April 13, 2007

கொஞ்சம் பெரிய கதை - நிறைவு

அனாதை இல்லம் என்றவுடன் தயக்கம் மறைந்து அவளிடம்
"இது என் நாத்தனார் வீட்டுக்காரர் இவர் எப்படி இதிலே!" என்றாள்.
"இந்தப் பையன் ஒரு மூளை வளர்ச்சி இல்லாதவன் தான் பார்த்தா தெரியாது . இவர் அடிக்கடி எங்க இடத்துக்கு வந்து இந்த பையனோடு விளையாடுவார். அவனோட பெற்றவங்க இங்க கொண்டுவந்து விட்டதுல அவனுக்கு ரொம்ப கோவம் . இவர் வந்த பின்னாடி தான் அவன் கொஞ்சம் கலகலப்பா இருந்தான். "


"வந்தாருன்னா சில சமயம் பிடிச்சி வச்சிட்டு விடமாட்டான் எப்பப் போகச்சொல்லுறானோ அப்பத்தான் மேடம் வீட்டுக்குப் போவார். நேத்துக் கூட அவனுக்குப் பிறந்த நாள் அதானால் அவன் வீட்டுக்கு விடவே மாட்டேனுட்டான். அங்கயே படுத்துக்கிட்டார். "


பானுவுக்கு நிம்மதி வந்தது. சரிதான் தன் குழந்தையை இக்குழந்தையிடம் பார்க்கிறார் போல என்று புரிந்தது. ஒரு நிமிஷம் என்றபடி கடையில் இருந்தே மகாவுக்கு ஒரு போன் செய்தாள். மறுபக்கத்தில் இதெல்லாம் கேட்டவுடன் அவள் உடனே கிளம்பி வருவதாகச் சொல்லி அனாதை இல்லத்துப் பெண்ணைக் காத்திருக்கும் படி சொல்லச்சொன்னாள்.

மகா வந்து சேர்ந்ததும் , இல்லத்துப் பெண்ணிடம் அந்தக் குழந்தையைத் தத்து எடுக்கவேண்டும் முடியுமா அதற்கு என்ன என்ன செய்யவேண்டும் என்று தான் முதல் கேள்வி கேட்டாள்.இல்லத்துக்கு நானும் வருகிறேன் என்னையும் அழைத்துப் போங்கள் என் மகனைப் பார்க்கவேண்டும்.


பானுவுக்கு இன்றயப் பொழுது இத்தனை அற்புதமாக முடியும் என்று தெரியவே தெரியாது. வீட்டிற்கு போகும் போது எப்போதும் இல்லாத ஒரு சந்தோஷமாய் உணர்ந்தாள்.

கொஞ்சம் பெரிய கதை -2-
கொஞ்சம் பெரிய கதை 1

27 comments:

மங்கை said...

நல்லா இருக்கு லட்சுமி...நல்லா வந்திருக்கு... தொடர்ந்து இது மாதிரி எழுதுங்க...

முத்துலெட்சுமி said...

வாங்க மங்கை...கமெண்ட் விழுந்ததுமே நினைத்தேன். நீங்களாத்தான் இருக்கும்ன்னு ...இதப்படிச்சுட்டு இன்னோன்னு எழுதச்சொல்ற அளவு நீங்க எதையும் தாங்கும் இதயம் உள்ளவங்களா? :)

இலவசக்கொத்தனார் said...

நல்லா வந்திருக்கு. ஆனா இவ்வளவு பெரிய கதையில் இன்னும் நல்ல திருப்பங்களோட வந்திருந்தா இன்னும் சுவையா இருந்திருக்கும். நல்ல முயற்சி.

சென்ஷி said...

//முத்துலெட்சுமி said...
வாங்க மங்கை...கமெண்ட் விழுந்ததுமே நினைத்தேன். நீங்களாத்தான் இருக்கும்ன்னு ...இதப்படிச்சுட்டு இன்னோன்னு எழுதச்சொல்ற அளவு நீங்க எதையும் தாங்கும் இதயம் உள்ளவங்களா? :) //

நான் கொஞ்சம் லேட்டு.. அதான் மங்கை அக்கா முந்திக்கிட்டாங்க...

அப்பால...

அக்கா சொன்னதே ரிப்பீட்டு :)

மங்கை said...

எல்லாம் வாழப் பழ சோம்பேரீஸ்.. 'ரீப்பீட்' சொல்றவுங்களுக்கு 10 பின்னூட்டம் அபராதம் குடுக்கனும்..

என்ன சொல்ரீங்க :-))))

முத்துலெட்சுமி said...

\\நல்லா வந்திருக்கு. ஆனா இவ்வளவு பெரிய கதையில் இன்னும் நல்ல திருப்பங்களோட வந்திருந்தா இன்னும் சுவையா இருந்திருக்கும். நல்ல முயற்சி.//

வேண்டுமென்றே முடியும் போது திருப்பம் வைக்கிறதும் அதைக்கதையோடு உண்டாக்குவதும்கொஞ்சம் கஷ்டம் தான் ..நல்ல முயற்சி என்று சொன்னதற்கு நன்றி நன்றி கொத்தனார்ஜி.

முத்துலெட்சுமி said...

சென்ஷி ரொம் ப நன்றி. நீங்கள்ளாம் இப்படி இடிதாங்கி இதயம் பெற்றவங்கன்னு தெரியறதால அப்பப்ப தொடருறேன்.சரியா? ஆதரவ தொடர்ந்து கொடுங்க.

முத்துலெட்சுமி said...

\எல்லாம் வாழப் பழ சோம்பேரீஸ்.. 'ரீப்பீட்' சொல்றவுங்களுக்கு 10 பின்னூட்டம் அபராதம் குடுக்கனும்..

என்ன சொல்ரீங்க :-)))) //

மங்கை நல்லா யோசிக்கறீங்க.
பின்னூட்டம் போடறதே நாலு பேர் அவங்களுக்கு அபராதம் வேறயா...

சென்ஷி said...

//மங்கை said...
எல்லாம் வாழப் பழ சோம்பேரீஸ்.. 'ரீப்பீட்' சொல்றவுங்களுக்கு 10 பின்னூட்டம் அபராதம் குடுக்கனும்..

என்ன சொல்ரீங்க :-))))//

அக்கா சொன்னா சரிதான்..

அதாங்க ரிப்பி....ரிப்பீட்டே.. :))

சென்ஷி

சென்ஷி said...

//மங்கை நல்லா யோசிக்கறீங்க.
பின்னூட்டம் போடறதே நாலு பேர் அவங்களுக்கு அபராதம் வேறயா... //

4 பேரு அபராதமா 10 பின்னூட்டம் போட்டா அப்புறம் உயரெல்லை கணக்குப்படி பதிவு முன்பக்கம் வராது :))

சென்ஷி

முத்துலெட்சுமி said...

பாசக்கார அக்காவும் தம்பியும் இப்படி பின்னூட்டம் போட்டு கலக்கறீங்களே..போதும்ங்க ...போதும்ங்க..

உயரெல்லையா அங்க போனாலும் வரவங்க அதே நாலு பேர் தானே ...
ஆனா சென்ஷி நீங்க கணக்குல புலி
4 x 10 40 சரியான பதில்.

சென்ஷி said...

//முத்துலெட்சுமி said...
பாசக்கார அக்காவும் தம்பியும் இப்படி பின்னூட்டம் போட்டு கலக்கறீங்களே..போதும்ங்க ...போதும்ங்க..

உயரெல்லையா அங்க போனாலும் வரவங்க அதே நாலு பேர் தானே ...
ஆனா சென்ஷி நீங்க கணக்குல புலி
4 x 10 40 சரியான பதில்.//

அதெப்டி.. நிறுத்துறது...
நீங்க புலின்னு வேற பாராட்டிட்டீங்க..
அப்படியே விடுறதா இதை..

ஹி..ஹி.. இது 4வது பின்னூட்டம்.. மங்கை அக்கா கணக்குப்படி இன்னும் மிச்சம் 6 இருக்கு.. :)

சென்ஷி

மங்கை said...

அது என்ன நீங்க சொல்றத போதும்னு

இன்னைக்கு எனக்கு வீட்ல போர் அடிக்குது..

நானே போட்டே தான் தீறுவேன்...

Nandha said...

உங்களோட 3 ஆம் பாகத்துக்கு நான் ஆவலோட காத்துட்டு இருக்கறது தெரிஞ்சோ என்னமோ, இன்னிக்கு ஆஃபிஸ்ல கட்டம் கட்டிட்டாங்க.

ஒரு வழியா இப்பதான் படிச்சேன். கலக்கிட்டீங்க. கதையில வர்ற எல்ல்லாருமே விக்ரமன் பட டைப்ல ரொம்ப நல்லவங்களாவே இருக்காங்க.

அடுத்த கதை எழுதறப்போ இப்படி எங்களை காக்க வெச்சா அப்புறம் நாங்க கோவிச்சுக்குவோம். ஆமா சொல்லிட்டேன்.

லக்ஷ்மி said...

கதை ரொம்ப நல்லா இருக்குங்க. 4 நாளா அலுவலகத்துல சில பயிற்சி வகுப்புகளுக்கு போயிருந்தேன். தமிழ்மணம் பக்கம் எட்டி பார்க்க முடியலையேன்னு நினைச்சுகிட்டே வந்து பார்த்தால் ஒரு தொடர்கதை முழுசா காத்துகிட்டிருக்கு. வாரயிதழ்ல வர தொடர்கதைய பைன்ட் பண்ணினப்புறமா படிப்பது போல இருந்தது.
அதென்னாங்க மங்கை, நீங்க மட்டும்தானா திறமை காட்டுவீங்க? நானும் கோதாவுல குதிச்சுட்டேன். ரெடி, ஜூட்....

முத்துலெட்சுமி said...

\\ஒரு வழியா இப்பதான் படிச்சேன். கலக்கிட்டீங்க. கதையில வர்ற எல்ல்லாருமே விக்ரமன் பட டைப்ல ரொம்ப நல்லவங்களாவே இருக்காங்க.

அடுத்த கதை எழுதறப்போ //

இப்படி படிச்சிட்டே வந்தானா சரி அடுத்த கதை எழுதறப்போன்ன வுடனே வில்லன் வைக்கச் சொல்லப்போறீங்களோன்னு நினைச்சேன். :)
\\இப்படி எங்களை காக்க வெச்சா அப்புறம் நாங்க கோவிச்சுக்குவோம். ஆமா சொல்லிட்டேன். //
இத்தன பெரிசா ஒரு போஸ்டா போட்டா படிக்க கஷ்டமாருக்காது...ஸ்க்ரோல் பண்ணிப்பார்த்துட்டு
எல்லாரும் ஓடிப்போயிடுவாங்க..ஒரே நாள்ல எல்லாத்தையும் போஸ்ட் பண்ணிடறேன்னு வச்சுக்குங்க கடைசி இதுக்கு மட்டும் தான் பின்னூட்டம் வரும். சீ ..பின்னூட்டத்துக்கு அலையறா பாருன்னு சொல்லறாங்க யாரோ.

முத்துலெட்சுமி said...

என்னங்க லக்ஷ்மி சும்மா எதாச்சும் சொல்லி ஏத்தி விடாதீங்க பைண்ட் பண்ண கதை ன்னா அடிக்கடி எடுத்துப் படிக்கற அளவு நல்லா இருக்குமே. *:)

இப்பத்தான் மங்கையையும் சென்ஷியையும் கூல் கூல் ன்னு அடக்குனேன். இப்ப நீங்க வேறயா? :) நன்றி .

கோபிநாத் said...

சாரிக்கா நானும் ரொம்ப லேட்டு

எல்லா பகுதியையும் மொத்தமாக படிச்சுட்டேன். அருமையாக வந்திருக்குக்கா. முதல் பகுதியில் கலக்கம், ரெண்டாவது பகுதியில் அதிர்ச்சி, மூன்றாவது பகுதியில் மனநிறைவுடன் முடித்து கலக்கிட்டீங்கக்கா ;-)))

கடைசி பகுதியை டக்குன்னு முடிச்சுட்ட மாதிரி ஒரு பீல்.

முத்துலெட்சுமி said...

கலக்கல்??!! நீங்களுமா கோபிநாத்..ஓகேய் ஒகேய்.

கடைசிப் பகுதிய இன்னும் விரிவா எழுத பயமா இருந்துச்சு..
முதல் முயற்சி இல்லயா? அதான்.

காட்டாறு said...

//மகா வந்து சேர்ந்ததும் , இல்லத்துப் பெண்ணிடம் அந்தக் குழந்தையைத் தத்து எடுக்கவேண்டும் முடியுமா //

செம டச்!

பானுவை பத்தின கதைன்னு நெனச்சா, பானுவின் நாத்தனார் பத்தின கதையா மாத்திட்டீங்க. பானுவின் அன்றாட வாழ்க்கையை விவரித்து விட்டு, மகாவின் மகத்துவத்தை சொல்லியிருக்கீங்க.

மொத்தத்துல, கதை சூப்பர்!

வல்லிசிம்ஹன் said...

நல்லா இருக்கு லட்சுமி...நல்லா வந்திருக்கு... தொடர்ந்து இது மாதிரி எழுதுங்க...

நானும் வாழைப்பழ சோம்பேறி.
நிறைய கதை எழுதுங்களேன் பிளீஸ்....:-0)))

முத்துலெட்சுமி said...

காட்டாறு , வல்லி நீங்கள்ளாம் பாராட்டறீங்க ரொம்ப சந்தோஷமா இருக்கு...இப்படி எதாவது மனதில் நல்லதா கதை தோன்றினால் தொடர்ந்து எழுத முயற்சி செய்கிறேன். நன்றி.

முத்துலெட்சுமி said...

\\பானுவை பத்தின கதைன்னு நெனச்சா, பானுவின் நாத்தனார் பத்தின கதையா மாத்திட்டீங்க. பானுவின் அன்றாட வாழ்க்கையை விவரித்து விட்டு, மகாவின் மகத்துவத்தை சொல்லியிருக்கீங்க.//

அப்படி செய்திருக்கக்கூடாது இல்ல...ம்...இனிமே இப்படி தப்பு வராம பாத்துக்கணும்.

நாமக்கல் சிபி said...

கதை ரொம்ப நல்லா இருக்குதுங்க!

தொடர்ந்து எழுதுங்க!

முத்துலெட்சுமி said...

ரொம்ப நாளைக்கப்புறம் வந்துருக்கீங்க சிபி...தொடர்ந்து எழுதிடறேன். நன்றி.

பத்மா அர்விந்த் said...

நல்ல முயற்சி முத்துலஷ்மி. தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.ஆனாலும் சில விஷயங்களில் எனக்கு விமரிசனம் உண்டு. பிறகு எழுதுகிறேன்

முத்துலெட்சுமி said...

நேரம் ஒதுக்கி கண்டிப்பாக விமர்சனத்தை எனக்கு எழுதுங்கள்.
பத்மா .நன்றி.