August 15, 2007

எண்ணுவான் செய்த கொடுமை

நம்ம பக்கத்துக்கு எத்தனை பேர் வந்து படிச்சிருப்பாங்க ன்னு தெரிஞ்சுக்க எல்லாரும் எண்ணுவான் கவுண்ட்டர் வச்சிருக்கறதே பதிவு எழுத ஆரம்பித்து கொஞ்ச் நாள் கழித்து தான் எனக்கு தெரிந்தது சரி நாமளும் வைப்போம் பின்னூட்டம் போடாமல் எத்தனை பேர் படிப்பாங்கன்னு நானும் ஆர்வமா பாக்கறதுக்காக...ஒரு எண்ணுவதுக்கு உதவி செய்யற கவுண்ட்டர் வைத்தேன்....


ஒவ்வொருவரும் வேற வேற மாதிரி வைத்திருக்காங்களேன்னு அதையெல்லாம் போய் பார்ப்பதும் வழக்கம்..இப்படி ஒரு நாள் தமிழ்நதியின் எண்ணுவானை ப்பார்த்து அந்த தளத்தில் பதிந்து கொண்டு நானும் ஒரு கவுண்ட்டர் வைத்தேன்..


அப்பத்தான் கிளிக்கிளிக் தளமும் ஆரம்பித்தேன்..அதில் படத்தை போட்டதும் சர்வேசன் எதோ பாப் அப் வருது உங்க தளத்துக்கு என்று சொன்னாங்க.. என்னப்பா அப்படியான்னு ரெண்டுபேரு கிட்ட கேட்டேன் இல்லையே எங்களுக்கு வரலியேன்னதும் சரி வேற விண்டோ எதும் ஓப்பன் செய்ததில் வ்ந்திருக்கும் தவறா நினைத்துவிட்டாங்களோன்னு விட்டுட்டேன்..


அப்பறம் திருப்பியும் வருதுன்னு இன்னொருத்தர் சொன்னதும் தீபா மேடத்துக்கிட்ட கேக்கறேன்னேன்...அவங்களும் பாத்துட்டு கண்ட்ரோல் எஃப் போடுங்க பாப் ன்னு அடிச்சு பாருங்க எதாச்சும் வருதா உங்க டெம்ளேட்டுல என்றாங்க..பார்த்தேன் ஒன்னும் வரலை..என்ன லிங்க் என்று சொல்லுங்கன்னு கேட்டதுக்கு பாப் அப் வந்தவங்களே அனுப்பினப்பறம் தான் எனக்கு பிரச்சனையின் தீவரம் புரிந்தது... அய்யோ இத்தனை நாளா இல்லாம எப்படி இப்பன்னு சந்தேகத்துல மோட்டிகோ கவுண்ட்டரு மேல தான் சந்தேகம் வலுத்து எடுத்துட்டேன்..


தீபா ஆன்லைனில் வந்ததும் மேடம் மேடம் சொல்லுங்க மேடம் தப்பான சைட்டுக்கு பாப் அப் வந்தா படிக்க வரவங்க என்ன நினைப்பாங்க...என்றதும் மோட்டிகோ பத்தி கொஞ்சம் கூகிளிட்டு சொன்னாங்க அவங்க பாலிஸியே அதாங்க..உங்களுக்கு இலவசமா செய்துட்டு அவங்க பாப் அப் போட்டு தான் சம்பாதிக்கறாங்க போலன்னு...


அப்பறம் பார்த்தா இப்படி ஒருத்தர் பதிவு போட்டுருக்கார்...
நான் இது போல நம்ம பதிவர்கள் வைத்திருக்கிறார்களே அப்ப நல்லதாத்தான் இருக்குமாக்கும்ன்னு நினைச்சு பாலிஸி கொள்கை எதையும் கண்டுக்காம அப்படியே கோடை காபி பேஸ்ட் பண்ணிட்டேன்..மக்களே பார்த்து செய்யுங்க..

16 comments:

வடுவூர் குமார் said...

எனக்கு இந்த மாதிரி நேரவில்லை அதனால் பிரச்சனையில் இருந்து தப்பித்தேன்.

காட்டாறு said...

இதுக்கு தான் நான் எந்த விஷ பரிட்சையும் செய்யாமல் இருக்கேன். (மனசாட்சி - சோம்பேறித்தனத்துக்கு இப்படி ஒரு பேரா? ம்ம்ம்ம்... நடத்தும்மா நடத்து)

SurveySan said...

இப்ப சரியாயிடுச்சு.

என் கவுண்டரில் அந்த மாதிரி ப்ரச்சனை இதுவரை இல்லை.

பங்காளி... said...

உங்களுடைய எண்ணுவான் உங்களை இவ்வளவு எண்ண வைத்திருக்கிறதே....ஹி..ஹி...

Deepa said...

லட்சுமி..
புதுசா கோட் / கவுண்டர் / கிராபிக் ஏதாவது பார்த்து.. அதிலே மயங்கி :-/.. நாமளும் அதை இணைக்கலாமேன்னு தோணுவது ஒண்ணும் தப்போ- பாவமோ இல்லை.. ஆனா... அந்த குறிபிட்ட வெப்சைட்டை பார்த்ததோடு மட்டும் நிறுத்தாம.. ஒரு தடவை அவங்களை குறித்து கூகிளிலேயும் தேடி பார்க்கிரது நல்லது... நம்ம கண்ணுக்கு விடுபட்ட விஷயம் ஏதாவது அகப்படலாம் இல்லையா ..? ? ?...

ஆங்.. அப்புறம்
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
பிளாகிங்க்லே இதெல்லாம் சகஜமப்பா...

ரவிசங்கர் said...

statcounter.com பயன்படுத்தலாம். ஒரு பிரச்சினையும் இது வரை பார்க்கவில்லை

Deepa said...

statcounter வச்சுகிட்டு தான் அக்கா இந்த adventure பண்ணியிருக்காங்க...இல்லையாக்கா ? ? ?

முத்துலெட்சுமி said...

வடுவூர்குமார் நீங்க இதே மோட்டிகோ வச்சிருந்தா உங்களுக்கு பிரச்சனை வரலைன்னு சொல்றீங்க...இல்ல வேறயா? கவனிக்கல சரியா..

முத்துலெட்சுமி said...

காட்டாறு நீங்க பிசியா இருக்கீங்க...அத சோம்பேறித்தனம்ன்னு ஏன் சொல்றீங்க..சும்மா இருந்தா இப்படித்தான் என்னை மாதிரி அதை இதை செய்து பாக்கத்தோணும்...

முத்துலெட்சுமி said...

நன்றி சர்வேசன் நீங்க சொல்லாட்டி யார் என்ன நினைச்சிருப்பாங்களோன்னு திகிலா இல்லா இருக்கு...

முத்துலெட்சுமி said...

பங்காளி என் கஷ்டம் உங்களுக்கு சிரிப்பா இருக்கா? :(

முத்துலெட்சுமி said...

தீபா ரொம்ப சரி
\\புதுசா கோட் / கவுண்டர் / கிராபிக் ஏதாவது பார்த்து.. அதிலே மயங்கி :-/.. //
அதே அதே! நீங்க ஒரு விதமா அலசி ஆராய்ந்து ஒரு பதிவு போட்டுட்டுங்க..எதுக்கும்...

முத்துலெட்சுமி said...

ரவிசங்கர் ஸ்டாட் கவுண்ட்டர் தாங்க வச்சிருந்தேன்...பாருங்க 12000 மேல காண்பிக்குது...நேரம் போகாம அதை இதை மாத்தி பாத்ததில் தானே இப்படி...

வவ்வால் said...

எண்ணித்துணிக கருமம் துணிந்த பின்
எண்ணுவம் என்பது இழுக்கு!

பாருங்க இந்த எண்ணுவான் பிரச்சினைக்காக 2000 வருஷம் முன்னரே வள்ளுவர் குறள் சொல்லி இருக்கார்!

முத்துலெட்சுமி said...

ஆகா வவ்வால் அதுக்கு ஒரு விளக்கமும் போட்டிருந்துருக்கலாம் நீங்க...அதாவது எண்ணுவதே இழுக்கு(தப்பா) எத்தனை பேர் வந்தா என்ன அப்படிங்கறாரா! :))

மங்கை said...

ஒரு வழியா சரி பண்ணியாச்சு இல்ல?
இனி நாம சாக்கிறதையா இருக்கோனும்