April 4, 2007

அய்யோ வீடு ஆடுது!!!

நேற்று டில்லியில் நிலநடுக்கமாம் . சன் நியூஸ் ல கூட கேட்டிருப்பீங்களே . நான் உணர்ந்தேனான்னு கேக்கறீங்களா? அது நான் அடிக்கடி அப்படி உணர்வேன். அதுனால நியூஸ் ல வந்துதுன்னு சொல்லி விசாரிச்சீங்கன்னா தான் சரியா இருக்கும்.எப்ப எத்தனை மணிக்குன்னு நீங்களே சொல்லிடறதும் நல்லது. அப்பத்தான் எப்படி உணர்ந்தேன்னு சொல்ல வசதியா இருக்கும். எதுக்குன்னு பாக்கறீங்களா?


ஆறோ ஏழோ வருஷம் முன்ன நடந்தது அது . வெயில் காலத்துல அப்பல்லாம் கூலர் இருக்கும் வரவேற்பரையில் தூங்குவோம் . தரையில் விரித்து இருக்கும் மெத்தை . ராத்திரி 2 மணி இருக்கும் வீடு ஆடுது . எழுந்து உட்கார்ந்து பார்த்தாச் சின்னதா முன்னும் பின்னுமா ஒரு தொட்டில் ஆட்டறமாதிரியான ஆட்டம் டீவி ஸ்டேண்ட் மேல வச்சிருக்கற போட்டோ எல்லாம் ஆடி ஆடிப் பார்க்க பார்க்கவே முன்னாடி வந்து விழுந்து ஒடஞ்சிடுச்சு.


என்ன என்னன்னு யோசிக்கறதுக்குள்ள நின்னும் போச்சு. அப்புறம் தூக்கம் எங்க . ஒரே பயம் தான். அடுத்த நாள் ஊரிலேர்ந்து ஃபோன் மயம் தான். நிலநடுக்கமாமே ..டில்லி அதிகமா நிலநடுக்கம் வரும் இடமாமே ..இந்த பக்கம் மாத்தி வந்துடுங்க ..மாமனார் , அப்பா அம்மா , சித்தி , பெரியப்பா எல்லாம் கூப்பிட்டுச் சொல்லியாச்சு.குண்டு வெடிப்பு மாதிரி இதுவும் ஒரு சாதாரண விஷயம் தான் என்று சொல்லிட்டு அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பிச்சாச்சு. ஆனா அன்னைலேர்ந்து தூக்கத்துல எழுந்து அய்யோ வீடு ஆடுதுன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டேன். அட மனுசன நிம்மதியாத் தூங்க விடறதுல்லயான்னு வீட்டுல பாவம் , ஒன்னும் ஆடல பேசாம தூங்குன்னு வாங்க.
ஒரு சில சமயம் குழந்தையத் தூக்கிட்டு கிளம்பிடுவேன் .
ஆடுனா மாதிரியே கனவு வருமோ தெரியாது. முழித்து இருக்கும் போது கூட தோணும். அதுவும் குஜராத் பூகம்பத்துக்கப்புறம் இன்னும் அதிகமாகிவிட்டது . ஒரு சின்ன பையில் குளிருக்கான போர்வை டார்ச் இப்படி குழந்தைக்கு அத்தியாவசமான பொருள் வைத்து [கதவு பக்கத்தில்] எடுத்துக் கொண்டு நிலநடுக்கும் வந்தால் ஓடக்கூடத் தயாராக இருந்தேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.


ஒரு ஒரு கதை படித்துத் தனியா நிர்க்கதியா அப்படி நம்ம குழந்தை நிக்குமோன்னு கவலையா ஆகிவிடும். மேல்மாடியில் இன்னோர் வீடு சொல்லாமலே எடுத்த மாடி வீட்டுக்காரியிடம் லஞ்சம் வாங்கியவன் தனி வீட்டில் இருப்பான் வீடு இடிந்தால் மாட்டுவது நாம் தானே என்றால் அவளுக்கு புரியவில்லை .இத்தோடு ஐந்தாறு முறை பார்த்தாயிற்று . ஒரு முறை நன்றாகவே ஆடி வீட்டை விட்டு எல்லோரும் ஓடி கீழே போனபின் ஒருத்தர் சொல்கிறார் " நிற்க எதுங்க நல்ல இடம் கட்டிடம் இடிஞ்சா நடுவில் நாம நிக்கற இந்த இடத்துல தானே விழணும்" .அடுத்து கொஞ்ச நாளுக்கு பானை ஆடுதா ஃபேன் ஆடுதான்னு பாத்துபாத்தே ஓடும். சும்மா தலை சுத்துனா கூட அது நிலநடுக்கமோன்னு பதட்டமாகிடும்.
நேத்து காலையில் கூட ஒரு மாதிரி இருந்தது. சே பழக்க தோஷம் நிலநடுக்கமெல்லாம் இல்லன்னு நானே சொல்லிக்கிட்டேன். யாராவது ஃபோன் பண்ணட்டும் பாத்துகலாம்ன்னு ...வந்துடுச்சே அம்மாகிட்ட இருந்து என்ன நிலநடுக்கமாமே .அப்படியா எங்க இங்க டில்லியிலயா எத்தனை மணி இருக்கும், காலையில் எனக்கு என்னவோ தோணியது ஆனா சாப்பிட நேரமானதால் இருக்கும்ன்னு விட்டுட்டேன்.
என்ன மணி இருக்குமாம்?
எந்த நியூஸ்ல சொன்னான்?

13 comments:

துளசி கோபால் said...

அதே அதே சபாபதே:-))))

நம்மூர்லே டெலிஃபோன் டைரக்டரி( yellow pages) இருக்கு பாருங்க இதுலே
பின்னாடி அட்டையிலே நில நடுக்கம், புயல், ட்சுநாமி, எரிமலை வெடிப்பு,
வெள்ளம், உலகம்பூரா திடீர்னு எதாவது நோய் பரவுறது இதுக்கெல்லாம்
ஆபத்தை எதிர்கொள்ள என்ன செய்யணுமுன்னு ஒரு பெரிய லிஸ்ட்
போட்டுக் கொடுத்துருக்கு.

வருசாவருசம் புது 'போன் புக்' எல்லார் வீட்டுக்கும் கொண்டுவந்து கொடுத்துருவாங்க.
உங்க வீட்டுலெ போன் இருந்தாலும் சரி, இல்லைன்னாலும் சரி. பழைய புத்தகங்களை
இதே பையில் வச்சு அடுத்து வரும் குறிப்பிட்ட நாளில் வாசலில் வச்சுட்டா அதையும்
அவுங்களே எடுத்துக்கிட்டும் போயிருவாங்க.

ச்சென்னையில், ஒரு தொலைபேசி எண் பார்க்க, 'போன் புக்'கைத்தேடி அலைஞ்சது
ஞாபகம் வந்து தொலைக்குது(-:

முத்துலெட்சுமி said...

சுனாமின்ன உடனே நியாபகம் வருது துளசி..கடற்கரைக்குப் போனா இப்பல்லாம் இந்த சுனாமி பயம் வேற வருது தவிர்க்க முடியாம...உயிர்ப்பயம் இல்லாட்டியும் குடும்பத்துல ஒருத்தர் போய் மத்தவங்க படற அவஸ்தை பத்தி கவலை வந்துடுது...

SurveySan said...

வெளையாட்டா சொல்லிட்டீங்க.

நிஜமாவே ஒரு திகில் உணர்வு தான் நிலம் நடுங்கறது.

எங்க ஊர்ல (கலிபோர்னியா), தினம் தினம் சின்ன சின்ன அளவுல ஒரு 10 நில நடுக்கங்களாவது இருக்கும்.

மங்கை said...

எனக்கும் ஊர்ல இருந்து ஃபோன் வந்த அப்புறம் தான் தெரிஞ்சது.. அப்படியான்னு கேட்டேன்..அடச்சீ என்ன சென்மமோன்னு ஃபோன வச்சுட்டாங்க...
நாமதான் 'உலகமே ஆடுனாலும்' கர்மமே கண்ணாத்தாவாச்சே...

துளசி கோபால் said...

ஆமாம் முத்துலெட்சுமி.

//...மத்தவங்க படற அவஸ்தை பத்தி கவலை வந்துடுது...//


ச்சென்னையில் சுநாமி வந்தநாள் ( அது வர்றதுக்கு முந்தினநாள் இரவு) தான்
கோபால் அங்கே போய்ச் சேர்ந்துருந்தார். விஷயம் கேள்விப்பட்டு, எத்தனை முயன்றும்
அவரை தொலைபேசியில் பிடிக்க முடியலை. வேடிக்கை பார்க்க ஓடற கூட்ட புத்தி வேற இருக்கே.
ரொம்ப பயந்துட்டேன் அப்ப.

இப்ப நிலநடுக்கம் கொஞ்சம் பழகிப்போச்சு.

முத்துலெட்சுமி said...

\\SurveySan said...
வெளையாட்டா சொல்லிட்டீங்க.

நிஜமாவே ஒரு திகில் உணர்வு தான் நிலம் நடுங்கறது.//

ஆமாம் சர்வேசன் அடிக்கடி அந்த திகில் உணர்வை உண்மையில் வராத போதும்
உணருவதுபோலத் தோன்றி
உளறுவதால் விளையாட்டாய் சொல்லி
இருக்கிறேன்.

முத்துலெட்சுமி said...

\\மங்கை said...
எனக்கும் ஊர்ல இருந்து ஃபோன் வந்த அப்புறம் தான் தெரிஞ்சது.. //

அக்கறை..
நீங்க உணராத வரை
நல்லது. இல்லாட்டி என்ன மாதிரி
பயந்து பயந்து இருக்கணும்.

\\துளசி கோபால் said...
இப்ப நிலநடுக்கம் கொஞ்சம் பழகிப்போச்சு. //


துளசி நானும் பழகிக்கிட்டு இருக்கேன்.

காட்டாறு said...

வினையே விளையாட்டா சொன்ன முத்துலெட்சுமிக்கு ஒரு ஓ

முத்துலெட்சுமி said...

ஓ ..வா காட்டாறு என்ன கல்லூரியில் இருப்பதாக தோணுதா?

ஆடாதப்போ ஓ...ஆடுனா ஐ.ஓ

குறைகுடம் said...

//ஆடாதப்போ ஓ...ஆடுனா ஐ.ஓ

:-)))))))

காட்டாறு said...

பின்ன..... கலக்கத்த கலக்கலா எழுதுனவங்களுக்கு எப்படி சொல்லுறது? சோறு போட்டிங்கன்னா, வளையல் போடல்லாம்ன்னு சொல்லுவாங்க. நீங்க சொல்லுல்ல போட்டீங்க. :))))))))

வல்லிசிம்ஹன் said...

எங்க ஊரில ஒரு சுனாமிக்கே நாங்க ஓய்ந்து போயிட்டோம்.
டெல்லில இருக்கிறவங்களோட(சம்பந்தி)
பேசும்போது ஆமாம் அது மாட்டு வரும் போகும்னு சர்வ சாதாரணமா சொல்லறாங்க:-0)
பயமத்தாம்மா இருக்கு.
பத்திரமா இருங்க.

முத்துலெட்சுமி said...

அன்புக்கு நன்றி வல்லி.பத்திரமா இருந்துக்கறதா நினைச்சுக்கிட்டு காலத்த ஓட்டறோம்.

நிலையாமைத் தத்துவத்தை அடிக்கடி
எங்களுக்கு நியாபகப்படுத்திக் கொண்டிருக்கிறது இந்த நிகழ்வுகள். :)