April 5, 2007

கடைசில ஓட்டுப் போட்டாச்சு!!!

வோட்டுரிமைக்கான வயசு ஆனப்புறம் தமிழ்நாட்டுல ஒரு முறை ஓட்டுப் போட்டிருக்கேன். தில்லி வந்து இந்த பத்து வருடத்தில் ஓட்டே போடவில்லை.
பேரைப் பதிய வைக்க அங்க போங்க இங்க போங்கன்னு சொன்னாங்கன்னு அலைந்து பின்பு இந்த வருடம் நேரம் வந்து வாக்குரிமை அட்டை செய்து
இப்போதான் முதன் முதலா பட்டன் முறை ஓட்டுப் போட்டேன்.

இங்க எம்சிடி எலெக்ஷன் நடக்குது இன்னைக்கு . மக்கள் என்கிட்ட வரவேணாம் நான் வரேன் மக்கள் கிட்டன்னு காங்கிரஸ் காரர் சொல்லறார்.
ஆனா தொடர்ந்து ஜெயிக்கற அவங்க புதுசா சேர்ந்த ஓட்டுக்காரங்களுக்கு
சிலிப் குடுக்க விட்டுட்டாங்க. தாமரைக்காரங்க வந்து மறக்காம புது ஆளுங்களுக்கு செக் செஞ்சு சிலிப் எல்லாம் குடுத்து காங்கிரஸ தோக்கடிக்க சில காரணம் என்று வரிசைப் படுத்தி இருக்காங்க.


கோதுமை ----- 9 ரூ தாமரைக்காலத்துல---- 14ரூ யாம் காங்கிரஸ் காலத்துல
ஜீனி ------14 -------25
பால்-------14------22
அரிசி------10-------20-30
சிமெண்ட்----125------260
காய்கறி----5-8-------15-18

எந்த அரசு வந்தாலும் இதெல்லாம் கூடாம இருக்கா எல்லாம் கூடிக்கிட்டே இருக்கு.. ஆனா சமயோசிதமா போட்டுருக்காங்க. வெங்காயம் விலையக்
காட்டித் தானே ஆட்சி மாறுச்சு.

இப்ப வேற கட்டிட இடிப்பு , சீலிங் என்று வேற ஆட்டம் காமிச்சாங்க . மக்கள் என்ன முடிவு எடுத்துருக்காங்கன்னு ஒரு குழப்பம் இருந்தாலும் ..ஓட்டு ப்
போடும் மக்கள் குறைவா இருக்கும்ன்னு வேற கணிச்சுருக்காங்க. ஒரு நீளமான விடுமுறையா மக்கள் எடுத்துக்கிட்டு வோட்டு போடாம நேற்று இரவே பயணப்பட்டு இருப்பார்கள் என்கிறார்கள் . நாளை விடுமுறை எனவே சேர்ந்தார்போல் 4 நான்கு நாட்கள் கிடைக்கிறதே.

இப்போது ஓட்டுப் போடாமல் நாளை என் ஏரியாவில் இது நடக்க வில்லை
அது சரியில்லை என்றால் கேட்க எப்படி உரிமை இருக்கும் .

17 comments:

பங்காளி... said...

பி.ஜெ.பி க்குத்தானே ஓட்டு போட்டீங்க....

முத்துலெட்சுமி said...

யாருக்குப் போட்டோம்ன்னெல்லாம்
சொல்லக்கூடாது ரகசியமா வச்சுக்கணும்.

உங்களுக்கு அப்படி தோணும்படி நான் என்ன அந்த தொணிலயா
எழுதி இருக்கேன்.

வடுவூர் குமார் said...

சே! என்ன ஊரப்பா இது?
நான் வரும் போது தேர்தல் வைக்கமாட்டேன் என்கிறார்கள்.
இன்னும் ஒரு தடவை கூட முத்திரை வைக்கவில்லை.

முத்துலெட்சுமி said...

அடப்பாவமே பட்டன் முறையில ஒருமுறைக் கூட
ஓட்டுப்போடலயா ? நல்லாத்தான் இருந்தது .
என் பையன் கையில் கூட மை இருக்கு இன்னைக்கு.
பையன் போலியோ சொட்டு மருந்து போட்டுட்டு கையில்
மை வச்சுப்பான் .இப்ப நான் ஓட்டுப்போட்டு மை வச்சிருக்கனா. அவன் வீட்டுக்கு வந்து ஸ்கெட்ச் வச்சுப் போட்டுவிடச் சொன்னான்.

அபி அப்பா said...

5 மணிக்குதான் ஓட்டு போட்டீங்களா?:-))

முத்துலெட்சுமி said...

டைமிங் ல கலக்கறீங்க அபி அப்பா.ஓ கடைசிலங்கறதுக்கு அப்படி அர்த்தம் ஆகுதோ...இல்ல்ல முதல்ல போட்டேன். 8 .30க்கு எல்லாம் போயாச்சு. அப்பாடி அவந்தி பதிவுல போட்ட மாதிரி நீங்க சொல்ல வர
விஷயத்த கொஞ்சம் யோசிச்சுத் தான்
கண்டுபிடிக்க வேண்டி இருக்கு.
எனக்கும் கொஞ்சம் மூளை வேலை செய்யுதுப்பா .... :)

அபி அப்பா said...

//அவந்தி பதிவுல போட்ட மாதிரி //

ஊகூம், "கா" சேத்தாச்சு:-))

மங்கை said...

நல்லா ஓட்டுப் போடறாங்கப்பா... இந்த சாக்க வச்சு இன்னைக்கு யாரும் வரலை...தனியா உக்கார்ந்துட்டு இருக்கேன்...கேட்டா பார்டர்ல போலீஸ் நிக்குதாம், வர முடியலையாம்.
திருட்டுப் பசங்க...

இந்த கடைசில போட்டத நானும் ஓட்டலாமுன்னு வந்தேன்.. அபி அப்பா அதுகுள்ள முந்திட்டார்..:-)

முத்துலெட்சுமி said...

\\ அபி அப்பா said...
//அவந்தி பதிவுல போட்ட மாதிரி //

ஊகூம், "கா" சேத்தாச்சு:-)) //

அது உங்களூக்கு ...எங்களுக்கு பிடிச்சது செல்லப்பேர் அவந்தி...தான்... எல்லாரும் கூப்புட்டா நல்லாருக்காது...அதனால
நீங்கள்ளாம் அவந்திக்கா னு கூப்புட்டுக்குங்க.. :)

முத்துலெட்சுமி said...

\\மங்கை said...
நல்லா ஓட்டுப் போடறாங்கப்பா... இந்த சாக்க வச்சு இன்னைக்கு யாரும் வரலை...தனியா உக்கார்ந்துட்டு இருக்கேன்...கேட்டா பார்டர்ல போலீஸ் நிக்குதாம், வர முடியலையாம்.
திருட்டுப் பசங்க...

இந்த கடைசில போட்டத நானும் ஓட்டலாமுன்னு வந்தேன்.. அபி அப்பா அதுகுள்ள முந்திட்டார்..:-)//

எதுக்கு சலிச்சுக்கிறீங்க...உட்கார்ந்து தமிழ்மணம் படிக்க நல்ல சான்ஸ் ..அடிச்சு தூள் பண்ணுங்க பாக்கலாம் நிறைய பின்னூட்டம் போடுங்க இன்னைக்கு...எல்லாருக்கும்.

ஓட்டலாம்ன்னு வந்தீங்களா..அது சரி...இதுல போட்டி வேறயா...

அபி அப்பா said...

பகிர்ந்துக்க வேண்டிய விஷயம் ஒன்னு:

நேத்து காலை எழுந்திருக்கும் போதே இங்க துபாய்ல மழை வரும் போல இருந்துது. நான் வியாழக்கிழமைன்னு நெனச்சுகிட்டு(இங்கு வெள்ளி லீவ்) வீக் எண்ட்தானேன்னு ஜாலியா ஆபீஸ் போய், தமிழ்மணத்துல பூந்துகிட்டேன். ஒரு ஆணி கூட புடுங்கலை. ஜாலியா ஸ்டார் பதிவர் ஜெஸீலா பதிவுல போய் லந்து பண்ணிகிட்டு இருந்தேன். அதோட வீட்டுக்கு வந்து நாளை லீவ்ன்னு நெனச்சுகிட்டு ஜாலியா தூங்கிபோயிட்டேன்.

காலைல ஆபீஸ்ல இருந்து போன்"என்ன வரலியா, லீவான்னு" சரி வெள்ளி கிழமை கூட ஆணியான்னு நெனச்சுகிட்டு கேசுவல் ட்ரஸ்ல ஆபீசுக்கு வந்துட்டேன்.

இங்க வந்து பாத்தா எல்லாரும் பிரசண்ட், அப்பகூட என்னது எல்லாருக்கும் ஆணி போலன்னு நெனச்சுகிட்டேன்.

சற்று முன்புதான் இன்னிக்கு வியாழன்ன்னு த்ரிஞ்சுது. ஆஹா பர்முடாஸ்ல வந்துட்டோமேன்னு என் கேபின் விட்டு வெளியே வரவேயில்லை.

அதனால இன்னிக்கும் தமிழ்மணம் தான் கதி.

இது போல யாருக்காவது எப்பவாவது நடந்திருக்கா? என்னைப்போல லூசு யாரவது உண்டா? சொல்லுங்கப்பா:-)

(இதை பதிவா போட்டிருக்கலாமோ!)

முத்துலெட்சுமி said...

நான் போட்டுடவா இத பதிவா ...
அடப்பாவமே எனக்கு உண்டு இப்படி கிழமை மாத்தி யோசிக்கற பழக்கம்.
உங்களப்போல[நம்மளப்போல] நிறைய இருப்பாங்க.கவனமா லூசு என்பதை அந்தவரியில் உபயோகிக்கவில்லை.

அபி அப்பா said...

//நான் போட்டுடவா இத பதிவா ...
//

ம் போடுங்க, நடக்காத சில காமடி விஷயங்களையும் சேர்த்து காமடியா போடுங்க:-))

Anonymous said...

காங்கிரஸ் கவர்மெண்ட்ல எப்போதும் விலைவாசி ஏற்றம்தான்....வீட்டு லோன் இண்ட்ரெஸ்ட் ரேட், இன்கம்டாக்ஸ் % அதிகமானதுஎல்லாமும் உங்க லிஸ்ட்ல சேத்துக்கொள்ளுங்க.

காட்டாறு said...

எங்க வீட்டுல அத்தன பேரும் சின்சியர் சிகாமணியா ஓட்டுப் போட போவாங்க. சின்ன வயசில நானும் மற்றும் பொடிசுகளும் கைல பேனா மைய தடவிட்டு பெருமிதமா அலைவோம். ஆனா ஓட்டுரிமை வந்ததிலிருந்து இன்னும் ஒரு முறை கூட ஆசை(?) நிறைவேறல.

முத்துலெட்சுமி said...

காட்டாறு உங்களோட சின்சியர் பின்னூட்டத்துக்கு நன்றிங்க இன்னைக்கு
வந்து படிக்காததெல்லாம் படிச்சு
ஒன்னோன்னுக்கும் பின்னூட்டம் போட்டுட்டு இருக்கீங்க ஆகா..

காட்டாறு said...

என்னங்க பண்ணுறது... சில நாள் வேல அதிகமா இருக்குது... அப்புறம் வீட்டுக்கு வந்து கம்யூட்டர் முன்னாடி உட்க்காருனும்ன்னா கடுப்பா இருக்கும்; நேர வித்யாசம் இருக்குறனால, இந்தியாலயிருந்து எழுதுறது எல்லா பதிவுகளும் நான் பார்க்கும் நேரத்துல பின்னால் போய்விடும். சில சமயம், படிச்சிட்டு பதில் போடாம போய்விடுவேன். திரும்ப வரும் போது 30-35 பின்னோட்டம் இருக்கும். :) அப்புறம் மொத்தமா பதில் எழுத வேண்டியது தான். அது தானேங்க எழுதுறவங்களுக்கு நாம கொடுக்குற மரியாதை.