August 8, 2007

கைப்பேசியின் அழைப்பு


மின்விசிறி கிழித்தக் காற்றின் ஒலியும்
நொடிகளைக்கூறும் முட்களின் ஒலியும்
ஓங்கி ஒலித்து
தனிமையின் இருப்பை உறுதி செய்கிறது.
கோபத்தில் தலையணைக்கடியில்
கைபேசி.
அழைக்கவே இல்லாத அது
இருந்தென்ன இல்லாவிட்டால் என்ன?
நேற்றுவரை கூட இருந்தவன்
குறைவில்லா அன்பினை தந்தவன்
பள்ளிக்கு போய் விட்டான்.
அவன் குரலைக் கேட்பதற்காகவேணும்
யாராவது என் கைபேசி எண்ணை
தொடர்புகொள்ளக்கூடாதா ?
கைப்பேசி அழைப்பது அவன் குரலில் தானே!
ஞானி ஞானி யெஸ்பாப்பா!

45 comments:

கோபிநாத் said...

\\நேற்றுவரை கூட இருந்தவன்
குறைவில்லா அன்பினை தந்தவன்
பள்ளிக்கு போய் விட்டான்.\\

நாங்க என்ன சொல்லறது...

அபி அப்பா said...

அந்த புது செல்போன் பத்தியும் 1 வரி சேர்த்திருக்கலாம்!:-))

குசும்பன் said...

:( நம்பர் இல்லாம எப்படி அழைக்கிறது.

அபி அப்பா said...

10.00மணிக்கு ஸ்கூல் போற தம்பி 11.30க்கு வந்துட போறான், இந்த 1 1/2 மணி நேரத்துல இத்தன கஷ்டமா ஆண்டவா!

முத்துலெட்சுமி said...

கோபி நாங்க என்ன சொல்லறதுன்னா..என்ன அர்த்தம்..புரியலையே ஓ குடும்பத்தை விட்டு ஊரில் இருப்பதற்கு சொல்லறீங்களா ? பாவம் தான்..வேண்ணா நீங்களும் ஒரு நாலுவரி கவிதை எழுதிடுங்களேன்.. :)

முத்துலெட்சுமி said...

அது தான் புது செல் பத்தி படம் போட்டிருக்கேனே அபி அப்பா..
அவன் காலையில் 9.15 க்கு போய் 1 மணிக்குதான் வருவான்...
:(

முத்துலெட்சுமி said...

அது சரி தான் குசும்பன்...
பாவம் உங்களுக்கேன் செலவு...

இந்தா இருக்க மங்கை தினம் நாலுதடவை கூப்பிட்டு இருந்தாங்க வேலை வேலைன்னு ஒரு தடவை கூப்பிடறதே அதிசயமாப்போச்சு.. :(

த.அகிலன் said...

நீங்க நல்ல மம்மி(அம்மா)தான். யாராவது எகிப்தை நினைச்சுக்கப்போறாங்க அதான் ஹி ஹி ஹி

முத்துலெட்சுமி said...

அகிலன் பாராட்டுக்கு நன்றி..
ஏன் நேத்து எதும் மம்மி ரிட்டன்ஸ் படம் திருப்பியும் பாத்தீங்களா ? :))

அருட்பெருங்கோ said...

நம்பர சொல்லுங்க கால் பண்றேன் :-)

காட்டாறு said...

:-()

காயத்ரி said...

பையனை ரொம்ப மிஸ் பண்றீங்களா அக்கா! நல்லாருக்கு கவிதை!

முத்துலெட்சுமி said...

அருட்பெருங்கோ அக்கா அப்படி எல்லாம் செலவு வைக்க விரும்பலப்பா உங்களுக்கு... கவிதையை?? பற்றி ஒருவரி எழுதி இருக்கக்கூடாதா கவிஞரே!! :(

முத்துலெட்சுமி said...

காட்டாறு என்ன ஸ்மைலி இது??
ரொம்பநாளா ஆளைக்காணோமே ரொம்ப பிசியோ!!

முத்துலெட்சுமி said...

ஆமாமா காயத்ரி அவன் சேட்டை தான் இருந்தாலும் அம்மாஅம்மான்னு கூப்பிட்டுக்கிட்டே இருப்பான் எதயாச்சும் செய்துட்டு திட்டறதுக்கு முன்னாடி ஸாரி ன்னு சொல்லி சிரிப்பான்.மிஸ் பண்ணரேன் தான்.

பங்காளி... said...

வீட்ல சுத்திட்டு இருக்கும் போது..எப்படா இவன ஸ்கூலுக்கு அனுப்புவேன்னு இருக்குன்னு அலுத்துக்கறது...

ஸ்கூல் போன பின்னாடி நொடி முள்ளையும், பேஃனையும் பார்த்து கவிதை எழுதி புலம்பறது...

ஹி..ஹி...இந்த அம்மாக்கள் எல்லாரும் ஒரே மாதிரித்தான்....

முத்துலெட்சுமி said...

எல்லா அம்மாவும் ஒரே மாதி ரி தாங்க பங்காளி .. பொழுது போகலன்னா தான் சேட்டை செய்யறாங்க..வெளியே போய் நாலு பிள்ளைங்க கூட சேர்ந்து விளையாண்டு பள்ளிக்கூடத்துல பாடம் கத்துக்கிடட்டுமேன்னு தான்... :)

வெயிலான் said...

நல்லாருக்கு பிரிவுக்கவிதை.

முத்துலெட்சுமி said...

நன்றி வெயிலான்.

காட்டாறு said...

அழுகாச்சியும் சிரிப்பும் சேர்ந்த ஸ்மைலி (அப்படின்னு எனக்கு நெனப்பு). ;-)

அம்மா வந்திருப்பதால அதிகம் எழுதவும் முடியல, வாசிக்கவும் முடியல. ஆனாலும் கூகிள் ரீடர் எதுக்கு இருக்கார்? அவர் தயவில் வாசிச்சாலும், பதில் எழுத நாளாகிவிடுகிறது.

முத்துலெட்சுமி said...

நன்றி காட்டாறு அம்மாவோட என்ஜாய்
பண்ணுங்க டைமை...:)

கப்பி பய said...

:)

முத்துலெட்சுமி said...

நன்றி கப்பி.

மங்கை said...

தங்கமே....என்ன ஆச்சு..போர் அடிக்குதா....நான் இல்லைன்னதும் இவ்வ்வ்வ்வ்வ்ளவு மோசம் ஆய்டுச்சா நிலமை...

நானானி said...

முத்துலெட்சுமி....பங்காளி சொன்னதே நானும் டிட்டோ!
இப்போ உங்கள் குழந்தை பள்ளியில்
'அம்மா காணோம்..?' அப்டின்னு
மழலையில் உங்களை எப்படி பாடியிருக்கும்? அதையும் ஒரு பத்து வரிகள் எழுதுங்களேன்.

முத்துலெட்சுமி said...

மங்கை ஆமாப்பா நிலமை ரொம்ப மோசம் தான்..ஒரே போர்.

முத்துலெட்சுமி said...

நானானி ...ம்...பத்துவரி...

தேன் என்றால் தண்ணீ,
மம் என்றால் சாப்பாடு ,
இத்தனை பெரிதாகியும்
இது அறியாத தீதீ(அக்கா)
மேக்கு என்றால் எனக்கு ,
ஸார் என்றால் ஸ்டார்,
ஊன் என்றால் மூன்,
இது தெரியாத மேம்.
ஒன்றும் தெரியாதவங்களுக்கு
மத்தியில் நான்.
அம்மா நீ எங்கே?

நானானி said...

சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!! முத்துலெட்சுமி!
கேட்டதும் கொடுத்தவளே!!!
இன்ஸ்டெண்ட் கவித..கவித..சூப்பர்.

பாலராஜன்கீதா said...

உங்கள் இல்லத்தில் லேண்ட்லைன் தொலைபேசி இருந்தால் அதிலிருந்து உங்கள் கைப்பேசிக்கு ஒரு அழைப்பு விடுக்கவும்.
:-)
(எங்கள் இல்லத்தில் அப்படித்தான் செய்வோம்)

முத்துலெட்சுமி said...

நன்றி நானானி..
நன்றி பாலராஜன்கீதா...அப்படி ஒரு வழியை மத்த நேரத்தில் கடைபிடித்தாலும் யாருமே கூப்பிடலையேன்னு வந்த கோபம் கண்ணை மறைச்சுடுச்சு(மூளை வேலைசெய்யல)

வல்லிசிம்ஹன் said...

paiyan schoolukkup ponaa ammaavukku intha azhukaiyaa:))
sariyaap pochu........

அருட்பெருங்கோ said...

/கவிதையை?? பற்றி ஒருவரி எழுதி இருக்கக்கூடாதா கவிஞரே!! :(/

கவிதையில் அன்புதான் மிளிர்கிறது. அன்பை நல்ல அன்பு, அழகான அன்பு என்றெல்லாம் சொல்லவும் வேண்டுமோ? ;)

துளசி கோபால் said...

அப்ப காலை 9.15 முதல் 1 மணிவரை தமிழ்மணமா?

லுக் அட் த ப்ரைட் சைட்:-)))))

முத்துலெட்சுமி said...

துளசி இப்படி ரகசியத்தை பொட்டுன்னு போட்டு உடைச்சிட்டீங்க்ளே!! :)

ILA(a)இளா said...

நல்லா இருக்குங்க, ஒரு தாய்மையின் வலியை சரியா உணரவெச்சுட்டீங்க. எங்களை மாதிரி ஆண்களுக்கு இதெல்லாம் கண்டிப்பா தெரியனும். நன்றி

முத்துலெட்சுமி said...

உண்மைதான்..எப்படா போவான் ஸ்கூலுக்குன்னு நினைப்போம்ன்னு சிலர் கமெண்ட் போட்டிருந்தாங்க இளா...
ஆமாம் நினைச்சிருப்போம் ஏன்னா பாவம் நம்மக்கூட இருக்கறது நமக்கு வேணா நல்லாருக்கும் ஆனாஅவனுக்கு
அவன் வயசு ஆளுங்க அவன் சந்தோஷம் வேணுமேன்னு அது இல்லாம தானே அட்டகாசம் ப்ண்ணுரான்னு தான் அப்படி ...ஆனா பள்ளிக்கூடம் அனுப்பிட்டு வரும் வழியில் எங்கயோ எந்த் வீட்டுலயோ யாரோ குழந்தை அம்மா ன்னா அப்படியே பதறும் ....

பாலராஜன்கீதா said...

நீங்கள் சிறுவயதில் பள்ளிக்குச் சென்றிருக்கும்போது உங்களைப் பிரிந்து உங்கள் தாய் எப்படி இருந்தார் என்று அவரைக் கேட்டு அதைப் பற்றி இன்னொரு பதிவாகவோ பின்னூட்டமாகவோ எழுதுங்கள்.

முத்துலெட்சுமி said...

வாங்க பாலராஜன் சார் நல்ல ஐடியா கொடவுனா இருப்பீங்க போலயே..
நானும் ஒன்னும் பதிவு போட விசயம் தேத்த வழி இல்லாம தான் இருக்கேன்னு உங்களுக்கு தெரிஞ்சிடுச்சா? :)

தீரன் said...

\\மின்விசிறி கிழித்தக் காற்றின் ஒலியும்
நொடிகளைக்கூறும் முட்களின் ஒலியும்
நன்றாக உணர்ந்து எழுதி உள்ளீர்கள்!!

\\இல்லாத அது
இருந்தென்ன இல்லாவிட்டால் என்ன?
இருந்தால் தானே யாராவது கூப்பிட முடியும்?
\\யாராவது என் கைபேசி எண்ணை
தொடர்புகொள்ளக்கூடாதா
எண்கள் இருந்தால் சொல்லுங்கள், கூப்பிட நெறய பேர் ஆயத்தமாக உள்ளார்கள்

வவ்வால் said...

பையன் பள்ளி செல்வதற்கு எல்லாம் கவிதை?!! எழுதுவது தான் வலைப்பதிவு தரும் கட்டற்ற சுதந்திரமா? வாழ்க வலைப்பதிவுகள்!

முத்துலெட்சுமி said...

நன்றி தீரன்..
ஏற்கனவே காண்டாக்ட் லிஸ்டுல இருக்கறவங்க கூப்பிலயேன்னு கவலையா எழுதினேன்...ஆனா வெளியூரிலிருக்கறவங்க பாவமேன்னு கூப்பிடறென்னு சொல்றாங்க...எதுக்கு அவங்களுக்கு செலவுன்னு தான் நான் விட்டுட்டேன் :)

முத்துலெட்சுமி said...

வவ்வால் கவிதை எழுதுவதோ அன்பை வெளிப்படுத்துவதோ தவறில்லையே! கட்டற்ற சுதந்திரத்தை வீணாகவா ஆக்குகிறேன்... :)

நீங்கள் எதும் உபயோகமாக இல்லை என்று உணர்ந்தீர்கள் என்றால் என் குழந்தைகள் என்கிற வகைகளை ஒரு ஓட்டம் படித்துவிடுங்கள் உபயோகமாகவும் அவ்வப்போது போடுவது தான்... :)

Divya said...

கவிதை ரொம்ப நல்லா இருக்கு......

குழந்தையின் வரிகளாக எழுதபட்ட உங்கள் பின்னூட்ட கவிதை ரொம்ப ரொம்ப நல்லாயிருக்கு! மிகவும் ரசித்தேன்!

நாடோடி இலக்கியன் said...

அருமை,
ஆனால் வாழ்த்தெல்லாம் சொல்ல முடியாது அந்த அளவுக்கு ஒரு தாயின் அன்பு கலந்த சோகம் இங்கே கவிதையாகியிருக்கிறது.

முத்துலெட்சுமி-கயல்விழி said...

திவ்யா நன்றி.:)
---------------
நாடோடி இலக்கியன் நன்றிங்க..இந்த பழய கவிதைய என்னை திரும்ப வாசிக்க வச்சதுக்கு.. :)