May 9, 2007

நானா ரசனை இல்லாதவன்?

எனக்கு குறுக்கும் நெடுக்குமாய் நடக்கிறாள் மலர் . காலையில் இருந்தே எனக்கு ஒரே பரபரப்பு அலுவலகத்தில் ஒரு முக்கிய மீட்டிங்.இவளானால் காலுக்குள் காலுக்குள் நடக்கிறாள்.கண்ணுக்குள் கண்ணுக்குள் எதையோ பார்க்கிறாள். அம்மா டிபனை எடுத்து வைத்துக்கொண்டு இன்னுமா தூக்கம் என்ற பிறகு தான்
கட்டிலை விட்டே எழுந்திரித்தேன் . எண்ணமெல்லாம் இன்றைய மீட்டிங் கில் எப்படி பேச வேண்டும் என்ன எதிர் கேள்வி வரும் என்று தான் ஓடிக்கொண்டிருக்கிறது. இவளுக்கென்ன ஆகியிருக்கும்.

ஷேவ் செய்ய எல்லாம் எடுத்து வைத்து ஆரம்பிக்கும் போது சன் ம்யூசிக்கில்
"சுடும்நிலவு சுடாத சூரியன் ஓடும் நிமிஷம் உறையும் வருஷம் எல்லாம்
எல்லாம் எல்லாம் வேண்டுமா காதலித்துப்பார் காதலித்துப்பார் " ...ஆமா எல்லாம் சரிதான் பார்த்திருக்கேன் பார்த்திருக்கேன் அவள் தான் எதுவுமே வேண்டாம்ன்னு போயிட்டாளே .

நீலநிறத்தில் முழுக்கைச்சட்டை சரியா இருக்கும்..அது சரி எந்த நீல நிறம் ..வாங்கறது எல்லாமும் நீலந்தானே . அம்மா அதானே எப்பவும் கேக்கறா "ஏன்டா இது புதுசா என்ன? போன தீவாளிக்குக்கூட இது மாதிரி தானேடா வாங்கினே எனக்கொண்ணும் வித்தியாசமே தெரியல போ." '
ம். அவள் கூட எனக்கு நீலநிறத்தில் தான் சட்டை எடுத்துத்தந்தாள்.

"ம்...உங்களுக்கு ரசனையே இல்லையோன்னு தோணுது . நான் புது சேலை கட்டி இருக்கேன் . பார்த்து நல்லாருக்குன்னு சொல்லத்தோணுதா? டிபனை தட்டில் எடுத்து வைத்துவிட்டு தண்ணீரோடு வந்து பக்கத்திலே உட்கார்ந்து என்னையே பார்த்த மலரை இப்போது தான் கவனிக்கிறேன் ."

"அடடா அதான் விஷயமா உனக்கென்னடா நீ எது கட்டினாலும் நல்லாருக்குமே இதென்ன கேள்வி ம்.. இந்த புடவைக்குத்தானே பெருமை . அட்டகாசமா இருக்கு. . மீட்டிங் இருக்குடா நேரமாச்சு ...சரியா ..பை"

ம்...நானா ரசனை இல்லாதவன் .
கருப்பில் மஞ்சள் பூ சேலையில் ஒரு அழகு . பிங்கில் வெள்ளைப்பூ சூடிதாரில் ஒரு அழகு. எது புதிது , எது வழக்கமாக உடுப்பது என்று பார்த்துப் பார்த்து ரசித்திருக்கிறேன் என்னவளை . அப்போது.

20 comments:

சென்ஷி said...

ரசனை இல்லாதவன்..

எப்ப எதை ரசிக்கணுமோ அப்ப அதை ரசிக்காதவனத்தான் இப்படி சொல்வோம்..

இதுக்கு மேல நான் எதுவும் சொல்லி அது இந்த பதிவுக்கு சம்மந்தமில்லன்னு யாரும் சொல்றதுக்கு முன்னாடி நான் அப்பீட்டு :) (இதுவே இந்த பதிவுக்கு சம்மந்தமில்லாததுதான்)

சென்ஷி

நளாயினி said...

ooo!nice.

துளசி கோபால் said...

அப்போது................ 1000% சரி.

முத்துலெட்சுமி said...

என்ன சென்ஷி ரொம்ப பவ்யமா வந்திட்டு போறீங்க..தலைப்புக்கு மட்டும்தான் பின்னூட்டம் போட்டிருக்கீங்க கதைக்கு எங்க?

முத்துலெட்சுமி said...

நளாயினி ரொம்ப நன்றி...சிம்பிளா ஒரு வரியில் பாராட்டிட்டீங்க... :)

முத்துலெட்சுமி said...

துளசி எப்பவும் கையில் இருப்பதுக்கு கொஞ்சம் கவனிப்பு குறைச்சல் தானே.
எங்கப் போயிடப்போறாங்க நம்ம மனைவி தானேன்னு ஒரு இது தான்...

புது சுடிதார்ன்னா நீங்களே சொன்னாத்தான் உண்டா அங்கயும்... :)

socrates said...

//எங்கப் போயிடப்போறாங்க நம்ம மனைவி தானேன்னு ஒரு இது தான்...//

கணவர்மார்களுக்கு ஆயிரத்தெட்டு கவலைகள். மனைவிமார்கள் கரிசனத்துடன் புரிந்துகொள்ள வேண்டும்.

யார்? எந்த கதாபாத்திரம்? - கதையின் கட்டமைப்பில் குழப்பம் வருகிறது.

கரு உருவான பின் நீங்கள் இன்னும் நிறைய மனதில் அசை போடுதல் வேண்டும். வார்த்தைகளில் இன்னும் கவனம் கொள்ளல் வேண்டும்.

முத்துலெட்சுமி said...

படிக்கிறகாலத்தில் கூட படிக்கிற கவலை இருக்குமே சாக்ரடீஸ்...
வேலைப்பார்க்கிறகாலத்தில் வேலைக்கவலை.ஆனால் காதலிக்கும்போது இருக்கும் கவனம்..இன்னும் சொல்லப்போனால் காதலி கூட சம்மதம் சொல்லும் முன் உள்ள கவனம் சொன்னபிறகு இருப்பதில்லை , என்பதை அப்படி சொன்னேன்.

என்ன கதாப்பாத்திரத்தில் குழப்பம்..
கூட்டுகுடும்பம் அம்மா சமைக்கிறாங்க..மனைவி பரிமாறுறாங்க. இது இயல்பான காலை நேரம் நடப்பு தானே...இடையிடையே பழைய நினைப்பு ஹீரோவுக்குள்ளே.

முயற்சி என்பதால் தான் இங்கே பதிகிறேன்.எழுத வருகிறது என்று நம்பிக்கை இருந்தால் ஓசி ப்ளாக்கரில் எழுதுவேனா..
உங்களைப்போன்றோரின் விமர்சனம்.என்னை இன்னும் திருத்திக்கொள்ள உதவுகிறது.தொடர்ந்து வாசித்து உதவுங்கள்.

கோபிநாத் said...

ம்ம்ம்ம்....அக்கா சூப்பர் கதை ;-))

ரொம்ப நல்லா இருக்கு ;-)

கோபிநாத் said...

\\முத்துலெட்சுமி said...
துளசி எப்பவும் கையில் இருப்பதுக்கு கொஞ்சம் கவனிப்பு குறைச்சல் தானே.
எங்கப் போயிடப்போறாங்க நம்ம மனைவி தானேன்னு ஒரு இது தான்...

புது சுடிதார்ன்னா நீங்களே சொன்னாத்தான் உண்டா அங்கயும்... :)\\

ஆகா....ஆகா...பின்னூட்டங்களும் கலக்கல் தான் ;-)))

பத்மா அர்விந்த் said...

உங்கள் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்.

முத்துலெட்சுமி said...

கோபி எப்போதும் இரட்டை பின்னூட்டம்... நன்றி நன்றி.
---------

பத்மா ரொம்ப நன்றி இப்படி நீங்கள்ளாம் வந்து படித்துப்போறதே சந்தோஷம்.

சென்ஷி said...

:)))

(இது பதிவுக்கு சம்மந்தமில்லை. சும்மா பின்னூட்டத்துக்காக)

ABI APPA said...

Pudavai nallayirukkunnu aratha pazaiya putavaila irukkum pootthellaam solli thittu vaangiyirukkeen naan (athukkuthaan romba nadikka kootathu)

முத்துலெட்சுமி said...

என்ன சென்ஷி இந்த அடைப்புக்குறி விஷயத்தோட தான் இனிமே வருவீங்களா? :)

------
அபி அப்பா என்ன திருப்பியும் ப்ளாக்கர்க்கிட்ட என்ன பிரச்சனை பண்ணீங்க...?

திட்டு தானே அடி இல்லயா? வரவர உங்க மார்க் கூடிக்கிட்டே போகுதே..நடிக்கறதோ உண்மையோ சொல்லறதுக்கு முதலில் ஒரு மனசு வேணும்...(ஐஸ் தூக்கிவச்சாச்சு..)
ஒரு நாள் அபி அம்மா கிட்ட பேசணும்ன்ங்கற எண்ணத்தை அதிகப்படுத்திக்கிட்டே போறீங்க...

சென்ஷி said...

யார் சொன்னா அப்படி?

(ஹி..ஹி.. இது சும்மா..)

அன்புத்தோழி said...

//ம்...உங்களுக்கு ரசனையே இல்லையோன்னு தோணுது . நான் புது சேலை கட்டி இருக்கேன் . பார்த்து நல்லாருக்குன்னு சொல்லத்தோணுதா? டிபனை தட்டில் எடுத்து வைத்துவிட்டு தண்ணீரோடு வந்து பக்கத்திலே உட்கார்ந்து என்னையே பார்த்த மலரை இப்போது தான் கவனிக்கிறேன் //

பொதுவாவே மனைவிமார்களுக்கு, தான் ஏதாவது வித்யாசமாக செய்தாலோ அல்லது புது துணி உடுத்திருந்தாலோ கணவன் பார்த்து கண்டுபிடித்து புகழ்ந்தால் அது தனி சந்தோஷம் தான். ஆனால் இதை சில ஆண்கள் தான் புரிந்து வைத்திருக்கிறார்கள்.

G.Ragavan said...

இதைப் படித்தவுடன் படக்கென்று கண்ணதாசனின் வரிகள் நினைவிற்கு வருகின்றன

ரசிக்கத்தானே இந்த அழகு
ரசனையோடு வந்து பழகு

முத்துலெட்சுமி said...

அன்புத்தோழி ராகவன் இருவரின் மறுமொழிக்கும் நன்றி.

உண்மைதான் அன்புத்தோழி புகழ்ச்சி எல்லா உயிருக்கும் பிடிக்கும் அதிலும் பெண்களுக்கு ரொம்ப வே ...

ராகவன் என்ன பாட்டுங்க அது நியாபகமே வரலை.

G.Ragavan said...

// முத்துலெட்சுமி zei...

ராகவன் என்ன பாட்டுங்க அது நியாபகமே வரலை. //

நாடோடி படத்தில் மெல்லிசைமன்னர் இசையில் இசையரசி பாடியது. இதே படத்தில்தான் "அன்றொரு நாள் இதே நிலவில்" என்ற பாட்டும் "நாடு அதை நாடு" என்ற பாடலும் உள்ளது.