொஞ்சும் இடங்கள் நிறைந்தது.

\\இன்னொருதரம் வந்து நிச்சயம் செய்யணும்.எழுதுறதுக்கு இன்னும் நிறைய இருக்கு. நேரம் தான் இல்லை//

உண்மைதான்.
பார்த்து முடிக்கவும் நேரம் வேண்டும்
பார்த்ததை எழுதவும் நேரம் வேண்டும் .

எந்த எந்த மாதத்தில் போகிறோமோ அதன் படி தான் சிலவற்றை அனுபவிக்கமுடியும். நீங்கள் வெயில்காலத்தில் போயிருப்பீர்களா இருக்கும் . ரொதன்பாஸ் தாண்டி செல்ல எல்லா மாதங்களிலும்
பார்க்க டண்ணல் கட்டிக்கொண்டிருந்தார்கள் முடித்துவிட்டார்களா தெரியவில்லை.
இல்லையென்றால் அந்தப்பகுதி குளிர்காலத்தில் எப்போதும் உலகத்தொடர்பே இல்லாமல் போய்விடும்.

கோபிநாத் said...

எப்பா ஒரு வழியா மணாலியை சுத்திப் பார்த்தாச்சு ;-))

அடுத்தது எங்க??

\\நான் உன்னை விட்டு
பிரிய மனமில்லாமல் செல்கிறேன் . என் மனதில் நீ எப்போதும்
நிறைந்திருப்பாய் \\

ஆஹா...ஆஹா...அருமையான வரிகள் ;-)

(அப்புறம் உங்களை புலி கூப்பிட்டுயிருக்காரு, பார்த்திங்களா?)

முத்துலெட்சுமி said...

என்ன கோபிநாத் செலவில்லாம
சுத்தி ப் பார்த்திட்டீங்களா?
இதெல்லாம் ஒரு உதாரணம் தாங்க.
ஒரு பானை சோற்றுக்கு ஒன்ன
எடுத்து ருசிக்கறமாதிரி.
போய் பார்த்து முழுதா அனுபவிங்க.
எப்பவாச்சும்.